>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 16 ஜூன், 2017

37 அறிவிப்புகள் விளக்கமாக ........


அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களை, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.



சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். 

அவர், 'ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகள், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவல் அனைவரையும் சென்றடைந்த நிலையில், தரமான கல்வியை அளிப்பது அடிநாதமாகியுள்ளது.

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சவால்கள், மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. கல்வியின் பரிணாம வளர்ச்சி கருதி, கல்வித் தரம் மாபெரும் உயரத்தை எட்ட வேண்டும்' என, தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, '17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம்; பள்ளிகள் தோறும் மாணவர் நாளிதழ் வாங்குதல்; 'ஆன்லைனில்' தேர்வு ஹால் டிக்கெட், போட்டித் தேர்வுக்கு வசதிகள், கணினி வழி கல்வி' என, 37 புதிய அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட்டார்.

அதன் விபரம்:

* கிராமம் மற்றும் மலைப் பகுதி உள்ளிட்ட 30 இடங்களில் புதிய துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும்
* சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒரு துவக்கப் பள்ளி, உயர்நிலை, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிக்கு 1.92 கோடி ரூபாயில் ஆண்டுதோறும் 'புதுமைப் பள்ளி விருது' வழங்கப்படும்
* புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் 
அட்டைகள், 31.82 கோடி ரூபாயில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
* 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 40 ஆயிரம் மாணவர் பயன் பெறும் வகையில், தலா, மூன்று கணினிகள் உடைய கணினி வழி கற்றல் மையங்கள் 6.71 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* 5,639 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலை 

'நாப்கின்' வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும்
* 31 ஆயிரத்து 322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 4.83 கோடி ரூபாயில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்


ஆசிரியர் நலன்


* நடப்பு கல்வியாண்டில், 3,336 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் மற்றும், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என 4,084 காலியிடங்கள் நிரப்பப்படும்
* 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும்
* கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு யிற்றுவிக்கும் ஆசிரியர்கள்; குழந்தைகள் சேர்க்கையில் சிறப்பான ஆசிரியர்களை ஊக்கு விப்பதற்காக மாவட்டத்திற்கு, ஆறு ஆசிரியருக்கு 'கனவு ஆசிரியர் விருது' வழங்கப்படும். அவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பாராட்டுத் தொகை வழங்கப்படும்
* அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான, மாணவ - மாணவியர் கற்கும் திறனை அதிகரிப்பதற்காக 39.25 கோடி ரூபா யில் உச்சரிப்பு, எழுத்துக்களை அறிதல் போன்ற வற்றுக்காக, 39.25 கோடி ரூபாயில்,துணை கருவிகள் வழங்கப்படும்
* திறனின்றி தேர்வுகளில் பங்கேற்கும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
* அறிவியல், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மூன்று கோடி ரூபாயில், வெளிநாடு செல்ல வாய்ப்பு அளிக்கப் படும்
* தமிழர் பாரம்பரிய கலை மற்றும் மரபுகலை வளர்க்க,150 வகை பிரிவுகளில், பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவிலான கலை திருவிழா, ஆண்டுதோறும்,4 கோடி ரூபாயில் நடத்தப்படும்
* பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பை தொடரும் வகையில், தேசிய வங்கி மூலமாக, ஆண்டுதோறும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்
* கிராமப்புற மாணவர்களை தயார் செய்யும் வகையில், ஒன்றியங்கள் தோறும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற, 20 கோடி ரூபாயில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்கள், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும்


மின் ஆளுமை


* பள்ளிக்கல்வி துறைக்கென தனியாக, கற்றல், கற்பித்தல், மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும். இதில், பல்வேறு அலைபேசி செயலிகள் உருவாக்கப்படும்
* பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு வழங்குதல், மதிப்பெண் பதிவு செய்தல், தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புதல் போன்ற வற்றை மேற்கொள்வதற்காக, அரசு தேர்வுகள் 

துறை, இரண்டு கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்க, இணைய வழியில் அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படும்

