வெள்ளி, 26 மே, 2017
போட்டி உலகில் பலியாகும் மாணவர்கள்... கல்வி மாற்றங்கள் பலன் தருமா????
மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தகல்வியாளர்களுக்கு இந்த வருடம்தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
கவனம் பெற்ற அறிவிப்புகள்சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப்பின்னர் தமிழகக் கல்வித்துறை, இன்னும் சில சீர்த்திருத்தங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் ஸ்தரமற்ற சூழல் நிலவும் நிலையில் துணிச்சலாக கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பது இன்னொருபுறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என்ற பிரமாண்டப் பட்டியல் செய்திக்கு அருகில் ஒரு மூலையில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை என்ற சிறிய செய்தியை இனி காணத்தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இனி முதலிடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை இருக்காது என்றும், கிரேடு சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி அதன்படி தேர்வு முடிவுகள் வெளியாயின.இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிலும் கிரேடு சிஸ்டம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் 12 ஆம் வகுப்புக்குப் போகலாம். தோல்வியுற்ற பாடங்களை 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம் என்பதும் மாணவர்களிடம் கவனம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் என்ற அறிவிப்பும் கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கவனம் பெற்ற அறிவிப்புகள்சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப்பின்னர் தமிழகக் கல்வித்துறை, இன்னும் சில சீர்த்திருத்தங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் ஸ்தரமற்ற சூழல் நிலவும் நிலையில் துணிச்சலாக கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பது இன்னொருபுறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என்ற பிரமாண்டப் பட்டியல் செய்திக்கு அருகில் ஒரு மூலையில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை என்ற சிறிய செய்தியை இனி காணத்தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இனி முதலிடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை இருக்காது என்றும், கிரேடு சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி அதன்படி தேர்வு முடிவுகள் வெளியாயின.இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிலும் கிரேடு சிஸ்டம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் 12 ஆம் வகுப்புக்குப் போகலாம். தோல்வியுற்ற பாடங்களை 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம் என்பதும் மாணவர்களிடம் கவனம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் என்ற அறிவிப்பும் கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரவேற்கத்தக்க ஆலோசனைகள்:
கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் ஒரு தலைப்பட்சமான முடிவுகளே எடுக்கப்பட்டு வந்தன. இதனால், கல்வித்துறை மீது கல்வியாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட உடன், கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பின்னர்தான் இந்த நல் அறிவிப்புகள் வரிசை கட்டி வெளியாகி இருக்கின்றன.
கல்வித்துறையின் சீர்த்திருத்தங்கள் திருப்தி அளிக்கிறதா என கல்வியாளர் வசந்தி தேவியிடம் கேட்டோம்."சில காலமாக அக்கறையற்று இருந்த கல்வித் துறை இன்றைக்கு மிகவும் துரிதமாக இயங்கத் தொடங்கி இருக்கிறது. துறைச் செயலாளர் உதயச்சந்திரனுடைய தீவிரமான முயற்சி, ஈடுபாடு, மாற்றங்கள் அவசியம் என்ற எண்ணம் ஆகியற்றால் இது சாத்தியம் ஆகி இருக்கிறது. என்னைப் போன்ற கல்வியாளர்களிடம் அவர் ஆலோசனை செய்தார். ஆசிரியர்களையும் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யுங்கள் என்று சொன்னேன். அதன்படி எல்லா தரப்பிலும் ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்திருக்கிறார். எல்லா கருத்துகளையும் கேட்டார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை உதயச்சந்திரனுக்கு இல்லை. மாற்றங்களை அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது.பலியாகும் குழந்தைகள்நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாநில பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை இருந்தது. என்னைப் பொறுத்தவரையில், இந்த சீர்திருத்தங்கள் போதாது. கல்விதான் சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் அடித்தளமாகவும் இருக்கிறது.கல்வி அமைப்பில் ஏற்றதாழ்வுகளை உருவாக்கி மேலே இருப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாக இதுவரை இருந்தது. இப்போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மாற்றங்கள் தேவையாக இருக்கிறது.
