புதன், 21 ஜூன், 2017
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? - உயர்நீதி மன்றம் கேள்வி.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மத்திய மற்றும் மாநில அரசின் பாடதிட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்படையில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்திற்கும், மாநில அரசின் கல்வி திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும், என்ற நோக்கில் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6 முதல் பிளஸ் -2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது.
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்க வில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகியவையே கற்பித்தல் மொழியாக உள்ளன.
நவோதயா பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மேலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான அரசின் விளக்கத்தை தெரிவிக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி விசாரணையை இன்று புதன் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: ஜூன் 21 இன்று உலக யோகா தினம்...
ஐ.நா., அங்கீகாரம்
இப்போது தமிழகம்மட்டுமின்றி, உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்தசிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம், உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.சபையே ஜூன் 21ஐ உலக யோகா தினமாக கொண்டாடவும் கட்டாயம் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி யோகாசனமே என்பதை பறைசாற்றியுள்ளது.
🦋நம்மை அறியாமலே பயன்
நம் முன்னோர்கள் முழுமையாக செயல்திறன் மிக்கவர்கள். இதை தான் யோ கர்மஸீ கெளலசம் (பகவத்கீதை) - செயலில் திறமையே யோகம் - என்கிறது. உடல் ஆரோக்கியமாக, வலிமையாக இருந்தால் மனதிடம் அதிகமாகும். மனதிடம்அதிகமானல் செயல்திறன் கூடும். உடல், மனம், எண்ணம் ஒருங் கிணைந்து செயல்பட்டால் நாம் ஒழுக்க சீலராக வாழ்வோம். நம் திறமை மேம்பட்டு நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். இதுவே உன்னதமான வாழ்வாக அமையும். நம்மை அறியாமலே இது அனைத்தையும் யோகாசனப் பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கும்.
🦋வெற்றிக்கு வழி
யோகாசனத்தின் முழுபலன் நோயற்ற தன்மை, நோய்களை போக்கும் தன்மை, மனதை அடக்கி ஆளும் தன்மை ஒருங்கே அமையப்பெற்றது. இதை தான் ஒருங்கிணைத்தல் என்று சொல்வர். இதையே யோகா, யோக், யோகம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆசனம் என்பது இருக்கை நிலைகள்.
ஆசனத்தில் அமர்ந்து மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதால் யோகாசனம் என்று கூறுகிறோம். மிகவும் எளிதான பயிற்சிகள் உண்டு. யோகாசனம் செய்தால் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தன்மை கூடுகிறது. நரம்பு மண்டலம் புத்துணவு பெறுகிறது. தசைநார்கள் உறுதியடைந்து ரத்த நாளங்களின் செயல்திறனை கூட்டுகிறது. நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மனம், உடல் வலிமை பெறும். வேறென்ன வேண்டும் நமக்கு. உழைக்க உடம்பும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Inspire award forms filling online help .....important points...
inspire award forms filling online help .....
IMPORTANT POINTS
INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்...
மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள் புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக் கணக்கு அதாவது
IFC CODE,
BANK ADDRESS,
ACCOUNT NO மிகவும் அவசியம்....
PROJECT TITLE (மாணவர்கள் எந்த அறிவியல் படைப்பை சமர்பிக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் )
PROJECT TITLE சார்ந்த ஒரு பக்க கட்டூரை (அவசியம் 2 MB இருக்கவேண்டும் PDF,WORD,JPG)
ADHAAR NO UID - அவசியம் பதியவும்
வழிகாட்டி ஆசிரியர் பெயர் ....
தலைமை ஆசிரியர் பெயர்
mobile no ....

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?
சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பாலசந்தர். மாணவர்களுக்குக் கல்விக்கடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
பள்ளிக்கல்வி துறைபல நூறு தொடக்கப் பள்ளிகள் மூடி வரும் நிலையில் 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றமே. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆரம்பப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை 10,000-க்கும் மேற்பட்ட தேவைப்பணி இடங்களும், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களும் இருக்கின்றன. ஆனால் 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார் அமைச்சர். இதைப்போலவே, 60,000-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 17,000 பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றப்படும் என்ற அறிவித்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும், இன்னும் 43,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்பணியிடங்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செயல்வழிக்கற்றல் அட்டைகளுக்கு 31.82 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவரை அரசால் சமச்சீர் கல்வியைத் தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியவில்லை. இதைப்போலவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வழங்குவது போல் செயல்வழிக்கற்றல் அட்டைகளை சுயநிதிப்பள்ளிகளிலும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கமுடியவில்லை என்றால் பொதுக்கல்வியைப் பாதுகாக்க முடியாது.
