>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 15 ஜூலை, 2017

காமராஜர் பற்றிய கவிதைகள்..

 
KAMARAJAR - TAMIL POEMS FOR STUDENTS
 KAMARAJAR - POEMS FOR STUDENTS

TEACHER - STUDENT FIXATION RATIO AS PER RTE

RTE படி ஆசிரியர் மாணவர் விகிதம் 

காமராஜர் - மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி - தமிழ்

TPF - Missing Credit Form



அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு பிரபல நிறுவனத்திடம் தர முடிவு...

அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

 அரசு,பள்ளி, 'ஸ்மார்ட்' வகுப்பு,பிரபல,நிறுவனத்திடம்,தரமுடிவு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இதில், 'நிதி உதவி திட்டம் - 2010'ன் கீழ், 5,265 பள்ளிகளில், கணினி வசதியுள்ள,'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.

முதற் கட்டமாக, 920 பள்ளிகளில், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, 'டெண்டர்' முறையில் வழங்காததால், பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததால், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டது. பின், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டம் கிடப்புக்கு போனது.

ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசு ஆறு ஆண்டாக கடிதம் எழுதி வருகிறது. எனவே, இந்த ஆண்டு, 'ஸ்மார்ட்' திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த முறை, விதிமீறல்களுக்கு இடமின்றி, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, 'டெண்டர்' அறிவித்து, வெளிப்படையான விதிகள் மூலம், கணினி வசதி செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யபட உள்ளன. 
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 'சாம்சங்' நிறுவனத்துடன் இணைந்து,

'ஸ்மார்ட்' திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதுபோல், பிரபலமான, தரமான நிறுவனத்தை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுத்து உள்ளது. விரைவில், இதற்கான, 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது. 

உதவி எதிர்பார்க்கும் மருத்துவ மாணவி......

மதுரை: ஏழ்மை காரணமாக கட்டணம் செலுத்த முடியாததால் பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார் உசிலம்பட்டி மாணவி டீம லோசனி. இவரது தந்தை கணேசமூர்த்தி தனியார் மருந்தக ஊழியர். 2016ல் பிளஸ் 2 தேர்வில் 1026 மதிப்பெண் பெற்ற டீம லோசனி, மதுரை பெஸ்ட் டென்டல் சயின்ஸ் கல்லுாரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
வங்கி கடன், நகைகள் அடமானம் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்திய பின், மீதி கட்டணம் செலுத்த முடியவில்லை. ஒன்றரை மாதங்களாக வகுப்பிற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரது எதிர்காலம் கருதி நிதி உதவி செய்ய முன்வருவோர் 97879 80173 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திறமைகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி: அசத்தி வியப்பில் ஆழ்த்தும் மாணவர்கள்...

மழலை பேசி மயக்கும் பிஞ்சு குழந்தைகளின் கல்விப்பயணம், துவக்கப்பள்ளிகளில் தான் துவங்குகிறது. துவக்க கல்வி நன்றாக அமைந்து விட்டால், அவர்களது பயணம் சரியான பாதையில் செல்லும்.மாணவர்களுக்கு துவக்க கல்வியோடு, அவர்களது ஒழுக்கம், திறமைகள் போன்றவற்றை வளர்ப்பதும் ஒரு கடமை தான் என எண்ணி செய்து வருகின்றனர் பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.


பொள்ளாச்சி அருகே போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. முற்றிலும் கிராமப்புறத்தை சேர்ந்த இந்த பள்ளியில், 104 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தமிழ் வழி கல்வியோடு, ஆங்கில வழி கல்வியும் இப்பள்ளியில் உள்ளது. கல்வியோடு, மாணவர்களது மற்ற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டதால், கூட்டு முயற்சியாக செயல்பட்டு அவர்களது செயல்களை ஊக்குவித்து வருகின்றனர்.

தமிழ் இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஓவியம் வரைதலுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுமட்டுமின்றி நாட்டுப்புற கலைகள் என அவர்களது திறமைகளுக்கு உரமிட்டு வருகின்றனர் ஆசிரியர்கள்.கணினி வழிக்கல்வியில் அசத்தும் மாணவர்கள், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.


