>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 22 டிசம்பர், 2016

தேசிய நெடுஞ்சாலைகள்:

🌻NH2:டில்லி - கொல்கத்தா - 1465கிமீ

🌻NH3: ஆக்ரா - மும்பை - 1161கிமீ

🌻NH4:தானே - சென்னை-1235கிமீ

🌻NH5:கொல்கத்தா - சென்னை-1533கிமீ

🌻NH7:கன்னியாகுமரி - வாரணாசி-2369கிமீ

🌻NH47A:திருநெல்வேலி - தூத்துக்குடி

🌻NH45:சென்னை - தேனி-460கிமீ

🌻NH45A:விழுப்புரம் - நாகபட்டினம்-190கிமீ

🌻NH45B:திருச்சி - தூத்துக்குடி-257கிமீ

🌻NH46:கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை-132கிமீ

🌻NH207:ஓசூர் - கர்நாடகா-155கிமீ

புதன், 21 டிசம்பர், 2016

10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வு அறிவிப்பு.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு.
பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது, “பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி 3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சாகித்திய அகதாமி விருது

எழுத்தாளர் திரு. வண்ணதாசன்(கல்யாண்ஜி)  அவர்களுக்கு "ஒரு சிறு இசை " என்னும் சிறுகதைக்கு தற்போது சாகித்திய அகதாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கட்டணம்: ரூ.500/- இதனை "இயக்குனர், ஜிப்மர், புதுச்சேரி”
என்ற பெயருக்கு புதுச்சேரி ஜிப்மர் கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்..
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, டாக்டர்.அசோக் பதே, துணை இயக்குனர், ஜிப்மர் அலுவலகம்,புதுச்சேரி-605 006. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2017
மேலும், விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!

நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான
முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊழியர்களுக்கான சம்பள பரிவர்த்தனையில் ஒரு கூடுதல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்கும் முறையும் பின்பற்றப்படும்.
ஊழியர்கள் வங்கி மூலம் வேறு பணப்பரிவர்தனைகளை நிகழ்த்த வசதியாக இந்த வசதி கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தம் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு

ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ‛ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்குவதற்கான பணிகள் 320 கோடி செலவில் நடந்து வருகின்றன. எனினும், ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறதாதால் ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, 47 சதவீத கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் வாங்கப்பட்டு உள்ளன. 46 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களில், தலா ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பெறப்பட்டு உள்ளது.ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி துவக்கப்படும்.
தற்போதைய சூழலில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் ரயில்வே

செவ்வாய், 20 டிசம்பர், 2016

கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்

தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன.

'ஆன்லைனில்'

தினமும் கற்றல் கற்பித்தல், நலத் திட்டங்கள் வழங்கல், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, உத்தரவுகள், அறிவுறுத்தல், நலத் திட்டம் தொடர்பான விவரம், புகார்கள் மீதான விசாரணை என பல தகவல் பரிமாற்றங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு 'ஆன்லைன்' மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும்.
பெரும்பாலும் உடனுக்கு உடன் வேண்டிய தகவல்கள்'ஆன்லைனில்' தான் கேட்கப்படும். அதற்கு கல்வி அலுவலகங்கள் மூலம் உடன் பதில் அனுப்பப்படும். ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக இதுபோன்ற 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிச., 7, 8ல் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 
அதற்கு மாற்றாக அத்தேர்வுகள் எப்போது நடத்த வேண்டும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நலத் திட்டம் வழங்குவதற்கான வழிகாட்டுதல், கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையால் கல்வித்துறை பணிகள் பாதிக்கிறது என ஆசிரியர்கள்தெரிவித்தனர்.
இதுகுறித்து உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் டிச., 6, 7, 8ம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்போது 7, 8ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதன் பின் 9ம் தேதியில் இருந்து, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய வழக்கமான அறிவிப்பு, தபால் தகவல் மற்றும் 'ஆன்லைன்' அறிவுறுத்தல்களும் குறைந்து விட்டன. சாதாரண மற்றும் பதிவு தபால்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன.இதையடுத்து வர்தா புயல் சீற்றத்தாலும் சென்னையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள், அலைபேசி டவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின. இதனால் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றங்களும் குறைந்து விட்டன. இதே சூழ்நிலை அனைத்து துறைகளிலும் உள்ளன, என்றார். 

