>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 23 மே, 2017

10ம் வகுப்பு மறுகூட்டல் தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியானது. அந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேர்வுத்துறை அறிவித்தது. 

மாணவர்களின் நலன்  கருதி 19ம் தேதிக்கு பதிலாக 23 மற்றும் 24ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்வது எப்போது ???

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

மேலும் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.கடந்த காலங்களில் 5 மாணவர்கள் குறைந்தால் கூட உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். 

இந்த ஆண்டு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு நடப்பதால் ஒரு மாணவர் குறைந்தால் கூட, உபரி ஆசிரியரை பணிநிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் ஆயிரம் பணியிடங்கள் காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்பு குறையும். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றார்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன. தாய்மொழி பற்றை வளர்க்க, நல்ல தமிழ் சொற்கள் கொண்ட அகராதி தயாரிப்பதற்கு, சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. 
அக்குழு பரிந்துரையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் துாய தமிழ் அகராதியை தமிழறிஞர்கள் தயாரித்து உள்ளனர். இதில், வண்ணப்படங்களுடன் ஏராளமான தமிழ்சொற்கள் இடம்பெற்றுள்ளன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு 40 ஆயிரம் அகராதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட பாடவேளையில் மாணவர்களுக்கு துாய தமிழ்ச் சொற்கள் கற்பிக்கப்படும். இந்த அகராதிகள் தற்போது உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தமிழ்மொழியில் அதிகளவில் வடமொழி, ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. அவற்றையே தமிழ்சொற்களாக பாவிக்கும் நிலை உள்ளது. இதனால் பிறமொழி கலக்காத துாய தமிழ்சொற்களை ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்

இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், நுாறு நாள் வேலை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்போவதாக வெளியான தகவலையடுத்து முழு அளவில் இந்த பணி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கழிப்பறை அமைத்துக்கொடுக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் சரிவர சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாமல் மீண்டும் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 
மாணவிகள் சுத்தமில்லாத கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால் தவித்தனர். பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் துாவி துர்நாற்றத்தை குறைத்தது. சில பள்ளிகளில் மாணவிகள் குடிநீர் குடிப்பதையே தவிர்த்து, வீடுகளுக்கு சென்று குடிநீர் குடித்தனர். உடல் சோர்வு ஏற்பட்டு பல மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பாதியில் நின்ற பணி
பெற்றோர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்யும் பணியை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தது. அந்தந்த தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாதம் 750 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. குறைந்த சம்பளம் என்றாலும், சிலர் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில் சில மாதங்களாக பலருக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் துப்புரவு பணி பாதியில்நின்றது. அவ்வப்போது மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, பல பள்ளிகளில் பிரச்னை ஏற்பட்டது. 
உடனடி நடவடிக்கை தேவை
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. பணியாளர்கள் நியமிப்பதில் சிரமம் உள்ளது. அதோடு, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாமல் துாய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளி பணியையும் கூடுதலாக கவனிக்க பணியாளர்கள் முன்வரமாட்டார்கள். இந்நிலையில் பள்ளிகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ள நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 
நுாறு நாள் திட்ட பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்வார்கள். கழிப்பறையை சுத்தம் செய்வார்களா என்பது சந்தேகமே. பிரச்னை இப்படி இருக்க விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளது. முன்கூட்டியே பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த பணியை எப்படி மேற்கொள்வது என ஆசிரியர்கள்புலம்பி வருகின்றனர். கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தினால் அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டால் கூட சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால் பள்ளிகளில் துாய்மை பணி கேள்விக்குறியாக உள்ளது. 
மாணவிகள் திண்டாட்டம்
பழனிச்சாமி, காரியாபட்டி: மாணவர்கள் உரிய நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் அங்குள்ள கழிப்பிடத்தை நினைத்தால் மாணவர்களுக்கு குமட்டல் ஏற்படும். மாணவிகள்பாடு திண்டாட்டம்தான். உள்ளாட்சி நிர்வாகம் செய்ய முடியாது என்ற நிலையில், நுாறு நாள் வேலைத் திட்டத்தில் இந்த பணி நடக்குமா என்பது கேள்விக்குறி தான். மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தற்சமயம் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காலபோக்கில் இவர்களை நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.---

பிளஸ் டூ தேர்வில் அதிரடி மாற்றம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 
12-ம் வகுப்பு பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 11,12 ம் வகுப்பு பாடதிதிட்டத்திலும் மற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - மலைப்பகுதி பள்ளிகளில் சுழற்சி முறையில் 1 வருடம் மட்டுமே பணியாற்ற வேண்டும் - அரசாணை எண்:-404

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2017 TENTATIVE ANSWER KEY -PAPER I & PAPER II PUBLISHED

தென்னிந்தியாவைச் சார்ந்த சிறந்த 40 ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு-தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளிதழானது தென்னிந்தியாவைச் சார்ந்த சிறந்த 40 ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்து தங்கள் ’எட் எக்ஸ்’ இதழில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. இதில்  தமிழக அரசுப் பள்ளிகளைச் சார்ந்த நான்கு ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது.

10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..
10-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 24 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது..

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி மாற்றங்கள் - பட்டியல்!

கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.
➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.
➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.
➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.
➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்
➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.
➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.
➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.
➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.
➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும்,
இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
      பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளன. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகள், தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை அறியலாம்.
         பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, கல்விச்சூழல், ஆசியரியர்கள் விவரம் போன்றவையும் ஆகியவற்றையும் அரசு எளிதாக அறிய முடியும். ஸ்மார்ட் கார்டுகள் வந்துவிட்டால் மாற்றுச் சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது.

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்!!

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்!!
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், "நீங்கள் இந்திவழியில் கற்றவர்" என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், "ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன்.
பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்." என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.
''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''
''எப்படிச் சொல்கிறீர்கள்...?'' 
''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''
''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் 'நீட்' தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புபுரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''
''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? 
ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது...
'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''
"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''
''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?'' 
''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது. 
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை ஐகோர்ட்டில், வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகும் வரை, பதவி உயர்வு கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இப்பதவிக்கான, கவுன்சிலிங் நடக்கவிருக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன், தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2008ல், சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, வழக்குகளை 
விரைந்து முடிக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள், காலியாக உள்ள, 250 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 22 மே, 2017

TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்கள்]

TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) -  எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்கள்]

FLASH NEWS.... Middle School HM - Transfer- Seniority list published for All Districts