வியாழன், 24 நவம்பர், 2016
12 STD REVISED SUTDY MATERIALS - 2016-17 TAMIL / ENGLISH
|
உள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு?
மாமல்லபுரம்: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் ெவளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், 2011 முதல், மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகித்தவர்களின் பதவிகாலம்,
கடந்த மாதம், 25 உடன் முடிந்தது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, கடந்த மாதம், 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஏற்பாடு மேற்கொண்டது.இத்தேர்தலில், பதவிகளுக்கான இன சுழற்சிமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என, தி.மு.க., வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை முடிவில், அடுத்த மாத இறுதிக்குள், தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைதேர்தல் முடிந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, சில கட்சிகளின் நிர்வாகிகளும் தெரிவித்து உள்ளனர்.
டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு நிலையத்திலும், 24 முதல் டிச., 2 வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகலுடன், 'செயலர், தேர்வுக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்று முகவரிக்கு, டிச., 3க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 300 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பங்களை,www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன், 23 நவம்பர், 2016
உள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு?
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் ெவளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், 2011 முதல், மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகித்தவர்களின் பதவிகாலம், கடந்த மாதம், 25 உடன் முடிந்தது.
புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, கடந்த மாதம், 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஏற்பாடு மேற்கொண்டது.இத்தேர்தலில், பதவிகளுக்கான இன சுழற்சிமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என, தி.மு.க., வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை முடிவில், அடுத்த மாத இறுதிக்குள், தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைதேர்தல் முடிந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, சில கட்சிகளின் நிர்வாகிகளும் தெரிவித்து உள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு)
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு- கூடுதல் பயிற்சி வினாக்களோடு) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் தயாரித்து விற்பனை செய்கிறார். புத்தகத்தின் விலை ரூ 210 (பார்சல் செலவு தனி). புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
97 15 160005
Mohan B.T.Asst
Kadaladi block
Ramnad Dt.
97 15 160005
Mohan B.T.Asst
Kadaladi block
Ramnad Dt.
CEO TRANSFER !!
கன்னியாகுமரி CEO ஜெயக்குமார் - திருவண்ணாமலை CEO
புதுக்கோட்டைCEO சாந்தி - திருச்சி
IMS விருதுநகர் விஜயராணி - கன்னியாகுமரி CEO
பெரம்பலூர் DEO - புதுக்கோட்டைCEO
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)