அரசுப் பள்ளிகள் மூலம் மட்டும்தான் சமுதாயம் வளரமுடியும். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளைகள் நடக்கிறது. கல்வியை அவர்கள் வியாபாரம் ஆக்கி விட்டார்கள். பல்வேறு விதிமீறல்கள், குழந்தைகள் உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு மன உளைச்சலைத் தருகின்றனர். மனிதனை மனிதன் விழுங்குகின்ற போட்டி உலகத்தில் குழந்தைகள் பலியாக்கப்படுகின்றனர்.எதிர்ப்புக்குப் பணியக்கூடாதுஒன்றாம் வகுப்பில் இருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் போல மாற்றம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே போல தரத்தை உயர்த்துவது என்பது, 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்புப் பாடத்தை எடுப்பது என்று அர்த்தம் அல்ல. அந்தந்த வகுப்புக் குழுந்தைகளுக்கு அந்தந்த வகுப்புப் பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் தரமான கல்வி.கல்வித்துறையில் சீர்த்திருத்தங்கள் என இன்னும் ஆழமான முயற்சிகளை மேற்கொண்டால், தனியார் பள்ளிகளிடம்இருந்து எதிர்ப்புகள் வரக்கூடும். அதையெல்லாம் மீறி தமிழக அரசு தைரியமாக மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.போட்டித் தேர்வுக்கு உதவும் மாற்றங்கள்தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் இயக்க ஆலோசகர் ரா.முனியனிடம் பேசினோம்."மாற்றங்களின் மூலம் மாணவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது. அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
பாடத்திட்டங்களை வலுவாக்க குறிப்பு உதவிப் புத்தகங்கள் படித்தால் போதும். இதுவரையிலும், இந்தக் கேள்விக்கு, இந்த விடைதான் என்று டிசைன் செய்து மாணவர்களுக்குக் கொடுத்தோம். இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், போட்டித்தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எளிதாக இருக்கும்.இந்த மாற்றங்களால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. புதிய மாற்றங்களை அமல்படுத்தும்போது புரிதலை ஏற்படுத்தி விட்டால் பிரச்னைகள் தீர்ந்து விடும்.15 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளிகளில்தான் நடத்த மாட்டார்கள். ஆனால், 12 ஆம் வகுப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் 11 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படுவது இல்லை என்பது உண்மைதான்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடங்களை மாற்றாமல் இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டங்களை மாற்றவேண்டும்" என்றார்.ஆசிரியர்கள் வருகை முக்கியம்தமிழ்நாடு மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், கே.ஆர்.நந்தக்குமாரிடம் பேசினோம்."கல்வித்துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறையிடம் நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம். அதன்படிதான் இப்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பாடங்கள் எடுப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண்களைப் போட்டு விடுகின்றனர்.
தேர்வுகளின்போது 'அட்ஜஸ்ட்' செய்து மதிப்பெண்கள் போடுகின்றனர்.மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், வராவிட்டாலும் 10 மார்க் போடுகின்றனர். செய்முறைத் தேர்வுக்கு 20 மார்க் போடுகின்றனர். கூடுதலாக 10 மார்க் எடுத்தால் அந்த மாணவன் தேர்ச்சி பெற்று விடுகிறான். 3 முறை வரிசையாகப் பொதுத்தேர்வு நடத்துவது என்பது ஒரு மன அழுத்தத்தைத் தரும் என்று சொல்ல முடியாது. 600 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சில தனியார் பள்ளிகள் அதிக மாணவர்களைச் சேர்த்து கொள்ளையடிக்கின்றனர். 12 ஆம் வகுப்பில் 4 செக்ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், சில பள்ளிகளில் 40 செக்ஷன்கள் வைத்திருக்கின்றனர். எங்கள் பள்ளியில் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்று விளம்பரமே செய்கின்றனர்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வருகைப்பதிவேடுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரவேண்டும்.
மாணவர்கள் வருகையை பதிவு செய்வதற்கும் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் படிப்பது, எழுதுவது, பேசுவதை உறுதி செய்யவேண்டும். வாழ்க்கை கல்வி, நீதிபோதனை போன்ற பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். நூலகம் அமைக்க வேண்டும். விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனகல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்றுமற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்றுமற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்.மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழு பாடங்களையும் படித்து தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மனதளவில் சிரமப்படுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருபருவ கல்வி முறையை அமல்படுத்தி இரண்டாம் பருவ தேர்வுகளில், முதல் பருவ முக்கிய பாடங்களை இணைத்து தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு கூறினார்.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திருத்தம் செய்ய வசதி
சென்னை: ''ஸ்மார்ட் ரேஷன் கார்டில், தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சென்னையில், உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு, பொது வினியோக திட்ட கம்ப்யூட்டர்மயம் குறித்து, நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
அதை துவக்கி வைத்த பின், அமைச்சர் காமராஜ் பேசியதாவது: தமிழகத்தில், இதுவரை, 86 லட்சம் பேருக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கார்டை பெற்ற பின், அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால், பொது வினியோக திட்ட இணையதளம், 'மொபைல் ஆப்' மூலம் மற்றும் உணவு வழங்கல் அலுவலகத்தில் சரி செய்து கொள்ளலாம். மாற்றம் செய்த பின், புதிய கார்டை, அரசு இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது?
புதுடில்லி : ''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
குழப்பம்:
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
விளக்கம்:
இந்நிலையில், ''இது போன்ற தகவல்களால், மாணவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி, தீவிர கதியில் நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்; அதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
மதுரை: 'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.
பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது...
பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது. துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், தேர்வுமையங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் பயணம்....
தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்கிறார்கள்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 5 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் ஊட்டி அரசு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அருண், 10-ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!
