>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 21 மே, 2017

பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.

பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் (மே 22) தொடங்குகிறது.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல், பொது மாறுதல் ஒன்றியத்துக்குள், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே 23-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள்), இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மே 25-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) மே 26-ஆம் தேதியும் நடைபெறும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் மே 29, 30-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- பள்ளிக்கு ஒன்று வீதம் தூய தமிழ் அகராதி வழங்க இயக்குனர் உத்தரவு

Google Lens - Uses!

         தொழில்நுட்பம் நாம் சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தினம் தினம் வளர்ந்து வருகிறது. ’பெண் மனசு ஆழமுன்னு’ என்ற பாடலின் கரு நாம் அனைவரும் அறிந்ததே. 



          மனிதர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாது என்பதுதான் நாம் எப்போதும் சொல்லி வரும் விஷயம். போகிற போக்கைப் பார்த்தால் அதையும் அறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. கூகுளின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை. அப்போது கூகுளின் வருங்காலத் திட்டமாக ”மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட்”இருக்குமென்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். 

          வருங்கால திட்டமான மொபைல் ஃபர்ஸ்ட் டு ஏஐ ஃபர்ஸ்ட் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஹோம், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் லென்ஸ், கூகுள் புகைப்பட செயலி, விபிஎஸ் மற்றும் ஏஐ ஆகியவை முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. கூகுள் ஹோம் மூலம் நமது வீட்டின் மின்சாதனங்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் நமக்கு தேவையான தகவல்களை தேடவும் உதவுகிறது. 

           இனி நீங்கள் கூகுள் ஹோம் மூலம் இலசமாக கால் செய்ய முடியும். யூட்யூபின் 360 டிகிரி வீடியோக்களை உங்கள் வீட்டு டிவியிலும் பார்க்க முடியும். மேலும் சூப்பர் சாட் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சேவை மூலமாக, யூடியூப் லைவ் வீடியோக்களில் உங்களின் கமெண்டை அனைவரையும் பார்க்க வைக்கலாம். கூகுளின் புகைப்பட செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படும் 120 கோடி புகைப்படங்களில், நீங்கள் எடுக்கும் தன்னிச்சையான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள நபரை கண்டறிந்து அவருக்கு பகிரும் அளவுக்கு இந்த செயலி வளர்ந்துள்ளது. 

           நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில், நம்மை மறைக்கும் தடைகளை அகற்றித் தரும் கூகுள் செயலி. உதாரணமாக கம்பி வேலியின் பின் உள்ளவரை புகைப்படம் எடுத்தால், அந்த கம்பி வேலியை அகற்றிக் கொடுக்கும் கூகுள் செயலி. விபிஎஸ் (விவல் பொசிசனிங் சிஸ்டம்) என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது கூகுள். பொதுவாக ஜிபிஎஸ்ஐ பயன்படுத்தி நீங்கள் எந்தக் கடையில் சென்று ஷாப்பிங் செய்யலாம் என்று முடிவு செய்வீர்கள். இனி விபிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த கடையில் எந்த பொருள் எங்கிருக்கிறது என்பதை உங்கள் மொபைலிலேயே அறியலாம். 

          விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி உள்ளிட்டவற்றை மேம்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. கூகுள் ஸ்டாண்ட் அலோன் என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை எச்டிசி மற்றும் லெனோவா நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஆகுமெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி கூகுல் ஃபார் டேப் சேவை, மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், கோட்லின் என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, ஆகிவற்றை உருவாக்க உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பற்றி பலரும் பேசினார்கள். இதன் மூலம் ’ஏஐ’, நமது விருப்பத்தை புரிந்து கொண்டு நமக்கான உதவிகளை தன்னிச்சையாக செய்யும். கூகுல் மொழியாக்கம் முதல் கூகுல் புகைப்பட செயலி வரை அனைத்துக்கும் முக்கியமான காரணம் ஏஐ என்ற இந்த கூகுள் அசிஸ்டண்ட் தான். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்து தயாரிப்புகளையும் கூகுள் உருவாக்கியுள்ளது.

