>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 11 ஏப்ரல், 2017


மதிப்பெண் சான்றுகளைப் பெற தனித்தேர்வர்களுக்கு அழைப்பு.

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.துணை இயக்குனர் ஆசீர்வாதம் கூறியுள்ளதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு எழுதும் மையங்களில் நேரடியாக வழங்கப்படுகிறது. மையங்களில் பெற்று கொள்ளாத சான்றிதழ்கள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மார்ச்/ஏப்ரல் 2009 முதல் செப்.,/அக்.,2013 வரையிலான காலத்திற்குரியவை ஆயிரக்கணக்கில் தனித்தேர்வர்களால் பெறாமல் அலுவலகத்தில் உள்ளன.
விதிகளின்படி தேர்வுமுடிவுகள் வெளியான இரண்டாண்டுகள் கழித்து தேர்வர்களால் கேட்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஒரு மாதத்திற்குள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியதற்குரிய நுழைவுச்சீட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்துடன் 40 ரூபாய் மதிப்பிலுள்ள அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட உறையை இணைத்து பெறலாம், என கூறியுள்ளார்.

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்., 14க்குள்முடிக்க கெடு.

தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, ஏப்., 2 முதல் திருத்தம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' ரத்து செய்யப்பட்டுள்ளது.பல கட்ட ஆய்வுக்கு பின், மொழி பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கும் நிலை ஏற்பட்டால், தேர்வுத்துறை அனுமதிக்கு பின் வழங்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்., 14க்குள் விடைகளை திருத்தி முடிக்க வேண்டும்; பின், மதிப்பெண்ணை சரி செய்யும் பணிகளை துவங்க வேண்டும் என,ஆசிரியர்களை, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 விடை திருத்தம் தீவிரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தமும், தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்., 5ல் துவங்கிய விடை திருத்தம், மொழி பாடத்திற்கும், மற்ற முக்கிய பாடங்களுக்கும் தனித்தனியே நடந்து வருகிறது. ஏப்., 21க்குள், விடை திருத்தத்தை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் ஏப்., 18ல் பதிவு துவக்கம்.

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை, ஏப்., 18ல் துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், தமிழக அரசின் இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, ஏப்., 18ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, மருத்துவ பல்கலை, வேளாண் பல்கலை, கால்நடை மருத்துவ பல்கலை, ஐ.ஐ.டி., ஆகியவற்றின் கவுன்சிலிங் தேதிகளுடன் ஒப்பிட்டு, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதற்காக, தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகளிடம், பல்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
 மே 12ல், தேர்வு முடிவு வெளியானால், எத்தனை நாட்களில்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத் துறையினரின் தகவல்களின் படி, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதன்படி, ஜூன்23ல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கும்; ஜூன் 26ல், பொது பிரிவுக்கும் கவுன்சிலிங்கை துவங்க, ஆலோசனை நடந்து வருவதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில்நுட்ப தேர்வு எப்போது? : சிறப்பு பாட ஆசிரியர்கள் தவிப்பு.

அரசு பள்ளி சிறப்பு பாட ஆசிரியர்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, ஒன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கைவினை, சிற்பக் கலை உள்ளிட்டவற்றுக்கு, தனியாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
2012ல், 1,200 பேர் நியமிக்கப்பட்ட பின், ஐந்து ஆண்டுகளாக, சிறப்பு ஆசிரியர் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொழில்நுட்ப தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால், சிறப்பு பாடப் பிரிவுகளில்,பயிற்சி பெற்றவர்கள், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்தப்படவில்லை.அதேபோல், 2015 நவம்பருக்கு பின், தொழில்நுட்ப தேர்வுகளையும் நடத்தவில்லை. சிறப்பாசிரியர்கள் பணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
அவற்றில் ஆசிரியர்களை நியமிக்க, சிறப்பு தேர்வு நடத்தப்படும் என, 2014ல், பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது; 2015ல், பாடத்திட்டமும் வெளியானது. ஆனால், அந்த தேர்வையும் நடத்தவில்லை. இதனால், தனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர முடியாமல், பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, முடங்கிய பணிகளை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

TNPSC : சுருக்கெழுத்தர் பதவி 17ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு துறைகளில் காலியாக உள்ள, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, 2016 நவம்பரில், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், தகுதி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கி உள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் உள்ளோருக்கு, ஏப்., 17 முதல், 24 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்விபட்டியல் சேகரிப்பு.

