சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan...
January 31, 2020
சாதி மதம் அற்றவர் எனச்சான்றிதழ்பெறுவதற்கெனஅரசாங்கத்தில் தனிவழிமுறைகள் எதுவும்கிடையாது. வழக்கமாகசாதிச் சான்றிதழ்பெறுவது போலத்தான்சான்றிதழ் பெறமுடியும்.
விகடனின்#DoubtOfCommonManபக்கத்தில், ``சாதி மதம்அற்றவர் சான்றிதழ்வாங்குவது எப்படி?அதை அரசுத்துறைசார்ந்தவிண்ணப்பங்களில்குறிப்பிடலாமா?" என்றகேள்வியைஎழுப்பியிருந்தார் வாசகர்சூர்யபிரகாஷ். அந்தக்கேள்வியின்அடிப்படையில்எழுதப்பட்ட கட்டுரை இது.சாதி, மத ஒழிப்பு குறித்தஉரையாடல்கள்எழும்போதெல்லாம் , `சாதிச் சான்றிதழ்களில்சாதியற்றவர்களாகக்குறிப்பிட்டாலே சாதிஒழியும்' என்ற கருத்தும்முன்வைக்கப்படும்'.ஆனால், அது சரியானதீர்வு அல்ல. மக்களின்மனமாற்றமேமுழுமையான தீர்வாகஅமையும் என்றும் சிலர்கருதினாலும், சாதி, மதஅடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப்பலரும் வரவேற்கவேசெய்கிறார்கள்.
சாதி, மதஅடையாளமற்றவர்களாகத் தங்களைமுன்னிறுத்திக்கொள்ளவிரும்புகிறவர்களில்சிலர் சாதிச்சான்றிதழிலும் சாதி,மதம் இல்லை எனக்குறிப்பிடமுடிவெடுக்கின்றனர்.அவ்வாறு சாதி, மதம்இல்லை எனப்பெறப்படும்சான்றிதழ்களைக்கொண்டு அரசுத்துறைசார்ந்து விண்ணப்பிக்கமுடியுமா என்ற கேள்விஎழுவது இயல்புதான்.இந்தியாவில்முதல்முறையாக சாதி,மதம் அற்றவர் எனச்சான்றிதழ் பெற்றுள்ளவழக்கறிஞர்ம.ஆ.சினேகாவிடம்இதுகுறித்துப்பேசினோம்.
``சாதி மதம் அற்றவர்எனச் சான்றிதழ்பெறுவதற்கெனஅரசாங்கத்தில் தனிவழிமுறைகள் எதுவும்கிடையாது. வழக்கமாகசாதிச் சான்றிதழ்பெறுவது போலத்தான்சான்றிதழ் பெறமுடியும்.கிராம நிர்வாகஅலுவலரிடம் (V.A.O) நாம்விண்ணப்பத்தைஅளிக்க வேண்டும்.அதை அவர்உறுதிசெய்து வருவாய்ஆய்வாளருக்கு (R.I)பரிந்துரை செய்வார்.வருவாய் ஆய்வாளர்அதை வட்டாட்சியருக்குப்பரிந்துரை செய்வார்.வட்டாட்சியர் அதைத்சரிபார்த்து சம்பந்தப்பட்டபகுதியின் வி.ஏ.ஓ நேரில்சென்று கள ஆய்வுநடத்திய பின் சான்றிதழ்வழங்கப்படும்
இதுதான் சாதிச்சான்றிதழ்வாங்குவதற்கானவழிமுறை. சாதி,மதமற்றவர் (`No Caste No Religion') எனச் சான்றிதழ்பெறவும் இதேவழிமுறைதான். நான்முதல்முறையாக இந்தச்சான்றிதழ் பெறுவதால்அந்த விண்ணப்பத்துடன்என் பள்ளி மாற்றுச்சான்றிதழை (School Transfer Certificate)சமர்ப்பித்தேன். அதில்நான் சாதி, மதம்அற்றவர் எனக்குறிப்பிட்டிருந்தேன்.அதைச் சான்றாகவைத்து எனக்கு `No Caste No Religion'சான்றிதழ்வழங்கினார்கள். இதைப்போலவே சான்றிதழ்யாராவதுவைத்திருந்தார்கள்எனில், அதைஆவணமாக சமர்ப்பித்து`No Caste No Religion'சான்றிதழ் பெறலாம்.