>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 10 ஜூலை, 2017

காட்டு யானைகள் நுழையும் கிராமத்தில் அசத்தும் அரசுப் பள்ளி: கோவை மாவட்டம் புதுக்காட்டில் நவீன வசதிகளுடன் தரமான கல்வி....

சலசலவென்ற சத்தத்துடன் ஓடும் பவானி ஆறு; கண்ணுக்கெட்டும் தூரத்தில் வானுயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி
மலைகள்; மலையடி வாரத்துக்கும், பவானி ஆற்றுக்கும் இடையே பசுமையான புல்வெளி; ஆற்றின் இன்னொரு கரையில் வாழை, கத்தரி, வெண்டை என செழுமையான வயல்களுடன் அமைந்துள்ளது புதுக்காடு கிராமம். இரவில் மட்டுமல்ல; பகலில்கூட காட்டு யானைகள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள் இந்த கிராம மக்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் பெத்திக்குட்டை அருகே உள்ளது புதுக்காடு. 600-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட குக்கிராமம். பவானி ஆற்றில் மீன் பிடிப்பதும், வாழை மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய் வதும்தான் மக்களின் பிரதான தொழில்.
இந்தக் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிதான் மிகத் தரமான கல்வியை அளிக்கும் முன் மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது. அருகே இருக்கும் தேரங்கிணறு, ஜெ.ஜெ.நகர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் பி.ராஜேஸ்வரி கூறியதாவது:
எங்களது பள்ளியில் 13 கம்ப்யூட்டர்களுடன் நவீன ஆய்வகம் உள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் வகுப்புகள் நடக்கின்றன. எங்கள் மாணவர்கள் கணக்குப் பாடத்தில் திறன் மிக்கவர்களாக உள்ளனர். கணக்கு பாடத்தில் மாணவர்கள் பெற்றிருக்கும் திறன்களை அவர்களே கம்ப்யூட்டர் உதவியோடு சுய மதிப்பீடு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணக்கை போட்டுப் பார்க்கும்போதும், அதில் செய்யும் பிழைகளை மாணவர்களே உணர்ந்து, பிழைகளை நீக்கி, அப்பாடத்தில் முழு திறனைப் பெற முடியும். இதனால், பாடப் புத்தகத்தில் உள்ள கணக்குகளை மிக எளிதாக செய்து முடிக்கின்றனர்.
எங்கள் பள்ளியில் தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே உள்ளன. எனினும் ஆங்கில மொழியிலும் அதிக திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டரில் கணக்கு பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுத்து வடிவிலும், குரல் வடிவிலும் வழங்கப்படுகிறது. இதனால், தொடர்ந்து கணக்குப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களிடம் இயல்பாகவே, ஆங்கில மொழி அறிவு மேம்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
கணக்கு பாடம் தவிர, கம்ப்யூட்டரில் செயல்வழி அடிப்படையில் ஆங்கி லத்தைப் பிழையின்றி வாசிக்கவும், எழுத வும் மாணவர்கள் சுயமாகக் கற்கின் றனர். அதேபோல, பல்வேறு அறிவியல் சோதனைகளை விளக்கும் வீடியோ காட்சிகளும் உள்ளன. இதனால் அறிவி யல் பாடத்தையும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ள்ளிக்கூடத்தில் நவீன வசதிகளை எவ்வாறு உருவாக்க முடிந்தது என்பது பற்றி ஆசிரியர் து.பிராங்கிளின் கூறியதாவது:
கடந்த 2014 நவம்பர் மாதம் இப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். இங்கு பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பல குழந்தைகள் பள்ளிக்கே வருவதில்லை. வந்தாலும், தொடர்ந்து படிப்பதில்லை. பல சிரமங்களைத் தாண்டி 8-ம் வகுப்பு முடிப்பவர்களும், தொடர்ந்து படிக்க வெளியூர் செல்ல வேண்டும் என்பதால் படிப்பை நிறுத்திவிடுவார்கள்.
புதுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆய்வகம் | படங்கள்:
