>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 30 நவம்பர், 2016

கனமழை- பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.

*சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,நாகை,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை.
*விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம்.
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள்  விடுமுறை.
               
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு.விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

அரசு பள்ளிகளுக்கு சைல்ட் பிரண்ட்லி டாய்லெட்

தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதி மூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.

ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நிதியுதவி

சென்னை:நிதியுதவி பெற விரும்பும், ஆதிதிராவிட இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டய கணக்கர், செலவு கணக்கர் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட இளைஞர்கள், சுயமாக தொழில் செய்ய, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, நிதியுதவி பெற விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில்

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும்.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும்

தமிழகத்தை மிரட்டும் கனமழை..

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். தென்மேற்கு காற்று திசைமாறிய காரணத்தால் வடகிழக்கு பருவமழை தாமதமானதாக குறிப்பிட்ட அவர், மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

'பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ளது. 
 அதன் சார்பில், 2017ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான

ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது.

நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின், 'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள் உருவாக,

இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு

அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும்

SCERT வாரத் தேர்வு (worksheet) குறைகள்

தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?
மதிப்பெண் உண்டா? கிடையாதா?
சில பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
1,2,3 ஆம் வகுப்பு வரையில் உள்ளது. சில பள்ளிகளில் 1,2,3,6,7 வகுப்புகள் ஆங்கில வழிக்கல்வியில் உள்ளது.
ஆனால் வினாக்கள் தமிழில் மட்டும் உள்ளது.
ஒரு முறைக் கொடுத்த வினாத்தாலே மறுபடியும் கொடுக்கப் படுகிறது.
பத்து மதிப்பெண்களுக்கு தேர்வு எனக் கூறி விட்டு
7 வினாக்களும்
8 வினாக்களும்
9 வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட சில வினாக்களுக்கு விடையே இல்லை.
முதலில் XEROX எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதன் பிறகு கரும்பலகையில் எழுதிப்போட்டு தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு.
கீழ்வகுப்பு வினாக்களில் வரும் படங்களையும் ஆசிரியர் வரைந்து போட்டு நடத்த வேண்டுமா?
அப்படியென்றால் அவர் வகுப்பில் இருக்கும் ஒரு கரும்பலகையில் எத்தனை படங்கள் வரைந்து போடுவார்?
ஏன் இந்த தடுமாற்றம்?
நோக்கம் சிறந்ததாக இருந்தால்
அதனை சிறந்த முறையில்
திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டாமா?
எந்த திட்டமிடலும் இல்லாமல்
தினம் தினம் ஒரு அறிவிப்புக் கொடுத்து ஏன் குழப்ப வேண்டும்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதில் உள்ள தவறுகள் களைந்தெடுக்கப்பட்டு
வகுப்பறைக்கு வரும் போது
100% சதவீதம் தெளிவுடன்
இருந்தால் தானே
மாணவர்களும் குழப்பம் இல்லாமல் இருப்பார்கள்?
கல்வியை கல்வியாகப் பாருங்கள்
விளையாட்டாக்கி விடாதீர்கள்.