வியாழன், 29 ஜூன், 2017
அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாய மாக்கக் கூடாது? என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங் கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி:
தனியார் பள்ளிகளை நாடுவதற்கான முதல் காரணம் சமூக அந்தஸ்து. அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளை கள் படித்தால் கவுரவ குறைச்சல் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த நிலைமை மாறி வருகிறது. தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதேநேரத்தில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின்படி குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்:
அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று விதி கொண்டுவரலாம். தலைமைச் செயலர், அரசு செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் இது பொருந்தும்.ஒரு எம்எல்ஏ தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்தால் நிச்சயம் அடிக்கடி அந்த பள்ளிக்குச் சென்று பார்ப்பார்.இதன் காரணமாக அரசு பள்ளி மீதான கவனம் தானாகவே அதிகரிக்கும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலப்பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்:
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயாராக இருக்கிறார்கள். எம்பி, எம்எல்ஏக்களும் அரசு ஊழியர்கள்தான். அவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கட்டும். ஒரு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கிறார் என்றால் அந்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சரியாகிவிடும். அரசு பள்ளி ஆசிரியர்களை கல்விப்பணி தவிர்த்து ஆதார் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது போன்ற இதர வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன்:
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்கள் இப்போதில் இருந்து தீர்மானிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் முக்கியத்துவம் கொடுத்து 100 சதவீத இடத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் எம்.அன்பரசு:
அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காததற்கு பல காரணங்கள் இருக்கும். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது உள் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல் லாமல் இருப்பது போன்ற காரணங்கள் இருக்கலாம்.
ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? நுகர்வோருக்கு லாபமா? முழு விளக்கம்....
ஜிஎஸ்டி வரி, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு வரிமுறைகள் குறைக்கப்பட்டு ஒற்றை வரிமுறைக்கு தேசம் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த ஒரு தெளிவு தொழிலதிபர்களுக்கு மட்டுமின்றி, சாமானிய மக்களுக்கும் தேவைப்படுகிறது.
ஜிஎஸ்டி என்றால் என்ன?
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.டி.டி) என்பது ஒரு மதிப்பு-கூடுதல் வரி. ஒவ்வொரு பொருட்களின் மற்றும் சேவை வரி முறையின் குறைபாடுகளை அகற்ற ஜிஎஸ்டி முற்படுகிறது, இதன் விளைவாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. வரி செலுத்தும் மாநிலத்தின் பங்கு, இறுதியில் ஏற்றுமதியாளர்களுக்கு பதிலாக, நுகர்வோருக்கு சொந்தமாகும். மத்திய மற்றும் மாநிலங்களின் இரண்டு சமமான கூறுகளைக் கொண்டுள்ளது ஜிஎஸ்டி.
உள்ளீட்டு வரிக் கடன் என்றால் என்ன?
சப்ளை சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பு கூடுதலாக அளவுக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்ய, முந்தைய கட்டத்தில் செலுத்தப்பட்ட வரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு ஆடை உற்பத்தியாளர் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிகளுக்கு கடன் பெறுகிறார். இதேபோல், ஒரு சேவை வழங்குநர், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம், தனது வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மற்றும் சேவைகளுக்கு செலுத்தும் வரிகளுக்கு கடன்களைப் பெறுகிறது.

ஜிஎஸ்டியை செலுத்த யார் பொறுப்பு?
20 லட்சத்திற்கும் அதிகமான வருவாயைக் கொண்ட வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது கடமை. வடகிழக்கு மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆரம்ப வணிக தொகை ரூ .10 லட்சம் ஆகும்.
ஜிஎஸ்டிக்குள் அடங்கும்ம் வரிகள் எவை?
மத்திய சுங்கவரி, கூடுதல் சுங்கவரி, சேவை வரி, மத்திய செஸ் மற்றும் சர்சார்ஜஸ், மாநில அரசின் வரியான வாட் போன்றவை, விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி, விளம்பரங்கள் மீதான வரி, பந்தையம், சூதாட்டம் ஆகியவற்றின் மீதான வரிகள், மாநில அரசின் செஸ்கள் மற்றும் சர்சார்ஜஸ், அடிப்படை சுங்க வரி, போன்றவை ஜிஎஸ்டிக்குள் அடங்கும்.

