ஞாயிறு, 9 ஜூலை, 2017
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு இத்தனை நாட்கள் தேவையா???
தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள் அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும் ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றது முதல் மாணவர் நலன், அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் வகையில் வெளியாகும் புதிய அறிவிப்புகள் அனைத்து தரப்பினரையும் வரவேற்பதாக உள்ளன.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை போக்க, பொதுத் தேர்வுகளில் மாநில ராங்க் பெற்ற மாணவர் பட்டியலை வெளியிடாதது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக பாடத்திட்டம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் முன்கூட்டியே வெளியீடு போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 16ல் துவங்கி ஏப்.,20ல் முடிகிறது. இதன் முடிவு மே 23ல் வெளியாகும். பிளஸ் 1 தேர்வு மார்ச் 7 ல் துவங்கி ஏப்.,16 முடிகிறது. தேர்வு முடிவு மே 30ல் வெளியாகும். பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்.,6 முடிகிறது. இதன் முடிவு மே 16ல் வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பாடங்களே உள்ள, ஏழு தேர்வுகள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 16 துவங்கி ஏப்., 20 என 35 நாட்கள் நடக்கின்றன. இதன் அடிப்படையில் ஒரு தேர்வுக்கு சராசரியாக தலா 5 நாட்கள் இடைவெளி உள்ள வகையில் அட்டவணை அமைந்துள்ளது.
அதுபோல் பிளஸ் 1 தேர்வு 40 நாட்களும், பிளஸ் 2 தேர்வு 36 நாட்களும் நடக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான 'அதிகபட்ச மன உளைச்சல்' ஏற்பட
வாய்ப்புள்ளது.
தற்போது அதிக நாட்கள் இடைவெளியில் அமைந்த அட்டவணை, மாணவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேல் தேர்வு பீதியில் மாணவர்கள் காலத்தை தள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர், கல்வியாளர்கள் கூறியதாவது:மூன்று பொதுத் தேர்வுகளுக்கும் குறைந்தபட்சம் 35 முதல் 40 நாட்கள் இடைவெளியில் நடப்பதாக உள்ளன.குறிப்பாக, பிளஸ் 2 கணிதம் தேர்வு மார்ச் 12ல் நடக்கிறது. ஆறு நாட்களுக்கு பின்
இயற்பியல் தேர்வு 19ல் நடக்கிறது. அதை தொடர்ந்து 26ல் வேதியியல். ஏப்.,2ல் உயிரியல் தேர்வுகள் நடக்கின்றன.
இதைவிட பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக நாட்கள் இடைவெளி காணப்படுகின்றன. உதாரணமாக, மார்ச் 21ல் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்த பின், 28 ல் தான்
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை தொடர்ந்து ஏப்.,4 ல் ஆங்கிலம் 2ம் தாளும், 10ல் கணிதம், 17 ல் அறிவியல், 20 ல் சமூக அறிவியல் என அதிக நாட்கள் இடைவெளி உள்ளன.
இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கு இடையே உள்ள விடுமுறை நாட்களிலேயே, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு 16 நாட்களுக்கு பின் துவங்குவது தேவையில்லாதது. ஒவ்வொரு தேர்வுக்கும் தேதிகள் குறுக்கிடாத வகையில் ஒரு மாதத்திற்குள் மூன்று பொதுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை திட்டமிட வேண்டும்.
இப்படி தயாரிக்கலாமே
பொதுத் தேர்வுகளை ஜவ்வாக இழுப்பதற்கு பதில், பிளஸ் 2 தேர்வை திங்கள்- தமிழ் முதல் தாள் தேர்வு, செவ்வாய்- தமிழ் 2ம் தாள், வியாழன்- ஆங்கிலம் முதல் தாள், வெள்ளி- ஆங்கிலம் 2ம் தாள் என மொழித்தேர்வுகளை நடத்தலாம்.
பின்னர் பிற பாடங்களை, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே தலா ஒரு நாள் விடுமுறை விட்டு நடத்தலாம்.
இதுபோல் பத்தாம் வகுப்பிற்கான 5 தேர்வுகளை, திங்கள் துவங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பத்து நாட்களுக்குள் அதாவது ஏப்., 1 முதல் 10க்குள் தேர்வை முடிக்கும் வகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் மாற்றம் செய்யலாம். இம்மாற்றம் மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படும் 'தேர்வுச் சுமை'யை தவிர்க்கலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து.
காது கேளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவு.
காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில்,
பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், 'காது கேளாத ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சான்று பெற்று வழங்கினால், படியை அனுமதிக்கலாம். பணிபுரியாத காலங்கள், மருத்துவ விடுப்பின் போது பயணப்படி வழங்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை....
