>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 19 மே, 2017

"NEET" தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற கிளை மறுப்பு!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
இனி நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையானது 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் நடைபெறுமென்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால் மாநில அரசின் பலகட்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் இம்மாதம் 8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் 'நீட்' தேர்வு நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. எனவே இந்த தேர்வின் அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க கோரியும்,  இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்று உத்தர விடக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 9 பேர் அடங்கிய குழு ஒன்று வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.
மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய இரு அமைப்புகளும் ஒரு வாரத்தில் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது - தொடக்கக் கல்வித்துறை

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கல்விச்சிறகுகள்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.
எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. 
இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 
இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018

 அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD HR SEC HM PANEL

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018 | அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது. தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும்   தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

           2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அரசாணை (1 டி) எண்.256 பள்ளிக் கல்வித் 5( 1) துறை நாள் 19.04.2017 அரசாணையின்படி 01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 20.05.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் (ONLINE) வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

            அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 650 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால், இந்த சுழற்சி பட்டியலில் வரிசை எண்.

            1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்த கலந்தாய்விற்கான அனைத்து பணிகளையும் முன்னதாக செய்து வைத்துக் கொள்ளுமாறும் மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு எந்த இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

SSLC | 10th MARCH 2017 PUBLIC EXAMINATION RESULT

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 
கடந்த மார்ச் 2017 -ல் நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் 
 19.05.2017, காலை 10 மணியளவில் வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளைக் காண பின்வரும் இணைப்புகளில் ஏதேனும்
 ஒன்றைத் தேர்வு செய்யவும்.

                             SSLC MARCH 2017 PUBLIC EXAMINATION RESULT


[19.05.2017 - 10 AM ]👍ALL THE BEST💐




Click here And Know Your Result - Link 4

வியாழன், 18 மே, 2017

SSLC - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-முடிவுகள் வெளியிடுதல் - செய்திக் குறிப்பு.

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்: தமிழக அரசு அறிவிப்பு.

பிளஸ் 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த அரசின் வழிகாட்டுதலை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை இயக்குநர் என்.சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தற்போது தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் இம்மையங்கள் மூலமாக மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு அடுத்து என்ன படிக்கலாம், உயர் கல்வி குறித்த தகவல்கள் மற்றும் மேற்படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த ஆலோசனை, தனிநபர் வழிகாட்டுதல்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வரும் 18 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மேல்குறிப்பிட்ட நாள்களில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெறலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.

100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டம்.

பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறும்போது,"கல்வித்துறையில் அரசு புரட்சியை உருவாக்கி வருகிறது. மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 26,913 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைய அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தவும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். எதிர்காலத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும்.
பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் திகழும். 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.பள்ளிக் கல்வித்துறைக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் செங்கோட்டையன் முன் வைத்தார்.

IAS. அதிகாரிகள் 11 பேர் மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனந்தராவ் பாட்டீல், இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜுன் 2017 – முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்விற்கு தனித்தேர்வர்களாகத் தேர்வெழுத விண்ணப்பிக்க – கால அவகாசம் நீட்டிப்பு.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜுன் 2017 – முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்விற்கு தனித்தேர்வர்களாகத் தேர்வெழுத விண்ணப்பிக்க – கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 2017 தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 12.05.2017 (வெள்ளிக்கிழமை) பிற்பகல்முதல் 18.05.2017 (வியாழக்கிழமை) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டது.
தற்பொழுது மேற்காண் தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு 19.05.2017 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 22.05.2017 (திங்கட்கிழமை) மாலை 06.00 மணி வரை (ஞாயிற்றுக்கிழமைதவிர) கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேற்காண் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தையும், அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று தேர்வுக்கட்டணத்தை நேரடியாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். விரிவான விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் !!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (19ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை.. http://www.tnresults.nic.in/    http://www.dge1.tn.nic.in/   , http://www.dge2.tn.nic.in/ என்ற தளத்தில் அறியலாம்.
 மேலும், மாணவர்கள் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு SMSல் முடிவு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்;தமிழ்,ஆங்கிலத்துக்கு தலா ரூ.305,மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம்.