ஜெ.மனோகரன்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் தீர்மானித்தோம். முதலில் பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக 2015-ல் எங்கள் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்து, கிராம மக்கள் அனைவரையும் பள்ளி வளாகத்தினுள் கொண்டு வந்தோம். உரியடி, வழுக்கு மரம், கபடி, கும்மி, கோலம் என ஏராளமான கிராமிய விளையாட்டுகளை நடத்தி, அதில் கிராமத்தினரைப் பங்கேற்கச் செய்தோம்.
அதன் பிறகு, ஊர் மக்கள் அடிக்கடி பள்ளிக்கு வரத் தொடங்கினர். தங்களது கிராமம் சார்பில் பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களது பங்களிப்புடன் பள்ளிக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி கிடைத்தது. அதைக் கொண்டு 11 கம்ப்யூட்டர்கள், எல்சிடி புரொஜக்டர் போன்றவற்றை வாங்கினோம். கம்ப்யூட்டர் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை ஆகியவற்றை உருவாக்கினோம்.
மாணவர்கள் கணிதப் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருளை சென்னையைச் சேர்ந்த ‘ஆல்டியுஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பும், ஆங்கில மொழித் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் மென்பொருளை ‘துளிர் லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனமும் எங்கள் பள்ளிக்கு இலவசமாக வழங்கின. இதனால் கணிதம், ஆங்கிலத்தில் எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் பெருமளவு மேம்பட்டுள்ளது.
வகுப்பறை நடவடிக்கைகள் மட்டுமின்றி, கள செயல்பாடுகளுக்கும் மாணவர்களை அடிக்கடி அழைத்துச் செல்கிறோம். பறவை இனங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் திட்டப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடு கின்றனர். WWF இந்தியா அமைப்பின் வழிகாட்டலில் வன விலங்குகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்யும் பணிகளில் மாணவர்கள் பங்கேற்கின் றனர். ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான முகாம் நடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் மேயும் ஆயிரக்கணக் கான மான்கள், நூற்றுக்கணக்கான யானைகள், காட்டெருமைகள் போன்ற வற்றை பவானி ஆற்றின் கரையில் இருந்து பைனாகுலர் மூலம் மாணவர்கள் நுட்பமாகப் பார்த்து, தகவல்களைப் பதிவு செய்வார்கள். இப்பணியின்போது அரியவகை மான்கள் உட்பட ஏராளமான வன விலங்குகள், பல வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்து பரவசப்பட்டிருக்கிறோம்.
பவானி ஆற்றின் அருகே வன விலங்குகள் நடமாட்டத்தைப் பார்வையிடும் பள்ளி மாணவர்கள் | ராஜேஸ்வரி | து.பிராங்கிளின்
யானைகள், காட்டெருமைகள், சிறுத் தைகள், பவானி ஆற்றில் அலையும் ஏராளமான முதலைகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
இத்தகைய பணிகளின் காரணமாக, எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் பெரிதும் மேம்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள எல்லா மாணவர்களும் இன்று பள்ளிக்கு வருகின்றனர். அதேபோல 8-ம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துவிடுகின்றனர். கற்றல் திறன் அதிகமாக இருப்பதால் அங்கும் எங்களது மாணவர்கள் தனித்து விளங்குவதாக அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக, பெருமிதமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டுத்த தலைமுறையை சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கும் புதுக்காடு கிராமத்துக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை. யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகின்றன. நடந்தே பள்ளிக்கு வரவேண்டியிருப்பதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். நல்ல உள்ளம் கொண்ட யாரேனும் காலை, மாலை நேரங்களில் மட்டும் வாகன வசதி செய்து கொடுத்தால் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்துசெல்ல முடியும் என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி.
தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: 87540 99135.

தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்விச் செயலாளர் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டம்

8.7.17 தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்விச் செயலருடன் நடந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகளை துவங்கி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வரும் 25 ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரது பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இதன் மூலம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

சர்வதேச தரத்தில் ஒரு அரசு பள்ளி... தலைமை ஆசிரியர் சொல்லும் சக்சஸ் ஃபார்முலா!...

இது அரசு பள்ளிகளின் காலம்... அரசு பள்ளி ஆசிரியர்கள் உத்வேகம் அடைந்துவிட்டனர்... இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் ’மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி’. இந்த அசத்தல் தொடக்கப்பள்ளியுடன் போட்டிப்போட முடியாமல் தனியார் பள்ளியொன்று இழுத்து மூடப்பட்ட வரலாறும் உண்டு. 

தனியார் பள்ளிகளின் வாசலில் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் வரிசையில் நிற்கும் காட்சியைதான் சினிமாக்கள் இத்தனை நாள்களாக காட்சி வருகின்றன.  ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்காக மக்கள் அலைமோதியது  மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி முன்பாகதான். இதனை பற்றி விகடனில் கடந்த ஆண்டு கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.

பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிப்பறை, கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை .. எப்படி இவை சாத்தியமானது...? ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.தென்னவன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்...
”மதுரை மாவட்டத்திலேயே ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிதான் அனைத்து  வசதிகளுடன் கூடியப் பெரிய தொடக்கப்பள்ளி. எங்கள் கிராமத்தை சுற்றி 8 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றை விடவும் எங்கள் பள்ளியில் தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கெல்லாம் காரணம் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களின் கூட்டு முயற்சிதான். பெற்றோர்-ஆசிரியர்கள் குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் பள்ளியின் முன்னேற்றத்தை குறித்து கலந்தாலோசிப்போம். இப்படி ஒவ்வொரு அரசு பள்ளியிலும் குழு அமைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள குறைகளை பற்றி விவாதித்தாலே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 

எங்கள் பள்ளியில் சுகாதாரத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இவைதான்  ஒரு பள்ளியின் அடிப்படை தேவை. தமிழக அரசு அரசுப்பள்ளிகளுக்கென வகுத்த ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கொண்டோம். பல அரசு பள்ளிகள், அரசு திட்டங்களையும் சலுகைகளையும் மாணவர்களுக்காக பயன்படுத்திக்கொள்வதே கிடையாது. அரசு பள்ளியின் நாற்காலி தொடங்கி கழிப்பறை வசதி வரை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அவற்றை திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு முழு நேரமும் படிப்பு மட்டுமே கற்பித்து கொண்டிருக்கமாட்டோம். கலை நிகழ்ச்சிகள், ஸ்கூல் பார்லிமெண்ட், லீடர்ஷிப் கேம்ப், கற்பனைத் திறன் பயிற்சிகள், போட்டோஷாப் பயிற்சி உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். தொடக்கபள்ளி தான் என்றாலும் ஒரு பல்கலைக்கழக தரத்துக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். 
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்பிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஃபார்முலா. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மனது வைத்தால் ஒவ்வொரு அரசு பள்ளியையும்  சர்வதேச தரத்துக்கு மாற்றம் முடியும். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. அவர் கூறியது உண்மைதான். அரசு பள்ளிகளில் கல்விதரம் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளி ஆசிரியர்களான எங்கள் மத்தியில் எழுந்துள்ள உத்வேகம்தான்” என்று முடித்தார் உற்சாகத்துடன்.

உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் - வீணாகும் நிதியால் அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவரா?

பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு....

பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.
பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பி.எட்., படிப்பை முடித்திருப்பதோடு, ஆசிரியர் தகுதி தேர்விலும், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கண்காணிப்பு : நாடு முழுவதும் உள்ள, பி.எட்., படிப்புக்கான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, என்.சி.டி.இ., என்ற, தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. 
தமிழகத்தில், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதனால், பல்கலையின் முழு கட்டுப்பாட்டில், கல்லுாரிகள் செயல்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை கண்காணிக்கும்.
இந்நிலையில், பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதனால், துணைவேந்தர் தங்கசாமி மற்றும் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர், சீரமைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளனர்.
தர மதிப்பீடு : அதாவது, அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், அங்கீகாரம் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள், 'நாக்' தர மதிப்பீடு பெற வேண்டும். அத்துடன், அனைத்து கல்லுாரிகளிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, போலிகளை கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பி.எட்., கல்லுாரிகளில், கல்வியியல் படிப்பில், பிஎச்.டி., முடித்தவர்கள் மட்டுமே, முதல்வராக இருக்க முடியும்.பல கல்லுாரிகளின் முதல்வர்கள், இந்தவரையறைக்குள் இல்லை என, தெரியவந்துள்ளது. எனவே, விரைவில், அந்த முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பல்கலை நிர்வாகம் முடிவு 
செய்துள்ளது.

