>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 20 மே, 2017

போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு....

சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது.தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்போர் என, 15 ஆயிரத்து, 711 பணி இடங்களுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
அதிகபட்சமாக, சென்னையில், 45 ஆயிரத்து, 523 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது. இதற்காக, சென்னை உட்பட, 410 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'பிட்' அடிப்போர் மற்றும் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவோரை பிடிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிக்கு டா..டா...காட்டிய கிராமம்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தவாசல் மாணவர் சேர்க்கை 100℅  ஆக மாறியது.அதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர் சி.இளவழகனின் முயற்சி சிறப்பானது. இந்த ஊருக்கு மஞ்சள் நிற வாகனம் ( தனியார் பள்ளி வாகனம் ) வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தார்.அனைத்து ஆசிரியர்களிடம் கலந்து பேசினார்.
அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சில திட்டங்களையும், தீர்மானங்களையும் நிறைவேற்ற உறுதி எடுத்தார். இக்கிராம மக்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியை விடுத்து தனியார் பள்ளிக்கு செல்வதற்கான காரணம் என்ன என்று யோசித்தார். ஆராய்ந்து பார்க்கும்போது தான் அவருக்கு சில உண்மைகள் புரிந்தது. தனியார் பள்ளியில் இருக்கும் கணினி வழிக்கல்வியும் ,ஆங்கிலமும் தான் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிந்துகொண்டார். உடனே அத்தகைய கல்வியை நமது பள்ளியிலேயே ஏன் உருவாக்கக்கூடாது என நினைத்த அவர் அதற்கான வசதிகளை உருவாக்க கடுமையாக போராடினார்.
தனது சொந்த செலவில் ரூ.1,68,000 ஒன்பது கணினிகள் ,Projector போன்றவற்றை வாங்கி கணினிவழிக்கல்வியினை ஏற்படுத்தினார். பல புரவலர்களை நாடி அவர்களின் உதவியால் மேலும் பல கணினிகள் பெற்று மொத்தம் 15 கணினிகளை உருவாக்கி தினமும் குழந்தைகளுக்கு பயிற்சியளித்தார். காணொளி காட்சி மூலம் வகுப்புகள் ,ஆங்கிலத்தில்  பேச்சு பயிற்சியும் வழங்கி படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த முறையில் முதல் முறையாக கல்வித்திருவிழாவினை ஏற்படுத்தி குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவினையும், திறமைகளையும் கிராமத்து மக்களுக்கு எடுத்துக்காட்டினார். குழந்தைகளின் திறமைகளைக் கண்ட பெற்றோர்கள் அந்த மேடையிலே புரவலர்களாக மாறி ரூ.1,59,000 பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்தனர்.கோடை வெயிலினையும் பொருட்படுத்தாமல் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுபட்டார்கள்.
அதன் விளைவுதான் தனியார் பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக டா...டா...காட்டினர் ஊர்மக்கள்.
இன்று வரை தனியார் பள்ளியில் படித்த 49 குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில் 100% மட்டுமல்லாமல் இப்பள்ளியில் பசுமைத்தோட்டம் அமைத்து அதில் விளைகின்ற காய்கறிகளை மதிய உணவிற்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களை அழைத்து எழுத்துப்பயிற்சி ,கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 ஒரு ஆசிரியரின் சீரிய சிந்தனை ,கடின உழைப்பு சிகரத்தையும் தொட முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
வானம் தொட்டு விடும் தூரம்தான்......!!!
-கல்விச்சிறகுகள்

சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், சென்டம் வாங்குவோர் எண்ணிக்கை, லட்சத்தை தொடுவதாக உள்ளது. முந்தைய ஆண்டு களில், சென்டம் எண்ணி க்கை அதிகரித்ததால், விடைத்தாள் திருத்த முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, 2016ல், ஓரளவுக்கு தரமான திருத்தம் நடந்தது.
மீண்டும் இந்த ஆண்டு, சுதந்திரமான திருத்த முறை பின்பற்றப்பட்டதால், சென்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை 
எட்டியுள்ளது. மற்ற மாநிலங்களில், பொது தேர்வில் விடை திருத்தம் மிகத் தரமாகவும், சீராகவும் நடக் கிறது. தமிழகத்தில் மட்டும், 'தியரி' என்ற கட்டுரை எழுதும் வடிவில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. 
அதனால், தமிழக மாணவர்கள்,சிந்தித்தல் திறனை பரிசோதிக்கும், போட்டித் தேர்வுகளில் ஜொலிக்க முடிவதில்லை. தேசிய அளவிலும், மற்ற தளங் களிலும், தங்கள் கல்வித் தரத்தை, சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, பிளஸ் 1லும், பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு களில் சேருவோர், அங்குள்ள சிக்கலான வினாத்தாள்களை எதிர் கொள்ள முடியாமல் திணறு கின்றனர். குறைந்த மதிப்பெண் பெறுவதும், தேர்ச்சி குறைவதுமாக உள்ளது. 
பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றதால், பிளஸ் 2வில், அலட்சியமாக இருந்து விடுகின்றனர். பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, உயர் கல்வியில் சறுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வரும் காலங்களில் மதிப்பெண்ணை அள்ளி வழங் கும் தேர்வாக இல்லாமல், மாணவர்களின் சிந்தித் தல் திறனை அதிகரிக் கும் தேர்வாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழக அரசு மாற்ற வேண்டும். 
தற்போது, விடைக்குறிப்பை பார்த்து, சரிபார்க்கும்
எழுத்தர் போன்றே, ஆசிரியர்கள் விடை திருத் துகின்றனர். சி.பி.எஸ்.இ., போன்று, தரமான வினாத்தாளை தயாரித்து, விடை திருத்தம் செய்யும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளித்து, தரமான திருத்துனர்களாகவும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. 
இந்த மாற்றம் வந்தால் மட்டுமே, பிளஸ் 2விலும், பின், கல்லுாரிகளிலும் தமிழக மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்புகளை பெற முடியும் என, கல்வியாளர் கள் தெரிவித்துள்ளனர்.

மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி.......

பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்கம் போல, அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. 
100 சதவீத தேர்ச்சியிலும், அரசு பள்ளிகளை விட, இரு மடங்கு அதிகமாக, தனியார் பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. அதே நேரத்தில், தேர்ச்சி விகிதத்தில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் அதிகளவில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 5,059 பள்ளிகளில், 44 சதவீதமாக, 2,232 மேல்நிலைப் பள்ளிகளும்; 56 சதவீதமாக, 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. அதாவது, மேல்நிலைப் பள்ளிகளை விட, 12 சதவீதம் கூடுதலாக, உயர்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன
 அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 10ம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்படும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளில், 41 சதவீத பள்ளிகளும்; பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 2,637 மேல்நிலைப் பள்ளிகளில், 14 சதவீத பள்ளிகளும், ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதாவது, அரசு மேல்நிலைப் பள்ளிகளை விட, அரசு உயர்நிலைப் பள்ளிகள், 27 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளிகளில், சீனியர் மாணவர்களான, 9, 10ம் வகுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்துவர்; சிறப்பு பயிற்சிகளும் வழங்குவர். மேல்நிலைப் பள்ளி களில், பிளஸ் 2 பொது தேர்வுக்கே முக்கியத்துவம் அளிப்பர்; 10ம் வகுப்புக்கான முக்கியத்துவம் குறையும். நிர்வாக ரீதியான இந்த காரணங்கள் தான், உயர்நிலைப் பள்ளி களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டம்தோறும் 100% எடுத்த பள்ளிகள்........

பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி, 98.17 சதவீதத்துடன், இரண்டாம் இடமும், 98.16 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. 
கடலுார் மாவட்டம், 88.74 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும், கடலுார், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து பின்னோக்கி செல்கின்றன. இந்த மாவட்டங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்வதால், மற்ற மாவட்டங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. 

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 லட்சத்து, 25 ஆயிரத்து, 909 பேர் தேர்வு எழுதியதில், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி சதவீதம், 2016யை விட, 0.8 சதவீதம் அதிகம்; மாணவர்கள், 1.2 சதவீதமும், மாணவியர், 0.3 சதவீதமும், அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், 5,059 பள்ளிகளில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த பள்ளிகளில் இது, 41.5 சதவீதம். மொத்தம், 57 ஆயிரத்து, 450 பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்வில், 38 ஆயிரத்து, 613 பேர், 481க்கு மேலும், ஒரு லட்சத்து, 61 ஆயிரத்து, 370 பேர், 450க்கு மேல் கூடுதலாகவும் மதிப்பெண் பெற்றுஉள்ளனர். முந்தைய ஆண்டுகளில், 10ம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சம் பேர் வரை, 'சென்டம்' பெற்றனர். ஆயிரக்கணக்கானோர், 'டாப்பர்ஸ்' என்ற, மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று பேர் பட்டியலில் இடம் பெற்றனர். இந்த ஆண்டும், 1.61 லட்சம் பேர், அதிகபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். 
இவர்களுக்கு, 'ரேங்கிங்' வைத்து, 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிட்டிருந்தால், குறைந்தபட்சம், 10 ஆயிரம் பேர், 'ரேங்க்' பெற்றிருப்பர். தமிழக பள்ளிக்கல்வி தேர்வுகளில், இப்படி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு பின், மற்ற மாணவர்களுடன், உயர்கல்வியில் திணறும் நிலை உள்ளது. எனவே, பாடத்திட்ட மாற்றத்துடன், தேர்வுத் துறையின் வினாத்தாள் தயாரிப்பு, திருத்த முறை, மதிப்பெண் வழங்கும் விதிகள், தரமான விடைக்குறிப்பு போன்றவற்றில், கூடுதல் கட்டுப்பாடுகளை
கொண்டு வர வேண்டியகட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்

ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர். 
இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத்தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.
இனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. 
பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர். 
ஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது; 
அதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம்.
தங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம். 
நடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.
மற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
துறை செயலரின் இந்த விளக்கம், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மார்ச்சில் நடந்த, 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளை
ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகள் எண் ணிக்கையும் உயர்ந்துள் ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, விருது நகர் மாவட்டத் தில், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 
100 சதவீதம்:தலா, 83 பள்ளிகளுடன், ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தை யும்;கன்னியாகுமரி, 91 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென் னையில், மூன்று பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவர் களின் ஒட்டு மொத்த

தேர்ச்சியில், மாவட்ட அளவில், 97.79 சதவீதத் துடன், கன்னியாகுமரி முதல் இடத்தையும்; 97.69 சதவீதத்துடன், விருதுநகர் இரண்டாம் இடம்; 97.61 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள் ளன. 28 அரசு பள்ளிகள் உடைய சென்னை மாவட்டம், 91.41 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 
கூடுதல் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே, ௩.௭ சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்வு எழுதிய மொத்த மாணவியரில், 96.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் தேவை
பாடத்திட்டங்களை மாற்றாமல், மெருகூட்டும் பயிற்சிகள் இல்லாமல், அரசு பள்ளி மாணவர் கள், இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எனவே, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாண வர் சேர்க்கையை உயர்த்தவும், ஆங்கில மொழி திறன், போட்டித் தேர்வுகளில் பங்கேற் கும் ஆற்றலை வளர்க்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி மற்றும் சம்பள உயர்வில் மட்டுமின்றி, மாணவர்கள் முன்னேற்றத்திலும், அக்கறை காட்டும் ஆசிரியர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுத்தால், இன்னும் முன்னேற் றம் கிடைக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்ஜினியரிங் அட்மிஷன் கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் பார்க்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் (https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது. 
அந்த இணையதளத்தில் எந்த மாவட்டத்தில் மாணவர் படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைதொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்படும். அதில் மாணவர் படிக்க விரும்பும் கல்லூரி, துறையை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் சாதிவாரி இடஒதுக்கீட்டு பிரிவை தேர்வு செய்து உள்ளீடு செய்வதற்கான பட்டனை அழுத்தியதும், குறிப்பிட்ட கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணினி திரையில் தெரியும். இதன்மூலம் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணையும் தங்களின் கட் ஆப் மதிப்பெண்ணையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிலிருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEW PGTRB STUDY MATERIALS..........

