>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 11 ஜூன், 2017

வேளாண் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 16ம் தேதி கலந்தாய்வு.

தமிழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி இன்று வெளியிட்டார்.

 வேளாண் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த கிருத்திகா முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2,820 வேளாண் படிப்புகளுக்கான மாணவ சேர்க்கை இடங்களுக்கு ஜூன் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மற்றும் மாணவ சேர்க்கை முடிந்து ஜூலை 24ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த தேதிகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 16ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு ஜூன் 19 - 24ம் தேதி வரையும், தொழிற்கல்வி பிரிவினருக்கு ஜூன் 28ம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 12-14ம் தேதி வரையில் நடைபெறும். மாணவ சேர்க்கை முடிந்து ஜூலை 24ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலை பணபலன் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - உடனடி விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்.......

ஆசிரியர்கள் தனது உயர்கல்வியின் அடிப்படையில் உயர் பணிக்கு வேலைவாய்ப்பகம் அல்லது ஆசிரியர் தேர்வு மூலம் விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று கோருதல் விண்ணப்பம்.....


தொடக்க கல்வி - கல்வி் மானிய கோரிக்கை சார்ந்த விவரங்களை அளிக்க ஏதுவாக 10.06.2017 & 11.06.2017 இரு தினங்களும் அனைத்து உதவித் தொடக்க கல்வி அலுவலகங்களும் செயல்பட வேண்டும்!செயல்முறைகள்!!

DSE Proceedings - Regarding Higher Secondary HM relinquish....

விளை நிலங்களில் வீடு கட்ட விவசாய அதிகாரி சான்று அவசியம்......

திண்டுக்கல்: விளைநிலங்களில் வீடுகட்ட விவசாய அதிகாரியின் தடையின்மை சான்று அவசியம் என பத்திரபதிவுத் துறை, வருவாய் துறையினருக்கு புதிய பதிவு நடைமுறை குறித்த பரிந்துரைகளை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.


தொடர்ந்து 10ஆண்டுகள் : சாகுபடிக்கு உகந்த நிலம் இல்லை என தெரியவந்தால், அந்த நிலத்தை வீட்டுமனைகளாக விற்பனை செய்வது நடைமுறையில் இருக்கிறது. அந்த நிலங்களை வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் 'சிட்டா அடங்கல்' விபரங்களை வைத்து விற்பனை செய்வதும் நடந்தேறின.மத்திய அரசின் 'நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டுத் திட்டம்' மூலம் விவசாயிகளின் சாகுபடி திறன்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விளைநிலங்கள் மனைகளாக மாறுவதை தடுத்து நிறுத்த, புதிய பதிவு வரைமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் வகுத்தது.அதன்பின் மத்திய அரசு இந்தத் திட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்தியது. தற்போது தமிழக அரசின் ஒப்புதலின்பேரில் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்கள், மாவட்ட வேளாண் துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், விளை நிலங்களை விற்பனை செய்வதற்கு, வேளாண் இணை இயக்குனர் அல்லது அதற்கு இணையான தொழில்நுட்ப அலுவலரின் தடையின்மை சான்றிதழ் பெறுவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தடையின்மை சான்றிதழ் வழங்க, ஒருசில வரைமுறைகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.முக்கியமாக பூர்வகுடி மக்களின் (பழங்குடியினர்) விளைநிலங்களில் சாகுபடி தன்மை குறைவது கண்டறியப்பட்டால், அந்த மண்ணின் முழு திறன்கள் (கார,அமில தன்மை விபரங்களின் பட்டியல்) பெற்று, அரசின் ஒப்புதல் பெற்ற பின்பே தடையின்மை சான்றிதழை வேளாண் இணை இயக்குனர் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் உதவி அலுவலர் ஒருவர் கூறியதாவது: இந்த மாதிரியான நடைமுறைகள் பதிவுத்துறையில் வகுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 76 சதவீத விளைநிலங்கள் 'கான்கிரீட்' கட்டடங்களாக உருமாறி விட்டன. மீதியுள்ள விளைநிலங்களை காப்பாற்ற இந்த 
உத்தரவு நன்மை பயக்கும் என்றார்.

துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை....