             200 கோடி மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்சனான ’ஆண்ட்ராய்டு ஓ’ வின் பீட்டா வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. 1ஜிபி ரேம் கொண்ட போன்களிலும் ஆண்ட்ராய்டின் புதிய வெர்சன் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும். 

           கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம். மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் ஆங்கிலம் பிரேசில், போர்சுகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. விரைவில் இத்தாலியன், கொரியன் ஸ்பானிஸ் மொழிகளிலும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - GROUP 2A STUDY MATERIALS

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ஏப்ரலில் நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்து மற்றும் நேர்காணலில் அதிக மதிப்பெண் எடுத்து, வேலைக்கு தேர்வாகி உள்ள, 200 நபர்களின் பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 200 நபர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக, 10 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தேர்வானோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையில் சேராவிட்டால், காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு, வரிசைப்படி வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இன்ஜினியரிங் அட்மிஷன் கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் பார்க்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் (https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது. 

அந்த இணையதளத்தில் எந்த மாவட்டத்தில் மாணவர் படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைதொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்படும். அதில் மாணவர் படிக்க விரும்பும் கல்லூரி, துறையை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் சாதிவாரி இடஒதுக்கீட்டு பிரிவை தேர்வு செய்து உள்ளீடு செய்வதற்கான பட்டனை அழுத்தியதும், குறிப்பிட்ட கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணினி திரையில் தெரியும். இதன்மூலம் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணையும் தங்களின் கட் ஆப் மதிப்பெண்ணையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிலிருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் திருச்செங்கோட்டில் பேச்சு.

மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை: அமைச்சர் தகவல்
அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.
இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
-கல்விச்சிறகுகள்

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கேரள மாநிலம்
மொத்த காலியிடங்கள்: 1193
பணி: Gramin Dak Sevaks (GDS)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.appost.in/gdsonline/Home.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி திறப்பு தள்ளிப் போகுமா?

பள்ளி திறப்பு தள்ளிப் போகுமா? பள்ளி திறப்பு தள்ளிப் போகுமா? என்ற கேள்விக்கு ஈரோட்டில் பதிளளித்த அமைச்சர் செங்கோட்டையன்,
கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பது குறித்து முதல்வரை சந்திக்க உள்ளேன் எனக் கூறினார். 

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்!செங்கோட்டையன் பேட்டி!!
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்!!

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
 1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550
3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550
5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300
10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-
மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள். 

நாளை சமுகத்தின் 
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப்படுபவர்கள்...
இச்சமூகத்தில்
நல்ல மாற்றங்களை
நம்மால்
ஏற்படுத்த முடியும்...
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
நம்பிக்கை வையுங்கள்...
2. ஒற்றுமையே உயர்வு
ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்றவேண்டும் - என்று
உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவ கசக்கும்...
3. முதல் பயணம்...
அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம்தள்ளுங்கள் அதை முதலில்
பின் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறுஎதுவும் அல்ல
உங்கள் தன்னம்பிக்கை 
4. விளக்கு எரிய...
நல்ல மாற்றங்கள்
நம்மிடம் இருந்து பிறக்கப்போகிறது - என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாரட்டிக்கொள்ளுங்கள்
இந்த சுயபாரட்டு - நம்மை
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்
சோர்வடையசெய்யாது...
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...
5. தடை ஓட்டப் பயணம்..
உங்கள் நெடும்பயணத்தில்
கேலிகள் வேலிபோடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விறையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...

