வெள்ளி, 17 நவம்பர், 2017
தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்...
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
JACTTO GEO போராட்டம் - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.
கடந்த செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன்,
ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், சில கேள்விகளை எழுப்பி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.நீதிபதியின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் செந்தில்குமார், சங்கரன், சூரியபிரகாசம் ஆகியோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்க வேண்டும் என்றே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று புரிந்து கொள்ளாமல், தங்கள் பேச்சு சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகின்றனர்’ என்றார்.

அதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையில், சமூக வலைத்தளங்களில் வேண்டாத கருத்துகளை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.இதையடுத்து பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் 11 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விவரம் வருமாறு:–
மாயகிருஷ்ணன்(தேவியாக்குறிச்சி), பாலகிருஷ்ணன்(அனியாபுரம்),
ஜான் பிரேம்குமார்(கொளத்தூர்),
கவிதா(ஏலகிரி),
ரமேஷ்(மோகனூர்),
கோவிந்தன் (அழகாபுரம்),
செல்வன்(செவந்திப்பட்டி),
பக்தவச்சலம்(சென்னை),
பொன்ரத்தினம்(தர்மபுரி), திருக்குமரன்(காரியாமங்கலம்) மற்றும் சொர்ணலதா...
'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'
திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்'நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.
'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம், வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்ணப்பன், நேற்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பள்ளியாக சென்ற அவர், மாணவர்கள் மத்தியில் பேசினார்.திருப்பூர், நொய்யல் வீதி பள்ளியில், அவர் பேசியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நனவாக்க, அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.

பாடப் புத்தகங்கள் மட்டுமே, முழு அறிவுத் திறனை வளர்த்து விடாது; பாடப் புத்தகத்தை கடந்த அறிவு, அவசியம்.'தினமலர்' நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' ஆகியவை மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கின்றன. இவற்றை மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர் நலனுக்காக, 'புத்தக பூங்கொத்து' என்ற பெயரில், நுாலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தலைப்பில் படிக்கும் புத்தகங்கள், அறிவை விரிவடைய செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமைஆசிரியர்களுக்கு அபராதம்
டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN 7th PAY - பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு.
சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது.சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.

அதேபோல் கிரேடு '2' ல் இடம் பெற்றுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 8 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு (3) ல் இடம்பெற்றுள்ளநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் கிரேடு '2' ல் இடம் பெற்றிருந்தன. தற்போது எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தில் அந்த பட்டியலில் இருந்து இரு நகராட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் கூறுகையில், ''சிவகங்கை, தேவகோட்டை போன்று மாநிலம் முழுவதும் பல நகராட்சிகள் கிரேடு '2' ல் நீக்கப்பட்டுள்ளன.இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் வீட்டுவாடகைப்படி 3,200 ல் இருந்து 2,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இதனை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்
நீட் தேர்வு பயிற்சி மையங்கள்: ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?
தமிழக மாணவர்களின் நலனுக்காக அரசு தொடங்கியுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஏஎஸ் தேர்வுக்கு சிறந்த பயிற்சி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவை) தேர்வுக்கு ஏழை மாணவர்களைத் தயார் செய்வதற்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையம் மிகச் சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது. சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள இம்மையத்தில் ஆண்டுக்கு 225 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 2,250 வீதம் தமிழக அரசு வழங்குகிறது. இங்கு பயில்பவர்களில் ஆண்டுக்கு 40 முதல் 50 பேர் வரை குடிமைப் பணிகள் தேர்வில் தகுதி பெற்று பணி வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த மையம் அரசு சார்பில் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்.
இப்போது தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் நீட் தேர்வுகான பயிற்சி மையமும் முழுக்க முழுக்க அரசு சார்பில் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இது குறித்து தமிழக அரசு குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்) பயிற்சி மைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறியது: மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் நோக்கத்தில், பயிற்சி மையங்களைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி மையத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.kaninikkalvi.blogspot.in
நீண்ட காலத்துக்கு...
தனியார் பயிற்சி மையம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது நீண்ட காலத்துக்குப் பலன் தராது. மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் முதன்மைத் தேர்வு வரை ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் நிலையான நேர்முகத் தேர்வுக்கு மட்டுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.kaninikkalvi.blogspot.in
தனியாரைக் காட்டிலும்...