திண்டுக்கல்: 'தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி விபரங்கள் கேட்டு பதிவு செய்யப்பட்டன. சமீபகாலமாக பள்ளி கல்வித் துறையில் பல வகையான மாறுதல்கள் நடந்து வருகின்றன. 
பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை மாற்றம், இறைவழிபாட்டு முறையில் மாற்றம், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் மாற்றம், டிஜிட்டல் வருகை பதிவேடு பராமரிப்பு என தினமும் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் ஜாதி விபரங்களை கேட்கக் கூடாது. அதேநேரம் பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரங்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.இதன் மூலம் சமதர்ம சமுதாயம் உருவாகும். சமச்சீர் கல்வி சாத்தியமாகும் என்றார்.

அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சரஸ்வதி பூஜை, 'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை, முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும், ஆட்டோ பிரசாரம் மூலம், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களின் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், முதல் வகுப்பில், செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான மக்கள்,
சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சமயத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பர் என்பது, அவர்களின் நம்பிக்கை. எனவே, செப்., இறுதி வரை, அரசு பள்ளி ஆரம்ப வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.

பிளாஸ்டிக் அரிசியா? புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு

பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அயனாவரம் பேருந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கடந்த சில தினங்களாக பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது. மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் 'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னை அயனாவரம் பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அயனாவரம் பணிமனையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் கேண்டீனில் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக் அரிசி இல்லை என உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவர் கதிரவன் கூறியுள்ளார். மேலும், மதுரை காமராஜர் சாலையில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு: நீதிபதிகள் எழுப்பிய அதிரடி கேள்விகள்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி, பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு என்ன காரணம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன, கல்வித்தரம் இல்லாதநிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை எப்படி எதிர்க்கொள்ள முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

நீட் முடிவு வெளியிட தடை : சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ முறையீடு!

டெல்லி : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 8 மொழியில் நடத்தப்பட்டது. இதில் மாநில மொழியான தமிழில் கேட்கப்பட்ட நீட் கேள்விகள் கடினமாக இருந்ததாக சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் மே 24ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. ஆங்கிலம், இந்தியில் கேள்விகள் எளிதாகவும், தமிழில் கடினமாகவும் கேட்கப்பட்டதால் ரேங்க் முறையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு மருத்துவ இடம் பறிபோகும் என்று மாணவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வினாத்தாள் கடினமானதாக இல்லை என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் முடிவுகளை வெளியிட மதுரைக் கிளை தடை விதித்ததால், நேற்று முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தடையை நீக்கக் கோரி சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாததால் 12 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கக் கோரியுள்ளது, மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒரே மாதிரியான கேள்விகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி குஜராத் உள்ளிட்ட வேறு மாநிலங்களிலும் நீட் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி நீட் தேர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போதும் தடை நீட்டிக்கப்பட்டால் முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்படும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவை சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கிறது. பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் மாறுபாடுகள் இருந்ததாக சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன. உச்சநீதிமன்ற தலையீட்டிற்குப் பின்னர் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜூன்13ம் தேதிக்குப் பிறகு நீட் முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இமுடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

EMIS - Student Application Form


HOW TO TEACHERS MAINTAIN THEIR SR?


ஆசிரியர்கள் எவ்வாறு பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்?

STUDENTS ACHIEVEMENT CHART

மாணவர் அடைவுத் திறன் பதிவேடு!

CLICK HERE TO DOWNLOAD | STUDENTS ACHIEVEMENT CHART

QMT - CRC TRAINING DETAILS

QMT CRC TRAINING DETAILS
State level training on 16.6.17
District level - 20,21 and 22.6.17
Pri - Crc - 24.6.17
Up Pri - crc 1.7.2017

சனி, 10 ஜூன், 2017

மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவு: ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களால் அரசுப் பள்ளியில் உயிர்பெறும் கல்வி

சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தாயார் புவனேஸ்வரியுடன் மாணவி ப்ரீத்தி.
மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கும் ஆசிரியர்களாலேயே அரசுப் பள்ளிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. கோவை சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இதற்கு ஓர் உதாரணம். சிறப்பாக படித்து தேறிய மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிதாக ஒரு பாடப்பிரிவை கொண்டு வர பள்ளி ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டால் அந்த ஒரு மாணவி மட்டுமல்ல, பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது நிதர்சனம்.
கோவை சீரநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. வீடுகளுக்கு நாளிதழ் விநியோகிக்கும் வேலை பார்க்கிறார். மனைவி புவனேஸ்வரி. இத்தம்பதியின் மகள் ப்ரீத்தி. உடல்வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளியான இச்சிறுமிக்கு அவரது தாயாரே துணையாக இருக்கிறார். ப்ரீத்தி சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடம் பிடித்தார். பெற்றோருக்கு மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்குமே செல்லப் பிள்ளை ப்ரீத்தி. அனைவரது ஊக்கத்தினாலேயே பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
ஆனால் அதே பள்ளியில் தனது மேல்நிலை படிப்பைத் தொடர நினைக்கும்போதுதான் சிக்கல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளி என்பதால் அறிவியல் பாடப்பிரிவு கிடைக்கவில்லை. எளிதில் கிடைக்கும் கணிதவியல் பாடப்பிரிவு அப்பள்ளியிலேயே இல்லை. வேறு எங்கும் சென்று படிக்க ஒத்துழைக்காத உடல்நிலை. இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும், அன்போடு தன்னை அரவணைத்து சொல்லித்தரும் அரசுப் பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பை தொடர ஆசைப்பட்டார் அந்த மாற்றுத்திறனாளி மாணவி.
பள்ளி நிர்வாகத்திடமும், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் தாயார் உதவியோடு சென்று தனது நிலையை தெரிவித்தார். அத்துடன் சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனக்கும், தன்னைப் போன்ற மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் 3-வது பாடப்பிரிவை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். அதை பரிசீலித்த கல்வித்துறையினர், உடனடியாக அப்பள்ளியில் கணிதவியில் 3-வது பாடப் பிரிவை தொடங்க பரிந்துரைத்துள்ளனர்.
மாணவிக்கு உதவத் தயாராக இருந்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த உடனேயே அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டனர். ஒரு மாற்றுத்திறனாளி மாணவியின் நலனுக்காக தொடங்கப்படும் பாடப்பிரிவு, எதிர்காலத்தில் பல ஏழை, எளிய மாணவர்களுக்கும் கல்வியறிவை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாய்க்கு நிகர்
மாணவி ப்ரீத்தியிடம் கேட்டபோது, ‘என்னால் நடக்கவோ, வேலைகளைச் செய்யவோ முடியாது. அம்மாவின் துணை தேவை. 10 வருடங்களாக அம்மாதான் என்னை பள்ளிக்குத் தூக்கிச் செல்வார்கள். தாய்க்கு நிகராக என்னை ஆசிரியர்கள் கவனித்துக் கொள்வார்கள். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கொடுத்த ஊக்கமே என்னை படிக்க வைத்தது; நல்ல மதிப்பெண் பெற வைத்தது. மேல்நிலைக் கல்வியையும் இங்கு படித்தால் நிச்சயம் சாதிப்பேன். இதே பள்ளியில் 3-வது பாடப்பிரிவு தொடங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறேன். எனக்கு உதவிய பள்ளிக்கு எதிர்காலத்தில் நான் உதவ வேண்டும்’ என்றார்.
‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என் மகளை, தங்கள் குழந்தையைப் போல பார்த்துக் கொள்வார்கள். அந்த அரவணைப்புதான் அவளை ஊக்கப்படுத்தி சாதிக்க வைத்தது. வேறு எங்கும் அவளால் படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு பாடப்பிரிவு தொடங்க முடிவு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிறுமியின் தாயார் புவனேஸ்வரி.
நிதி திரட்ட முடிவு
பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘2011 வரை இங்கு 3-வது பாடப்பிரிவு இருந்தது. பின்னர் அது சுயநிதி பாடப்பிரிவாக மாறியதால் அரசு மூலமாக ஆசிரியர்கள் நியமனம் கிடைக்கவில்லை. பள்ளியில் நன்றாக படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தியால் செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாது என்பதால் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர முடியவில்லை. 3-வது பாடப்பிரிவில் தான் சேரமுடியும் என்ற சூழல் ஏற்பட்டது. எனவே பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் உதவியுடம் நிதி திரட்டி ஆசிரியர்களை நியமித்து 3-வது பாடப்பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். ப்ரீத்தி மட்டுமல்ல பல மாணவர்களுக்கு இது பயன்படும்’ என்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் வி.சரவணனிடம் கேட்டபோது, ‘3-வது பாடப்பிரிவுக்கு பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2 ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் நிதி தேவை. இதற்கு எங்கள் முன்னாள் மாணவர்கள் நிச்சயம் உதவுவார்கள்.
முன்னாள் மாணவர்கள் இந்த பள்ளியை பல வழிகளில் முன்னேற்றியுள்ளனர். அவர்கள் முயற்சியால் தான் கனடா தமிழ்சங்கத்தில் எங்கள் பள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் அரசாணை....

