>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017


அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்துதல்....



வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து

பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம், சீருடை, புத்தக பை விற்பனையில் ஈடுபட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பாட புத்தகம், லேப் - டாப் மற்றும் சீருடை உள்ளிட்டவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால், தனியார் பள்ளிகளில், இந்த பொருட்களை, பெற்றோர் விலை கொடுத்து வாங்க வேண்டும். இதில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, 'ஷூ' போன்றவற்றை விலைக்கு விற்கின்றன. இதில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் லாபம் பார்ப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அங்கீகார பிரிவு துணை செயலர், ஸ்ரீனிவாசன் வெளியிட்ட சுற்றறிக்கை: புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல பள்ளிகள், வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம்.
வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)

சனி, 22 ஏப்ரல், 2017


TNTET - 2017 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.
பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.
அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:
● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்
● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்
● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்
● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்
● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது
● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர். இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான 
விண்ணப்பங்கள் பெறப்படும். 
மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஏப்ரல் 22,23 தேதிகளில் "தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்"

*எங்கள் தேசம் : தரமான கல்விக்கான மாநிலக்கருத்தரங்கம்*
வருகின்ற ஏப்ரல் 22,23 தேதிகளில் *எங்கள் தேசம் - எல்லோருக்குமான தேசம்* என்கிற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தேசிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பில் *தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்* வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது..
கற்றல் உரிமைகள்...
குழந்தை உரிமைகள்..
கற்றல் அடைவுகள்..
தரமான கல்வி...
கல்வி சார்ந்த குறும்படங்கள்..
என பல தலைப்புகளில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன..
மாநிலம் முழுவதும் இருந்து மிகச்சிறந்த கல்விச் செயல்பாட்டாளர்களும் ஆசிரியர்களும் கல்வி ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கற்றல் அடைவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை மாவட்ட அளவில் தொகுத்து கொண்டு வருவது அவசியம்..
மாவட்டங்கள் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனி அமர்வு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
ஆர்வமுள்ள ஆசிரிய நண்பர்கள் பங்கேற்கலாம்..
அனுமதி இலவசம்..
முன்பதிவு அவசியம்..
நண்பர்களே..
நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருத்தணி சாலையில்... அரக்கோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது...
**சேலம், ஈரோடு வழியாக வரக்கூடிய நண்பர்கள் அரக்கோணத்தில் இறங்கி வரலாம்..
**விழுப்புரம் -திண்டிவனம்- காஞ்சிபுரம் வழியாக வரலாம்..
காஞ்சிபுரத்தில் இருந்து 1 மணி நேரம்..
**வேலூர் வந்து வரக்கூடிய நண்பர்கள் வேலூரில் இருந்து 2 மணி நேரத்தில் வரலாம்..
**சென்னையில் இருந்து 1 மணி நேரத்தில் வந்து விடலாம்..
*மேலும் விவரங்களுக்கு :*
நண்பர் ஜி.முனுசாமி, மாநிலச் செயலாளர்
📞9443048510
நண்பர். எஸ்.சுப்பிரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்
📞 7598340424

நண்பர்.பூபாலன்
வேலூர் மாவட்டச் செயலாளர்
📞 9944274858
அன்புடன்
தேனி.சுந்தர்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9488011128 / 9047140584
sundar.tnsf@gmail.com

வெள்ளி, 21 ஏப்ரல், 2017


அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்: உயர் நீதிமன்றம்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அளித்திருந்த தளர்வை ரத்து செய்து முன்பு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு ஒன்றினை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது:
விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.
இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க 2016-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தி : உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்ததாவது:
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக இந்த நீதிமன்றம் அளித்திருந்த தளர்வு ஆணை ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வரைவு சட்டத்தை தமிழக அரசு தயார் செய்யும் வரை, அந்த சட்டமானது தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் வரை இந்த தடை தொடரும்.
தளர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோள் தள்ளுபடி செய்யபப்டுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் நடக்காத பொழுது என் தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2017 SCHEDULE