6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...
உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த இருட்டு பயனத்தில்
இன்னொரு ஓளி
ஆம் உங்களை போன்றே
உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது
சென்றுகொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..
அவரைப்பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...
நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...
7. தோள் கொடுத்து தொடருங்கள்
இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம்
உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும்
தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டுபோகும்
தற்போது மெல்ல வெற்றி
வெளிச்சம் போட்டுக்காட்டும்
உங்களின் பயணப்பாதையை...
8.உங்கள் வெற்றி இதுவல்ல
இது உங்களின் வெற்றியல்ல
உங்கள் தன்னம்பிக்கயின் வெற்றி
அதிராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாய்
நீங்கள் வந்த பாதையை
சற்று திரும்பி பாருங்கள்
ஒரு கூட்டமே
ஒளிப்பிழம்பாய் வந்துகொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...
- இது ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு
அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க... 
1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் சீர்படுத்துங்கள்.
2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்துகொண்டு வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...
3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கசொல்லி பயிற்சி கொடுங்கள்..
4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய்
பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு வரச்செய்யுங்கள் இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் நிலைநிறுத்த பயன்படும்.
5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்
6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலிநடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு கருகொடுங்கள்...
7. கருவை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து அவர்களையும் வாசிக்கவைத்து ஒழுங்குபடுத்தி வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...
8. தொலைக்காட்சி செய்திவாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப்படுத்துங்கள்.
9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளை பெற்றுக்கொடுங்கள்..
10. பரிசுகளை வழங்குங்கள்.
விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, காய்விட்டே கனியாகிறது... 
இதே போல தான் மாணவர்கள் உங்களுக்கு எந்தநிலையிலும் எந்தகலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டாவாதத்தையும் விட்டுவிட்டு...
நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தை துவக்குங்கள்...
நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..

சொந்த பணத்தில் வகுப்பறையை மாற்றியமைத்த ஆசிரியர் " அன்னபூர்ணா" - இப்படிக்கு இவர்கள் நிகழ்ச்சி | ஞாயிறு ( 21.05.2017 ) இன்று இரவு 7.30 மணிக்கு NEWS 18 - தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்!!

முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்

'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலைமருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டது.எம்.டி., - எம்.டி.எஸ்., போன்ற அனைத்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, மாநில இடங்களுக்கும், 'நீட்' மதிப்பெண் தேவை என, அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள், 2016 டிசம்பரில் நடத்தப்பட்டன. பல்வேறு பிரச்னைகள் காரணமாக, முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் இம்முடிவுகள் வெளியிடப்பட்டன.தமிழகத்தைச் சேர்ந்த, பல டாக்டர்கள் முதுகலை படிப்புக்கு தேர்வாகினர்.
இவர்களில், கோவையைச் சேர்ந்த ஒன்பது டாக்டர்கள், டில்லியில் உள்ள முதல்தர கல்லுாரிகளில் தேர்வு பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'நீட் தேர்வால், அகில இந்திய அளவில், நம் மாணவர்கள் இடங்களை பிடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.'கடந்த ஆண்டுகளில், முதுகலை படிப்பு பயில விரும்புவோர், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளை மட்டும் தேர்வு செய்தனர்.
போட்டி, மாநிலத்துக்கு உள்ளேயே முடிந்துவிடும். தற்போது அதிக எண்ணிக்கையில், முதல்தரமருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.'இதன் மூலம், நம் மாணவர்களின் திறமை வெளி வந்துள்ளது. 'நீட்' தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் உயரும்' என்றார்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்

நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப்பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கியுள்ளது.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள, தேசிய மருத்துவக் கொள்கையின்படி, நோய்த் தடுப்பு முறைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.புற்றுநோய்அதன்படி, என்.சி.டி., எனப்படும், ஐந்து முக்கிய தொற்றாத நோய்கள் உள்ளதா என்பதற்கான பரிசோதனை திட்டம், டில்லியில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், மன உளைச்சல், நீரிழிவு மற்றும்வாய், கருப்பை, மார்பக புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.இந்த திட்டம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜே.பி. நட்டா கூறியதாவது:தற்போதைய வாழ்க்கை முறையால், பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறோம்.
இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதுடன், நாட்டின் உற்பத்தியும் பாதிக்கிறது.அதனால் தான், நோய்க்கு சிகிச்சைக்கு பதிலாக, நோய் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.சிகிச்சை மையம்அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றாத நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக,100 மாவட்டங்களில் உள்ளவர்ளுக்கு இந்த சோதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி பேருக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படும்.இரண்டு ஆண்டுகளில், இந்த வகை நோய்களுக்கான சிகிச்சை மையங்கள், நாடு முழுவதும், 400 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பிரசாரம்
மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சரும், அப்னா தள் கட்சியைச் சேர்ந்தவருமான அனுபிரியா படேல் கூறியதாவது:ஐந்து வகையான, தொற்றாத நோய்களின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளன. இந்த நோய்களால், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.நீரிழிவு நோயால், ஏழு கோடி பேரும்; மாரடைப்பு நோயால், 78 கோடி பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த புள்ளி விபரங்களின்படி, இந்த நோய்களின் தீவிரம் புரிய வரும்.நம் வாழ்க்கை முறையால், இந்த நோய்கள் ஏற்படுவதால், அவற்றை தவிர்ப்பது மிகவும் சுலபம். இது தொடர்பான விழிப்புணர்வுபிரசாரம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகள் ஆய்வு
முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆண்டு ஆ ய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.சிறந்த ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் மீது நடவடிக்கை
நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, நூலகப்பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக்கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் ஆபத்தான முறையில் இருந்தால் அவற்றை சீர் செய்து தர வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் மாணவர்களுக்கு சென்று அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செய்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், மாணவர்கள் சேர்க்கை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளை களைய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் விவரங்களை மாதம் தோறும் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சனி, 20 மே, 2017

போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு....

சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது.தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்போர் என, 15 ஆயிரத்து, 711 பணி இடங்களுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
அதிகபட்சமாக, சென்னையில், 45 ஆயிரத்து, 523 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது. இதற்காக, சென்னை உட்பட, 410 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'பிட்' அடிப்போர் மற்றும் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவோரை பிடிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிக்கு டா..டா...காட்டிய கிராமம்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தவாசல் மாணவர் சேர்க்கை 100℅  ஆக மாறியது.அதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர் சி.இளவழகனின் முயற்சி சிறப்பானது. இந்த ஊருக்கு மஞ்சள் நிற வாகனம் ( தனியார் பள்ளி வாகனம் ) வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தார்.அனைத்து ஆசிரியர்களிடம் கலந்து பேசினார்.
அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சில திட்டங்களையும், தீர்மானங்களையும் நிறைவேற்ற உறுதி எடுத்தார். இக்கிராம மக்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியை விடுத்து தனியார் பள்ளிக்கு செல்வதற்கான காரணம் என்ன என்று யோசித்தார். ஆராய்ந்து பார்க்கும்போது தான் அவருக்கு சில உண்மைகள் புரிந்தது. தனியார் பள்ளியில் இருக்கும் கணினி வழிக்கல்வியும் ,ஆங்கிலமும் தான் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிந்துகொண்டார். உடனே அத்தகைய கல்வியை நமது பள்ளியிலேயே ஏன் உருவாக்கக்கூடாது என நினைத்த அவர் அதற்கான வசதிகளை உருவாக்க கடுமையாக போராடினார்.
தனது சொந்த செலவில் ரூ.1,68,000 ஒன்பது கணினிகள் ,Projector போன்றவற்றை வாங்கி கணினிவழிக்கல்வியினை ஏற்படுத்தினார். பல புரவலர்களை நாடி அவர்களின் உதவியால் மேலும் பல கணினிகள் பெற்று மொத்தம் 15 கணினிகளை உருவாக்கி தினமும் குழந்தைகளுக்கு பயிற்சியளித்தார். காணொளி காட்சி மூலம் வகுப்புகள் ,ஆங்கிலத்தில்  பேச்சு பயிற்சியும் வழங்கி படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த முறையில் முதல் முறையாக கல்வித்திருவிழாவினை ஏற்படுத்தி குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவினையும், திறமைகளையும் கிராமத்து மக்களுக்கு எடுத்துக்காட்டினார். குழந்தைகளின் திறமைகளைக் கண்ட பெற்றோர்கள் அந்த மேடையிலே புரவலர்களாக மாறி ரூ.1,59,000 பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்தனர்.கோடை வெயிலினையும் பொருட்படுத்தாமல் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுபட்டார்கள்.
அதன் விளைவுதான் தனியார் பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக டா...டா...காட்டினர் ஊர்மக்கள்.
இன்று வரை தனியார் பள்ளியில் படித்த 49 குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில் 100% மட்டுமல்லாமல் இப்பள்ளியில் பசுமைத்தோட்டம் அமைத்து அதில் விளைகின்ற காய்கறிகளை மதிய உணவிற்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களை அழைத்து எழுத்துப்பயிற்சி ,கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 ஒரு ஆசிரியரின் சீரிய சிந்தனை ,கடின உழைப்பு சிகரத்தையும் தொட முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
வானம் தொட்டு விடும் தூரம்தான்......!!!
-கல்விச்சிறகுகள்

சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், சென்டம் வாங்குவோர் எண்ணிக்கை, லட்சத்தை தொடுவதாக உள்ளது. முந்தைய ஆண்டு களில், சென்டம் எண்ணி க்கை அதிகரித்ததால், விடைத்தாள் திருத்த முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, 2016ல், ஓரளவுக்கு தரமான திருத்தம் நடந்தது.
மீண்டும் இந்த ஆண்டு, சுதந்திரமான திருத்த முறை பின்பற்றப்பட்டதால், சென்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை 
எட்டியுள்ளது. மற்ற மாநிலங்களில், பொது தேர்வில் விடை திருத்தம் மிகத் தரமாகவும், சீராகவும் நடக் கிறது. தமிழகத்தில் மட்டும், 'தியரி' என்ற கட்டுரை எழுதும் வடிவில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. 
அதனால், தமிழக மாணவர்கள்,சிந்தித்தல் திறனை பரிசோதிக்கும், போட்டித் தேர்வுகளில் ஜொலிக்க முடிவதில்லை. தேசிய அளவிலும், மற்ற தளங் களிலும், தங்கள் கல்வித் தரத்தை, சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, பிளஸ் 1லும், பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு களில் சேருவோர், அங்குள்ள சிக்கலான வினாத்தாள்களை எதிர் கொள்ள முடியாமல் திணறு கின்றனர். குறைந்த மதிப்பெண் பெறுவதும், தேர்ச்சி குறைவதுமாக உள்ளது. 
பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றதால், பிளஸ் 2வில், அலட்சியமாக இருந்து விடுகின்றனர். பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, உயர் கல்வியில் சறுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வரும் காலங்களில் மதிப்பெண்ணை அள்ளி வழங் கும் தேர்வாக இல்லாமல், மாணவர்களின் சிந்தித் தல் திறனை அதிகரிக் கும் தேர்வாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழக அரசு மாற்ற வேண்டும். 
தற்போது, விடைக்குறிப்பை பார்த்து, சரிபார்க்கும்
எழுத்தர் போன்றே, ஆசிரியர்கள் விடை திருத் துகின்றனர். சி.பி.எஸ்.இ., போன்று, தரமான வினாத்தாளை தயாரித்து, விடை திருத்தம் செய்யும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளித்து, தரமான திருத்துனர்களாகவும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. 
இந்த மாற்றம் வந்தால் மட்டுமே, பிளஸ் 2விலும், பின், கல்லுாரிகளிலும் தமிழக மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்புகளை பெற முடியும் என, கல்வியாளர் கள் தெரிவித்துள்ளனர்.

மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி.......

பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்கம் போல, அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. 
100 சதவீத தேர்ச்சியிலும், அரசு பள்ளிகளை விட, இரு மடங்கு அதிகமாக, தனியார் பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. அதே நேரத்தில், தேர்ச்சி விகிதத்தில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் அதிகளவில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 5,059 பள்ளிகளில், 44 சதவீதமாக, 2,232 மேல்நிலைப் பள்ளிகளும்; 56 சதவீதமாக, 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. அதாவது, மேல்நிலைப் பள்ளிகளை விட, 12 சதவீதம் கூடுதலாக, உயர்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன
 அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 10ம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்படும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளில், 41 சதவீத பள்ளிகளும்; பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 2,637 மேல்நிலைப் பள்ளிகளில், 14 சதவீத பள்ளிகளும், ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதாவது, அரசு மேல்நிலைப் பள்ளிகளை விட, அரசு உயர்நிலைப் பள்ளிகள், 27 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளிகளில், சீனியர் மாணவர்களான, 9, 10ம் வகுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்துவர்; சிறப்பு பயிற்சிகளும் வழங்குவர். மேல்நிலைப் பள்ளி களில், பிளஸ் 2 பொது தேர்வுக்கே முக்கியத்துவம் அளிப்பர்; 10ம் வகுப்புக்கான முக்கியத்துவம் குறையும். நிர்வாக ரீதியான இந்த காரணங்கள் தான், உயர்நிலைப் பள்ளி களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டம்தோறும் 100% எடுத்த பள்ளிகள்........

பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி, 98.17 சதவீதத்துடன், இரண்டாம் இடமும், 98.16 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. 
கடலுார் மாவட்டம், 88.74 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும், கடலுார், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து பின்னோக்கி செல்கின்றன. இந்த மாவட்டங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்வதால், மற்ற மாவட்டங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. 

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 லட்சத்து, 25 ஆயிரத்து, 909 பேர் தேர்வு எழுதியதில், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி சதவீதம், 2016யை விட, 0.8 சதவீதம் அதிகம்; மாணவர்கள், 1.2 சதவீதமும், மாணவியர், 0.3 சதவீதமும், அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், 5,059 பள்ளிகளில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த பள்ளிகளில் இது, 41.5 சதவீதம். மொத்தம், 57 ஆயிரத்து, 450 பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்வில், 38 ஆயிரத்து, 613 பேர், 481க்கு மேலும், ஒரு லட்சத்து, 61 ஆயிரத்து, 370 பேர், 450க்கு மேல் கூடுதலாகவும் மதிப்பெண் பெற்றுஉள்ளனர். முந்தைய ஆண்டுகளில், 10ம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சம் பேர் வரை, 'சென்டம்' பெற்றனர். ஆயிரக்கணக்கானோர், 'டாப்பர்ஸ்' என்ற, மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று பேர் பட்டியலில் இடம் பெற்றனர். இந்த ஆண்டும், 1.61 லட்சம் பேர், அதிகபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். 
இவர்களுக்கு, 'ரேங்கிங்' வைத்து, 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிட்டிருந்தால், குறைந்தபட்சம், 10 ஆயிரம் பேர், 'ரேங்க்' பெற்றிருப்பர். தமிழக பள்ளிக்கல்வி தேர்வுகளில், இப்படி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு பின், மற்ற மாணவர்களுடன், உயர்கல்வியில் திணறும் நிலை உள்ளது. எனவே, பாடத்திட்ட மாற்றத்துடன், தேர்வுத் துறையின் வினாத்தாள் தயாரிப்பு, திருத்த முறை, மதிப்பெண் வழங்கும் விதிகள், தரமான விடைக்குறிப்பு போன்றவற்றில், கூடுதல் கட்டுப்பாடுகளை
கொண்டு வர வேண்டியகட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்

ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர். 
இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத்தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.
இனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. 
பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர். 
ஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது; 
அதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம்.
தங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம். 
நடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.
மற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
துறை செயலரின் இந்த விளக்கம், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மார்ச்சில் நடந்த, 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர். அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளை
ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகள் எண் ணிக்கையும் உயர்ந்துள் ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, விருது நகர் மாவட்டத் தில், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 
100 சதவீதம்:தலா, 83 பள்ளிகளுடன், ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தை யும்;கன்னியாகுமரி, 91 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. சென் னையில், மூன்று பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவர் களின் ஒட்டு மொத்த