நுாலகம்
* அரசு பொது நுாலகங்களுக்கு பயனுள்ள, தரமான நுால்கள் வாங்க, 25 கோடியும், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத் திற்கு,புதிய துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நுால்கள் வாங்க, ஐந்து கோடி ரூபாயும் வழங்கப்படும்
* மதுரையில், உலக தமிழ்ச்சங்க வளாகத்தில், ஆறு கோடி ரூபாய் செலவில், மாபெரும் நுாலகம் அமைக்கப்படும்
* மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, மாவட்ட தலைநகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
* எட்டு கோடி ரூபாய் செலவில், சிவகங்கை மாவட்டம் - கீழடி, தஞ்சை, நெல்லை, நீலகிரி, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், சிறப்பு நுாலகங்கள் அமைக்கப்படும்
* கோவை, கரூர், நெல்லை, நாமக்கல், கடலுார், வேலுார், திருச்சி, விருதுநகர் ஆகிய நகரங்களில், போட்டித் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 24 மாவட்டங்களிலும், அவை துவங்கப்படும்
* தமிழகத்தில் கணினிமயமாகாத 123 முழுநேர கிளை நுாலகங்கள் 1.84 கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி உள்ளிட்ட வற்றை மின் மயமாக்கி, நவீன மின் நுாலகம் அமைக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி மற்றும் ஆவணங்களை, பொது மக்கள் மற்றும் தனியாரிடம் இருந்து பெற்று, பாதுகாக்க, புதிய திட்டம் உருவாக்கப்படும்
* அரிய நுால்களை பாதுகாப்பதற்காக, தனியார் அமைப்புகள் நடத்தும் நுாலகங்களுக்கு 
பராமரிப்பு நிதி வழங்கப்படும்
* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நுால்கள் மற்றும் உலகின் தலைசிறந்த பிற மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சிகள், நடமாடும் கண்காட்சிகள், 
புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து நடத்தப்படும்
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய பணியிடங்கள், 60 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டை சீர்படுத்துவதற்காக, இரு புதிய ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
* பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு 34 புதிய வாகனங்கள் 2.89 கோடி ரூபாயில் வழங்கப்படும்


வயது வந்தோர் கல்வி


* திருவண்ணாமலை, அரிய லுார், பெரம்பலுார், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மூன்றாம் வகுப்புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். மேலும், ஐந்து மாவட்டங்களில் 14 கோடி ரூபாயில் சமநிலை கல்வி அளிக்கப் படும்
* வெளிநாடுகளில் வாழும் தமிழ் மாணவர் களுக்காக, பாடபுத்தகங்கள் மற்றும் கற்பிப்பதற் கான ஆசிரியர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்
* இலங்கை, யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற் கும், மலேஷியா பல்கலைக்கும், பொதுமக்க ளிடம் இருந்து பெற்று, ஒரு லட்சம் அரிய நுால்கள் அனுப்பி வைக்கப்படும் பள்ளி கல்வித் துறையை மேம்படுத்த, அரசு அறிவித்துள்ள, இந்த புதிய அறிவிப்புகளுக்கு, கட்சிகள், கல்வி யாளர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பிளஸ் 1 பொது தேர்வு: தி.மு.க., எதிர்ப்பு....

சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மத்திய அரசு, கல்வித்துறைக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது; அதை பெற முயற்சி செய்யுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசிடம் இருந்து, 17 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தி உள்ளார். நிதி அமைச்சரிடமும் பேசி உள்ளோம். கேட்ட நிதி கிடைத்துவிடும் என்ற, நம்பிக்கை உள்ளது.பொன்முடி: புதிதாக பிளஸ் 1 வகுப்பிற்கும,் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளீர்கள். அதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு இடைவெளி விட வேண்டும். ஏனெனில், மீண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வேண்டி உள்ளது.அமைச்சர் செங் கோட்டையன்: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என்பதை, அனைவரும் வரவேற்றுள்ளனர்; மக்கள் ஏற்றுக் கொண்டனர்.பொன்முடி: மாநில உயர் கல்வி மன்றம், நிர்வாகிகள் இல்லாமல் முடங்கி உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில், பல்வேறு குளறுபடி நடந்துள்ளது.அமைச்சர் அன்பழகன்: துணை வேந்தர் தேர்வில், குளறுபடி எதுவும் இல்லை.