நீட் போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்களைத் தயார் செய்வது என்பது, குடிமைப் பணிகளுக்கு அளிக்கப்படுவது போன்று கடினமானது அல்ல. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பாடத் திட்டங்களில்தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்பதால், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு எளிதாகப் பயிற்சி அளித்துவிட முடியும். வேகமாக விடையளிக்கும் பயிற்சி மட்டுமே கூடுதலாகக் கற்றுத்தர வேண்டியிருக்கும்.
எனவே, அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலத்து பயனுள்ளதாக அமையும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற ஆலோசகர் சிவராமன், தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பயிற்சி அளிப்பது, அந்த நிறுவனம் பிரபலமடையவே பயன்படும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பயிற்சி மையங்கள் ஈர்ப்பதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, இப்பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தலைசிறந்த கல்வியாளர்களையும் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும் அரசு பயன்படுத்த வேண்டும் என்றார்.
வியாழன், 16 நவம்பர், 2017
1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்:
உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது
தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.
அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.
காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.
அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.
இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.
ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.
மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,
பெற்றோர் ஆசிரியர் உறவு:
அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.
வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.
ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.
சில பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து அக்கறையுடன் செயல்படவேண்டும்.
குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்
ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.
தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.
தனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.
அதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.
எனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.
மாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.
ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.
மேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.
சிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.
ஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.
பல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
ஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.
கற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.
தனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
அரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.
✍
திருமதி சரண்யா வருங்கால கணினி ஆசிரியர் (புதுக்கோட்டை).,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
Fixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017
☀ஊதியக்குழுவிற்குப் பின்னர் ஆசிரியரின் புதிய ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அலுவலகத்திற்கு உரியதே!
☀அலுவலகத்தில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான படிவம் (Fixation Form) ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
☀அவ்வாறு அலுவலகம் நிர்ணயம் செய்ததைவிட கூடுதல் பணப்பலன் கிடைக்க வழிவகை இருக்கும் எனில்,
☀புதிதாக எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்தால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தி,
☀ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட தேதியில் இருந்து, 3 மாதங்களுக்குள் விருப்பப் படிவம் (Option Form) வழங்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
☀இதன்படி விருப்பம் தெரிவிக்கும் நபர் ஊதியக்குழு அரசாணை 303 வெளியிடப்பட்ட 11.10.2017-ல் இருந்து 3 மாதங்களுக்குள் அதாவது, 10.1.2018-ற்குள் தங்களின் விருப்பத்தினைத் தெரிவிக்கலாம்.
எவ்வாறு எனில், உதாரணமாக
☀பணி உயர்வு பெறும் நபர், தற்போது ஊதியம் நிர்ணயம் செய்வதைவிட அடுத்த வளரூதியம் / தேர்வுநிலை / சிறப்புநிலைக்குப் பின்னர் ஊதிய நிர்ணயம் செய்வதால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் எனில்,
☀"அதுவரை நான் பழைய ஊதியத்திலேயே தொடர்ந்து கொள்கிறேன்" என விருப்பம் தெரிவிக்க ஊழியர் நல அரசாணைகளில் வழிவகை உண்டு.
அல்லது,
☀"புதிய ஊதிய நிர்ணயத்தால் எனக்குப் பலனேதுமில்லை. எனவே, ஊதியக்குழுவிற்கு முந்தைய எனது ஊதியத்துடன் இருக்க விரும்புகிறேன்" என்றும் விருப்பப் படிவம் தெரிவிக்கலாம். (இவர்களுக்கு என தனி அகவிலைப்படியானது பழைய ஊதியக்குழுவின் தொடர்ச்சியாகவே வழங்கப்பட்டு வருகிறது)
☀எனவே, ஊதிய நிர்ணயம் செய்த பின்னர் அதனடிப்படையில் விருப்பம் தெரிவிப்பது என்பது வழக்கமான நடைமுறையே!
☀இந்நடைமுறையை முன்வைத்து சிலர், தங்களின் சுய இலாபத்திற்காக, இடைநிலை ஆசிரியர்களை 2009, TET என்று பிளவுக்குட்படுத்தி, ஜாக்டோ-ஜியோ-வையும் முறையாக அணுகாது, கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, தனித்து வழக்காடுவோம் என, வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை நயவஞ்சகத்தோடு கூட்டம் சேர்ப்பித்து குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
☀இ.நி.ஆ ஊதியப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருப்பின், இவர்கள் ஜாக்டோ-ஜியோ மீது தொடுக்கப்பட்ட வழக்கில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வழக்கினை செறிவூட்டியிருக்க வேண்டும்.