RTE - 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26/05/2017 கால அவகாசம் நீட்டிப்பு. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26/05/2017 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-மறுகூட்டல்/விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் முறை

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்று தவணையாக வழங்கப்படும் இந்த தொகை மகப்பேறு பதிவு செய்தவுடன் 1000 ரூபாயும் இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் மூன்றாவது தவணைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு  2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2020 வரை மாநில அரசின் பங்கு  உடபட மொத்தம் 12,661 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதே காலகட்டத்தில்  மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7932 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது.

பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு, இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இதற்கான
அரசாணை, இரு தினங்களில் வெளியாகிறது. பிளஸ் 1 பெயிலானாலும், பிளஸ் 2 படிக்க, இந்த பொது தேர்வு வழி செய்கிறது.
'பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்' என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.
நடைமுறை என்ன?
* அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ஆண்டு இறுதியில், அரசு தேர்வுத் துறை மூலம், மாநிலம் முழுமைக்கும் பொதுவாக, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படும்
* அந்த மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு முடித்த பின், இரண்டு தேர்வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
* இரண்டு ஆண்டு படிப்பிலும், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், உயர்கல்விக்கு செல்ல முடியாது
* இரண்டு ஆண்டு மதிப்பெண்களுக்கும், சமமான, 'வெயிட்டேஜ்' வழங்கப்பட்டு, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில், 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த நடைமுறை, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமலில் உள்ளது.
தனித்தேர்வர்களுக்கும் பிளஸ் 1 தேர்வு உண்டு
பள்ளிக்கு வராத தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், பொது தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர், பிளஸ் 1 பாடம் படித்து, தேர்வு எழுதுவதில்லை. ஆனால், அரசு கொண்டு வரும் புதிய உத்தரவில், பிளஸ் 1க்கும் பொது தேர்வு வருகிறது. எனவே, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத வேண்டும் என, புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன.
பெயிலானாலும் பிளஸ் 2 படிக்கலாம்
பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியார் பள்ளிகளால் வெளியேற்றப் படுகின்றனர். பிளஸ் 1க்கு பொது தேர்வு வந்தால், அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2 படிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொது தேர்வு முடித்து, மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடாமல் தடுக்க, புதிய அரசாணையில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, பிளஸ் 1ல், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வுக்கு செல்லலாம். அவர், பிளஸ் 2 சேர்ந்தவுடன், சிறப்பு துணை தேர்விலோ அல்லது டிசம்பரில் நடக்கும் துணை தேர்விலோ, தோல்வி அடைந்த, பிளஸ் 1 பாடத்துக்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்

''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி
நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய
திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்.....

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது.
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், குறிப்பிட்ட மாணவர்களை படம் பிடித்தல், வாழ்த்து தெரிவித்தல் போன்ற, சம்பிரதாய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் மாணவர் மற்றும் பள்ளியின் பெயர், தமிழில் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மே, 15ல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக சான்றிதழ் வெளியானது. அதில், அறிவித்தபடி, பெயர் விபரங்கள் தமிழில் இடம் பெற்றன. நேற்று முதல், பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், பள்ளி மாற்று சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், பல மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துக்களில் பிழைகள் இருந்தன.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:பிழைகள் கொண்ட, இந்த சான்றிதழ்களை வைத்து, உயர் கல்வியில் சேர்வதில் பிரச்னை ஏற்படும். எதிர்காலத்தில், மற்ற ஆவணங்களை பதிவு செய்வதிலும் குழப்பம் ஏற்படும். எனவே, தற்காலிக சான்றிதழில் பிழைகள் உள்ளோரிடம் மனுக்களை பெற்று, அசல் சான்றிதழ்களில், பிழைகளை திருத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இச்சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும்,வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018-ம் கல்வியாண்டு முதல் இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன்வழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் எஸ்டிவி 333, 339 349, 395 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில், எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 3 ஜிபி அளவுக்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டுமே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டத்தில் அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாயப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.