>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி பூஜை... செய்வது எப்படி?

வ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி தினத்தைஸ்ரீவிநாயக சதுர்த்தியாக வழிபடுகிறோம். விநாயக சதுர்த்தி .


எளிய முறையில் வீட்டில் பூஜை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரைவாங்க வேண்டும். முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப்புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல்பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனிஇலை போட்டு பச்சரிசியைநிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்துபூஜிக்கலாம். ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோகூடாது.
மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்கவேண்டும். பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூடவேண்டும். அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து,வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்திபூஜிப்பது சிறப்பானது.

மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறிபிரார்த்தனை செய்ய வேண்டும்.
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||


உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர்சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார்என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரியபிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும்எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள்புரியவேண்டும்.

அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்டமந்திரத்தை 108 முறை கூறி 

அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது.. ஓம் கம் கணபதயே நமஹ |

 மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை)புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம் பருத்தி,வெண்தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும். மேலே சொன்னமந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

என்ன நைவேத்தியம்?
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம்போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்குவைக்கவேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம்,உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது,இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்துநைவேத்தியம் செய்யவேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டிவிநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. பூஜை முடிந்ததும்அவரவர் சக்திக்கேற்ப பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து ஒரு வேஷ்டி (4முழம்) கொடுத்து, தட்சணை அளிப்பது குடும்பத்துக்கு நலம் தரும்.
 களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டுவிட்டுப் பின்புஓடும் நீரில் விட்டுவிடவேண்டும். முடியாதவர்கள் கிணறு, ஏரி,கடற்கரையில் விடலாம்.
கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத்தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே,பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்போது கொழுக்கட்டை படைக்கவேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டை படைக்கவேண்டும் என்றுசாஸ்திரம் கூறுகிறது.

BREAKING NEWS : பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

4 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 21ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை



பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.

இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.

சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.


பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மை செயலர்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்து வந்தார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்கும் இடையில் நீண்ட நாள்களாக பனிப்போர் நிலவி வருவதாகக் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது.  இதனால் பள்ளிக் கல்வித்துறைக்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பள்ளிக் கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலராக பிரதீப் யாதவ்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கூடுதலாக முதன்மை  செயலர் பதவியை உருவாக்கி அந்த பொறுப்புக்கு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன், அவருடைய  பொறுப்பில் நீடிப்பார் என்றும், பிரதீப் யாதவுக்கு கீழ், உதயச்சந்திரன் பணியாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறைக்கு இரண்டு செயலர் என்ற விநோத நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்து வந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன....

பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.
'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதில் நடப்பாண்டு முதல் பிளஸ் 2வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் என்பதை பிரித்து, பிளஸ் 1, பிளஸ் 2வில் தலா 100 மதிப்பெண் என்ற அடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டு களாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2க்கான பேட்டன், மாதிரி வினா,விடையளித்தல் முறை போன்றவை முற்றிலும் மாறி உள்ளதாகவும் பிற மாற்றம் குறித்தும் ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் உட்பட 30 பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ்கிருதம் பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.
முன்பு மொழிப்பாடத்தில் 1 மார்க் வினா இருக்காது. தற்போது புதிதாக சேர்த்துள்ளனர். பிற பாடத்துக்கு 4 கொடுத்து, 3 விடை எழுத
சொல்வார்கள். தற்போது 4ஐயும் எழுத வேண்டும்.10 மார்க் நெடுவினா எழுதுவர். அதை முற்றிலும் நீக்கி விட்டு,5 மதிப்பெண் வினாவாக்கி,எண்ணிக்கையை ஒவ்வொரு பாடத்துக்கும் அதிகரித்து ள்ளனர்.
முன்பு சில பாடங்கள் அல்லது சில பகுதியை விடு தல் செய்வார்கள். இப்போதுள்ள வினாப்படி, முழு புத்தகத்தையும் படித்தே ஆக வேண்டும். இவ் வினா முறை, போட்டித்தேர்வுக்கானது போல உள்ளது.
முன்பு மொழி பாடத்தில், எந்த மதிப்பெண் வினா விலும் கட்டாயமாக, குறிப்பிட்ட வினாவை எழுத வேண்டும் என இருக்காது. ஆனால் இயற்பியல், வேதியியல் போன்ற பாடத்தில் கட்டாயம் எழுத வேண்டும் என்ற வினா இருந்தது. குறிப்பிட்ட பாடத் தில் இருந்துகட்டாயமாக வினா வரும் எனவும் இருந்தது.
தற்போது, குறிப்பிட்ட பாடத்தில் இருந்து வினா வரும் என குறிப்பிடாமல், அனைத்து பிரிவிலும் குறிப்பிட்ட வினாவை கட்டாயம் எழுத வேண்டும் என, வினாத்தாளில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்பு லெட்டர் ரைட்டிங், கட்டுரை போன்றவை 10 மதிப்பெண் வினாவாக இருந்தது. தற்போது 5 மதிப் பெண் வினாவாகிவிட்டது. இதனால் 5, 2, 1 மதிப்பெண் வினாக்களில் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால், மாணவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்காது. தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண் என்பதை 100 ஆக குறைத்து, தேர்வு காலம் 3 மணி நேரம் என்பதை 2:30 மணி நேரமாக குறைத்துள்ளனர்.
தற்போது 7 - 5 மதிப்பெண் பெரிய வினா 7 - 3மதிப் பெண் நடுத்தர வினா, 7 - 2 மதிப்பெண் வினா, 20 - 1 மதிப்பெண் வினா என மொழிப்பாடத்தில் வருவ தால், 2:30 மணி நேரத்துக்குள் எழுத முடியாது.
இதுவரை இல்லாத வகையில் நீதி, பிரச்னை தொடர்பான வினாவை கேட்டு, அதற்கான விடையை மாணவரே 'தீர்வு' சொல்வது போல சில வினாக்கள் வருகின்றன. அவ்வினாவுக்கு
மாணவரின் பதிலுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும் என உள்ளது.
தமிழில் குறிப்பிட்ட பகுதி, ஹிந்தி உள்ளிட்ட பல பாடங்களுக்கான வினாக்கள் டைப் அல்லது கம்ப்யூட்டரில் பிரின்ட் செய்யப்படா மல், அவசர கோலத்தில் கையால் எழுதி வெளியிட்டுள்ளனர். அதில் பல அடித்தல் திருத்தங்களும் உள்ளன.
கடந்த ஜூன் 7 ல் பள்ளி திறக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, கடந்தாண்டு மாதிரியை பின்பற்றிவிட்டு, தற்போது புதிய மாதிரி வினா முற்றிலும் மாறுபட்டுள்ளதால், முதலில் இருந்து பாடத்தையும், வினாக்களை யும் மாணவர்களுக்கு விளக்க வேண்டி உள்ளது.
வினா வழங்கப்பட்டாலும், விடை எவ்வாறு இருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும், எந்தெந்த குறைகளுக்கு எவ்வளவு மதிப்பெண் குறைக்க வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் இல்லாததால், புதிய வினாவுக்கு ஏற்ப, விடைகளை ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு விதமாக சொல்லித்தரவும், மாணவர்கள் பதிவு செய்யும் நிலை ஏற்படும். இதனால், மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல் எழும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை,
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப்பதை தொடர்ந்து, புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது.
இதன்மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

மொபைல் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும்.. மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இணையாக 
நிறுவனங்கள் மத்தியிலான போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. அதுவும் ஜியோ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இந்தப் போட்டி தொடர்ந்து நீட்டித்தால் 2018ஆம் ஆண்டில் மொபைவ் கட்டணங்களின் அளவு 25-30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் நீங்கள் அதிக இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் கொண்டாட்டம் தான்.
கட்டணங்களின் மாற்றம்...
ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குப் பின்பு சந்தையில் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்கள் சுமார் 25-32 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதுவும் இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துபவர்கள் மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 60-70 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இவை அனைத்தும் ஜியோவின் இலவச சேவை அறிமுகத்திற்குன் பின்னானது. ஜியோவின் சேவை சில இடங்களில் மோசமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்புகள் சந்தையில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
திடீர் விலை குறைப்பு
இலவச சேவை, குறைந்த விலையில் 4ஜி டேட்டா என ஜியோவின் சேவைகள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை அதிகளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் கட்டணங்களை அதிகளவில் குறைந்தது.
இக்கட்டண குறைப்பில் அதிகளவில் ஈடுபட்டது ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தான். ஐடியா வோடபோன் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் உள்ளதால் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் திட்டத்தில் எவ்விதமான அதிகளவிலான கட்டண குறைப்பை அறிவிக்கவில்லை.