ஜிஎஸ்டியால் என்ன நன்மைகள்?
ஜிஎஸ்டி வரி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருகிறது. தற்போது, ஒரு பொருளை வாங்கும் போது, மாநில வரிகளை மட்டுமே ஒருவர் அறிந்துகொள்ள முடியும். , பல்வேறு உட்பொதிக்கப்பட்ட வரிகளை நாம் அறிய முடிவதில்லை. மாநிலங்கள் நடுவேயான பண்ட பரிவர்த்தனையை ஜிஎஸ்டி வரி மேம்படுத்தும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிகளின் அடுக்கு நீக்கம் செய்வது, பல பொருட்களின் மீதான வரி சுமையைக் குறைக்கும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள் அடங்காத பொருட்கள் எவை?
கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் ஜெட் எரிபொருள் தற்காலிகமாக ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது இவற்றை ஜிஎஸ்டியின்கீழ் கொண்டுவர முடியும். நிதி அமைச்சர் லைமையிலான மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் இதை தீர்மானிக்கும்.
லாபமற்ற நடைமுறை என்பது என்ன?
விலை உயர்த்துவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைக்கப்பட்ட வரி லாபம், நுகர்வோரை சென்றடைவதை உறுதிப்படுத்தவும், ஜிஎஸ்டி சட்டத்தில் அரசு ஒரு லாப-சார்பற்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் நுகர்வோருக்கு லாபம்தான்
ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன?
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு முடிவையும் சபையில் எடுக்க முடியாது. குறைந்தது 75% பெரும்பான்மை வாக்குகள் முடிவுகளை தீர்மானிக்கும். மத்திய அரசாங்கத்திடம் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் உள்ளன, அனைத்து மாநிலங்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுகின்றன.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு
THANKS ; MR.SELVAM,HOSUR
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு....
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?
அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.
சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன.
அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி
ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம்.
அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.
இவ்வாறு விவாதம்
நடந்தது.

7th Pay Commission - ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு ஏற்றது...
புதுடெல்லி - மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் பெரும்பாலும் படிகள் தொடர்பானவையாகும். அறிக்கையின் ஏற்பு சுமார் 48 இலட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மையளிக்கும் என்று கூறப்படுகிறது.உயர்த்தப்பட்டுள்ள படிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ30,748 கோடிகள் செலவாகும். படிகளின் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் கூடுதலாக ரூ. 1,448 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?
சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.
தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம். ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
புதன், 28 ஜூன், 2017
CCE - 1 TO 8 - 1st TERM SYLLABUS & 1 - 8th UNIT WISE FA(a) & FA(b) ACTIVITIES - ALL SUBJECTS (1st TERM)
CLASS 1 - 8 TERM & UNIT WISE SYLLABUS
- CLICK HERE - 1st TERM Syllabus | 1 st STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 2 nd STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 3 rd STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 4 th STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 5 th STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 6 th STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 7th STD
- CLICK HERE - 1st TERM Syllabus | 8 th STD

Tamil Nadu Rural Analysis Based on Data From Government Schools - 31 out of 31 Districts | SURVEY REPORT
Tamil Nadu Rural Analysis Based on Data From Government Schools - 31 out of 31 Districts
Reading Level in Tamil,English & Arithmetic,School observation,School Facilities - School Funds & Activities...SMC - Details...
CLICK HERE TO VIEW - SURVEY REPORT..
Reading Level in Tamil,English & Arithmetic,School observation,School Facilities - School Funds & Activities...SMC - Details...
CLICK HERE TO VIEW - SURVEY REPORT..
டிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி
சென்னை: பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.
அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில், 463 கல்லுாரிகளில், 13 ஆயிரம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, www.tnscert.org என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர் சேர்க்கை பதிவு, மே, 31ல் துவங்கியது.இந்த பதிவு, இன்றுடன் முடிகிறது. இதுவரை, 1,600 பேர் மட்டுமே, டிப்ளமா படிப்பில் சேர, பதிவு செய்துள்ளனர்.பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு....
'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை. எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)