>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 7 மே, 2017

பள்ளிக்கல்வி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகள் - தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2018 வரை நீட்டித்து அரசு ஆணை

பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஊதியம் பெற பணியிடம் தொடர் நீட்டிப்பு ஆணைகள் வெளியீடு

மே.12ல் ப்ளஸ் 2 ரிசல்ட்

சென்னை : ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12 ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பெண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்,
இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தடையாணை வழங்கி உள்ளது. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 12 ல் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகள் - தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2018 வரை நீட்டித்து அரசு ஆணை

நகரத்திலிருந்து கிராமத்துக்கு மாணவர்களை வரவழைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்! குருமூர்த்தி

நான்காம் வகுப்பில் உங்கள் பிள்ளை படித்தாலும், எழுதப் படிக்க தெரியவில்லையா... எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் மூன்றே மாதங்களில் தெளிவாக படிக்க, எழுதுமளவு உருவாக்கி விடுகிறோம்' என்கிறார் எம்.களத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.
திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் மேக்கல்நாயக்கன்பட்டியில் இறங்கி, எம்.களத்தூருக்கு நான்கு கிலோமீட்டர் செல்ல வேண்டும். அங்கு செல்ல ஒருநாளைக்கு இரண்டு முறைதான் பேருந்து வசதி உண்டு.  ஆனாலும், களத்தூர் மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை களத்தூர் தொடக்கப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அப்படி என்னதான் செய்கிறார்கள் அந்தப் பள்ளியில், ஆசிரியர் குருமூர்த்தியிடம் பேசினோம்.

“தங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கோபப்படுவது சரியானதல்ல. ஏனென்றால், பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் ஆசிரியருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இதை நான் முழுமையாக நம்புகிறேன். மாணவர் ஒருவருக்கு பாடம் புரியவில்லை என்றால் நடத்தும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாக நான் புரிந்துகொள்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், சென்னையைப் பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தேன். மெரினா பீச் பற்றி சொன்னபோது, நாங்கள் யாருமே மெரினா பீச் போனது இல்லை என்றனர். அடுத்த நாள் யூ டியூப் மூலமாக சென்னையில் புகழ்பெற்ற இடங்களை வீடியோவில் காட்டினேன். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதைப் பார்த்தார்கள். அப்போதுதான் மாணவர்களின் பாடங்களை வீடியோக்களாக உருவாக்கலாமே என்ற எண்ணம் எனக்கு உருவானது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், இரவு 7 முதல் 12 மணி வரை தினந்தோறும் ஐந்து மணி நேரம் இதற்காக செலவிட்டேன். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றேன். ஒவ்வொரு வகுப்பாக முடித்து, இப்போது ஐந்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களும் வீடியோ படங்களாக தயார் செய்துவிட்டேன். விடுமுறை நாள்கள் முழுவதையும் இதற்கென்றே ஒதுக்கினேன். கணக்குப்போட்டுப் பார்த்தால் 7,000 மணி நேரத்துக்கும் மேலாக இதற்கு காலம் தேவைப்பட்டது.
எனது முயற்சியை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துகொண்டிருந்தேன். வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் முத்துகுமார் அவற்றைப் பார்த்துவிட்டு, ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். வீடியோ படங்களைத் திரையிடுவதற்கு நான் உதவி செய்கிறேன் என்றார். சொன்னதைப் போல 32 இன்ச் எல்.இ.டி டிவி வாங்கித்தந்தார். அதைப் பார்த்ததும் எங்கள் மாணவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவருக்கு இந்த நேரத்தில் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
காட்சிகள் வழியே விரைவாக கற்றுக்கொள்வதுடன், சந்தேகமின்றி கற்கின்றனர். மேலும், டிவி பார்ப்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. அதை பாடம் நடத்துவதற்கு பயன்படுத்தும்போது, வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இப்படி பாடம் நடத்துவது மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் இது மட்டுமே கற்பித்தலுக்கான சரியான வழி என்று கூறவில்லை. எங்கள் பள்ளியின் மாணவர்களின் இயல்பின் அடிப்படையில் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் உருவாக்கி வைத்திருக்கும் வீடியோக்களை கல்வித் துறை சார்ந்தவர்கள் பார்த்துவிட்டு, பாராட்டும்போது மகிழ்ச்சியோடு பெருமையும் சேர்ந்துகொள்கிறது." என்று இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தவரிடம், 'மாநகரத்திலிருந்து உங்களின் கிராமத்துக்கு மாணவர்கள் படிக்க வரப் போகிறார்களாமே?' என்றோம்.
"உண்மைதான். அது எனக்கே பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. பள்ளி சேர்க்கைக்கு பெரிய அளவில் ப்ளக்ஸ் தயார் செய்து, மேக்கல்நாயக்கன்பட்டியில் வைத்திருந்தேன். அதை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்த சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்புகொண்டார். விவரங்களைக் கேட்டார். நான், எங்கள் பள்ளியில் கற்பிக்கும் முறைகளைப் பற்றி விளக்கமாக கூறினேன். ஓரிரு நாள்கள் கழித்து மனைவி, மகன்கள் ஆகியோருடன் பள்ளிக்கே வந்துவிட்டார். அவரின் மூத்த மகன், சேலம் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். ஆனால் A,B,C,D தவிர சொற்களைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை. அதிலும் தமிழில் எழுத்துகளும் முழுமையாகத் தெரியவில்லை. அவனிடம் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, எங்கள் பள்ளியில் படித்தால் மூன்றே மாதங்களில் நன்றாக எழுதவும் படிக்கவும் செய்வான். அதற்கு நான் உறுதி; ஆனால் நீங்கள் வெளியூர் என்பதால் அங்கிருந்து வரமுடியாதே என்றேன். அவரும் ஆமாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆனால், அடுத்த நாளே எங்கள் பள்ளியில்தான் அவரின் இரண்டு பிள்ளைகளைச் சேர்க்கப்போகிறேன் என்றார். இந்த கிராமத்திலேயே வாடகை வீட்டில் தங்கி படிக்க வைக்கப்போகிறாராம். எங்கள் பள்ளியை நம்பி இவ்வளவு தூரம் அவர் வருவதில் எங்களுக்கு பெருமையே." என்று கூறும் குருமூர்த்தியின் குரலில் பெருமிதம் ததும்பியது.

