தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?
மதிப்பெண் உண்டா? கிடையாதா?
சில பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
1,2,3 ஆம் வகுப்பு வரையில் உள்ளது. சில பள்ளிகளில் 1,2,3,6,7 வகுப்புகள் ஆங்கில வழிக்கல்வியில் உள்ளது.
ஆனால் வினாக்கள் தமிழில் மட்டும் உள்ளது.
ஒரு முறைக் கொடுத்த வினாத்தாலே மறுபடியும் கொடுக்கப் படுகிறது.
பத்து மதிப்பெண்களுக்கு தேர்வு எனக் கூறி விட்டு
7 வினாக்களும்
8 வினாக்களும்
9 வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட சில வினாக்களுக்கு விடையே இல்லை.
முதலில் XEROX எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு அதன் பிறகு கரும்பலகையில் எழுதிப்போட்டு தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு.
கீழ்வகுப்பு வினாக்களில் வரும் படங்களையும் ஆசிரியர் வரைந்து போட்டு நடத்த வேண்டுமா?
அப்படியென்றால் அவர் வகுப்பில் இருக்கும் ஒரு கரும்பலகையில் எத்தனை படங்கள் வரைந்து போடுவார்?
ஏன் இந்த தடுமாற்றம்?
நோக்கம் சிறந்ததாக இருந்தால்
அதனை சிறந்த முறையில்
திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டாமா?
எந்த திட்டமிடலும் இல்லாமல்
தினம் தினம் ஒரு அறிவிப்புக் கொடுத்து ஏன் குழப்ப வேண்டும்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு அதில் உள்ள தவறுகள் களைந்தெடுக்கப்பட்டு
வகுப்பறைக்கு வரும் போது
100% சதவீதம் தெளிவுடன்
இருந்தால் தானே
மாணவர்களும் குழப்பம் இல்லாமல் இருப்பார்கள்?
கல்வியை கல்வியாகப் பாருங்கள்
விளையாட்டாக்கி விடாதீர்கள்.