பள்ளிக்கல்வித்துறையில், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது.
ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TN PAY COMMISSION : ஊதியக்குழு கருத்து தெரிவிக்க 'கெடு'

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறை சங்கங்களுக்கு, ஊதிய ஆய்வுக்குழு, கடிதம் அனுப்பி உள்ளது. அதில், வரும், 15க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ஆசிரியர் சங்கங்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

TNTET - 2017 Exam | Hall Ticket - TRB Published - Download செய்ய

TNTET 2017 - Paper I - Hall Ticket - Click here
TNTET 2017 - Paper II - Hall Ticket - Click here

திங்கள், 10 ஏப்ரல், 2017


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

நன்றி:
திரு.ரகுபதி,ஆசிரியர்.

கற்றல் கற்பித்தலில் கணினி பயன்பாட்டிற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி...

கற்றல் கற்பித்தலில் கணினி பயன்பாட்டிற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி... விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்..

G.O No.12930 DT 29.04.98- ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது.


‘நான் ஸ்கூலுக்கு போகக் கூடாதா..?' ஆசிரியர்களிடையே வைரலாகும் குறும்படம்

ஒரு மனிதரை கல்வி உயர்த்ததைப் போல வேறு விஷயம் ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், நமது சமூகத்தில் பொருளாதாரம், சாதி என எவ்வளவு விஷயங்கள் ஒருவர் கல்வியை அடைந்துவிடாமல் தடுக்கின்றன. இவையெல்லாம் தகர்ந்து அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான நடத்தப்பட்ட போராட்டம் நீண்ட நெடியது. போராட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. இன்றைக்கும் அது தொடர வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுத்தால் போதாது. சமூகம் பழமை வாதத்தன்மையிலிருந்து மாற வேண்டும்.
சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தவறான கருத்துகளை மாற்றினால் மட்டுமே கல்வி எல்லோருக்குமானதாக மாறும். கற்பதற்காக ஒருவர் எடுக்கும் முயற்சிகளை மனதார வரவேற்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'காழ்' எனும் குறும்படம் ஆசிரியர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 'காழ்' எனும் சொல்லுக்கு உறுதி எனும் பொருள். ஒரு சிறுவனின் உறுதியைக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது 'காழி' இந்தக் குறும்படம்.
குப்பைகளைப் பொறுக்கி, அதை விற்று வரும் பணத்தைக் கொண்டு வாழும் ஒரு ஏழைச் சிறுவன் பற்றியக் கதை. அந்த ஏழ்மையிலும் அவனின் நேர்மையும் கல்விக்கான விருப்பமும் அதற்காக அவன் எடுக்கும் முயற்சியைப் பற்றியுமே இந்தப் படம் பேசுகிறது. இதில் அந்தச் சிறுவனாக நடித்திருக்கும் நவீன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறான். கதையை முழுமையாகச் சொல்லிவிட்டால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடலாம்.
'காழ்' குறும்படம் உருவானதற்கு முதன்மையான காரணமானவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மோ.ஜான் ராஜா. காட்டுமன்னார்குடியின் அருகே உள்ள வெங்கடேசபுரம் எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்.
"புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கேமராவைக் கொண்டு எப்படி புகைப்படங்கள் எடுப்பது எனச் சொல்லிகொடுப்பது வழக்கம். எப்படி கோணங்கள் வைப்பது, வெளிச்சம் எந்தப் பக்கத்திலிருந்து இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் சொல்லும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள். அதிலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நவீன் கற்பூரம்போல, சொல்வதை அப்படியே பட்டென்று பற்றிக்கொள்வான். நவீன் கூச்சமின்றி பேசவும் நடிக்கவும் செய்தான். அவனைப் பார்த்ததும்தான் எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்த குறும்பட ஆசை துளிர் விட்டது.
நண்பர் சுரேஷிடம் என் விருப்பதைச் சொன்னபோது, அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து படத்திற்கான வேலைகளைச் செய்தோம். கல்விப் பற்றிய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். எளிமையான கதைத்தான் என்றாலும் இதை திரும்ப திரும்ப நமது சமூகத்தில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தோம். அதனால் நவீனை வைத்து துணிவோடு 'காழ்' படத்தைத் தொடங்கினோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நவீன் சிறப்பாக நடித்தான். நாங்களே வசனத்தை மாற்றிக்கூறி விட்டாலும் அவன் சரி செய்யும் அளவுக்கு படத்தோடு ஒன்றி விட்டான். 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காலை ஆறரை மணியிலிருந்து எட்டரை மணி வரை மட்டுமே நடிக்க வைத்தோம். அதனால் நவீன் மட்டுமல்ல எங்களின் வழக்கமான வேலைகள் ஏதும் பாதிக்க வில்லை. படம் பார்த்தவர்கள் எல்லோரும் நவீனின் தாயாக நடித்திருப்பவர் நிஜமாகவே கண் தெரியாதவரா எனக் கேட்கிறார்கள். கண் பார்வையுள்ளவர்தான் அவர். ஆனால், பார்வையாளர்கள் இப்படிக் கேட்கும்விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
எங்கள் ஊரில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம். சின்னஞ்சிறு குறைகள் இருக்கலாம். ஆனால், படம் சொல்லும் விஷயம் தெளிவாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எந்தக் காரணத்தினாலும் ஒருவருக்கு கல்விக் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பம். இந்தச் செய்தியை மக்களிடையே கொண்டுச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தை நண்பர் சுரேஷ் இயக்க, நான் ஒளிப்பதிவு செய்தேன்.  இப்போது ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகள் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது." என்கிறார் ஆசிரியர் ஜான் ராஜா.
கல்விக்காக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தொடர வேண்டும்.