தேடல் குழு தேர்வு செய்தவர்கள் தான், துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி கிடைக்காதவர்கள், தவறான பிரசாரம் செய்கின்றனர்.பொன்முடி: மேற்கு வங்க கவர்னராக வந்த ராபர்ட் கிளைவ், அங்கு ஆட்சியிலிருந்த, நவாப்புகளிடம் இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தார். அதுபோன்ற நிலை ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்... சட்டசபையில் 'செங்ஸ்'!

சென்னை: நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.
அதன்படி சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மூன்று கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறவிவித்துள்ளது. மேலும்
நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரியவகை நூல்கள், ஆவணங்களுடன் நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடியில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

DSE PROCEEDINGS-REGULARISATION ORDER FOR BT (HISTORY-TELEGU)


RTI - TET எழுதாமல் பணி அமர்த்தப்பட்ட 3200 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல் குறித்து TRB -ல் அளிக்கப்பட பதில் (08/06/2017)

FLASH NEWS : SOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை - ORDER COPY



+2 சிறப்பு துணைத் தேர்வு HALL TICKET பெறுதல் தொடர்பாக -தேர்வுத் துறை அறிவிப்பு

Local Body Election Reg - Proceedings..

Local Body Election Reg - Proceedings..
மிக அவசரம்/ /உள்ளாட்சி தேர்தல்-2017/ /தனி கவனம்/
ந.க.எண்.3452/அ1/2017 மாவட்டக் கல்வி அலுவலகம், 
நாள். 15.06.2017. திருச்சிராப்பள்ளி.
(நகல்) திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / மான்ய / ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கும் உரிய விரைவு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவிருக்கும் 2017-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கு தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட (ஓடு) படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து , கீழ்க்கண்ட ஆவணங்களினை இணைத்து இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் மென்நகல்-1 (CD) மற்றும் வன்நகல்-2(உரிய இணைப்புகளுடன்) நேரில் ஒப்படைக்கத் தெரிவிக்கப்படுகிறது. 
1. ஜுன் 2017 ம் மாத ஊதிய பட்டியலுக்கான நுஊளு ஒளி நகல்-2. 
2. வாக்காளர் அடையாள அட்டை ஒளி நகல்-2. 
3. ஆதார் அடையாள அட்டை ஒளி நகல்-2. 
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓடு படிவத்தினை பூர்த்தி செய்திடும்பொழுது நுஊளு படிவத்தில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கப்படவேண்டும். தவிர்ப்பு கோரும் பணியாளர்கள் இருப்பின் அவர்களின் விண்ணப்பம், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பரிந்துரைத்து சான்றொப்பமிடப்பட்ட ஆவண நகல்கள் இரு நகல்களில் இணைத்து நுஊளு படிவ எண்ணிக்கையினை சமன்படுத்தி தலைமையாசிரியரின் முகப்பு கடிதத்தில் 2017-ல் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை, தவிர்ப்பு கோருபவர் எண்ணிக்கை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு இவ்வலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். 
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட தேர்தல் அலுவலரின் மேற்கண்ட கடிதத்தினைக் கருத்திற்கொண்டு காலதாமதத்தினை தவிர்த்திடல் வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்படும் நிலையில் எதிர்கொள்ளப்படும் அனைத்து விளைவுகளுக்கும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பாவார்கள் என்பதையும் தெரிவிக்கலாகிறது. 
இணைப்பு:- XL படிவம்-1. மாவட்டக் கல்வி அலுவலர், 
திருச்சிராப்பள்ளி.

3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!

மூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள். 
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
அரசுப் பள்ளி''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா?'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன். 
ஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது? நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர். 
அரசுப் பள்ளி''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். ‘மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார். 
''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சரை நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர். 
மட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்! 

SOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை - ORDER COPY "கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது"


2017-2018 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம்-SINGLE PAGE....

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..


புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும்.
பகுதி நேர பொறுப்பாசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மழை வருவதற்கு முன்பு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார நடவடிக் கை எடுக்க வேண்டும்’ என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, ‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக 7வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’ என்றார். அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும் போது, ‘வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.16 கோடிக்கான வேலை நடந்து முடிந்துள்ளது. மழை வருவதற்குள் மீண்டும் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

வியாழன், 15 ஜூன், 2017

SCHOOL CALENDAR 2017 - 18 PUBLISHED


பழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு

பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,
📌ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.
📌ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.
📌கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆக குறைப்பு?

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீதமுள்ள 10 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 - 18 SCHOOL CALENDER - SCHOOL ACTION PLAN PUBLISHED

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு.
பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த  நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.
 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு  ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 - 18 SATURDAYS WORKING LIST

As per the school calender the following saturdays are working day for all types Govt Schools
June
17.06.2017
July 
08.07.2017
15.07.2017
22.07.2017
Sep  
23.09.2017
Oct
21.10.2017

கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை...

*கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை
*திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்
*சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
*நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் யோகா: புதுச்சேரி அரசு தகவல்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்த யோகா முக்கியம் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி...

சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.
கடந்த, 1926ல், மிகச் சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2004ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதை மாற்ற என்ன செய்யலாம் என, யோசித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், முக நுால் நண்பர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி மூலம், பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.
இதன்படி, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள், மாணவியருக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்துளை கிணறு, ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் தொடர்பான வண்ண ஓவியங்கள், அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதி, யு.பி.எஸ்., வசதியுடன் கூடிய கணினி அறை.ஹோம் தியேட்டர், புரொஜக்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், தொடுதிரை பலகை, நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், மாடித்தோட்டம், 4டி அனிமேஷன் கல்வி, இங்கிலாந்தில் உள்ள ஆசிரியர்களுடன் இணையம் வழியே ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகிறது.
பள்ளி தலைமை ஆசிரியை சுபலஷ்மி கூறியதாவது:
உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தியதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, உள்கட்டமைப்பு வசதி பற்றி தெரிவிக்கின்றனர். மாணவர்களின் திறனை கண்டு, சிறந்த அரசு பள்ளியாக அறிவிக்கப்பட்டு
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

CRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும்.

CRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*
*2017-ஆகஸ்டு 5*
*2017-செப்டம்பர்- 16*
*2017-அக்டோபர்- 7*
*2018-ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள்,*  *20,23,24,25,26,27,30.*
*ஈடுசெய் விடுப்பு இல்லை.*
*பள்ளி வேலை நாட்கள்- 210.*

தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

இந்த ஆண்டு புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும் - அமைச்சர்

மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும் - அமைச்சர்

17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் - செங்கோட்டையன்.

17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் - செங்கோட்டையன்.

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்: அரசு

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!....

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்த இயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.
இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது

பள்ளிக்கல்வித்துறை 37 அறிவுப்புகள்

பள்ளிகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.
ஆசிரியர் நலன்
7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.
9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.
10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி
மாணவர் நலன்
11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.
12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.
15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்
16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்
17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்
மின் ஆளுமை
18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்
20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நூலகம்
21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்
22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
24) தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்
• சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் – கீழடி, சிவகங்கை மாவட்டம்
• தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் – தஞ்சாவூர்
• நாட்டுப்புறக் கலைகள் - மதுரை
• தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி
• பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி
• கணிதம், அறிவியல் - திருச்சி
• வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்
• அச்சுக்கலை – சென்னை
25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்
26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்
27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்
28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் தொடங்கப்படும்
29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்
30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.
31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
நிர்வாகம்
32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்
33) கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
உலகத் தமிழர் நலன்
36) உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவை அறிமுகம்.
37) உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல். முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடை.