1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால், சென்னை மாவட் டத்தில் மட்டும் வழிகாட்டி முகாம் நடத்தப்படவில்லை.கல்வி வழிகாட்டி முகாம்இந்த நிலையில், சென்னையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களாக 10 இடங்களில் வழிகாட்டி முகாம்கள் நடைபெற்றன. முகாம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங் கிலோ-இந்தியன் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், நிதித்துறை அமைச் சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல் வித்துறை செயலாளர் டி.உதயச் சந்திரன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி கையேட்டை அமைச்சர் செங் கோட்டையன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும்வகையில் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை யில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டுவந்தார். கடந்த 5 ஆண்டு களில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியை ஒதுக்கியவர் ஜெய லலிதா. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக நிதிஒதுக்கப் பட்டது கிடையாது. கல்வியால் மட்டுமே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 862 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகள்கல்வி பயின்று வரு கிறார்கள். அவர்களில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேட்டை உருவாக்கி யுள்ளோம். மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் வகையில் 262 பாடப் பிரிவுகளை கொடுத்துள்ளோம். சுமாராக படிக்கும் மாணவர்கள் என்னென்ன தொழிற்கல்வி படிப்பு களில் சேரலாம் என்ற விவரங் கள் இந்த கையேட்டில் இடம்பெற் றுள்ளன. புதிய படிப்புகளை படிக் கும்போது வேலைவாய்ப்பு பெரு கும். ஏழை மாணவர்கள் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்.பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க உள் ளோம். இது தொடர்பான அறி விப்பு பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது வெளியிடப் படும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாண வர்களின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, ரத்தப் பிரிவு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.படிப்பில் மட்டுமின்றி உடல் நலன், பிறருக்கு உதவுவது, நாட்டுப் பற்று, சமூக சிந்தனை உள்ளிட்ட இதர விஷயங்களிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக பள்ளி களில் யோகா, நல்லொழுக்க வகுப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், பெற்றோரை நேசிப்பது, சமூக சிந் தனை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் வகையில் கல்வியில் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, “பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் வழிகாட்டுதல்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தலைமை தாங்கிப் பேசும்போது, “மாணவர்கள் எதிர் காலத்துக்கு பயனளிக்கும் கல் வியை கற்கவும் அவர்களின் கனவு களை நனவாக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சிதான் இந்த வழிகாட்டி முகாம். இந்த திட்டத்துக்கு வித் திட்டவர் பள்ளிக்கல்வி அமைச்சர் தான்.
இது, மாணவர்கள் தங்களின் திறமைக்கேற்ப என்ன படிப்பை தேர்வுசெய்யலாம் என்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியாகும். மாணவர் கள் இந்த முகாமை நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.முன்னதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். நிறைவாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா நன்றி கூறினார்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக சராசரி மாணவர்களை பெயிலாக்கும் தனியார் பள்ளிகள்: புகார் வந்தால் கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் நோக்கில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்களை பெயி லாக்கிவிடுவதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் எழுந் துள்ளன.
இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும், தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் ரேங்க் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பள்ளிகளின் இயல்பு. இது தனியார் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அதாவது 10, 12-ம் வகுப்புக்குச் செல்ல அனுமதித்தால் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதற்காக சில தனியார் பள்ளிகள் அத்தகைய மாணவர்களை 9, 11-ம் வகுப்பிலேயே வடிகட்டிவிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப் பப்பட்டு வருகின்றன. இன்னும் சில பள்ளிகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு செல்ல அனுமதித் தாலும் சராசரி மாணவர்களை தனித்தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் சம்பவங்களும் ஆங் காங்கே நிகழாமல் இல்லை. கடந்த ஆண்டு தென்மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வு எழுத வைக்க முயற்சி நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்கள் தனியார் சுயநிதி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்தான் நிகழ்கின்றன. அரசுப் பள்ளிகள் மீது இதுபோன்ற புகார்கள் எழுவதில்லை.இந்நிலையில், சென்னையில் இந்த ஆண்டு சில தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சுமாராக படித்த மாணவ, மாணவிகள் பெயிலாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 60-க்கும் மேற்பட்டோர் இதுபோன்று பெயிலாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:தகுந்த காரணம் இல்லாமல் எந்த மாணவரையும் 9-ம் வகுப்பிலும், 11-ம் வகுப்பிலும் பெயலாக்கக் கூடாது. 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று9-ம் வகுப்பிலோ, 11-ம் வகுப்பிலோ, சுமாராக படிக்கும் மாணவர்களை பெயிலாக்குவது தவறு. இதுதொடர்பாக குறிப்பிட்ட பள்ளியின் மீது புகார் வரப்பெற்றால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில மாணவர்கள் வகுப்புக்கு சரிவர சென்றிருக்க மாட்டார்கள்.
 வருகைப் பதிவு மிகவும் குறைவாக இருக்கும். தேர்வு எழுதியிருக்க மாட்டார்கள். அதுபோன்ற மாணவர்களை பெயிலாக்கினால் ஒன்றும் செய்ய இயலாது. மாணவர்கள் உரிய காரணம் இன்றி பெயிலாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தகுந்த காரணம் இல்லாமல் பெயிலாக்கப்பட்டிருப்பதாக மாண வர்களோ, பெற்றோரோ உணர்ந் தால் அந்த பள்ளி தனியார் பள்ளி யாக இருப்பின் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளரிடம் (ஐ.எம்.எஸ்.) அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் (சி.இ.ஓ.) புகார் செய்யலாம். அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

TNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் , சுப்பையா, பாலுசாமி ஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆணை பிறப்பித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காலியாக உள்ள 11 உறுப்பினர்களில் தற்போது 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு.

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சம்பள உயர்வினை கொண்டு வர மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சரே தீவிர முனைப்புடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால் அடுத்த கல்வியாண்டில் கௌரவ விரிவுரையாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் கல்வியாளர்களிடத்தில் மிகுந்த  வரவேற்பை பெறும்.

வியாழன், 20 ஏப்ரல், 2017


CCE - THIRD TERM EXAM | MODEL QUESTION PAPERS..

மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்


Tamil medium I to V std III TERM QUESTIONS PDF DOWNLOAD

CLICK HERE- TO DOWNLOAD 1st to 5th Std Tamil Medium Questions
Printable file

📕📗DEE- மாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்..


இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 27ல் துவக்கம்

சென்னை: 'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உயர்கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டனர். கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதை, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் செயலர் முகவரிக்கு, தபால் மூலமோ அல்லது நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தலாம். 
இதன் விபரங்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேதி விபரம் 

தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை 
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE) இந்த ஆண்டிற்கு உரியது



*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

*.ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...

*.இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...

*.ஒப்புதல் கடிதம்...

*.குழந்தை தொழிலாளர்கள் விவரம் 


*.பள்ளி இடைநின்றவர் விபரம்..

*.பள்ளி செல்லாதோர் விவரம்...

*.பள்ளி வேலை நாட்கள் விவரம்...

*.மக்கள் தொகை சுருக்கம்...

*.மாற்று திறனாளிகள் விவரம்...

*.வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்..

*.அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

*.ஆசிரியர் விடுப்பு கால முகவரி

*.விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

*.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்

SCERT - விக்கிபீடியா வலைத்தளத்தில் பங்களிப்பதற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!!



ஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்!