நான் சான்றிதழ் பெற்றபிறகு, ஊட்டியைச்சேர்ந்த பகத்சிங்,சுக்தேவ் , ராஜகுரு என்றமூன்று சகோதரர்கள்வாங்கினார்கள்.அவர்களின் பள்ளிச்சான்றிதழிலும் `No Caste No Religion' என அவர்கள்குறிப்பிட்டிருந்தார்கள்.ஆத்தூரைச் சேர்ந்த ரவிஎன்கிற தோழர் தனதுMBC சான்றிதழைக்கொடுத்துவிட்டு `No Caste No Religion'சான்றிதழ் பெற்றார்.இது சவாலான ஒன்று.ஏற்கெனவே சாதிச்சான்றிதழ்வைத்திருந்தவர் அதைச்சமர்ப்பித்துவிட்டு `No Caste No Religion'சான்றிதழ் வாங்கினார்.இவர் மட்டுமே பள்ளி,கல்லூரிகளில்சாதியைக் குறிப்பிட்டுபின் `No Caste No Religion'சான்றிதழ் பெற்றவர்.
இவற்றையெல்லாம்விடகவனிக்க வேண்டியமுக்கியமான ஒன்றுஎங்களுக்கெல்லாம்சான்றிதழ் வழங்கியதாசில்தார்கள்முற்போக்கு சிந்தனைகொண்டவர்களாகஇருந்ததுதான்.ஏனென்றால், இவ்வாறுசான்றிதழ் வழங்கவேண்டும் எனக்கேட்கும்போது வழங்கமுடியாது எனத்தெரிவிக்கதாசில்தார்களுக்குசட்டப்படியான உரிமைஉண்டு. `No Caste No Religion' சான்றிதழ்வழங்க வேண்டும் எனஎந்த அரசாணையும்நீதிமன்ற உத்தரவும்கிடையாது. எனவே,தாசில்தார்கள் தங்கள்அதிகாரத்துக்கு உட்பட்டுஅதை மறுக்கவும்வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசு, பள்ளிச்சான்றிதழ்களில்சாதியைக் குறிப்பிடவேண்டியகட்டாயமில்லை எனஅரசாணைவெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மட்டுமேஇது நடைமுறையில்உள்ளது. பள்ளிச்சான்றிதழில் சாதி, மதம்எனக் குறிப்பிட்டுள்ளஇடத்தில் `Verify Community Certificate'எனக்
குறிப்பிடுகிறார்கள். `No Caste No Religion'சான்றிதழைஅரசுத்துறை சார்ந்தவிண்ணப்பங்களில்பயன்படுத்தலாம்.ஊட்டியில் `No Caste No Religion' சான்றிதழ்பெற்ற சுகுதேவ்தற்போது ராணுவத்தில்சேர்ந்துள்ளார். அவர் `No Caste No Religion'சான்றிதழைச்சமர்ப்பித்தே பணியில்சேர்ந்தார்.
அதிகாரிகள் அவரைவெகுவாகப் பாராட்டியும்உள்ளனர். `No Caste No Religion' சான்றிழ்வழங்கலாம் எனஅரசாணை வரும்போதுஇது இன்னும்எளிமையாகும்.இடஒதுக்கீடு மட்டுமேசமூகநீதியைக் குறைந்தஅளவேனும் உயிர்ப்புடன்வைத்துள்ளது.இடஒதுக்கீடு மூலம்பயனடைபவர்கள்,முதல்முறை பட்டதாரிகள்சாதிச்சான்றிதழ்களையேபயன்படுத்த வேண்டும்என்பதான் நம் எண்ணம். `No Caste No Religion'சான்றிழ் வாங்குவதால்மட்டுமே சாதி ஒழியும்என்பதும் சரியானதல்ல"என்றார்.
.................................................................