அரையாண்டு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, தேர்வு நடத்துவது யார்?

துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை
அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒன்று முதல்,ஐந்து வரை, இரண்டாம் பருவத்தேர்வுகள் நேற்று துவங்கின.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை மேம்படுத்தல் குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி வழங்க, கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஆனால், முதல்வர்ஜெயலலிதா மறைவு, பள்ளி விடுமுறையால், பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தமிழ் பயிற்சி வட்டார வளமையங்களில், ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. அதில், துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும், 50 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கஉத்தரவிடப்பட்டது.
தேர்வு நடத்தும் நாளன்று, 50 சதவீத ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்ற நிலையில், பள்ளியை நடத்த தலைமைஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேர்வுகளை நடத்த முடியாமல், பெயரளவில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது:
தேர்வு நாளில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் இருப்பது அவசியம். ஏனெனில் செயல்திட்ட முறைகளில்தனித்தனியே மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால், பள்ளியில் உள்ள பாதி ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டனர். இதனால், தேர்வு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நடத்தும் அலுவலர்கள், தேர்வு நடத்துவது குறித்த கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்துள்ளதால், தலைமை ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கண்துடைப்பாக தேர்வு நடத்த வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 19 டிசம்பர், 2016

3ம் பருவப் பாடப்புத்தகமாணவர்களுக்கு ம் 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர்.
 இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி அவசியம்: ஆணைய உறுப்பினர் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பள்ளிகள் அளவிலேயே மனித உரிமைக் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள், பிரச்னைகள் தொடர்பான புகார்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நேரடி விசாரணை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சிரியாக் ஜோசப், டி.முருகேசன், எஸ்.சி.சின்ஹா உள்ளிட்டோர் கொண்ட குழு ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.
இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கெளதம், அரசுச் செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள், பல்வேறு துறை இயக்குநர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 17 மனித உரிமை மீறல் புகார்கள் பெறப்பட்டன. இவற்றில் கடந்த மாதம் மட்டுமே 15 புகார்கள் வந்துள்ளன. புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர், எதிர்தரப்பினரிடம் விசாரணை செய்துள்ளோம். இதன் மீது பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஆணையம் வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனியாக மனித உரிமை ஆணையங்கள் இருக்க வேண்டும் என்பது ஆணையச் சட்டத்திலேயே உள்ளது. புதுச்சேரியில் தற்போது மனித உரிமைக் குழு தான் உள்ளது. அதன் செயல்பாடும் சரிவர இல்லை எனத் தெரிகிறது. புதுச்சேரியிலும் முழு மனித உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.
கூடுதல் அதிகாரம் தேவை: தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களின் உத்தரவுகள் பெரும்பாலும் சட்ட ரீதியில் கட்டுப்படுத்தப்படுபவையாக இல்லாத நிலை உள்ளது. எனவே, ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு தர வேண்டும். மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்வி அளவிலேயே மனித உரிமைகள் தொடர்பான பாடப்பிரிவை இடம் பெறச் செய்ய வேண்டும். ஒருவருக்கு தனக்கான உரிமைகள், பாதிக்கப்பட்டால் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தவறாமல் மனித உரிமைக் கல்வியை கற்பிக்க வேண்டும்.
மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை ஆணையம் தீவிரமாக கருதுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
புதுச்சேரியில் சாதி மோதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதில்லை என கோரிக்கை வந்துள்ளது. அதை பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவித்துள்ளோம். வழக்கம் போல காவல் துறை மீது தான் அதிக மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. ஒரு நபரை 5 காவல் துறையினர் தாக்கியதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாகவும் தீவிரமாக விசாரித்துள்ளோம் என்றார் முருகேசன்.
ஆணையச் செயலர் சத்திய நாராயண மொகந்தி, செயலர் சிகே.சதுர்வேதி, இணைச் செயலர் எஸ்.கோச்சர், டிஐஜி சாயா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"என் சம்பள பணத்தையே என்னால் எடுக்க முடியவில்லை" - நீதிபதி வேதனை