இன்ஜி., படிப்புக்கு 'நீட்' விலக்கு: அமைச்சர் உறுதி...

''அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்களித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழகத்தில், இன்ஜி., கலந்தாய்வை நடத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம்,'' என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட அரசு கலைக் கல்லுாரியில் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கல்வியாண்டில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத சட்டம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அதை அனுமதிக்காத வகையில் பார்த்துக் கொள்வோம், மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இன்ஜி., கலந்தாய்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். 

ஆசிரியர்-மாணவர்கள் நிர்ணயம் : தொடக்க கல்வியில் வருமா மாற்றம்...

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் 11.8.2010ன் படி அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்திலும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1:35 விகித்திலும் ஆசிரியர் மாணவர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், 150 மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் 150க்கு மேல் மாணவர் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயத்தில் குழப்பம் நீடிப்பதாக உள்ளது. 
அதாவது 150 - 200 மாணவருக்கு 6 ஆசிரியர், 201-240க்கு 7 ஆசிரியர், 241- 280க்கு 8 ஆசிரியர் என நிர்ணயம் விதி உள்ளது. இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 150க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆனால் அதேநேரம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் உள்ளது. தொடக்க கல்வியில் உள்ள இந்த முரண்பாட்டால் அதிக எண்ணிக்கையில் மாணவர் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ள நிலை தமிழகம் முழுவதும் உள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:இப்பிரச்னைக்கு தீர்வுகாண ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தொடக்க கல்வியில் தான் செயல்வழி கற்றல் முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் 150 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளில் 
ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது பணிச்சுமை ஏற்படுகிறது. கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு மாணவர் மீது தனிக்கவனமும் செலுத்த முடியவில்லை.
எனவே நடுநிலை, உயர்நிலையில் உள்ளதுபோல் தொடக்க கல்வியிலும் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் இருக்கும்படி மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் 'உபரி' ஆசிரியர்கள் பிரச்னைக்கும் முடிவு ஏற்படும்.
கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் செயலாளர் உதயச்சந்திரன் இப்பிரச்னையிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க!

தனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி  கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவது தமிழக அரசின் கடமை அல்லவா...
திரு ச.கார்த்திக்,
மாநிலப் பொருளாளர் ,
9789180422.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை செய்யப்பட உள்ளன.அரசுப் பள்ளி மாணவர்களில்,
பெரும்பாலானோருக்கு வாசிக்க தெரியவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் அடைவுத்திறன் சோதிக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை வாசித்தல் மற்றும் எழுதுதல், கணிதத்தில் எளிய, கடின கணக்குகளை செய்தல் போன்றவை சோதிக்கப்படும். கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது.
தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுதலின்றி சோதனை நடத்த வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு ஜூலை முதல் ஆகஸ்ட் 15 வரை மாவட்டத்தில் 50 சதவீத பள்ளிகளிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 15 வரை மீதமுள்ள 50 சதவீதம் பள்ளிகளிலும் நடத்தப்பட உள்ளது.
இதில், பின்தங்கும் மாணவர்களுக்கு வாசித்தல் எழுதும் திறனில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனிஊதியம் 750 பதவி உயர்வு நிர்ணயத்திற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கி வருவது சரியே ..கோயமுத்தூர் மண்டல தணிக்கை அலுவலரின் பதில்!!



Special Teachers Syllabus Published by TRB

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்...

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கான தடையும் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மாநில நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுக்களை விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.