இந்திய ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங்களில் ஜாலியாக ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் உறுதிப்படுத்தினார். மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன்ஆய்வு செய்து மரகட்டையாக இருக்கும் ஊழியர்களை அரசுக்குத் தேவையில்லை என மத்திய அரசின் திடீர் நடவடிக்கையின் மூலம் கட்டாய ஓய்வை அளித்துள்ளது. இதன் படி கடந்த சில மாதங்களில் குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த அறிவிப்பை வெளியிடும் முன் மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னரே 129 ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அடுத்தகட்ட திட்டமாகக் குரூப் ஏ பிரிவில் 34,451 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,521 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வில் non-performersஆகக் கருதப்படும் ஊழியர்கள் நிச்சயமாகப் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு non-performer என்ற முத்திரை குத்தி உயர் ஐஏஎஸ் அதிகாரியை பணியைவிட்டு நீக்கியது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் அரவிந்த் மற்றும் டினோ ஜோஷி என்கிற ஐஏஎஸ் தம்பதிகள் திடீரெனப் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 4 வருடங்களுக்குப் பின் இவர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது 350 கோடி ரூபாய் மதிப்புகள் சொத்துக்கள் மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கம் இவர்கள் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
மத்திய அரசு பொதுவாக அரசுப் பணியாளர்களின் செயல்திறன் குறித்த ஆய்வைப் பணியில் சேர்ந்து 15 வருடத்திலும், அதன் பின் 25 வருடத்திலும் ஆய்வு செய்வார்கள்.
7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!
7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது
ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது
ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி 22ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலாளராக டாக்டர் P. உமாநாத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
இந்த குழுவினர் மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் 4 நாட்களாக கருத்து கேட்பு முகாம் நடைபெற உள்ளது.
நாளை தொடங்கி, சனிக்கிழமை (27ந்தேதி), மற்றும் 02.06.2017 (திங்கட்கிழமை), 03.06.2017 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊதியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது......
நாளை தொடங்கி, சனிக்கிழமை (27ந்தேதி), மற்றும் 02.06.2017 (திங்கட்கிழமை), 03.06.2017 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊதியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது......
TNPSC : குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.....
டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2ஏ பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), 3-வது தளம், சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன.
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2ஏ பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), 3-வது தளம், சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் திங்கள் முதல் வெள்ளிவரை அலுவலக நேரங்களில் மேற்கண்ட முகவரியில் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் நேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்'' என்று அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017 !!
22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்
25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்
25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு
02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி
31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்........
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி
31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்........
61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்.....
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இரண்டு ஆண்டுகளாக, புத்தகம், நோட்டு தவிர, மற்ற இலவச பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு, அனைத்து இலவச பொருட்களையும், விடுபடாமல் வழங்க முடிவு செய்யப்பட்டு, கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன், பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காக்கி நிறத்திலும், மாணவியருக்கு கருப்பு நிறத்திலும், 'பெல்ட்' வைத்த, பி.வி.சி., காலணிகள் வழங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டுகளில், காலணிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன; துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எந்த முறைகேடுமின்றி, தரமான காலணிகளை மாணவர்களுக்கு வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. வரும், 28ம் தேதி, இதற்கான, 'டெண்டர்' இறுதி செய்யப்பட உள்ளது. செப்டம்பருக்குள் காலணிகளை தயாரித்து முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாகும் காலணிகளை, ஆகஸ்ட் முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மொத்தம், 61.22 லட்சம் பேருக்கு, காலணிகள் வழங்கப்பட உள்ளன.
'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை........
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது. இதற்காக, தேர்வு சீர்திருத்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, வினாத்தாளை பொறுத்தவரை, அறிவுத்திறனை சோதிக்க, 19 சதவீதம்; பாடத்தை புரிந்து கொள்வதை ஆய்வு செய்ய, 31; படித்ததை பயன்படுத்தும் முறைக்கு, 23; திறனை ஆய்வு செய்ய, 27 சதவீதம் என, 100 சதவீத கேள்விகள் இடம் பெறுகின்றன.
அதேபோல், 12 சதவீதம் கடினம், 60 சதவீதம் எளிமை மற்றும், 28 சதவீதம் மிதமான கேள்விகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. இதன்படி, 'ப்ளூ பிரின்ட்' என்ற வினா வடிவமைப்பு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வினா வடிவமைப்பு அட்டவணை, ஒவ்வொரு பாட புத்தகத்திலும் இடம் பெறும். அதன்மூலம், ஒவ்வொரு பாடத்திலும், எந்த பிரிவில் எத்தனை மதிப்பெண் கேள்விகளை படிக்க வேண்டும்; எந்த பாடத்தில், புத்தகத்தின் பின்பக்க கேள்விகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சிகளை படிக்க வேண்டும் என்ற விபரம் அறியலாம்.
பெரும்பாலான பள்ளிகளில், ப்ளூ பிரின்ட் படியே, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகின்றனர். அதனால், பல பாடங்கள் மற்றும் வினாக்களை, மாணவர்கள் படிக்காமல் விட்டு விடுகின்றனர். இப்படி அரைகுறையாக படிப்போர், 'நீட்' ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவது இல்லை. எனவே, ப்ளூ பிரின்ட் முறையை நீக்க, தமிழக அரசுக்கு, அண்ணா பல்கலை பரிந்துரைத்து உள்ளது. அதன்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல், ப்ளூ பிரின்ட் படி, பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படாது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)