8,000 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் தரவில்லை

ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 8,000 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. 
தமிழகம் முழுவதும், 8,332 ஆசிரியர்கள், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம், மத்திய அரசின், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் வழங்கப்படுகிறது. இதற்கு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும், பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்.
கடந்த நிதி ஆண்டின், பணி நீட்டிப்பு ஆணை, மார்ச்சில் முடிந்தது. அடுத்த நிதி ஆண்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 
அதனால், 8,332 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No Extra Mark for 12th Bio-Zoology - 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 12-ம் தேதி வெளியிடப்படும்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 12-ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி.. 
உயிர் விலங்கியல் தேர்வில் கூடுதலாக 1 மதிப்பெண் கிடையாது- தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி திட்டவட்டம்..

BreaBreaking News: மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது - சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு.


💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு அறைக்குள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன?- மாணவர்கள் அறிய 10 தகவல்கள்

Image result for neet exam images

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன என்பது குறித்து சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அறிய 10 தகவல்கள்

1) நீட் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். காலை 7.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

2) காலை 9.45 மணி வரை அனுமதி அட்டை (ஹால்டிக்கெட்) சோதனைசெய்யப்படும்.

3) காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4) மாணவர்கள் தேர்வு அறைக்குள் தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஒட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

5) நீலநிறம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.

6) நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

7) அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து செல்ல அனுமதி உண்டு.

8) திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.

9) செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது.

10) முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

TRANSFER NEWS - IMPORTANT INSTRUCTIONS TO BE FOLLOWED DURING COUNSELLING 2017 - DIR. INSTRUCTIONS


பள்ளிக்கல்வி - 730 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2017 மாதத்திற்கான தொடர் நீட்டிப்பு ஆணை

ஜனாதிபதி ஒப்புதலுக்கே போகாத 'நீட்' மசோதா!