PREPARED BY
KAVIYA COACHING CENTER
KUMAR M.A.BEd,D.T.Ed,HDCA. (ENGLISH TEACHER),
THE DHARMAPURI-CO-OPRATIVE SUGAR MILLS
MATRICULATION SCHOOL,
PALACODE,
DHARMAPURI.
9600736379.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

Udhaya Sankar அவர்கள் எழுதிய பதிவு... உங்கள் டைம் லைனில், உங்களுக்கு தெரிந்த க்ரூப் மற்றும் பேஜ்களில், வாட்ஸ்அப் போன்ற அனைத்து வழிகளிலும் இப்பதிவை ஷேர் செய்து உதவுங்கள் நண்பர்களே ! 
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்தி மரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளைகளைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14 வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30 வது நாள் இலைகள் வந்துடும். 70 வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள்... அதாவது ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும் அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
* பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
* ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால் நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனி நபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல் பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது !!

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல்
பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 மே, 2017

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.......

பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.
பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

NEET Exam | பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.

நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 7-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலைகல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வு நாடு முழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற்றது. வரும் ஜூன் 8-ம் தேதி இத்தேர்வின் முடிவு வெளியாக உள்ளது. 95 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்வி கள் கேட்கப்பட்டன.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப் பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்த வேண்டும். தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல், வேதி யியல்பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். பிளஸ் 1 பாடங்களில்அதிகம் நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப் பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்1 இயற்பியல் பாடத்தில் 49 சதவீதமும், பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 51 சதவீதமும், பிளஸ் 1 வேதியியல் பாடத்தில் 42 சதவீதமும், பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 58 சதவீதமும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
 பிளஸ் 1 தாவரவியல் பாடத்தில் 47 சதவீதமும், பிளஸ் 2 தாவரவியல் பாடத்தில் 53 சதவீதமும், பிளஸ் 1 விலங்கியல் பாடத்தில்67 சதவீதமும், பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் 33 சதவீதமும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீதகேள்விகளும், பிளஸ் 2 பாடங்களில் இருந்து 48.75 சதவீத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு......


பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை 
http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்!

