ஞாயிறு, 28 மே, 2017
அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி
அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள்திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில்,ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.
இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலைமாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.
பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.
ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.
இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்
-கல்விச்சிறகுகள்
-கல்விச்சிறகுகள்
ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்.. பிராட்பேண்ட் திட்டங்களில் 1,000 ஜிபி இலவசம்..!
ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
'எக்ஸ்குளுசீவ் வெப் ஆஃபர்' (Exclusive Web Offer) எனும் சலுகையின் கீழ் வழங்கப்படும் இலவச டேட்டா, முதற்கட்டமாக டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. எனினும் மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து, பயன்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஏற்ப 750 ஜிபி முதல் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இதற்கான வேலிடிட்டி ஒரு ஆண்டு என்றும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ஐந்து திட்டங்கள், ரூ.899 முதல் துவங்குகிறது. இவை அனைத்திலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் வழங்கப்படுகின்றன. பிராட்பேண்ட் பேஸ் திட்டத்தில் 60 ஜிபி டேட்டா, 16 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் டேட்டா 750 ஜிபி ஆகும்.
மற்ற திட்டங்களில் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.1,099 திட்டத்தில் 40 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் 100 Mbps வேகத்தில் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ,1,499 மற்றும் ரூ.1,799 திட்டங்களில் 100 Mbps வேகத்தில் முறையே 160 ஜிபி மற்றும் 220 ஜிபி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 65 ஜிபி / 100 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படும், இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்திற்கான டேட்டா தீர்ந்ததும், இலவச டேட்டா வழங்கப்படும், இதன் டவுன்லோடு வேகம் 512 Kbps வழங்கப்படுகிறது. போனஸ் டேட்டா பயன்படுத்தாத பட்சத்தில் அவை அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்பட மாட்டாது.
ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சலுகைக்கான சோதனைகள் துவங்கியுள்ள நிலையில், ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான போனஸ் டேட்டா சலுகை அரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வி-ஃபைபர் (V-Fiber) பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவித்தது. ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தில் பிராட்பேண்ட் வேகம் 100 Mbps வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும்,
இடஒதுக் கீடு சேர்க்கை விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் தனியார் பள்ளி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறு பான்மையினர் பள்ளிகள் நீங்க லாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடும்.
அவகாசம் முடிந்தது
இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்றுடன் (26-ம் தேதி) முடிவடைந்தது.
25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களை தனியார் பள்ளிகள் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் உள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி கூறியதாவது:
66 ஆயிரம் விண்ணப்பங்கள்
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளி கள் தவிர) நுழைவுநிலை வகுப்பு களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 இடங்கள் உள்ளன. 25-ம் தேதி மதியம் நிலவரப்படி, 66 ஆயிரத்து 436 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இடங்களை ஒதுக்கீடு செய்வதற் கான குலுக்கல் மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு வாரத்துக் குள் சேர்க்கை தொடர்பான விவ ரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் தகவல்
தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரி விக்கப்படும். 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் வரும் இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டியது தனியார் பள்ளிகளின் கடமையாகும். இந்த ஒதுக்கீடு சரியாக பின் பற்றப்படவில்லை என்றால் புகார் செய்யலாம். நர்சரி, பிரைமரி பள்ளிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், மெட்ரிக் பள்ளி களாக இருந்தால் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடமும் (ஐஎம்எஸ்) புகார் செய்ய வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
25 சதவீத இடஒதுக்கீடு தொடர் பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற முடியுமா என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடுகிறது.
ரூ.124 கோடி வழங்க ஏற்பாடு
அந்த வகையில், 2015-16ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் ரூ.124 கோடியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின் றன. 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எத்தனை இடங்கள், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், காலியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியும். இதற்கு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தகவல் வழங் கும் அதிகாரிகளாகவும், மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் மேல்முறை யீட்டு அதிகாரியாகவும் செயல் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விண்ணப்பத்தில் இடம்பெறவில்லையா?
பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும்போது ஆன்லைன் விண்ணப்பத்தில் அந்த பள்ளி இடம்பெறவில்லை என்றால், அப்பள்ளி சிறுபான்மை பள்ளி அல்ல என்பதை உறுதிசெய்துகொண்டு, சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரை அணுகி தங்கள் குழந்தையை அந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.
சனி, 27 மே, 2017
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனகல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்றுமற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்றுமற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்.மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழு பாடங்களையும் படித்து தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மனதளவில் சிரமப்படுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருபருவ கல்வி முறையை அமல்படுத்தி இரண்டாம் பருவ தேர்வுகளில், முதல் பருவ முக்கிய பாடங்களை இணைத்து தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு கூறினார்.
போட்டி உலகில் பலியாகும் மாணவர்கள்... கல்வி மாற்றங்கள் பலன் தருமா????
மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தகல்வியாளர்களுக்கு இந்த வருடம்தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
கவனம் பெற்ற அறிவிப்புகள்சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப்பின்னர் தமிழகக் கல்வித்துறை, இன்னும் சில சீர்த்திருத்தங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் ஸ்தரமற்ற சூழல் நிலவும் நிலையில் துணிச்சலாக கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பது இன்னொருபுறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என்ற பிரமாண்டப் பட்டியல் செய்திக்கு அருகில் ஒரு மூலையில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை என்ற சிறிய செய்தியை இனி காணத்தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இனி முதலிடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை இருக்காது என்றும், கிரேடு சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி அதன்படி தேர்வு முடிவுகள் வெளியாயின.இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிலும் கிரேடு சிஸ்டம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் 12 ஆம் வகுப்புக்குப் போகலாம். தோல்வியுற்ற பாடங்களை 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம் என்பதும் மாணவர்களிடம் கவனம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் என்ற அறிவிப்பும் கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கவனம் பெற்ற அறிவிப்புகள்சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப்பின்னர் தமிழகக் கல்வித்துறை, இன்னும் சில சீர்த்திருத்தங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் ஸ்தரமற்ற சூழல் நிலவும் நிலையில் துணிச்சலாக கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பது இன்னொருபுறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என்ற பிரமாண்டப் பட்டியல் செய்திக்கு அருகில் ஒரு மூலையில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை என்ற சிறிய செய்தியை இனி காணத்தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இனி முதலிடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை இருக்காது என்றும், கிரேடு சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி அதன்படி தேர்வு முடிவுகள் வெளியாயின.இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிலும் கிரேடு சிஸ்டம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் 12 ஆம் வகுப்புக்குப் போகலாம். தோல்வியுற்ற பாடங்களை 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம் என்பதும் மாணவர்களிடம் கவனம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் என்ற அறிவிப்பும் கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரவேற்கத்தக்க ஆலோசனைகள்:
கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் ஒரு தலைப்பட்சமான முடிவுகளே எடுக்கப்பட்டு வந்தன. இதனால், கல்வித்துறை மீது கல்வியாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட உடன், கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பின்னர்தான் இந்த நல் அறிவிப்புகள் வரிசை கட்டி வெளியாகி இருக்கின்றன.
கல்வித்துறையின் சீர்த்திருத்தங்கள் திருப்தி அளிக்கிறதா என கல்வியாளர் வசந்தி தேவியிடம் கேட்டோம்."சில காலமாக அக்கறையற்று இருந்த கல்வித் துறை இன்றைக்கு மிகவும் துரிதமாக இயங்கத் தொடங்கி இருக்கிறது. துறைச் செயலாளர் உதயச்சந்திரனுடைய தீவிரமான முயற்சி, ஈடுபாடு, மாற்றங்கள் அவசியம் என்ற எண்ணம் ஆகியற்றால் இது சாத்தியம் ஆகி இருக்கிறது. என்னைப் போன்ற கல்வியாளர்களிடம் அவர் ஆலோசனை செய்தார். ஆசிரியர்களையும் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யுங்கள் என்று சொன்னேன். அதன்படி எல்லா தரப்பிலும் ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்திருக்கிறார். எல்லா கருத்துகளையும் கேட்டார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை உதயச்சந்திரனுக்கு இல்லை. மாற்றங்களை அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது.பலியாகும் குழந்தைகள்நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாநில பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை இருந்தது. என்னைப் பொறுத்தவரையில், இந்த சீர்திருத்தங்கள் போதாது. கல்விதான் சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் அடித்தளமாகவும் இருக்கிறது.கல்வி அமைப்பில் ஏற்றதாழ்வுகளை உருவாக்கி மேலே இருப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாக இதுவரை இருந்தது. இப்போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மாற்றங்கள் தேவையாக இருக்கிறது.