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், மத்திய உள்துறை அமைச்சகத்தில், கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவிலான, 'நீட்' பொது நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
நிறைவேற்றம்
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, 'மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையிலும், முதுநிலை படிப்பு சேர்க்கையிலும், தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்' என, தமிழக சட்டசபையில், ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ஒப்புதல் பெற்றுத் தரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, இரண்டு முறை கடிதம் எழுதினார். ஆனால், இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆனால், தமிழக அமைச்சர்கள், 'சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும். இந்த ஆண்டு, தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைபெறாது' என கூறி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 'நீட்' மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன், ஏப்., 17ல், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து, ஏப்., 20ல், அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'அதுபோன்ற எந்த மசோதாவோ, அவசர சட்டமோ, எங்களுக்கு வரவில்லை. உங்கள் கடிதம், உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
'தமிழக சட்டத்திற்கு, விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிடும்' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், சட்ட மசோதா இன்னமும், ஜனாதிபதி அலுவலகத்திற்கே செல்லவில்லை என்ற தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கூடுதல் விளக்கம்
இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகள் கூறியதாவது:தமிழக சட்ட மசோதா, ஜனாதிபதி அலுவலகத்திற்கு, இன்னமும் செல்லவில்லை என்பது உண்மை தான். தமிழக சட்டசபையில், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்பின், தமிழக சட்டத்துறை மூலமாக, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த சட்டம் குறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம், கருத்து கேட்டனர்.
அதன்படி, இரு அமைச்சகங்களும் கருத்து தெரிவித்தன. அது தொடர்பாக, கூடுதல் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.
மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட, கூடுதல் விபரங்கள் அளிக்கப்பட்டன. அந்த விபரங்கள் மீது, மீண்டும் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம், மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து கேட்டு
உள்ளது.
காலதாமதம்
அந்த அமைச்சகங்கள் கருத்து தெரிவிப்பதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு துறைகள் தெரிவிக்கும் கருத்தை பரிசீலித்த பிறகே, மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். இதை விரைவுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்று தேர்வு!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, இன்று நடக்கிறது. நாடு முழுவதும், 11.35 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில், 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலுார் ஆகிய இடங்களில் அமைத்துள்ள மையங்களில், தேர்வு எழுதுகின்றனர்.

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., இடங்கள்1.90 லட்சம் பேர் விண்ணப்பம்

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி யில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 1.90 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்தாண்டிற்கான ஜிப்மர் நுழைவுத் தேர்வு, ஜூன், 4ல், 75 நகரங்களில், காலை, 10:00 - 12:30 மணி வரையிலும், பிற்பகல், 3:00 - 5:30 மணி வரையும் இரு பிரிவாக நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மார்ச், 27ல் துவங்கி, 3ம் தேதியுடன் முடிந்தது.
மொத்தமுள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து, 1.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டிற்கு, 948 மாணவர்கள் வீதம் விண்ணப்பித்து உள்ளனர்.
கடந்தாண்டை காட்டிலும், 52,262 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால், நுழைவுத் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
'ஹால் டிக்கெட்' ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தபாலில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. www.jipmer.edu.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதி காலை, 10:00 மணி முதல், டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஜூன், 4 வரை, ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின் வாரிய உதவி பொறியாளர் பணி சேராதவர் பட்டியல் வெளியாகுமா?

மின் வாரியத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 375 உதவி பொறியாளர்களில், சிலர் வேலைக்கு சேராமல் இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை, எழுத்து மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தது.
பல ஆண்டுகளுக்கு பின், அரசியல் குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காமல், திறமையின் அடிப்படையில் தேர்வான, உதவி பொறியாளர்களுக்கு, மார்ச் இறுதியில், பணி ஆணை வழங்கப்பட்டது.
அவர்கள், பணியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் இதுவரை வேலையில் சேரவில்லை என, கூறப்படுகிறது. இதனால், 375 பேரில், வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் விபரங்களை, மின் வாரியம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீண்ட நாட்களுக்கு பின், நேர்மையான முறையில், உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பலர் இளம் வயதினர். அவர்கள் ஏற்கனவே, தங்கள் கல்லுாரி வளாக நேர்காணலில் பங்கேற்று, முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலை செய்கின்றனர்.
மின் வாரியம் தர உள்ளதை விட, அங்கு அவர்கள், அதிக சம்பளம் வாங்குகின்றனர். இருப்பினும், மொத்தம், 375 பேரில், 95 சதவீதம் பேர் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.
எஞ்சியவர்கள், வேலையில் சேருவதற்கு, தகுந்த காரணங்களை தெரிவித்து, அவகாசம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலத்துக்கு பின், யாரும் வரவில்லை எனில், காத்திருப்போர் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும். இதுகுறித்து, முழு விபரமும் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

B.Ed கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை

பேராசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி ஒப்புதல் பெறாத, கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழகத்திலுள்ள, பி.எட்., கல்லுாரிகளில், பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களை நியமிக்க, பல்கலையிடம் தகுதி ஒப்புதல் பெற வேண்டும்.
கடந்த கல்வியாண்டில், தகுதி ஒப்புதல் பெறாமல், பல கல்லுாரிகள், பேராசிரியர்களை நியமித்துள்ளன.
இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிவிப்பில், 'மே, 15க்குள், புதிய பணி நியமனங்களுக்கு, தகுதி ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது' என, தெரிவித்து உள்ளார்.

