>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 6 ஜூலை, 2017

TEACHERS FORMS


1.     M.L FORMS
4.     E.L SURRENDER FORM
7.     FESTIVAL ADVANCE
8.     C.P.S.FORM
9.     GPF CLOSURE FORMAT


Expected DA From July 2017

DA from July 2017 is expected 1% only at present!
As on date, we have two months AICPIN data only, i.e., Jan and Feb2017. And we need four months AICPIN data for the calculation of DA from July 2017.
The scenario of AICPIN is now being as down trend. If the AICPIN should increase minimum 6 points(total of 3 months) from the existing level in coming months, there could be a chance to increase the DA to 2%. Otherwise, the additional DA from July 2017 will be enhanced by 1% only.
In case of AICPIN increase one point from the existing level subsequently for4 months, the below table shows the calculation…

TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு....

TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.
பமிலா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர் கூறியுள்ள மனுவின் விபரம் :
2013 தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணி கிடைக்கவில்லை.4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தேர்ச்சிக்கு உரிய சலுகை மதிப்பெண்கள் வழங்கக்கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
இம்மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆசிரியர் தேர்வு வாரியம் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்?

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 95% பேர் தேர்ச்சி பெறத் தவறிய அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய 7.53 லட்சம் பேரில் வெறும் 34,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாளை 2.41 லட்சம் பேரும், இரண்டாம் தாளை 5.12 லட்சம் பேரும் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 1ம் தேதி வெளியானது. இதில் சுமார் 4.93 லட்சம் பட்டதாரிகள் 150க்கு 90 என்ற தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர்.
இதில் ஏராளமானோர் அறிவியல் மற்றும் கணிதத்தில் தான் தோல்வி அடைந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறுகையில், இந்த முறை வினாத்தாளில் பல மனோதத்துவத் துறை சார்ந்த பல கேள்விகள் இடம்பெற்றிருந்தன என்று கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டுதான் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், குறைந்த ஊதியத்துடன், ஒரு நாளைக்கு அதிக வகுப்புகளை எடுக்க வைக்கின்றனர். இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறைவதே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ள அரசுப்பள்ளி !!

பள்ளி மேலாண்மை குழுவினர், ஒருங்கிணைந்த செயல்பாட்டால், க.பரமத்தி துவக்கப் பள்ளி, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளது.
 கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, 2005ல், செயல்வழிக் கல்வி கற்பித்தலில் சிறப்பிடம் பெற்றதால், 25 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றது.தொடர்ந்து, பெற்றோர், நன்கொடையாளர்கள் மூலம், இணையதள வசதியுடன், ஒன்பது கம்ப்யூட்டர்கள் கொண்ட ஆய்வகம் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது, 'டிஜிட்டல் மல்டி மீடியா' வகுப்பறை, மாணவ, மாணவியருக்கு, 'டேப்' வசதி, 1,000 புத்தகங்கள் அடங்கிய நுாலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளி செயல்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், அரசு பள்ளிகளுக்கு ரோல் மாடலாக உள்ள, மேற்கண்ட துவக்கப் பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று கிடைத்துள்ளது. மாநில அளவில், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற, நான்கு பள்ளிகளில், இதுவும் ஒன்று.
தலைமையாசிரியர்செல்வகண்ணன் கூறியதாவது:
கடந்த, 2005ல், 104 பேர் படித்தனர். தற்போது, 190 பேர் படிக்கின்றனர். இதற்கு, 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு தான் காரணம்.ஓவியம், கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி மொழி பயிற்சி, நடனம், இசை உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் ஏழு பேர் உள்ளனர்.
சமீபத்தில், பள்ளி விரிவாக்கப் பணிக்காக, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், 2,244 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. பெற்றோர், நன்கொடையாளர் தரப்பில் இருந்து, 40 லட்சம் ரூபாய் வரை, பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்பட்டு உள்ளது.மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்களின் பிறந்த நாள், திருமண நாட்களில், அனைத்து வகுப்புகளுக்கும், 'ஸ்பீக்கர்' மூலம் வாழ்த்து தெரிவிக்கப்படும்.
கணித பாடத்தை தெளிவாக புரிந்து கொள்ள, அபாகஸ் பயிற்சி, 1 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன அறிவியல் தொழிற்நுட்பத்தை அறிய, 'இன்ட்ராக்ட்டிங் ஒயிட் போர்டு' மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2016 - 17 ஜனவரியில், பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்மாதிரி தலைமை ஆசிரியர்
'அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் குழந்தைகளை, அரசு பள்ளியில் ஏன் படிக்க வைக்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் செல்வகண்ணன், அவரது இரு மகள் களையும், இதே பள்ளியில், 5ம்
வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
மூத்த மகள் பிரியதர்ஷினி, எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, தற்போது, மருத்துவ மேற்படிப்புக்காக காத்திருக்கிறார். இளைய மகள் காவியதர்ஷினி பிளஸ் 2 படித்து வருகிறார். இவரின் முன்மாதிரியான நடவடிக்கையால், அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில், பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூர் பாண்டியன்நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் தொடுதிரை கணினி அறை திறப்பு விழா

திருப்பூர் *பாண்டியன்நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில்*  (29.6.17) காலை 11 மணியளவில் *குளிரூட்டும் பெட்டியுடன்* கூடிய *தொடுதிரை கணினி  (SSS திட்டத்தில் வாங்கப்பெற்றது )*  மற்றும் *கணினி அறையை* திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு *கு.பெ.கனகமணி* அவர்கள் திறந்து வைத்தார்.
அதன் பின் *தலைமை ஆசிரியர் திரு.ஜோசப்* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு *கு.பெ.கனகமணி* அவர்கள் பாராட்டினார்.
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் *திரு.விஸ்வநாதன்* அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பின் தொடுதிரை கணினி, AC ஆகியவை வாங்க *நன்கொடை செய்தவர்களை* மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களால் கெளரவிக்கப்பட்டது.
பின் பள்ளி *ஆசிரியர் திரு.லிவிங்ஸ்டன்* அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்
"BIO-METRIC ATTENDANCE IN ELEMENTARY EDUCATION SOON" - DIR PROCEEDING
பள்ளிகளில் ஸ்மார்ட் கார்ட்,பயோமெட்ரிக் ஆகியவை நடைமுறையில் வர இருப்பதால் தலைமையாசிரியர்கள் 1 முதல் 8ம் வரை உள்ள மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கையினை சரியாக அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவித்துள்ளார்.

புதன், 5 ஜூலை, 2017

12 Std slip Test Time table released....



ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது - சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் 7அறிவிப்பு.

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. இன்பதுரை கோரிக்கை விடுத்தார். 
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்
"BIO-METRIC ATTENDANCE IN ELEMENTARY EDUCATION SOON" - DIR PROCEEDING
பள்ளிகளில் ஸ்மார்ட் கார்ட்,பயோமெட்ரிக் ஆகியவை நடைமுறையில் வர இருப்பதால் தலைமையாசிரியர்கள் 1 முதல் 8ம் வரை உள்ள மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கையினை சரியாக அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவித்துள்ளார்.

2007-2008 முதல் 2015-2016 வரை தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல் படுத்த கணினி பயிற்றுனர் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.