சனி, 18 நவம்பர், 2017
குழந்தைகள் தின கவிதை
குழலினும் யாழினும்
இசையாவினும் மேலென மழலைமொழி
இனிப்பென நவின்றான்
நம் முப்பால்தாத்ன
சிறுதளிர்கள்
மென்மலர்கள்
குட்டி பிரம்மாக்கள்
மகிழ்நிலாக்கள்
உயிர்மகிழ்ச்சிகள்
குழந்தைகள்
உங்கள்
அதட்டல்களில்
ஓர் அப்துல்கலாம் பொசுங்கி விடலாம்
உங்கள் அச்சுறுத்தலில்
புதிய சிந்தனையாளன் கருக்கலைக்கப்படலாம்
உங்கள் பயமுறுத்தலில்
ஒரு தத்துவஞானி தவறிப்போகலாம்..
பள்ளியில் பாடங்களோடு
பாசத்தின் மேன்மையை உணர்த்துங்கள்.
நெறிபிறழ்நடத்தைகளின் ஊற்றுக்கண் நம்மிலிருந்தும் கூட
தொடங்க நேரலாம்.
மதிப்பெண்ணை வைத்தே மதிப்பிட்டு
தனித்திறன்களுக்கு வாய்ப்பூட்டு போடாதீர்
எல்லாருக்கும்
பொதுக்கல்வி வாழைப்பழமே
பிடிக்குமென நினைக்க வேணாம்.
அதைத்தாண்டிய ருசிப்பழங்களும் ஏராளமுண்டு...
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளில் வலியேற்றாதீர்
மாலை நேர மணியடிப்பில் மட்டுமே
நாளதுவரை குதூகலிக்கின்றன
குழந்தைகள்..
அவர்களைப் பொறுத்தமட்டில்
பள்ளிக்கூடங்கள் காலைநேரச்சிறைகள்..
மாற்றப்பட வேண்டியது
புதுமைபெற வேண்டியது
பாடதிட்டங்களோ கல்விமுறையோ இல்லை
கையாளும் நம் மனநிலையும்
இந்த சமூக நிலையும் தான்
கற்றலில் இனிமை பூசுவோம்
ஏனென்றால்
நம்முன் இருப்பது மதிப்பெண் இயந்திரங்கள் அல்ல..
மனசுள்ள குழந்தைகள்
அன்பினால்
அரவணைத்து
நாமும் குழந்தைகளாவோம்
*குழந்தைகளுக்காய்*
*இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்*
*சீனி.தனஞ்செழியன்*
PAY COMMISSION SOFTWARE TO ALL AIDED SCHOOLS
CLICK HERE-TO DOWNLOAD-PAY COMMISSION SOFTWARE
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
PAY-COMMISSION SOFTWARE TO ALL HIGH /HSC SCHOOLS
CLICK HERE-7TH PAY COMMISSION SOFTWARE
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
PAY COMMISSION SOFTWARE TO ALL PUPS & PUMS SCHOOLS
cLICK HERE-TO DOWNLOAD PAYCOMMISSION SOFTWARE
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
PASSWORD -123
IN TAMIL TYPE -PRESS Alt 3 & then type in all unicodes fonts
கருணை அடிப்படையில் அரசு பணி யாருக்கு வழங்கப்படும்!!!
கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
# கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.
# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.
# கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
# கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.8
# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
# கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.
# என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.
# என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
# கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
# கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
# திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
# மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.
-thanks -- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்...
CCE All 3 Terms Annual Calculator For Primary, Upper Primary and 9th std
CCE Important Records for Teachers & Students
1. அன்பார்ந்த ஆசிரியர்களே, இந்த CCE CALCULATOR ல் ஒவ்வொரு பாட ஆசிரியரும் தங்களது FA(A),FA(B) ஆகியவற்றின் 4 மதிப்பெண்களையும் , SA மதிப்பெண்ணையும்2. ENTRY பக்கத்தில் மட்டும் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தால் போதுமானது
3. மூன்று பருவத்திற்கும் பதிவு செய்து விட்டால் கடைசியாக உள்ள ANNUAL REPORT FINAL என்ற பக்கத்தில் உள்ளவற்றை PRINT எடுத்தல் போதுமானது தேர்ச்சி அறிக்கை தயார்
4. BRC அலுவலகத்திலிருந்து SCHOLASTIC FORM கேட்டால் BRC 1 , BRC2, BRC 3 ஆகிய பக்கங்களை பருவத்திற்கு ஏற்ப PRINT எடுத்தால் போதுமானது.
5. SCHOOL REGISTER ல் பதிவு செய்வதற்கு ஏற்ப SCHOOL REGISTER பக்கம் தயார் செய்யப் பட்டுள்ளது
6. ATTENDNANACE பக்கத்தில் மாணவர்களின் வருகையையும், பள்ளி வேலை நாட்களை TOTAL WORKING DAY வரிசையில் முறையே பதிவிடவும்
STATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....
