வெள்ளி, 16 ஜூன், 2017
Local Body Election Reg - Proceedings..
Local Body Election Reg - Proceedings..
மிக அவசரம்/ /உள்ளாட்சி தேர்தல்-2017/ /தனி கவனம்/
ந.க.எண்.3452/அ1/2017 மாவட்டக் கல்வி அலுவலகம்,
நாள். 15.06.2017. திருச்சிராப்பள்ளி.
(நகல்) திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / மான்ய / ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கும் உரிய விரைவு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவிருக்கும் 2017-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கு தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட (ஓடு) படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து , கீழ்க்கண்ட ஆவணங்களினை இணைத்து இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் மென்நகல்-1 (CD) மற்றும் வன்நகல்-2(உரிய இணைப்புகளுடன்) நேரில் ஒப்படைக்கத் தெரிவிக்கப்படுகிறது.
1. ஜுன் 2017 ம் மாத ஊதிய பட்டியலுக்கான நுஊளு ஒளி நகல்-2.
2. வாக்காளர் அடையாள அட்டை ஒளி நகல்-2.
3. ஆதார் அடையாள அட்டை ஒளி நகல்-2.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓடு படிவத்தினை பூர்த்தி செய்திடும்பொழுது நுஊளு படிவத்தில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கப்படவேண்டும். தவிர்ப்பு கோரும் பணியாளர்கள் இருப்பின் அவர்களின் விண்ணப்பம், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பரிந்துரைத்து சான்றொப்பமிடப்பட்ட ஆவண நகல்கள் இரு நகல்களில் இணைத்து நுஊளு படிவ எண்ணிக்கையினை சமன்படுத்தி தலைமையாசிரியரின் முகப்பு கடிதத்தில் 2017-ல் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை, தவிர்ப்பு கோருபவர் எண்ணிக்கை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு இவ்வலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட தேர்தல் அலுவலரின் மேற்கண்ட கடிதத்தினைக் கருத்திற்கொண்டு காலதாமதத்தினை தவிர்த்திடல் வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்படும் நிலையில் எதிர்கொள்ளப்படும் அனைத்து விளைவுகளுக்கும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பாவார்கள் என்பதையும் தெரிவிக்கலாகிறது.
இணைப்பு:- XL படிவம்-1. மாவட்டக் கல்வி அலுவலர்,
திருச்சிராப்பள்ளி.
3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!
மூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
அரசுப் பள்ளி''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா?'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன்.
ஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது? நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர்.
அரசுப் பள்ளி''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். ‘மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார்.
''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சரை நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
மட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..
புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும்.
பகுதி நேர பொறுப்பாசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மழை வருவதற்கு முன்பு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார நடவடிக் கை எடுக்க வேண்டும்’ என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, ‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார். அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும் போது, ‘வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.16 கோடிக்கான வேலை நடந்து முடிந்துள்ளது. மழை வருவதற்குள் மீண்டும் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.
வியாழன், 15 ஜூன், 2017
பழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு
பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,
📌ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.
📌ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.
📌கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆக குறைப்பு?
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீதமுள்ள 10 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 - 18 SCHOOL CALENDER - SCHOOL ACTION PLAN PUBLISHED
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு.
பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை...
*கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை
*திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்
*சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
*நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் யோகா: புதுச்சேரி அரசு தகவல்
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்த யோகா முக்கியம் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்த யோகா முக்கியம் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.
தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி...
சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.
இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.
கடந்த, 1926ல், மிகச் சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2004ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதை மாற்ற என்ன செய்யலாம் என, யோசித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், முக நுால் நண்பர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி மூலம், பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.
இதன்படி, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள், மாணவியருக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்துளை கிணறு, ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் தொடர்பான வண்ண ஓவியங்கள், அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதி, யு.பி.எஸ்., வசதியுடன் கூடிய கணினி அறை.ஹோம் தியேட்டர், புரொஜக்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், தொடுதிரை பலகை, நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், மாடித்தோட்டம், 4டி அனிமேஷன் கல்வி, இங்கிலாந்தில் உள்ள ஆசிரியர்களுடன் இணையம் வழியே ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகிறது.
பள்ளி தலைமை ஆசிரியை சுபலஷ்மி கூறியதாவது:
உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தியதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, உள்கட்டமைப்பு வசதி பற்றி தெரிவிக்கின்றனர். மாணவர்களின் திறனை கண்டு, சிறந்த அரசு பள்ளியாக அறிவிக்கப்பட்டு
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)