பகுதி நேரக் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறும் அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வோம் என்ற அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை.
பள்ளிக்கல்வி துறைபென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். பென்சன் திட்டம் குறித்த ஆலோசனை குழு அறிக்கை தயாரித்து ஆலோசனைகளை ஏற்கெனவே வழங்கி விட்டது. இந்த நிலையில் பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். அதுவும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் புதிய பென்சன் திட்டம் முற்றிலும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதைப்போலவே, தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துவார்கள் என்ற அறிவிப்பு எதிர்நோக்கி இருந்த ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு....
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், விளக்கம் கேட்டுள்ளது.
'அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது; தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கியது. இதனால், வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை குறித்து, எம்.சி.ஐ., விளக்கம் கேட்டு வருகிறது. இதற்கு நேற்று பதில் அளித்த, தமிழக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், 'மாணவர் சேர்க்கையில், தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.
10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்
ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்
ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்
ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்
ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்
ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்
ஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்
ஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்

63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு !!
பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு உட்பட, 63 பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. வகுப்பு செயல்திட்டம், நடைமுறைகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ளும் போது, அனைத்து பதிவேடுகளையும் பார்வையிடுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டார்.இதன்படி, பள்ளி விபர பதிவேடு, ஆசிரியர்- மாணவர் வருகை, தலைமையாசிரியர்கள் கூட்ட விபர பதிவேடு, அன்னையர் குழு, கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மை குழு உட்பட, 63 பதிவேடுகள் முறையாக பின்பற்றவும், மன்ற செயல்பாடுகள் நடந்த பின், அறிக்கை எழுதவும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்
SSA - LAST DATE TO REGISTER 'INSPIRE AWARD' IS 30.06.2017 - DIR.PROC
CLICK HERE - SSA - INSPIRE AWARD LAST DATE FOR REGISTERING REG - DIR PROC
CLICK HERE - SSA - INSPIRE AWARD LAST DATE FOR REGISTERING REG - DIR PROC
செவ்வாய், 20 ஜூன், 2017
வட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA
🌺 *நேற்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் ( ARGTA for BRTEs )* சார்பில்
✳ *தலைவர் மா.ராஜ்குமார்*
✳ *மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன்*
✳ *மாநில பொருளாளர் நவநீதக்கிருஷ்ணன்*
ஆகியோர் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலருடன் இணைந்து நமது
✳ *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் (அ.க.இ) அய்யா*
✳ *மதிப்பிற்குரிய இயக்குநர் (ப.க.து) அய்யா*
✳ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் ( மே.நி.க) அம்மா*
ஆகியோரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை அளித்தோம்.
✅ *SPD அய்யா* அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக படித்து நீண்ட நேரம் கந்துரையாடல் மேற்கொண்டார். அதிவிரைவில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். மாவட்ட ARGTA நிர்வாகிகள் தங்களை சந்திக்க விருப்பப்படுவதை மாநில நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டோம். இதனை ஏற்று CONFERENCE HALL இல் அனைவரையும் பார்த்து கந்துரையாடினார். மேலும் CONVERSION &COUNSELING குறித்து 90 % பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை முடிந்ததும் அதிவிரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதியளித்த
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
*மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
✳ *மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அய்யா* அவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
✅ *மதிப்பிற்குரிய இணை இயக்குநர் (மே.நி.க) அம்மா* அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க இரண்டாவதாக பெயர் பட்டியல் பாடவாரியாக தாயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கந்தாய்வு நடைபெறும் என உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
✳இன்று நிதி உதவி வழங்கிய மாவட்டங்கள்
✅ *திண்டுக்கள் ₹53,500*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*
✅ *கரூர் ₹53,500*
✅ *வேலூர் ₹43,900*
✅ *தர்மபுரி ₹22,500*
✅ *இராமநாதபுரம் ₹20,000*
✅ *புதுக்கோட்டை ₹18,500*
✅ *விழுப்புரம் ₹11,500*
✅ *நீலகிரி ₹5,000*
✅ *பெரம்பலூர் ₹3,400*
✳ *இன்று சென்னைக்கு வருகைபுரிந்த ஒவ்வொரு மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*🙏🙏🙏🙏
🗣🗣🗣 *குறிப்பு புதியதாக தரம் உயர்த்தப்படும் உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்ட சில தினங்களுக்குள்ளோ /முன்னறோ நமது எண்ணம் நிறைவேறும்*🙏🙏🙏🙏
🙏 *STATE & DISTRICT LEAVEL BEARERS,ARGTA.