தோட்டக்கலை பயிற்சி

சிறுவயதில் கல்வியோடு, இயற்கை விவசாயம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தோட்டம் அமைக்கப்பட்டு, அதனை பராமரித்து வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள். தோட்டத்தில், மூலிகைச்செடிகளும் அமைத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.இதன் தாக்கமாக, கண்காட்சி போட்டிகளில், 'பல்லடுக்கு பயிர் தோட்டம்' அமைப்பு குறித்து விளக்கும் வகையில், மாதிரி தயாரித்து பரிசுகளையும் வென்று குவித்துள்ளனர்.


களப்பயணம்

ஆண்டுதோறும் மாணவர்களை களப்பயணமாக அழைத்துச் சென்று, வரலாற்று சிறப்புகளை எடுத்து கூறி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இவ்வாறு பல்வேறு பணிகளை செய்து வரும் ஆசிரியர்கள், அவர்களது உடல் ஆரோக்கியத்திற்காக யோகா கலையை சொல்லி கொடுத்து வருகின்றனர்.


யோகா..

யோகா கலை சிறப்பு ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், நன்றாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சக மாணவர்களுக்கு அதனை ஆசிரியர்கள் உதவியுடன் சொல்லி கொடுத்து அசத்துகின்றனர். வாரந்தோறும் புதன் கிழமையில், தியான வகுப்பு, வெள்ளிக்கிழமைகளில் கூட்டு உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தினசரி பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு முறையான பயிற்சி பெற்ற மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் கொள்வதில்லை. பஸ்கிமோத்தாசனம், புஜபீடாசனம், சலபாஷனம், பாதஉட்கட்டஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சர்வசாதாரணமாக செய்து காண்பிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த சர்வதேச யோகா தினத்தில், மாணவர்கள் மண்பானை மீது யோகா செய்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இவர்களது யோகா திறமையை கண்ட பலரும் பாராட்ட தவறவில்லை.

'உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் யோகா கலையை கற்க ஆர்வம் உள்ளது. இந்த கலையை கற்றுக்கொள்ளும் போது, கடினமாக இருந்தாலும், பழக பழக எளிதாக இருந்தது. இது படிப்பிற்கும் மிகுந்த உதவிகரமாக உள்ளது,' என மாணவர்கள் தெரிவித்தனர்.


இசையிலும் ஆர்வம்

பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி கூறியதாவது:

யோகா கலை மாணவர்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. யோகா பயிற்சி மாணவர்களிடையே அமைதி, நல்லொழுக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் கூட்டு முயற்சி ஈடுபாடு தான் மாணவர்கள் திறமைகள் வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் யோகா கலை மட்டுமின்றி, நாட்டுப்புற கலைகளையும் நன்றாக பயின்று வருகின்றனர். இசையிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மாணவர்கள் முதல் படியான துவக்க கல்வியிலேயே அவர்களுக்கு கல்வியோடு இதுபோன்ற திறமைகளை வளர்ப்பது அவர்களது உதவிகரமாக இருக்கும் என எண்ணினோம். அதனை ஆசிரியர்கள் உதவியோடு செயல்படுத்தி வருகிறோம்.

பள்ளியிலிருந்து செல்லும் மாணவர்கள் அனைத்து திறமைகளோடு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இது சிறு முயற்சிதான். வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால், தனியார் பள்ளிகளிலிருந்து கூட மாணவர்கள் எங்களது பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

அரசர்களின் அரசர்! காமராஜர்

அரசர்களின் அரசர்!
(பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தினகரன் பத்திரிகையில் வெளியான கவிதை)

கடையெழு வள்ளல்கள்
வலம் வந்த
தமிழ் நாட்டில்
கல்வி வள்ளலாய்
அவதரித்த
கர்ம வீரரே!
காமராசரே!


அண்ணலின் சீடராய்
அயராது
பாடுபட்டீர்கள்!
அவர்தம் வழியில்
கதராடை உடுத்தி
மற்றதனை மறுத்தீர்கள்!

எளிமையின் சின்னமாய்
இறுதி வரை
வாழ்ந்தீர்கள்!