விலை போர்
ஜியோவின் அடுத்தடுத்த சேவை அறிமுகத்திற்கு ஏற்ப பிற டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைத்து விலை போரை துவக்கிவைத்தது.
இதனால் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் அதிகளவிலான வருவாய் மற்றும் லாப இழப்புகளைச் சந்தித்தது
தொடரும் ஜியோ ஆதிக்கம்..
இதனைத் தொடர்ந்து ஜியோ தொடர்ந்து புதுப்புது திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் சேர்த்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோ போனுக்கான ப்ரீபுக்கிங் இன்று துவங்கியுள்ளது.
இதன் மூலம் டெலிகாம் சந்தையில் விலை போர் குறையப்போவதில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது
கட்டணம் குறையும்
இந்திய டெலிகாம் சந்தையில் விலை போர் தொடரும் நிலையில், 2018ஆம் ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் சராசரியாக மொபைல் சேவைக்காகச் செலவிடும் தொகை 25-32 சதவீதம் வரை குறையும் எனப் பல முன்னணி சந்தை ஆய்வு நிறுவனங்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
மக்கள்
இதுநாள் வரை ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த நிலையில், ஜியோவின் அறிமுகத்தின் மூலம் கட்டணங்கள் குறைந்தது மக்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் ஜியோ தனது சேவையின் தரத்தை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்நிறுவனத்தைத் தோல்வியில் தள்ளப்படும்

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை....

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்த நிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.
இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

ELCOM English, ARIAL Maths,STEM Science & Project Training - (RMSA)....

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்தல் குறித்த சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! !

No Work, No Pay - Treasury Officer Circular..

EMIS NEWS: EMIS வலைதளம் ஆகஸ்ட் 29-க்கு மேல் செயல்படும்!!

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.
 கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19 - 24 வரை நடந்தது.
மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.
மாணவர்களின் பெயர் பட்டியல், பல்லைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; எஸ்.எம்.எஸ்., வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலையின் கீழ் உள்ள, அனைத்து கல்லுாரிகளிலும், வரும், 31 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.

நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து

'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
      நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 
கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங் நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2 வகுப்பு கையாளப்பட்டது. 
இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.
வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ., அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

DSE - எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து - இயக்குனர் உத்தரவு.

DEE PROCEEDINGS-5 DAYS INSERVICE TRAINING PROGRAMME FOR UPPER PRIMARY TEACHERS...

EMIS தற்போதைய தகவல்..

அனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே கல்வித் துறையின் முறையாள அறிவிப்பு வந்த பிறகு EMIS பணியினை தொடங்கவும்.

அரசாணை எண் 175 பள்ளிக்கல்வி நாள்:20.07.2017- தனியார் சுயநிதிப்பள்ளிகள்-குறைந்தபட்ச நிலத்தேவை-வல்லுனர் குழு அறிக்கை செயல்படுத்த ஆணை





DEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது!!!



DSE PROCEEDINGS-தொடர்மழை முன்னெச்சரிக்கை- மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அறிவுரை வழங்குதல் சார்பு...




'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்...

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.

இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி!!

Image result for visam tamilபோலீசார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் 
தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார்.


இதனை அறியாத தோழி அந்த தண்ணீரை குடித்துள்ளார். அதன்பின் அவருக்கு வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் தோழியை அனுமதித்தனர். தற்பொழுது அவரது நிலைமை சீராக உள்ளது.

இதுபற்றி பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து நடந்த விசாரணையில், மாணவி தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து அதனை மற்றொரு மாணவியின் பையில் மறைத்து வைத்த காட்சி பள்ளி கூட அறையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், குற்றவாளியான மாணவி தனது வீட்டில் வைத்து கொசு விரட்டும் மருந்தினை உட்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை...

750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை

GO(1D) No.500 Dt: August 22, 2017 -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை 

என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


நாமக்கல்லினைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடாத திட்டத்தில்மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்ப்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?

அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின் படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?

நீட் தெரிவினைப்பொறுத்த வரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும்.

மாநில பாடத் திட்டத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மானவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் விவகாரத்தை தமிழக அரசின்முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன்  தெரிவித்தார்      

Tnpsc Department Exam Results May - 2017 updated (august - 21)

MBBS / BDS Courses 2017 - 18 | Provisional Selected Student List - Government/Management Quota

பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது ஏன்?

நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட்  தேர்வை நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி 1184 மதிப்பெண்  பெற்றுள்ளேன். எனது மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் 199.25 ஆகும். ஆனால்  நீட் தேர்வில் 154  மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளேன். இதனால் எனக்கு  மருத்துவப் படிப்பில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது  மருத்துவப் படிப்பு கனவாகி விட்டது. 
நீட் தேர்வு விஷயத்தில் ஒரு நிலையான  உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான  நிலை தமிழக மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான  மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றிருந்தும் மருத்துப் படிப்பில் சேர  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்ணும்,  அதிக கட் ஆஃப் மதிப்பெண்ணும் எடுத்துள்ள என்னை மருத்துவ கலந்தாய்வுக்கு  அழைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  மாணவி கிருத்திகா தரப்பு வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து  மொத்தம் 83 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் வெறும் 5 சதவீதம்  மட்டுமே சிபிஎஸ்இ தரப்பு மாணவர்கள். 
மாநில பாடத்திட்டத்தில் படித்து பிளஸ் 2  தேர்வில் 200-க்கு 200 எடுத்தவர்கள் கூட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க  முடியாத கடினமான நிலையில் தமிழக மாணவர்கள் உள்ளனர். எனவே, தமிழக  மாணவர்களுக்கு உரிய இடத்தை தருமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த  வழக்கில் வக்கீல் வேல்முருகன் இடையிட்டு மனுவைத் தாக்கல் செய்து  வாதிடும்போது, நீட் தேர்வை சிபிஎஸ்இ தான் நடத்துகிறது. 
பெரும்பாலும்  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது  தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். சிபிஎஸ்இ தரப்பில் வக்கீல் வி.பி.ராமனும்  ஆஜராகி, நீட் தேர்வு தொடர்பான  எந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று  வாதிட்டார். 
அப்போது அவரிடம் நீதிபதி, கேள்வித்தாளை யார் தயார் செய்தது  என்று கேட்டார். அதற்கு வி.பி.ராமன் சிபிஎஸ்இதான், ஆனால், மாநிலப்  பாடத்திட்டமும் கேள்வித்தாளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது   என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன்,  மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு  முன்னோடியாக உள்ளது. 
ஆனால் நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலமாகவும்  தமிழகம்தான் உள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தன்னால் ஆன அனைத்து  முயற்சிகளையும் எடுத்துள்ளது. இதில் யாரையும் குறை சொல்லமுடியாது.  அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி  தீர்மானத்தையும் நிறைவேற்றின. 
ஜல்லிக்கட்டுக்குப் பிறகு நீட் தேர்வு  விஷயத்தில்தான் அனைத்து அரசியல்  கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன.  ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்றபோது, சிபிஎஸ்இயை இந்த  தேர்வை நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன். இந்த தேர்வை சிபிஎஸ்இ  நடத்தாமல், கேள்விகளை சிபிஎஸ்இ தயாரிக்காமல் நடுநிலையான ஒரு அமைப்பு  நடத்தியிருந்தால் இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டு இருக்காது. நீட்  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேநேரம்,  தமிழகத்திற்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்  உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதும் சந்தேகமே. எனவே இந்த வழக்கில்   விரிவான தீர்ப்பு நாளை பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார். வழக்கில்  இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் முன்னதாக வழக்கு நேற்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, ‘நீட்’  விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நிலையான முடிவையும் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே எடுக்கவில்லை. மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிற்பகலில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் டி.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆகஸ்ட் 24(வியாழக்கிழமை) முதல் 31-ம் தேதி வரை (25 மற்றும் 27-ம் தேதி விடுமுறை நீங்கலாக) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுதவும் (எச் வகையினர்), எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும் 1.10.2017 அன்று 16வயது மற்றும் 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக (எச்பி வகையினர்) தேர்வெழுதவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
சேவை மையங்களின் பட்டியலைத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. எச் வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். அதேபோல், எச்பி வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல், திறன் தேர்வுக்கு ரூ.2 ஆக மொத்தம் ரூ.187 செலுத்த வேண்டும். பார்வையற்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
செப்.25 தேர்வு தொடக்கம்;
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். ஒப்புகைச்சீட்டை தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வெழுத வேண்டும். பிளஸ் 2 துணைத்தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 10-ம் தேதி முடிவடையும்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.


ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை  உருவாக்க  தொடங்கிவிட்டது.
 ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ.  ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது ,  INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை  அறிமுகம் செய்துள்ளது.  அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான  முன்பதிவு  நாளை  முதல்  தொடங்குகிறது
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை  இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட  வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை  பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம்  தேதி  முதல் (நாளை ) முதல் முன்பதிவு  செய்யலாம் என  இஷா  அம்பானி  அவர்கள்  தன்  ட்விட்டர் பக்கத்தில்   தெரிவித்து  இருந்தார்.
எப்படி  முன்பதிவு செய்வது ?
ஜியோவின்  அதிகாரபூர்வ  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து ,  ஜியோவின் இலவச  போனை  பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ   ரூம்  சென்று ,  உங்கள் முன் பதிவை  உறுதி  செய்யலாம்  அல்லது  my jio app  மூலமாகவும்   முன்பதிவை செய்யலாம்  என்பது  குறிப்பிடத்தக்கது .

JACTTO - GEO அறிக்கை வெளியீடு !!!

செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!



அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை,
உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார். “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40% எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.