அரசு பள்ளி மாணவி சூப்பர் சிங்கரில் ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்....
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா.
👍 அரசு பள்ளி மாணவி பிரத்திகா விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கரில் 6,00,000 ஓட்டுகள் பெற்று பட்டம் வென்றார்.
🏠 ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்.
🏠 ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்.
🏆 குவிந்தது மலைப்போல மக்கள் வாக்குகள்.
🔸 விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் சீனியர் 5 இறுதி போட்டில் திருவாரூர் தியானபுரம் அரசுப் நடுநிலைப் பள்ளி மாணவி 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.... ரூ 40 லட்சம் பரிசை தட்டிக் சென்றார்.
🔹 மாணவியின் இத்தகைய சாதனைக்கு உழைத்த / உறுதுணையாக இருந்த அனைவரையும் பாடசாலை மனதார பாராட்டுகிறது.

திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரித்திகா.
இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் இவரின் தந்தை ரமேஷ் டிங்கரிங் வேலை செய்து வருகிறார். தாய் விவசாய வேலை செய்து வருகிறார்.
அபாரக் குரல் :
திருவாரூர் மண்ணுக்கு புகழ் சேர்த்த சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பாகவதர், அரசியல் சாணக்கியன் கலைஞர் அவர்களுக்கு அடுத்து தற்போது திருவாரூர் மண்ணிலிருந்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் பிரித்திகா என்ற பதின்மூன்று வயது மாணவி .
தான் படிக்கும் பள்ளியில் நடந்த காலை வழிப் பாட்டு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது இவரின் அபார குரலினை பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தொடர்ந்து ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் பாடல் குரல் தேர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவியின் பிரிந்திக்கா முதல் சுற்றில் தேர்வானார்.
ஆசிரியர்கள் ஊக்குவிப்பு :
தொடர்ந்து தியானபுரம் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிப்போடு பொருளாதார உதவியும் செய்ய அடுத்தடுத்த சுற்றுக்களில் அதிரடியாக பாடி கலக்கியதால் அரை இறுதிக்கு முன்னேறினார்.
அதிரடி பாடல்கள்:
கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் சொக்க வைக்கும் குரலாலும், மண்வாசனை கலந்த பாடங்களிலும் சின்னக்குயில் சித்ரா, எஸ்.பி பாலசுப்ரமணியன், மாங்குடி உஷா போன்ற ஜாம்பவான்களின் மனதை கவர்ந்து அதிரடியாய் இறுதி சுற்றில் ஐந்து போட்டியாளர்களின் ஒருவராய் நுழைந்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு :
மாணவி பிரித்திகா அரசுப் பள்ளி மாணவி என்பதால் இறுதி சுற்றில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நெட்டிசன்கள் அனைவரும் அதிரடியாய் வாக்குகளை இணையதளத்தில் பதிவு செய்தனர். இறுதி சுற்றின் வெற்றி என்பது மக்களின் வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்பட்டதால் இவருக்கு மலைப்போல் மக்கள் வாக்குகள் குவிந்தன. இறுதி போட்டியின் மற்ற போட்டியாளர்களை விட ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் நேற்று இரவு நடந்த போட்டில் வெற்றுப் பெற்று பட்டம் வென்றார்.
நாற்பது லட்சம் பரிசு:
இவர் பாடிய பாடல்களை ரசிக்காத மனங்களே கிடையாது போல இவர் பாடிய பாடலான " தென்றல் வந்து தீண்டும் போது " என்ற பாடலை யூ டியூப் தளத்தில் முப்பத்து ஆறு லட்சத்து அறுபத்து ஏழாயிரம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிப் பெற்ற மாணவிக்கு நாற்பது லட்சம் மதிப்புள்ள புதிய வீடு பரிசாக வழங்கப்பட்டது.. தற்போது இந்த கிராமத்து இசைபுயலின் வெற்றியினை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)