அரசுப் பள்ளி என்பது ஏற்றத் தாழ்வற்று, அனைத்து மாணவர்களும் ஒன்றாக கல்வி பெறுவதற்கான அற்புதமான இடம். இன்று, மிகப் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம், தங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி கேட்டால் மணிகணக்கில் சிலாகிப்பார்கள். அந்தப் பருவத்தில் உருவான நட்பு என்பது நெடுங்காலத்துக்கு தொடந்துவரும். அதெல்லாம் சரி. அதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா?
முடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்!
இப்போதும் அரசுப் பள்ளியில் நெகிழ்வான தருணங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த அழகான தருணங்களையும், கூடுதலாக அருமையான செய்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது. கூர்ப்பி - ஷார்ப்பனர் என்பதன் தமிழ்ப் பெயர்.
இந்தக் குறும்படம், நம்மை புதுக்கோட்டை மாவட்டம், ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகிலா எனும் மாணவிக்கு மந்திரக் கூர்ப்பி ஒன்று கிடைக்கிறது. அந்தக் கூர்ப்பியில் பென்சிலைத் துருவும்போது நாம் என்ன கேட்கிறோமோ அந்த உருவத்தைத் தரும். உதாரணமாக, குடை எனக் கேட்டு பென்சிலைத் துருவினால், பென்சிலின் துருவல் குடை வடிவத்தில் கிடைக்கும். ஆனால், 24 மணிநேரத்தில் ஒரு முறையாவது இந்தக் கூர்ப்பியைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கூர்ப்பியின் மந்திரத் தன்மை அதை விட்டு விலகிவிடும். இந்தக் கூர்ப்பியால் முகிலாவை மாணவர்கள் எப்போதும் சூழ்ந்துகொள்கிறார்கள்.
முகிலாவும் மாணவர்கள் கேட்கும் வடிவங்களை உருவாக்கித் தருகிறாள். ஒரு நாள் இரவு, வீட்டில் முகிலா படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டு, ட்யூப் லைட் அணைந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விளக்கு எடுத்து வைக்கிறார் முகிலாவின் அம்மா. அப்போது இருட்டில் கூர்ப்பியை அம்மா உதைத்துவிடுவதால், பாத்திரத்தின் இடுக்கில் அது மாட்டுக்கொள்கிறது. எவ்வளவு தேடியும் முகிலாவால் கூர்ப்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் பள்ளிக்குச் செல்லும் முகிலாவிடம் நண்பர்கள் வழக்கம்போல உருவங்களை வரவழைக்க கேட்கிறார்கள். தான் கூர்ப்பியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாக கூறுகிறாள். அடுத்த நாளும் கூர்ப்பி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல, முகிலாவிடம் முன்பு போல ஒட்டாமல் பழகுகிறார்கள் நண்பர்கள். அன்று மாலை வீட்டுச் செல்லும்போது, கூர்ப்பியைக் கண்டுபிடித்து அவளின் அம்மா தருகிறார். ஆனால், அது மந்திரத் தன்மையை இழந்துவிடுகிறது. ஆனால், கூர்ப்பி முகிலாவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைக் கொடுக்கிறது. அது என்னவென்று நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கூர்ப்பி குறும்படம் அதில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கச் சொல்கிறது. மந்திரங்கள் நிரந்தமல்ல... அல்லது மந்திரத்தால் ஏதும் சாத்தியமில்லை, விருப்பமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் படைப்பாற்றலை உருவாக்கி, வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறது கூர்ப்பி குறும்படம். முகிலாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்யா எனும் மாணவி காட்சியை உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்.
கதை ஒரு புறம் சென்றாலும் ஓர் அரசுப் பள்ளியின் அழகான தருணங்கள் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் பார்வையாளர்களை பழைய பருவத்துக்கே அழைத்துச் செல்கிறது. ஹோம் வொர்க் ஏன் செய்யவில்லை என மாணவியிடம் கேட்கும் ஆசிரியர், பிரேக் டைமில் டயர் வைத்து விளையாடுவது என பள்ளியின் நடுவே நாம் பயணிக்க வைக்கிறது. இன்னுமொரு காட்சியில், முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது. அதை ஒரு மாணவன் எடுத்து வரும்போது தட்டிலிருந்து முட்டை மண்ணில் விழுந்துவிடுகிறது. இதைக் கவனித்த ஒரு மாணவி தன் தட்டிலிருக்கும் முட்டையின் பாதியை அந்த மாணவனின் தட்டில் வைக்கிறாள். இதுபோல படம் முழுக்க நெகிழ்வான காட்சிகள் இருக்கின்றன.
ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சாமியப்பன் எழுதிய கதையை எம். வெங்கடேசன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ச.ஹரிஹர சுதன் இயல்பான காட்சிகளாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களின் சத்தம் படம் முழுக்க வருகிறது. அது நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. படத்தின் 18 நிமிடங்கள். இவ்வளவு நீளம் தேவையில்லை என்றே தோன்கிறது. ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் இந்தக் கதையை இன்னும் அழுத்தமாக பதிய வைத்துவிட முடியும்.
கதையாசிரியர் சாமியப்பனிடம் பேசியபோது, "இந்தப் படம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. லக்‌ஷ்யாவின் இவ்வளவு அழகாக நடிப்பாள் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தான் நடித்ததை காட்டச் சொல்லிப் பார்ப்பாள். சரியில்லை என்றால் அவளே இன்னொரு முறை நடித்த காட்சிகள் இருக்கின்றன." என்கிறார்.
நல்ல கதையைக் கொண்டு நல்ல முயற்சியை மேற்கொண்ட இந்தப் படக் குழுவின் பயணம் வெல்லட்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.
-நன்றி விகடன்

தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

தொடக்கக் கல்வி துறையின் சார்பில்நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.
அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினைதொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டுதடையை விலக்கியது.
1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்றஇடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.
2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்குதனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்ககல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினைசெய்யஅரசுக்கு உத்தரவு.

தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்: 44 கல்லூரிகளில் 50 சதவீதம் வரை இடங்கள் குறைப்பு.

இந்தக் கல்வியாண்டில் (2017-18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் மூடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், ஒரே ஒரு பொறியியல் கல்லூரி புதிதாக வருவதும் உறுதியாகியிருக்கிறது.
இதற்கிடையே, 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும், பி.இ. இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இந்தப் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடுவதும், மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்களின்படி 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் 533-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2016-17 கல்வியாண்டில் 527 ஆகக் குறைந்தது. மொத்த பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.79 லட்சம் என்ற அளவில் இருந்தது.
11 கல்லூரிகள் மூடல்:
 நிகழாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது நிறைவு செய்துள்ளது.
இதில் நாடு முழுவதும் இருந்து 400 பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்திலிருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன.
இதில் 11 கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக அனுமதி நீட்டிப்புக்கே விண்ணப்பிக்காததால், முதல் கட்டமாக இந்த 11 கல்லூரிகளும் மூடப்படுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கை 527 இல் இருந்து 510 ஆகக் குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.
44 கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு: அண்ணா பல்கலைக்கழகக் குழு, பொறியியல் கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில், 44 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், முதல்வர், ஆய்வகம், நூலகம், வகுப்பறை, ஆகிய 5 காரணிகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் 44 கல்லூரிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கல்லூரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்களைக் குறைத்து அதிரடி நடவடிக்கையை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இதன் காரணமாக மொத்த இடங்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரி
தமிழகத்தில் புதிதாக ஒரு பொறியியல் கல்லூரியும் 3 கட்டுமானப் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம் பெறப்பட்டு, பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிக்கு ஏஐசிடிஇ-யிடம் இருந்தும் அனுமதி கிடைத்துள்ளது. எனவே, புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கவது உறுதியாகியிருக்கிறது.
3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை இந்திய கட்டுமானக் கவுன்சிலிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி கிடைத்ததும், 3 கட்டடவியல் பொறியியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்குவதும் உறுதியாவிடும் என்று அண்ணா பொறியியல் கல்லூரி உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு

தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ., அலுவலகங்களுக்கும் தனித்தனியே 'நோடல்' மையங்கள் உள்ளன. ஏ.இ.ஓ.,க்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் இங்கு தான் உள்ளன. ஓரிரு நாங்களில் இவை பள்ளிகளுக்கே கொண்டு செல்லப்படும். ஒரு பள்ளிக்கு எத்தனை நோட்டு, புத்தகம் தேவை குறித்து அலுவலகம் வந்து தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வரும்போது சாக்கு பைகளுடன் வந்து தேவையான புத்தகம், நோட்டுக்களை பெற்று பள்ளி முகவரியை எழுதி வைத்தால் அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும், என்றார்.