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான ஊதியம் உயர்வு.


TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு, அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில், வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 20 ஆண்டுகளில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்
திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.
இந்த மாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளன.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

'NEET' பாடத்திட்டம் தெரியாமல் திணறல் : மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துஉள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம்பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழிபெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும்.
எனவே, பள்ளிக் கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர்.இவ்வாறு அவர் கூறினார்.

நர்சிங் கல்லூரிகள் அங்கீகாரம்: ஆக.31ல் பட்டியல் வெளியீடு.

'நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள, நர்சிங் கல்லுாரிகளின் பட்டியல், ஆக., 31ல் வெளியிடப் படும்' என, இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., உள்ளிட்ட நர்சிங் சார்ந்த துறையை நடத்த, நடப்பு கல்வியாண்டில், 257 கல்லுாரிகளுக்கு மட்டுமே, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நர்சிங் கல்லுாரிகளை துவக்கவும், புதுப்பிக்கவும், தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் என, மூன்று தரப்பால் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு கல்லுாரிகள், ஒரு பாடப் பிரிவுக்கு அனுமதி பெற்று, பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், அங்கீகாரம் சார்ந்த செயல்பாடுகளை விரைவுபடுத்த, 'ஆன்லைன்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அங்கீகாரம் புதுப்பிக்க, கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், ஏப்., 21 வரை கால அவகாசம் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆன்லைன்' தவிர்த்து, வேறு முறைகளில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லுாரிகளின் பெயர், பாடப்பிரிவு பட்டியல் ஆக., 31ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து, நர்சிங் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள், இப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி ஜாதி சான்றிதழில் 'அட்மிஷன்' : இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால், சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படி, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது.
மே 12ல், தேர்வு முடிவு வெளியாகிறது. இதையடுத்து, அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலை உட்பட, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கை: போலி ஜாதி சான்றிதழ் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்வதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, இன்ஜினியரிங் படிப்பிற்கான சேர்க்கையின் போது, பல்கலைகளும், இன்ஜி., கல்லுாரிகளும், மாணவர்கள் தரும் ஜாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், போலி ஜாதி சான்றிதழ்கள் அடிப்படையில், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள் அடங்கிய "TET Quiz" Android App - Google Play Store இல் உள்ளது. 

App Highlights:
* இதில் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் வினா விடைகள் பதிவேற்றப்பட்டு      உள்ளது. 
* முக்கிய வினாக்களை குறித்து கொண்டு (Favorite Questions) அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி பெரும் வசதி உள்ளது.
* கணித கணக்குகளை செய்து பார்க்க Pencil Button வசதி தரப்பட்டு உள்ளது.
* முந்தைய வருட TNTET (2012,2012Retet,2013,2014 Special TET) வினாத்தாள்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் ஏப்.25ல் வேலைநிறுத்தம் - 3 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார். 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017


தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிய, தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள், தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள் நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாது. ஆனால், புற்றீசல் போல, அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண, தொடக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பத்துக்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின், பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பள்ளிகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்காததால், பள்ளிகளை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ் கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை சரிந்தால், சத்தமின்றி 1,200 பள்ளி கள் மூடப்படலாம்,'' என்றார்.