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு....

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளது.  
இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.
இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.
இந்த முறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் - முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்!


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!


CCE - FA(b) weekly Test Question Paper

CCE - Question Papers FA (b) - Term 1
 FA (b) Question Papers - 3rd std
Question Papers - 1
3rd std - Tamil Lesson - 1,2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
3rd std - English Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Maths Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Science Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Social Science Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
Question Papers - 2
3rd std - Tamil Lesson - 3,4 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
3rd std - English Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Maths Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Science Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
3rd std - Social Science Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
FA (b) Question Papers - 4th std
Question Papers - 1
4th std - Tamil Lesson - 1,2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
4th std - English Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
4th std - Maths Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
4th std - Science Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
4th std - Social Science Lesson - 1 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
Question Papers - 2
4th std - Tamil Lesson - 3,4 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
4th std - English Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here  New
4th std - Maths Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New
4th std - Science Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja -  Click here New
4th std - Social Science Lesson - 2 FA(b) Question Paper - Mr Karthik Raja - Click here New

தமிழகத்தில் பள்ளிகளில் மரக்கன்று நட்டு பராமரிக்க ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கருப்பணன் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சூழல் போட்டிகள் நடத்தி சுற்றுலா அழைத்து செல்ல நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
960 பள்ளிகளுக்கு மரக்கன்று நட்டு பராமரிக்க தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்  என்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் பசுமை விருது வழங்கப்படும் என்றும் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!!

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
ஜூன் 24, ஜூலை 1, 15, 29, ஆகஸ்ட் 12, செப்டம்பர் 9, 14 ஆகிய நாட்களில் பள்ளிகள் இயங்கும்
இதை புதுச்சேரி கல்வித்துறை இயக்ககம் இன்று அறிவித்தது

புதன், 14 ஜூன், 2017

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

BIOMETRIC ATTENDANCE பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.
சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.
இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.
மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்


3 & 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூன் 2017 மாத FA (b) செயல்பாடுகளை வினாதாளிலே விடைஎழுதும் வடிவில்....

ICT TRAINING FOR TEACHERS 2017/18 - ZONAL & DISTRICT WISE COORDINATORS LIST....

THANKS : MR.ASIR JULIUS, 
ASST.PROF, SCERT

1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை அடுத்த அதிரடி

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த அதிரடித் திட்டம் பாடத் திட்டத்தை மாற்றுவது. இது தொடர்பான பணிகளில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களை உட்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கோத்தாரி குழுவின் அறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் ஆழ்ந்த அறிவு உள்ளவர்களைப் புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான பணிகளில் பங்கேற்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நாளை முதல் 23-ஆம் தேதி வரை தங்கள் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட மாற்றப் பணிகளில் பங்குபெற www.tnscert.org என்ற இணையதளத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்ய‌லாம் என அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சமீப காலமாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் ரேங்கிங் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டது. 3 வண்ணங்களில் பள்ளிச் சீருடை மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பில் நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இனி 600 மார்க்குக்கு மட்டுமே தேர்வு. தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடத்திட்டங்களையும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

EMIS - Do not update, transfer/admit data for 2017-18 academic year until further notification

EMIS- Data entry, update, transfer/admit is enabled for all classes For academic year 2016-17 only ..... Do not update, transfer/admit data for 2017-18 academic year until further notification
Data entry, update, transfer/admit is enabled for all classes For the academic year 2016-17 only
Do not update, transfer/admit data for 2017-18 academic year until further notification

புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க ஆர்வமான ஆசிரியர்களுக்கு அழைப்பு....

புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ வல்லுனர்களை, பள்ளிக் கல்வித் துறை வரவேற்றுள்ளது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்றவும், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை வடிவமைக்க, அனுபவமிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்களை குழுவில் ஈடுபடுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எனவே, ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் பெயர் விபரங்களை, www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் இன்று முதல், ஜூன், 23, மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.