☀ஆனால் இவர்களின் எண்ணம் இ.நி. ஆசிரியர்களுக்கு 8370-2800 மட்டும் போதும் என்பதே. ஏனெனில் இதனைக் கூறினால் தான் இ.நி. ஆசிரியர்களைப் பிளவுக்குட்படுத்தித் தாங்கள் வளர வழியேற்படும் என சூது செய்து வருகின்றனர்.
☀தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துவதோ, ரூ.9300-4200. இது நாம் முன்னர் பெற்று வந்ததில் முறைகேடாக 6-வது ஊதியக்குழுவால் பறிக்கப்பட்டதே.
☀மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு (ஊதியக்கட்டு-2) ரூ.9300-4200 தர ஊதியம். ஆனால் 1.6.2009 அன்று அன்றைய திமுக அரசால் வெளியிடப்பட்ட ஆறாவது ஊதியக்குழுவில் (ஊதியக்கட்டு-1) ரூ.5200-2800 தர ஊதியம் என அறிவிக்கப்பட்டது.
☀5.6.2009 அன்று கொடைக்கானலில் கூடிய மாநிலச் செயற்குழு இதைக் கண்டித்து, மத்திய அரசு போல் ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 6.6.2009 அன்று சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
☀அன்றிலிருந்து தனிச்சங்க நடவடிக்கையாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதோடு, டிட்டோஜாக், ஜாக்டோ என கூட்டியக்கங்களின் மூலமும் தொடர்ந்துபோராடி இன்று ஜாக்டோ-ஜியோ என்ற பதாகையின் கீழ் போராடி வருகிறது, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
☀போராட்ட காலத்தில் ஜாக்டோ-ஜியோ மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாலேயே, அடத்த கட்ட இயக்க நடவடிக்கை தாமதப்பட்டு வருகிறது.
☀இருந்தும், நம்மீது போடப்பட்ட வீணான வழக்கினை நமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து களத்தில் உள்ளது என்பதற்கு ஊதியக்குழுவை அறிவிக்க வைத்த நீதிமன்றத் தீர்ப்பே சான்று.
☀தற்போது, நீதிமன்ற நடைமுறைகளால் அடுத்தகட்ட விசாரணை தாமதமானாலும் அதனூடாய் இ.நி. ஆசிரியர் ஊதிய முரண் தொடர்பான மனு (Affidavit) தயார்செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
☀இந்நிலையில், நமது தோழர்கள் சமூக வலைதளங்களில் உலாவும், "Fixation Return வாங்கலேனா சம்பளம் கூடாமலே போய்விடும்" என்ற வீணான தர்க்கமற்ற பதற்றச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும்,
☀நமது இலக்கு பறிக்கப்பட்ட ரூ.4200 தரவூதியத்தினை மீட்டு ஊதியக்கட்டு 2-ல் மீண்டும் இடம்பிடிப்பதே என்றும்,
☀ரூ.9300-4200 நிலையில் வைத்து ஊதிய நிர்ணயம் செய்வதே புதிய ஊதியக்குழுவிலும் எதிர்வரும் காலங்களிலும் நிரந்தரப் பயனை இடைநிலை ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தரும் என்றும்,
☀அதற்கான இயக்க நடவடிக்கைகள் ஜாக்டோ-ஜியோ வழக்கின் விசாரணையிலும், அதனைத் தொடர்ந்து களப்போராட்டத்திலும் இருக்கும் என்றும், தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
☀மேலும், இன்று (15.11.2017) சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில்,
⚡24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில்,
⚡மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்⚡
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
☀அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
_தோழமையுடன்,_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:
மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன.
செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்
எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம்
எம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், 'நபார்டு' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.
ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.
25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை.
ஒப்பந்ததாரரும், 'பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாது' என, வெளிப்படையாகவே கூறுகிறார்.
நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., - எம்.எல்.ஏ., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை.
இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'
மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 'சட்ட சேவை பெட்டி' திறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி, கயல்விழி திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், ''தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் பள்ளியில், சட்ட சேவை பெட்டி துவக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
மேலும், சட்ட உதவிகளால் மக்கள் அடையும் நன்மைகள், பொதுமக்களுக்கான சட்டப் பணிகளில், மாணவியர் எப்படி உதவ முடியும் என்பது குறித்தும், நீதிபதி, கயல்விழி விளக்கினார்.
அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.
இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.
ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.
மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,
பெற்றோர் ஆசிரியர் உறவு:
அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.
வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.
ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.
சில பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து அக்கறையுடன் செயல்படவேண்டும்.
குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்
ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.
தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.
தனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.
அதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.
எனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.
மாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.
ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.
மேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.
சிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.
ஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.
பல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
ஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.
கற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.
தனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
அரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.
✍
திருமதி சரண்யா வருங்கால கணினி ஆசிரியர் (புதுக்கோட்டை).,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - தமிழக அரசிற்கு உத்தரவு!!!
2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி SSTA அமைப்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றி செய்தி பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்களில் தற்போது வெளிவந்திருக்கின்றன. ஒரு சில சேனல்களில் சில தவறுகளோடு செய்திகள் வந்ததை மாநில ஒருங்கிணைப்பாளர் அந்தந்த தொலைக்காட்சியின் பொறுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதால் அந்த பிழைகளை சரிசெய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள்
அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர்,
என மொத்தம் 9,351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) நடத்துவதற்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கான கல்வி மற்றும் பிற தகுதிகள் வருமாறு:-பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில் நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க டிசம்பர் 13-ந்தேதி கடைசி நாள். தேர்வு வருகிற 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடை பெறுகிறது. மாவட்ட மற்றும் தாலுகாக்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பணியாளர் தேர்வாணைய இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தரப்பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்யவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு...
திண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 9 ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை வளர்க்க புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு பள்ளியில் இருந்து 100 மாணவர்கள் ஒருநாள் கல்லுாரிக்கு சென்று அங்குள்ள நுாலகம், ஆய்வகம், கம்ப்யூட்டர் லேப் ஆகியவற்றை பார்வையிடுவர்.அங்குள்ள பேராசிரியர்கள் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு பாடத்தை நடத்துவார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்து ஆராய்ச்சிக்கு துாண்டுதலாக அமையும். இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இவ்வகையில், ஒரு பள்ளிக்கு 100 பேர் வீதம் 10 பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் இன்று (15ம் தேதி) கல்லுாரிகளுக்குச் செல்கின்றனர்.

எந்தெந்த பள்ளிகள்ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காந்திகிராம பல்கலைக்கும், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் எஸ்,.எஸ்.எம். பொறியியல் கல்லுாரிக்கும், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.எஸ்.என்.ஏ.கல்லுாரிக்கும், கோமணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லுாரிக்கும், இ.ஆவாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வத்தலக்குண்டு பாலிடெக்னிக்கிற்கும் செல்கின்றனர்.குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரிக்கும், தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன கலையம்புத்துார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பழநி சுப்பிரமணியம் பொறியியல் கல்லுாரிக்கும், வில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கும் செல்கின்றனர்.
மாணவர்களுக்கு அழைத்து செல்லும் போக்குவரத்து செல்வு,சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்,. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா பயஸ் செய்து வருகின்றனர்.
நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?
பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பிளஸ்2 படிக்கின்றனர். இவர்களில், நான்கு லட்சம் பேர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள், பிளஸ் 2க்கு பின், மருத்துவம் படிக்க, நீட் நுழைவு தேர்விலும், தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிக்க, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், நீட் தேர்வு எழுத, சரியான பயிற்சி இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீட் உட்பட, மத்திய அரசின் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்காக, மாணவர்கள், சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தங்கள் பள்ளி அல்லாமல், வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக, தனியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: தற்போது வீட்டிலிருந்து, பள்ளி இருக்கும் இடம் வரை மட்டுமே, பஸ் பாஸ் உள்ளது. ஆனால், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையம், வேறு இடத்தில் இருப்பதால், இந்த பாசை பயன்படுத்தி, அங்கு செல்ல முடியாது. சாதாரண கூலி தொழிலாளரான பெற்றோரால், பஸ் டிக்கெட்டுக்கு பணம் தர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-மாணவ-மாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின்எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள். மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது.

மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம்.தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர்.
அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம்.32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குஇலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.விழாவில் அவர் குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
மேலும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், நூலகங்களுக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களுக்கும், நூலகங்களுக்கு அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கும் விருது வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, ஜெயவர்த்தன் எம்.பி., விருகை ரவி எம்.எல்.ஏ., நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்.
JACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு...
இன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் CPS களைதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற்று 6 முக்கிய தீர்மானங்களும், போராட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளது..
💪போராட்ட முடிவுகள்.
👉18.11.2017 ஜாக்டோ ஜியோ கிராப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
👉 02.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்
👉 07.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம்
👉 06.01.2018 சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)