அரசுப் பள்ளிகள் மூலம் மட்டும்தான் சமுதாயம் வளரமுடியும். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளைகள் நடக்கிறது. கல்வியை அவர்கள் வியாபாரம் ஆக்கி விட்டார்கள். பல்வேறு விதிமீறல்கள், குழந்தைகள் உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு மன உளைச்சலைத் தருகின்றனர். மனிதனை மனிதன் விழுங்குகின்ற போட்டி உலகத்தில் குழந்தைகள் பலியாக்கப்படுகின்றனர்.எதிர்ப்புக்குப் பணியக்கூடாதுஒன்றாம் வகுப்பில் இருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் போல மாற்றம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே போல தரத்தை உயர்த்துவது என்பது, 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்புப் பாடத்தை எடுப்பது என்று அர்த்தம் அல்ல. அந்தந்த வகுப்புக் குழுந்தைகளுக்கு அந்தந்த வகுப்புப் பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் தரமான கல்வி.கல்வித்துறையில் சீர்த்திருத்தங்கள் என இன்னும் ஆழமான முயற்சிகளை மேற்கொண்டால், தனியார் பள்ளிகளிடம்இருந்து எதிர்ப்புகள் வரக்கூடும். அதையெல்லாம் மீறி தமிழக அரசு தைரியமாக மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.போட்டித் தேர்வுக்கு உதவும் மாற்றங்கள்தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் இயக்க ஆலோசகர் ரா.முனியனிடம் பேசினோம்."மாற்றங்களின் மூலம் மாணவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது. அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
பாடத்திட்டங்களை வலுவாக்க குறிப்பு உதவிப் புத்தகங்கள் படித்தால் போதும். இதுவரையிலும், இந்தக் கேள்விக்கு, இந்த விடைதான் என்று டிசைன் செய்து மாணவர்களுக்குக் கொடுத்தோம். இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், போட்டித்தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எளிதாக இருக்கும்.இந்த மாற்றங்களால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. புதிய மாற்றங்களை அமல்படுத்தும்போது புரிதலை ஏற்படுத்தி விட்டால் பிரச்னைகள் தீர்ந்து விடும்.15 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளிகளில்தான் நடத்த மாட்டார்கள். ஆனால், 12 ஆம் வகுப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் 11 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படுவது இல்லை என்பது உண்மைதான்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடங்களை மாற்றாமல் இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டங்களை மாற்றவேண்டும்" என்றார்.ஆசிரியர்கள் வருகை முக்கியம்தமிழ்நாடு மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், கே.ஆர்.நந்தக்குமாரிடம் பேசினோம்."கல்வித்துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறையிடம் நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம். அதன்படிதான் இப்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பாடங்கள் எடுப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண்களைப் போட்டு விடுகின்றனர்.
தேர்வுகளின்போது 'அட்ஜஸ்ட்' செய்து மதிப்பெண்கள் போடுகின்றனர்.மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், வராவிட்டாலும் 10 மார்க் போடுகின்றனர். செய்முறைத் தேர்வுக்கு 20 மார்க் போடுகின்றனர். கூடுதலாக 10 மார்க் எடுத்தால் அந்த மாணவன் தேர்ச்சி பெற்று விடுகிறான். 3 முறை வரிசையாகப் பொதுத்தேர்வு நடத்துவது என்பது ஒரு மன அழுத்தத்தைத் தரும் என்று சொல்ல முடியாது. 600 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சில தனியார் பள்ளிகள் அதிக மாணவர்களைச் சேர்த்து கொள்ளையடிக்கின்றனர். 12 ஆம் வகுப்பில் 4 செக்ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், சில பள்ளிகளில் 40 செக்ஷன்கள் வைத்திருக்கின்றனர். எங்கள் பள்ளியில் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்று விளம்பரமே செய்கின்றனர்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வருகைப்பதிவேடுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரவேண்டும்.
