சனி, 28 அக்டோபர், 2017
மாணவர்களின ஆங்கில கையெழுத்தை அழகாக்கும் அருமையாக்கும் Android Application|Cursive Writing Wizard
மாணவர்களின் ஆங்கில கையெழுத்தை மிக அழகாக மாற்ற உதவும் Android Application தான் Cursive writing wizard....
இந்த application மாணவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும், அழகாகவும் கவரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த application மூலம் மாணவர்கள் Capital மற்றும் Small letters களை மிக எளிமையாக Cursive Handriting முறையில் கற்றுக் கொள்வார்கள்...
மாணவர்கள் விரல்களால் எழுதுவதற்கு ஏற்ற வகையில் Animation மற்றும் 40 வகையான colors இருக்கிறது...
இதன் மூலம் மாணவர்கள் ஆங்கில எழுத்துக்களையும் (letters and Words)
மிக எளிமையாக மிக அழகாக எழுத கற்றுக்கொள்வார்கள்.
மிக எளிமையாக மிக அழகாக எழுத கற்றுக்கொள்வார்கள்.
இது ஒரு Paid அண்ட்ராய்டு அப்பிளிக்கேஷன்..இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை Click செய்யவும்.....
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு
புதுடில்லி: பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், பள்ளிக்கல்வி சிறப்பு செயலர், ரீனா ராய் கூறியதாவது: ஜார்க்கண்ட் சிறுமி, பட்டினியால் இறந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. அந்த மாணவி இறப்பதற்கு, சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களிலும், மதிய உணவு அளிக்கப்பட்டிருந்தால், அவருடைய மரணத்தை தடுத்திருக்கலாம். அதனால், பள்ளி விடுமுறை காலத்தின் போதும், மதிய உணவு வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளார்.
கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'
'கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என, கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டி துவக்க விழா, ஈரோடு மாவட்டம், கோபி அருகே, தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: கல்வி ஒன்றால் மட்டுமே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். 'நீட்' தேர்வில் தமிழகத்துக்குவிதிவிலக்கு வேண்டும் என்பது தான், எங்கள் கொள்கை. அதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, என்ன வரப்போகிறது என, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், மாணாக்கர்களை தயார்படுத்த, இந்த அரசு தயாராகி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: கல்வி ஒன்றால் மட்டுமே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். 'நீட்' தேர்வில் தமிழகத்துக்குவிதிவிலக்கு வேண்டும் என்பது தான், எங்கள் கொள்கை. அதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, என்ன வரப்போகிறது என, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், மாணாக்கர்களை தயார்படுத்த, இந்த அரசு தயாராகி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்,
''தமிழ் வழி கல்வி கற்றோருக்கு, தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
''தமிழ் வழி கல்வி கற்றோருக்கு, தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.
முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்
பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான ஊதியமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500 Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200 தொடங்கி 65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவே Level 4500லும் உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும் இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போன்று, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தால் அவர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 2.57 பெருக்கல் காரணியைக் கொண்டு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அளிக்கப்படும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி
இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
கண்காட்சி தலைப்புகள்
”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
5. கணித மாதிரியாக்கம்
இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.
"The Green India" ''Smart City'' ''Digital India'' ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.
🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
(கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)
மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க - ரூ.11000
🔆 பரிசுகள் விபரம்
பரிசுகள் - தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ. 400
இரண்டாம் பரிசு - ரூ. 300
மூன்றாம் பரிசு - ரூ. 200
பரிசுகள் - உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600
இரண்டாம் பரிசு- ரூ.500
மூன்றாம் பரிசு - ரூ.400
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
பேணர் மற்றும் சான்றிதழ் செலவு
(தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு) - ரூ. 500
கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500
மொத்தம் - ரூ. 16000/-
இத் தொகையினை கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.
🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
1. தொடக்கப் பள்ளி - ( I to V ) - 2 மாதிரிகள்
2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்
( VI to VIII) - 2 மாதிரிகள்]
3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - () - 2 மாதிரிகள்
வெள்ளி, 27 அக்டோபர், 2017
அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்துவைக்க வந்த ஒரு சப்-கலெக்டர் - அசத்திய அரசுப்பள்ளி
கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க, ஒரு சப்-கலெக்டர் வந்தார் எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்தப் பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்?
அரசுப் பள்ளிவிழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் இருக்கும் சிறிய ஊர்தான் பள்ளிகுளம். இங்கே இருக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் ஆசிரியர் தமிழரசன், ''மற்ற அரசுப் பள்ளிகள்போலவே சிறப்பான கல்வியை மாணவர்களுக்குத் தருகிறோம். கூடுதலாக, மாணவர்களின் நலன்சார்ந்த விஷயங்களிலும் அக்கறை காட்டுகிறோம். தமிழ்நாடு அரசு தரும் விலையில்லா காலணிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அளவுகளில் மட்டும் மாறுதல் இருக்கும். இதனால், சில மாணவர்கள் தங்கள் காலணிக்குப் பதில் வேறு ஒருவருடையதை அணிந்து சென்றுவிடுகிறார்கள்.
இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வண்ணம் கொடுத்தோம். பிறகு, வருகைப் பதிவேட்டில் உள்ளவாறு ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் எண் கொடுத்தோம். உதாரணமாக, இரண்டாம் வகுப்புக்கு நீல வண்ணம் கொடுத்து, அதில் படிக்கும் குணா என்ற மாணவனுக்கு 8 என்ற எண்ணையும் தந்திருக்கிறோம். அவன் காலணியில் குதிகால் பதியும் இடத்துக்கு மேல் பகுதியில், நீல வண்ணத்தில் 8 என எழுதிவிடுவோம். அந்தக் காலணி எங்கிருந்தாலும் இரண்டாம் வகுப்பு குணாவுடையது எனத் தெரிந்துவிடும். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு, 'டிஸைன் ஃபார் சேஞ்ச்' விருது கிடைத்தது'' என ஆச்சர்யப்படுத்திவிட்டுத் தொடர்கிறார்...
“எங்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. பள்ளிக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உடனே தேடிவந்து பெற்றோர் செய்துகொடுக்கிறார்கள். பெற்றோர் நலன்மீதும் பள்ளி ஆசிரியர்களான நாங்களும் அக்கறை செலுத்துகிறோம். இது கிராமம் என்பதால், பலரது வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. அனைவரின் வீடுகளிலும் கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்தி, மாதம் ஒருமுறை விழிப்புஉணர்வு பரப்புரைக்குச் செல்கிறோம்.
'கழிப்பறை கட்டுங்க; கால் பவுனு வெல்லுங்க' என்கிற திட்டத்துடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எந்தெந்த வீடுகளில் கழிப்பறை கட்டப்படுகிறதோ அவர்களிலிருந்து குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டு கால் பவுன் தங்கம் வழங்கப்போகிறோம். இந்தத் திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்கள் வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசுப் பள்ளி
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் கழிப்பறை வேண்டும் அல்லவா? இந்த நேரத்தில்தான், தமிழ்நாடு அரசின் மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளுக்கு அளிக்கும் 'குழந்தை நேயக் கழிவறை' திட்டம் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. அதற்கான முப்பதாயிரம் ரூபாயை, தலைமை ஆசிரியர் தனகீர்த்தி என்னிடம் கொடுத்துப் பொறுப்பை அளித்தார்.
இந்தத் தொகையில் ஆண், பெண் கழிப்பறைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் சீர்செய்ய முடியும். சென்ற ஆண்டில், ஆண்கள் கழிவறையை ஓரளவு சீர்செய்திருந்ததால், மாணவிகள் கழிவறையைச் சீரமைக்க முடிவுசெய்தோம். அந்தக் கழிவறை கட்டடத்துக்கு மேற்கூரையும் இல்லை. உடனடியாக வேலையில் இறங்கினோம். உள்ளூர் கொத்தனார்களைகொண்டே நார்மல், வெஸ்ட்ரன் டைப் என இரண்டு வகைக் கழிப்பறைகளைக் கட்டினோம். அழகான, உறுதியான மேற்கூரை அமைத்தோம். விடுமுறை நாள்களிலும், தீபாவளி அன்றும் வேலை நடந்தது. இறுதியாக வண்ணம் பூசும் வேலை. அதை நாமே செய்தால் செலவு குறையுமே எனப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் ஓவியங்களைத் தீட்டினேன். ஏற்கெனவே ஸ்மார்ட் கிளாஸ் அறையில் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். மாணவர்கள் வந்து பார்த்துவிட்டு, தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள். குறைகள் இருந்தால் அடுத்த ஓவியத்தில் திருத்திக்கொள்வேன்.
அரசு தந்த முப்பதாயிரம் ரூபாயைத் தாண்டி ஐம்பதாயிரத்தும் அதிகமானது. பள்ளிக்கூடத்தின் சேமிப்பில் இருந்த பத்தாயிரம், சக ஆசிரியர்களின் உதவியால் இதைச் சமாளித்துக் கழிவறையை நிறைவு செய்தோம். இந்த விஷயத்தையெல்லாம் சொல்லி, மாவட்ட சப் கலெக்ட்டர் எஸ்.சி.மெர்சி ரம்யா மேடத்தைச் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க வரமுடியுமா எனக் கேட்டோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்து வந்தார். 'மற்ற பள்ளிகளுக்கு முன்மாதியான செயலைச் செய்திருக்கிறீர்கள்' எனப் பாராட்டினார். தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் என அனைவரின் ஒருங்கிணைப்பால் இது சாத்தியமானது" என்றார் தமிழரசன்.
இதுபோன்ற அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள், பள்ளிகளின் எண்ணிக்கை பெருகட்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி
இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 26 அக்டோபர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)