>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

TET' தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் (தினமலர்)

திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு, ஏப்., 29ம் தேதியும்; பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, 30ம் தேதியும் நடக்கிறது. இத்தேர்வு எழுதுவோருக்கான விண்ப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.விண்ப்பங்கள் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, அனுப்பர்பாளையம், அவிநாசி, பல்லடம், கொடுவாய், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளக்கோவில் ஊத்துக்குளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ப்பம் வழங்கப்பட உள்ளது.விண்ப்பங்கள், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ப்பங்கள், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட்வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுத் துறையின், http://www.tndge.in/என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. எனினும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

EPAY ROLL JANUARY MONTH SALARY - 2017 UPDATED ......

Enter your details :- 
�� Employee code (TPF/CPS number)
�� Suffix (EDN)
�� Date of birth(DD/MM/YYYY)


Get your
�� pay slip
�� annual salary statement
�� pay drawn particulars...

சசிகலாவின் பேச்சுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை: ஸ்டாலின்



சென்னை: திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தொடருக்கு பின் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக எந்த நிலையிலும் திமுகவின் எதிரிக்கட்சிதான் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பதவிக்கு சண்டையிட்டு வருகிறார்.
தமிழக அரசு நிலையாக இல்லாததால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுப்ரமணியம் சுவாமி சசிகலா முதல்வராக வேண்டும் என தெவிவிக்கின்றாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சுப்ரமணியம் சுவாமி கூறுவதை அவர் கட்சியே ஏற்பதில்லை நாம் ஏன் பேசவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் சசிகலாவின் பேச்சுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் அரசியல் சட்டப்படி நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை திமுக கொடுத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.


அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஓ.பி.எஸ்-ஐ ஆதரிப்பார்கள்: உயிர் பிழைத்து வந்த எம்.எல்.ஏ பகீர் தகவல்!     


அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சசிகலா தரப்பினர் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். தினமும் ரிசார்ட்டுக்கு சசிகலா சென்று எம்.எல்.ஏக்களை மிரட்டி வந்தார் என்று உயிர் தப்பி வந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ சரவணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான் மட்டும் இல்லை ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர்.

மேலும், எம்.எல்.ஏக்களை சித்ரவதை செய்து வருகின்றனர் என்றார். சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தினமும் ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் அதிரடி மீட்பு ? - உயரதிகாரிகள் விரைவு?


இன்று காலை  எம்.எல்.ஏக்களை மீட்க அரசு அதிரடி ஆக் ஷனில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலிட உத்தரவின் பேரில் காலை 7 மணிக்கு கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் , சசிகலா அணிகளாக அதிமுக பிளவுபட்டு கிடக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பும் கூறிவந்த நிலையில் கூவத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களின் பிடியில் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் நிலை பற்றி அறிந்து சொல்ல சொல்லி கோர்ட் உத்தரவிட போலீஸ் டிஎஸ்பி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

எம்.எல்.ஏக்கள் தாங்கள் விரும்பித்தான் இருக்கிறோம் என்று தெரிவித்ததாக அறிக்கையில் கூறினாலும் மாவட்ட எஸ்பி சரியான தகவல் அளிக்கவில்லை என்பதை மதுரை தெற்கு எம்.எல்.ஏ தப்பித்து வந்து பேட்டி அளித்தது நிருபித்தது.
இதையடுத்து வேகம் பெற்ற மேலிடம் மாவட்ட எஸ்பி முத்தரசியை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் எஸ்பி முத்தரசியுடன் திருவண்ணாமலை எஸ்பி விஜயகுமாரையும் உடன் சென்று கூவத்தூரில் ஆய்வு செய்ய மேலிடம் உத்தரவிட்டது.

ஆய்வின் முடிவை அடுத்து மேலிடத்திலிருந்து தற்போது கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும். அனைத்து போலீஸ் உயரதிகாரிகள் டிஐஜி , ஐஜி லெவலில் உள்ளவர்கள் கூவத்தூருக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையிலும் காலை 5 மணிக்கே ஆயுதப்படை மற்றும் சிறப்புகாவல்படை , சட்டம் ஒழுங்கு போலீசார் 10 ஆயிரம் பேர் கூடும்படி கமிஷனரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த நிலைக்கும் போலீசார் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் காலை 7 மணி அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் டீம் அதிரடியாக கூவத்தூரில் நுழைய உள்ளதாகவும் அவர்கள் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமைதியாக இது நடந்தால் பிரச்சனை இல்லை. அதையும் மீறி நடந்தால் அதற்கும் தயாராக இருக்கும் படி சென்னை , காஞ்சி, திருவண்ணாமலை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.

ஆகவே இன்று காலை கூவத்தூர் ஒரு பரபரப்பான காட்சியை எதிர்கொள்ளப் போகிறதாம்.

அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம். 
ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வர உள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
தற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!

உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம்
வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.
இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.
  தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.
புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.
6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.
மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

TET விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது.
அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வது என்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது 14 லட்சம் விண்ணப்பங்கள் அனைத்தும் விற்பனை செய்யும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்கின்றன.
இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.நாளைக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டால் உடனடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளிகளில் தேர்தல் பற்றிய பாடத்திட்டம்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்

தேர்தல் நடைமுறை பற்றிய பாடத்திட்டங்களை பள்ளிக்கூட நிலையிலேயே அறிமுகம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
நம் நாட்டில் 18 வயது முடிந் தவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுகின்றனர். இந்நிலை யில் வருங்கால வாக்காளர் களுக்கு (15 முதல் 17 வயதுக் குட்பட்டவர்கள்) தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான பாடத் திட்டத்தை பள்ளிக்கூட நிலையிலேயே அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், “தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறை பற்றிய புத்தகத்தை தயாரித்து தருமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (என்சிஇஆர்டி) கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதிலில், “பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை தயாரிக்கும் என்சிஇஆர்டி உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, புதிய பாடதிட்டம் தயாரிக்கும்போது இந்த கோரிக்கை குறித்து கவனத்தில் கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார்.
ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கருதிய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளார். அதில், “இடைக்கால ஏற்பாடாக, தேர்தல் பற்றிய பாடப் புத்தகத்தை உடனடியாக தயாரித்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

IGNOU | BE.d -DECEMBER - 2016 RESULTS - PUBLISH !!

IGNOU | BE.d DECEMBER - 2016 RESULTS - PUBLISH
...https://webservices.ignou.ac.in/GradecardR/Result.asp

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி ??

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்.

வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன

வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது.
அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய 2012-ம் ஆண்டு முடிவு செய்தது.
அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இருப்பினும் 2016 ஏப்ரல் மாதமும் வரை 65 முதல் 100 தசம புள்ளிகள் அதாவது .65 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை பத்திரங்களின் லாபம் குறைந்த போதிலும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
எனவே இங்கு நாம் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் அளிக்கும் சிறு சேமிப்புத் திட்டங்கள் திட்டங்கள் எவை மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை இங்குப் பார்ப்போம்.
பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தை விட அதிக வட்டி
சிறு சேமிப்புத் திட்டங்களைப் பொருத்த வரை மத்திய அரசு பரிந்துரைத்ததை விட அதிகபட்ச வட்டியே அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளில் அப்படி இல்லாமல் குறைத்துள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF - பிபிஎப்)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதம் பரிந்துரைத்த போதிலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது
மூத்த குடிமக்கள் 'சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு அரசு 8.1 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்பட்டு இருந்தாலும் 8.5 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகின்றது. இதுவே வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
என்எஸ்சி எனப்படும் 5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று இருந்தாலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
5 வருட டெர்ம் டெபாசிட்
ஐந்து வருட டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டு பரிந்துரைத்துள்ளது. ஆனால் 7.8 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபமாக அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
1 வருட டெர்ம் டெபாசிட்
ஒரு வருட டெர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு 7 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, அதற்கு ஏற்றவாறே 7 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ...
  
            www.kalvicikaram.blogspot.in                                                                                                                                                              CLICK HERE TO DOWNLOAD - IT TAX
                       EXCEL FILE   | PART 1 |                                                          P.MANIMARAN (Thanks sir)

மாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்

மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர். சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின் அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார். 

தினமும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அட்டைகளை கரும்பலகையில் ஒட்டி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பாடம் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுக்கிறார். பலன் தரும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்.

தவிர, படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சிறை கைதியாக இருந்து விடுதலை பெறுவோர் அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கவும் வழிகாட்டு கிறார். பாடம் நடத்த செல்லும் பள்ளிகளில் மருத்துவ குணம் நிறைந்த மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
தினமலர் நாளிதழில் சட்டம் சார்ந்து வரக்கூடிய செய்திகளை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

மேலும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்காமல் மாணவர்களை தேடி சென்று தன்னம்பிக்கை வளர்த்து வரும் இவரை பாராட்ட 
                     CELL NO:98656 22602.

Gmail Alert - நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது!

ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது.

இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித்தால் அதனை அனுப்ப முடியாது என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ்களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித்துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf  மற்றும் .wsh வகை ஃபைல்களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அதனால்  .js  ஃபைல்கள் இருந்தால் அவற்றை  இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லையெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள்.

இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்துகொள்ள முடியும்

4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காமலேயே படிக்க முடியும்.  சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்துள்ளார்கள் என்ற டேட்டாவையெல்லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.

HOW TO GET CPS ALLOTMENT LETTER?

         தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட
(Computer   Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,  அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letterஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.

அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link ஐ Google ல் type செய்யவும்,



என்று type செய்தால் தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth கேட்கும் அதனைப் பதிவு செய்து  Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps accountpage க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம், நன்றி

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

"நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்:-
நாடு முழுவதும் மே 7-இல் நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு மார்ச் 1-இல் கடைசி நாளாகும்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டும்.
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை நீட் தேர்வு நிச்சயம் பாதிக்கும். அறிவார்ந்த மருத்துவர்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம் சிறந்த பொது சுகாதாரத்துக்காகவும், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லவும் எளிய மருத்துவர்கள் தேவை என்பதும் மிக முக்கியமானது.
மாணவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, தமிழக அரசால் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா திமுகவின் முழு ஆதரவுடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், அரசியல் சாசன நெருக்கடியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர பிரதமரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன். மேலும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.