பாடத்திட்ட வழிகாட்டல் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்.....

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 11 ஆண்டு களாக, காலாண்டு, அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் வெளியிடவில்லை. இந்த ஆண்டாவது வெளியிடப்படுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: 
பள்ளி திறக்கும் போதே, பொது தேர்வு தேதியை அறிவித்தது, தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது. அதேநேரம், மாணவர்களின் படிப்படியான வளர்ச்சி மற்றும் உடனடி தேவைகளையும், அதிகாரிகள் மறந்து விடக்கூடாது. தற்போதைய நிலையில், அரசு பள்ளி மாணவர்களை, அதிக மதிப்பெண் பெற வைக்க, பாடத்திட்ட வழிகாட்டி குறிப்புகள் தேவை.
மூன்று பருவ தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக, எத்தனை அலகுகளை முடித்திருக்க வேண்டும் என்ற குறிப்புகள், பல ஆண்டுகளாக வழங்கவில்லை. தற்போதைய பாடத்திட்டத்தில், 2006ல் முதன்முதலாக, பாடத்திட்டம் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த முறையும் கைவிடப்பட்டதால், மாவட்டந்தோறும், பாடம் நடத்தும் அளவு மாறுகிறது. 
பழைய பாடத்திட்ட வழிகாட்டுதல் படி, தேர்வுகளில் வினாத்தாள்கள் இடம்பெறுவதில்லை. பல பள்ளிகளில், தேர்வு முடிந்த பின் தான், தேர்வில் இடம்பெற்ற பாடமே நடத்தும் சூழல் உள்ளது.எனவே, ஒவ்வொரு தேர்வுக்குமான, 'போர்ஷன்' என்ன; அதை எந்த மாதம், வாரத்தில் முடித்திருக்க வேண்டும்; எப்போது, 'ரிவிஷன்' செய்ய வேண்டும் என, தெளிவான வழிகாட்டுதல் தேவை. மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்களை, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கொண்டு வர வேண்டும். 
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி....

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.
பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.
இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 
இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்க விடுமுறை ஊதியத்தை செலவிடும் ஆசிரியர் பொன்.தங்கராஜ் !!

கோடை விடுமுறைக் காலத்தில் பெறும் ஊதியம் முழுவதையும் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கச் செலவிட்டு வருகிறார் புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்.தங்கராஜ்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்.தங்கராஜ். இவர், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கோடை விடுமுறைக் கால ஊதியத்தை, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக செலவிட்டு ஊக்கம் அளித்து வருகிறார்
தனது கல்விப் பணி குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘எனக்கு 49-வது வயதில்தான் (2010) ஆசிரியர் பணி கிடைத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். சமூக அறிவியல் பாடம், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியமானது. இதனால், இந்தப் பாடத்தைப் பற்றிய புரிதலை மாணவிகளிடையே ஏற்படுத்தவும், இப்பள்ளியை நாடிவரும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறேன்.
இதுவரை 5 மாணவிகள் பரிசுத் தொகை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 3 மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 99 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரூ.1000 வீதமும், இந்த பாடத்தை ஆங்கில வழியில் படித்து நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் புரவலர் நிதி வழங்கி வருகிறேன்.
மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், சிறப்புக் கையேடும் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையான மே மாதத்துக்குரிய எனது ஊதியம் முழுவதையும், இப்பணிகளுக் காகவே செலவிட்டு வருகிறேன். மாணவப் பருவத்தில் நான் சந்தித்த வறுமையின் தாக்கமே இதற்குக் காரணம்’’ என்கிறார் ஆசிரியர் பொன்.தங்கராஜ்.