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த வரிசையில், பள்ளி அளவிலான மாநில விளையாட்டு போட்டிகளை, ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால், பள்ளிகள் திறந்ததும், ஜூன் இரண்டாவது வாரம் முதல், பள்ளி, வட்ட அளவில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசு ஒதுக்கிய, 10 கோடி ரூபாயில், இன்னும் உபகரணங்கள் வாங்கவில்லை; பயிற்சியும் அளிக்கவில்லை.விதிமுறைப்படி, ஒரு குழுவில், 11 பேர் இருக்க வேண்டும்; மாணவர் சேர்க்கை முடியும் முன், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தகுதி பெற முடியாது; உயர்கல்வியில் விளையாட்டு ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்வதும் சிக்கலாகும்.இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், ௧௦ம் வகுப்பு, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம், வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு, பொதுத் தேர்வு மாணவர்கள் விளையாட செல்வது தடுக்கப்பட்டு உள்ளது.போட்டியை நடத்த திட்டமிட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை மீது, மாணவர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி - 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்....
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின் இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை...
கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு, சனிக்கிழமையன்று வந்தாலும், அனைத்து பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியிருப்பதாவது:
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காமராஜர் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியில் புரிந்த சாதனை, கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
இது குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தியும் பரிசு வழங்கப்பட வேண்டும். அன்றைய தினம் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சனி, 8 ஜூலை, 2017
PGTRB Answer Key 2017 Download
PGTRB 2017 Answer Keys Download:
Chemistry - PGTRB Answer Keys Download
Maths - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | Chemistry Answer Keys Download | Inspire Academy
- PGTRB Exam 2017 | Chemistry Answer Keys Download | Bharaathi Study Centre
Maths - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | Maths Answer Keys Download | National Academy, Dharmapuri
- PGTRB Exam 2017 | Zoology Answer Keys Download | Thalamus
- PGTRB Exam 2017 | Zoology Answer Keys Download | Holycross
- PGTRB Exam 2017 | Zoology Answer Keys Download | Surya
- PGTRB Exam 2017 | Commerce Answer Keys Download for A,B,C,D Series | T.R.Muralidaran
- PGTRB Exam 2017 | Commerce Answer Keys Download | SSS Academy
- PGTRB Exam 2017 | Education, GK and Psychology Answer Keys Download | Vision Gobi
- PGTRB Exam 2017 | Education, GK and Psychology Answer Keys Download | Puthiya Vidiyal, Theni
PET - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | PET Physical Director Answer Keys Download | Olympic, Tirupattur
- PGTRB Exam 2017 | Tamil Expected Cutoff Download | Puthiya Vidiyal
- PGTRB Exam 2017 | Tamil Answer Keys Download | Thamiltamarai
- PGTRB Exam 2017 | Tamil Answer Keys Download | Puthiya Vidiyal
- PGTRB Exam 2017 | Physics Expected Cutoff & Questions with Answer Keys Download | Mr.V.Karikalan,Rasipuram
- PGTRB Exam 2017 | Physics Answer Keys Download | KS Academy, Salem
Economics - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | Economics Answer Keys Download | Achamillai Educational Trust
- PGTRB Exam 2017 | Economics Answer Keys Download | Mr.Success Academy, Madurai
- PGTRB Exam 2017 | History Answer Keys Download | Adithya Academy, Kanchipuram
- PGTRB Exam 2017 | History Answer Keys Download | Puthiya Vidiyal, Theni
English - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | English Answer Keys Download | Athiya, Kanchipuram
- PGTRB Exam 2017 | English Answer Keys Download | Athiya, Salem
Botany - PGTRB Answer Keys Download
- PGTRB Exam 2017 | Botany Answer Keys Download | Mr.Mahesh, Namakkal
பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மாநில மாநாடு
அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 2014ம் ஆண்டில் ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றி மனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே, கோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த கூட்டம் 9.7.2017 ஞாயிறு காலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை -*
"INCREMENT RULES & PROCEDURES FOR TN GOVT.EMPLOYEES"
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்
HOW TO APPLY RATION "SMART CARD" ONLINE
"தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?"
இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம். உங்களுக்கு இணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இஙு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.
2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.
படி 1 www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும். பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை * குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும். புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "இப்போது விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்.
குடும்ப விவரங்கள் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். உறுப்பினரை எப்படிச் சேர்பது குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரைச் சேர்க்க" பொத்தானை அழுத்தவும் . .
முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும் பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம் பிறந்த தேதி - கட்டாயம் பாலினம் - கட்டாயம் தேசிய இனம் - கட்டாயம் உறவுமுறை - கட்டாயம் தொழில் - கட்டாயமற்றது மாத வருமானம் - கட்டாயம் வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது ஆதார் எண் - கட்டாயம் குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை. குடியிருப்புச் சான்று குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் . குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).
பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம் பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும். எரிவாயு இணைப்பு விவரங்கள் ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.
1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்
குறிப்பு: குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும். ஆதார் அட்டை இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையை உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணை உள்ளிட்ட சரி பார்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)