மாணவர்கள் வருகையை பதிவு செய்வதற்கும் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் படிப்பது, எழுதுவது, பேசுவதை உறுதி செய்யவேண்டும். வாழ்க்கை கல்வி, நீதிபோதனை போன்ற பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். நூலகம் அமைக்க வேண்டும். விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.
அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்காக, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கில மொழி திறனை வளர்க்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக, தொடக்கப் பள்ளிகளில், பிளாஷ் கார்ட் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆங்கில எழுத்து, பழம், காய்கறி, விலங்கு, பறவை போன்றவற்றின் பெயர்களை விவரிக்க, வண்ண படங்களுடன் கூடிய அட்டைகளை பயன்படுத்தி, வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
PF பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க EPFO ஆலோசனை
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ் (பணியாளர் ஓய்வூதியத் திட்டம்)மற்றும் EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.
இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ, 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான இறுதி முடிவு நாளை(மே-27) முடிவு செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கு உறுதுணை இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் பிடிக்கப்படுவது.
12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் .இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் இ.பி.எப்.ஓ அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. இ.பி.எப்.ஓ தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும்.
12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (28.05.2017)வெளியீடு.. கல்வி வாரியம் அறிவிப்பு
புதுடெல்லி : சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 24ந் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணை
மதிப்பெண் விவகாரத்தால் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. நாளை அல்லது நாளை மறு நாள் தேர்வு முடிவுகள் வெளியாகும்என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 12ம் தேதி தொடங்கிஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்ததேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
கருணை மதிப்பெண் மே 19ந் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மே 24ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்தஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டகடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.
கருணை மதிப்பெண் மே 19ந் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மே 24ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்தஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டகடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.
நீதிமன்ற தீர்ப்பு இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் இதனை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதைரத்து செய்வது நியாமற்ற செயல் என உத்தரவிட்டனர்.
மதிப்பெண் வழங்க ஏற்பாடு இதையடுத்து நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்துவதற்காக சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச்சந்தித்து பேசினார். கருணை மதிப்பெண் மாணவர்களுக்குவழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளன.
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு நாளை மறுநாள் தேர்வு முடிவுகள்வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்
அலுவலர் குழு நியமனம்
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசால் அலுவலர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதல் கூட்டம் 16-ந் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அலுவலர் குழுவின் உறுப்பினர்களான, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா ஆகியோரும் உறுப்பினர் செயலாளர் உமாநாத்தும் பங்கேற்றார்கள்.
கருத்து கேட்க முடிவு
இக்கூட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 7-வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த பரிந்துரைகள் குறித்தும், படிகள் பற்றிய பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்தும், இவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை திருத்தி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 13.3.17 முதல் 15.5.17 தேதிவரை பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது.
தொடங்கியது
அதன்படி, மே 26 மற்றும் 27-ந் தேதிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும், ஜூன் 2 மற்றும் 3-ந் தேதி அனைத்து அங்கீகாரம் பெறாத அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும் அலுவலர் குழு நேரில் சந்திக்க அந்தக் குழு முடிவு செய்தது.
இதையடுத்து அந்தந்த சங்கங்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த கருத்து கேட்பு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
2 நாட்கள் நடக்கும்
இந்தக் கூட்டத்துக்கு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர், அலுவலர் குழு முன்பு ஆஜராகி, கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு, க.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் 2 நாட்கள் கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும். காலை மற்றும் மாலை வேளையில் இந்தக் கூட்டம் நடக்கும்.
அறிக்கை தாக்கல்
6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைந்த பிறகு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று சங்கங்கள் கூறியுள்ளன. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. அதை அரசுதான் முடிவு செய்யும். அனைத்து சங்கங்களுடன் பேசிவிட்டு ஜூன் மாத இறுதியில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)