கல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப் பணியாகும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பது ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை வலுவாக அமைப்பதற்கு இணையானது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.
கற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் நிகந்துவருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவாக கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான I.C.T (Information and Communication Technology) விருதினை மத்திய அரசு ஆண்டுதோறும் அளித்துவருகிறது. அந்த விருதுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான I.C.T விருதினைப் பெற்றவர் சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலீப். ஆங்கில உச்சரிப்புக்கான பொனடிக்ஸ் ஆன்ட்ராய்டைப் பயன்படுத்தியது, மின் அகராதியைப் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில வளத்தைப் பெருக்கியது, ஆங்கில மொழியைச் சரளமாக பேசும் வெளிநாட்டு மாணவர்களோடு தம் பள்ளி மாணவர்களை இணையம் வழியே உரையாடச் செய்தது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதினைப் பெற்றார். I.C.T விருது குறித்த மேலதிக தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் திலீப்.
I.C.T (Information and Communication Technology) விருது: இந்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் தரப்படும் விருது இது. பள்ளிகளில் கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுகிறார்கள்.
மாநிலம்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, ஒரு மாநிலத்திற்கு அதிக பட்சம் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
தேர்தெடுக்கும் முறை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஐ.சி.டி பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்த விருதுக்கு விண்ணபிப்பவர்கள் கணினி ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் நுட்பத்தைக் கொண்டே ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்தாலே போதும். செல்போன் அல்லது டேப்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிப்பவராகக்கூட இருக்கலாம். தொழில்நுட்பம் கொண்டு புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், நல்லாசிரியர் விருதுபோல 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் எனும் விதியும் கிடையாது. ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணபங்களில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் தேர்வின்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகபட்சம் ஐந்து ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்ந்து 65 முதல் 100 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவர்.
மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டவர்களை மாநில அளவிலான அதிகாரிகள் சோதித்து, அவர்களிலிருந்து ஆறு ஆசிரியர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் புராஜெக்ட்டினை குறுந்தகடு (C.D) மற்றும் புத்தக வடிவிலும்  N.C.R.T (National Council of Educational Research and Training - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) க்கு பரிந்துரை செய்வார்கள்.
திலீப்
ஒவ்வொரு மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் புராஜெக்ட்டினை NCERT குழு ஆராயும். அவற்றிலிருந்து ஒரு மாநிலத்திற்கு சிறந்த மூன்று புராஜெக்டினைத் தேர்ந்தெடுக்கும். ஒருவேளை ஒரு மாநிலத்தில் சிறந்த மூன்று புராஜெக்ட்டுகள் இல்லையெனில் ஒன்று அல்லது இரண்டினை மட்டும் தேர்ந்தெடுக்கும். அதுவும் இல்லையெனில் அந்த ஆண்டு அந்த மாநிலத்திற்கு இந்த விருதுகான புராஜெக்ட் ஏதும் தேர்ந்தெடுக்காத சூழலும் ஏற்படலாம்.
NCERT குழுத் தேர்வு செய்த புராஜெக்ட்டினை மனிதவளத் துறை மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்கு, தேர்ந்தெடுக்கப்படும் புராஜெக்ட்டினைச் செய்த ஆசிரியர்களே ICT விருதினைப் பெறுவார்கள்.
பரிசுகள்: I.C.T விருது பெறும் ஆசிரியர்களுக்கு மடிகணினி (Laptop) ஒன்று, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.    
பரிசளிக்கும் முறை: ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் I.C.T விருதினை அளிப்பார். அதற்கு முதன்நாள் பாரத பிரதமர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருந்தளிப்பார்.
இந்திய அளவில் தமிழ்நாடுதான் அதிக I.C.T விருதினைப் பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட மாநிலமாகும்.
இந்த விருது 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான விருதினை தமிழ்நாட்டிலிருந்து சித்ரா, கோகிலா, பெர்ஜின் ஆகிய ஆசிரியர்கள் பெற்றனர். 2012 ஆம் ஆண்டு, ஶ்ரீ.திலீப் (விழுப்புரம்) குளோரி ரோசலின் ஆகியோர் பெற்றனர். 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்பட வில்லை. 2014 ஆம் ஆண்டு, என்.அன்பழகன் (காஞ்சிபுரம்) 2015 ஆம் ஆண்டு தருமராஜ் (ஊட்டி), எம்.விஜயகுமார் (விழுப்புரம்) ஆகியோரும் பெற்றனர்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் ஊட்டச்சத்தாக விளங்கட்டும்.