- SABL - Ladder & Logos (All Classes)
- 5th STD - 2nd TERM - MIND MAPS - ALL SUBJECTS
- CLICK HERE - RECORDS & FORMS LIST TO BE SUBMITTED BY HM DURING INSPECTION (2017 -18)
- CLICK HERE - CCE 2nd TERM WEEKLY SYLLABUS - II std to VIII STD
- LESSON PLANS - Steps To Write Lesson Plan - Model Lesson Plan
- PERIODICAL ASSESSMENT TEST.( FOR CLASSES 2,3,4,5)
- CLICK HERE - 4500 COMMON SIGHT WORDS | PART 1
- CLICK HERE - 4500 COMMON SIGHT WORDS | PAR 2
- CLICK HERE - SIMPLE SENTENCES FOR PRIMARY & UPP.PRIMARY
- CLICK HERE - தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான நா பிறழ் பயிற்சி ஏடு
- CLICK HERE - SIMPLE ENGLISH GRAMMAR TESTS FOR PRIMARY & UPP.PRIMARY
- 4th STD - 2nd TERM - NEW WORDS WITH TAMIL MEANINGS FOR PRACTICE - ENGLISH MEDIUM
- 3rd STD - 2nd TERM - NEW WORDS WITH TAMIL MEANINGS FOR PRACTICE
- 5th STD - 2nd TERM - NEW WORDS WITH TAMIL MEANINGS FOR PRACTICE - ENGLISH MEDIUM
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு வெற்றிக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
இந்தியாவில் பொறியியல் படிப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள ஐ.ஐ.டி-யில் சேர்வதற்குப் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் போட்டி போடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி-க்கள் இருந்தாலும், அதில் தமிழக மாணவர்களின் சேர்க்கை என்பது மிகவும் குறைவு. தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நுழைவது ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்க தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு முன்பே, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தன் பள்ளியில் ஆரம்பித்து முன்னோடியாக மாறியிருக்கிறார் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் திருமுருகன்.

பெரும்பாலும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி வரும் வேளையில் தமிழில் கணிதம், இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் பயிற்சி வகுப்பு எடுப்பதுடன், அந்தப் பயிற்சியை செல்போனில் படம்பிடித்து யூ டியூப்பிலும், வாட்ஸ்அப் வழியாகவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார் திருமுருகன். இந்த வீடியோவை தமிழகத்தில் உள்ள அரசு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் பதிந்து வருகிறார்.
"தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியமாக இருந்த காலத்திலேயே நான் வழங்கிய பயிற்சியின் மூலம் ஐ.ஐ.டி-யிலும், அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்தனர். நுழைவுத்தேர்வு கைவிடப்பட்டபோது பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். நீட் தேர்வின் மூலமே மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதால் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களும் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும்வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு வீடியோக்களையும், கேள்விகளையும் வாட்ஸ்அப், யூ டியூப்களில்
பதிவு செய்து வருகிறேன். இதுவரை, யூடியூப்பில் 47 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இதையும் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் இணைய வழியே கேள்விகள் கேட்டும் விளக்கம் பெறலாம். அரசும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதால் இனி, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்விலும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார் நம்பிக்கையுடன்.
இவர், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு கணிதம் (IIT JEE Mathemstics) குறித்தும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஐ.ஐ.டி தேர்வுக்கான அடிப்படைகள் குறித்தும் புத்தகங்கள் எழுதி வருகிறார்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து திருமுருகன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"விரைவில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தயங்காமல் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி-யில் சேர முதல் கட்டமாக மெயின் தேர்வு எழுத வேண்டும். அதில் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி-க்களில் உள்ள 9,700 இடங்களில் சேர்க்கப்படுகின்றனர் என்பதால் ஜே.இ.இ முதன்மைத் தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற்றிட முயல வேண்டும்.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை ஒரு வருடம் தனிப் பயிற்சி பெற வேண்டும் என்றாலும் பள்ளிப் பாடங்களை முறையாகப் புரிந்து படித்திருந்தால் முதல் தேர்விலேயே அதிக மதிப்பெண்ணைப் பெறலாம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைக் கருத்தில் கொண்டு தயாராக வேண்டும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேட்கப்படுகின்றன. எனவே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேள்விகளைப் படித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலத் திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது.
நுழைவுத்தேர்வுக்கான கேள்விகள் எல்லாம் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். கேள்விக்கு நான்கு விடைகளும் பொருந்திபோவதுபோல் அமைத்திருப்பார்கள். அதில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2018-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-ஜே.இ.இ (அட்வான்ஸ்) தேர்வை இணையம் வழியாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான மாதிரித் தேர்வை எழுதிப் பார்ப்பதோடு கணினியைச் சிறந்த முறையில் இயக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. தவறான விடையை எழுதினால், ஏற்கெனவே சரியான விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, தெரியாத கேள்வியாக இருந்தால் அதற்கு விடையளிக்காமல் தவிர்ப்பது நல்லது.
கேள்விகளுக்கு வேகமாக விடை அளிக்க ஷார்ட் கட் முறையினை அறிந்துகொள்வது முக்கியம். இது மதிப்பெண்ணை அதிகப்படுத்தி வெற்றியை கைவசப்படுத்தும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)