ஏழைக்கும்
கல்வி தந்து
ஏற்றம் அளித்தீர்கள்!

படிக்காத மேதை
நீங்கள்
பதினாலாயிரம்
பள்ளிகள் திறந்தீர்கள்!

வளம் பெறக் கல்வியும்
நலம் பெற உணவையும்
நன்றாகக் கொடுத்தீர்கள்!

வெளிநாட்டுப் பயணத்திலும்
வேட்டி சட்டையுடன்
வீறுநடை போட்டீர்கள்!
தென்கோடியில் பிறந்து
வடக்கேயும்
வெற்றிக்கொடி பிடித்தீர்கள்!

தமிழனின் புகழைத்
தனி ஆளாய்ச்
சுமந்தீர்கள்!

விண்ணளவு புகழ் கொண்டு
சென்னையில் ஓய்வெடுக்கும்
தன்னிகரில்லாத்
தலைவரே!

எங்களை மன்னியுங்கள்!

அன்று
தேர்தலில்
உங்களைத் தோற்கடித்தோம்!

இன்றும்
தோல்வியை
நாங்களல்லவா சுமக்கிறோம்!

கிளைகளை
வெட்டாமல்
வேரை அல்லவா
வெட்டியுள்ளோம்!

உங்களின் ஆட்சிதான்
இன்றும்
உரைகல் எங்களுக்கு!

வான் முட்டும்
உயரம்
உங்களுக்கு மட்டுமல்ல!

உங்கள் எளிமைக்கும்
நிலைத்த
புகழுக்கும்தான்!

புவிக்கோளம்
வாழும் வரை
பச்சைத் தமிழரே!

உங்கள்
புகழ் வாழும்!

RMSA - INSERVICE MATHS TRAINING | TIMETABLE (2017 - 18 )



காமராசர் -- வாழ்க்கை வரலாறு

விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். . அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. 

தனது பள்ளிப் படிப்பை சத்ரியவித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். 
படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். 
ஒருவர் கருப்பையா . - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் 
பெயர் காசிநாராயணன். இவர் திருவனந்தபுரத்த ிலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். 
அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் 
காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார். ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் 
நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார்.அதற்காகக்  காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலி சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த 
ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். 
விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடு அவர்களின் வாததிறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் 
விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் 
விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942- ல்ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக 
அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் 
தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார். 
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன 
சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் 
கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான 
போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் 
காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் 
சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர்ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக 
அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் 
பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் 
குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் 
சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில 
பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது) குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் 
கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் 
சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் 
எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக 
அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் 
அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் 
தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ 
என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய 
ஆதரவாளரான சி.சுப்பிரமணியத ்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். 
அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் 
கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண் 
டு அன்று பதவியேற்றதன் பின்னணி. ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் 
காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 
சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது. 
காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் 
வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். 
அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்: பாரத மிகு மின் நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் 
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL) இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) 
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை மேட்டூர் காகிதத் தொழிற்சாலை 
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்ட வை. 
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் 
பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் 
முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) 
பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள். அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராச சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966- ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் 
மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் 
போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது. காமராசருக்கு இந்திராகாந்தியுடன் 
ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் 
நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட ன்னேற்றக் 
கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அம செய்தபோது அதனைக் கடுமையாக 
எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் 
போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் 
இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க 
து. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். 

kamarajar essay - காமராஜர் குறித்த முத்தான மூன்று கட்டுரைகள் ....

வெள்ளி, 14 ஜூலை, 2017

TET 2017 FLASH NEWS: CERTIFICATE VERIFICATION  ANNOUNCED FOR TET 2017 CANDIDATES. PAPER – II

"TRB -PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION – TNTET – PAPER – II"

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION

PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.