திறந்தநிலை பல்கலை 'அட்மிஷன்' நீட்டிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பல்கலை பதிவாளர் விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 37 இளநிலை, 32 முதுநிலை, 31 தொழிற்கல்வி மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்களை சேர்க்க, ஏப்., 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது, மே, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏ.இ.இ.ஓ., பதவியா: ஆசிரியர்கள் ஓட்டம்!

உதவி தொடக்க கல்வி அதிகாரி என்ற, ஏ.இ.இ.ஓ., பதவிக்கு வர, பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் மறுப்பதால், பதவி உயர்வு கவுன்சிலிங் முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, 800 இடங்கள் உள்ளன; ஆண்டுதோறும், 50 இடங்கள் காலியாகின்றன. அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களில், துறை ரீதியாக, ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏ.இ.இ.ஓ., பதவி வழங்கப்படும்.
இந்த பதவிக்கு வருவோர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள, 30 தொடக்க, நர்சரி பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., மற்றும் முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.க்களுக்கு, நிர்வாக ரீதியாக பதில் அளிக்க வேண்டும்.
இதற்கு, கூடுதல் சம்பளமோ, பதவி உயர்வோ கிடையாது.
எனவே, கவுன்சிலிங் நடக்கும் போது, சீனியர் பட்டியலில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் ஆஜராகி, 'ஏ.இ.இ.ஓ., பதவி வேண்டாம்' என, எழுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். அதனால், 50 காலி இடங்களை நிரப்ப, கல்வித்துறைக்கு, ஐந்து மாதங்கள் வரை ஆகிறது.
இது குறித்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:ஏ.இ.இ.ஓ., பணியிடங்களை நிரப்பும் கவுன்சிலிங்கிற்கு, பணி மூப்பில் உள்ள, முதல், 100 பேர் அழைக்கப்படுவர். பெரும்பாலானோர், 'பதவி வேண்டாம்' என, கூறி விடுவர்.
பின், அடுத்த, 100 பேர் அழைக்கப்படுவர். இப்படி, படிப்படியாக பலர் வருவதும், செல்வதுமாக இருப்பதால், கவுன்சிலிங்கில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, கவுன்சிலிங்கில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏ.இ.இ.ஓ., பதவிக்கு, தகுதி பெற்றவர்களின் விருப்ப பட்டியலை தயாரித்து, பணி மூப்பின்படி, நியமனம் செய்தால், பல்வேறு குழப்பங்கள் தீரும். காலியிடங்களை நிரப்பவும், கால தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

'செட்' தேர்வு: அரசு எச்சரிக்கை

பேராசிரியர் பதவிக்கான, 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, குறுக்கு வழியில் முயற்சிக்க வேண்டாம்' என, உயர் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, 'செட்' என்ற மாநில தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடந்தது.
இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்க உள்ளது.
இந்நிலையில், செட் தேர்வில் தேர்ச்சி பெற, திருவள்ளுவர் பல்கலை அதிகாரிகள் மற்றும்
பேராசிரியர்கள் சிலர், பணம் பெறுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தரகர்கள் பலர், மூன்று முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, செட் தேர்வை நடத்தும், கொடைக்கானல் தெரசா பல்கலை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வர்கள் யாரும் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டாம்.
'செட் தேர்வு விடைத்தாள் திருத்தம், மிகவும் பாதுகாப்பான முறையில் நடக்கிறது. யாரும் பணம் கொடுத்து, ஏமாற வேண்டாம். இது குறித்து, ஆதாரபூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

பி.எட்., பயிற்சி: ஆசிரியர்களுக்கு அரசு சலுகை

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு, தங்கள் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்கலாம்' என, அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் பிறப்பித்த உத்தரவு:
தொடக்க பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிக்கும் போது, அவர்களுக்கான பயிற்சியை, பணிக்காலமாக சம்பளத்துடன் மேற்கொள்ளலாம்.
தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, இந்த பயிற்சியை எடுத்து கொள்ளலாம். தாங்கள் படிக்கும் பல்கலையில் அனுமதித்த காலத்தில், பயிற்சியை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில், தினமும் காலையில், பிரார்த்தனை கூட்டம் நடப்பது வழக்கம். 2011 முதல், இந்த முறை கைவிடப்பட்டது. பின், வாரம் ஒரு நாள் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
பல பள்ளிகளில், வகுப்பு பிரார்த்தனையே நடத்தப்படவில்லை.
தனியார் பள்ளிகளில், தினமும் வகுப்பறையிலும், மைதானத்திலும் பிரார்த்தனை நடத்துகின்றனர். அதனால், மீண்டும் அரசு பள்ளிகளிலும், தினசரி பிரார்த்தனை நடத்த, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல், இதை அமல்படுத்த வேண்டும் என,
பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.