 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார். 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிகளில் 1,663 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பும் வகை யில் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடை பெற இருந்த நிலையில், தேர் வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கூடுதலாக 1,712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர் வெழுதினர். தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தேர்வு முடிந்த அன்றைய தினமே தனியார் பயிற்சி மையங்கள் இணை யதளத்தில் உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) வெளியிட்டன. ஒருசில கேள்விகளுக்கான விடைகள் சரியாக தெரியாததால் அவற்றுக்கு விடைகள் குறிப் பிடப்படவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் கீ ஆன்சர் வெளி யிட்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் கீ ஆன்சர் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கப் படும்.
வாரியத் தலைவர் விளக்கம் எனவே, தேர்வெழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது கீ ஆன்சரை வெளியிடும்? என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான (பொறுப்பு) ஜெகநாதனிடம் கேட்டபோது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும்" என்றார்.

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும்
என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்? லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில்ஒரே ஆறுதலான விஷயம். ஆதார் எண் அல்லது பதிவு எண்(Enrollment number) ஆகியவைதான் முக்கியம். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணை பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு வேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம். முதலில், ஆதார் இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். www.uidai.gov.in காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட்எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்களுக்குவேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.

பொதுவாகவே, ஆதார் எண் தொடர்பான பிராசஸில் OTP உடனே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, 15 நிமிடங்கள் வரை பொறுமையாக இருக்கவும். அதன் பின்னும் OTP வரவில்லையென்றால் மட்டுமே மீண்டும் சப்மிட் கொடுக்கவும். OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணைஅனுப்பி வைக்கும். அந்த எண்ணை வைத்து பிரின்ட்எடுத்துக் கொள்ளலாம். பிரின்ட்எடுக்க:

மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணைஅனுப்பியிருப்பதாக வரும் செய்திக்கு கீழே, ஆதார் பிரின்ட்எடுக்க உதவும் லின்க் இருக்கும். ”Download Aadhaar" என்ற அந்தலிங்கை க்ளிக் செய்யவும்.

ஆதார் மீம்ஸ் பார்க்க அந்தப் பக்கத்தில் ஆதார் எண், பதிவு எண்(Enrollment number),முழுப் பெயர், பின் கோடு, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவும். மீண்டும் ஒரு OTP மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதையும் என்டர் செய்தால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும். டவுன்லோடு ஆதார் கார்டு, பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட PDF formல் இருக்கும். உங்கள்பின்கோடுதான் அதன் பாஸ்வேர்டு. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைசிலருக்குத்தவறு என மெஸெஜ் கூடவரலாம். அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கில் சென்று அவற்றை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஆதார் கார்டு டூப்ளிகேட் என இதைச்சொன்னாலும், உண்மையில் அது டூப்ளிகேட் அல்ல. ஆதார் எண்தான் முக்கியம். அதை எத்தனை முறை பிரின்ட்எடுத்தாலும் அது ஒரிஜினல்தான்.

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

நாமும் தெரிந்துகொள்வோம்




1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார். 
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார். 
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது. 
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு. 
100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்....

இணையதளத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!

பிளஸ் 2அசல் சான்றிதழை, மத்திய அரசின் இணையதளத்தில், 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 10 முதல், பள்ளிகளில், அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதேபோல, மத்திய அரசின் மின் ஆவண காப்பகத்தின், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சான்றிதழை, இன்று முதல் பதிவிறக்கலாம்.மாணவர்கள், 'ஆதார்' எண்ணுடன் இணைந்த மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, இணையதளத்தில் கணக்கு துவங்க வேண்டும். ஆதார் எண்ணில் மொபைல் போன் இணைக்கப்படாமல் இருந்தால், இ - சேவை மையத்தில் இணைத்து கொள்ளவும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPS : புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை என்ன? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் நிலை குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆய்வுகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்..

''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு இரண்டு முறை திறன் பயிற்சிக்கான முகாம்கள் நடத்தப்படும்; இதற்காக, 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக, நான்கு லட்சம் ரூபாயில், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை, வெளி மாநில தொழிலாளர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 26 லட்சம் ரூபாய் செலவில், 254 கள அலுவலர்களை பயன்படுத்தி, அவர்கள் பணிபுரியும் இடங்களில் பதிவு மேற்கொள்ளப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2015 வரை, பதிவினை புதுப்பிக்க தவறிய, இரண்டு லட்சம் பேருக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் 
தெரிவித்தார்.