தேர்ச்சியில், மாவட்ட அளவில், 97.79 சதவீதத் துடன், கன்னியாகுமரி முதல் இடத்தையும்; 97.69 சதவீதத்துடன், விருதுநகர் இரண்டாம் இடம்; 97.61 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள் ளன. 28 அரசு பள்ளிகள் உடைய சென்னை மாவட்டம், 91.41 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 
கூடுதல் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே, ௩.௭ சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்வு எழுதிய மொத்த மாணவியரில், 96.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் தேவை
பாடத்திட்டங்களை மாற்றாமல், மெருகூட்டும் பயிற்சிகள் இல்லாமல், அரசு பள்ளி மாணவர் கள், இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எனவே, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாண வர் சேர்க்கையை உயர்த்தவும், ஆங்கில மொழி திறன், போட்டித் தேர்வுகளில் பங்கேற் கும் ஆற்றலை வளர்க்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி மற்றும் சம்பள உயர்வில் மட்டுமின்றி, மாணவர்கள் முன்னேற்றத்திலும், அக்கறை காட்டும் ஆசிரியர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுத்தால், இன்னும் முன்னேற் றம் கிடைக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்ஜினியரிங் அட்மிஷன் கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் பார்க்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் (https://www.tnea.ac.in/) பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளது. 
அந்த இணையதளத்தில் எந்த மாவட்டத்தில் மாணவர் படிக்க விரும்புகிறார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதைதொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியலிடப்படும். அதில் மாணவர் படிக்க விரும்பும் கல்லூரி, துறையை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் சாதிவாரி இடஒதுக்கீட்டு பிரிவை தேர்வு செய்து உள்ளீடு செய்வதற்கான பட்டனை அழுத்தியதும், குறிப்பிட்ட கல்லூரியில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணினி திரையில் தெரியும். இதன்மூலம் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணையும் தங்களின் கட் ஆப் மதிப்பெண்ணையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிலிருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

NEW PGTRB STUDY MATERIALS..........

PREPARED BY
KAVIYA COACHING CENTER
KUMAR M.A.BEd,D.T.Ed,HDCA. (ENGLISH TEACHER),
THE DHARMAPURI-CO-OPRATIVE SUGAR MILLS
MATRICULATION SCHOOL,
PALACODE,
DHARMAPURI.
9600736379.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

Udhaya Sankar அவர்கள் எழுதிய பதிவு... உங்கள் டைம் லைனில், உங்களுக்கு தெரிந்த க்ரூப் மற்றும் பேஜ்களில், வாட்ஸ்அப் போன்ற அனைத்து வழிகளிலும் இப்பதிவை ஷேர் செய்து உதவுங்கள் நண்பர்களே ! 
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்தி மரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளைகளைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14 வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30 வது நாள் இலைகள் வந்துடும். 70 வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள்... அதாவது ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும் அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
* பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
* ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால் நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனி நபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல் பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது !!

நேற்றைய (19.5.2017) கவுன்சலிங்கில் இடமாறுதல்/பதவி உயர்வு பெற்ற அனைத்து AEEO-க்களும் 1.6.2017-ல்
பணியில் சேர ஆணையிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 மே, 2017

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.......

பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.
பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

NEET Exam | பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.

நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 7-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலைகல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வு நாடு முழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற்றது. வரும் ஜூன் 8-ம் தேதி இத்தேர்வின் முடிவு வெளியாக உள்ளது. 95 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்வி கள் கேட்கப்பட்டன.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப் பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்த வேண்டும். தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல், வேதி யியல்பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். பிளஸ் 1 பாடங்களில்அதிகம் நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப் பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்1 இயற்பியல் பாடத்தில் 49 சதவீதமும், பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 51 சதவீதமும், பிளஸ் 1 வேதியியல் பாடத்தில் 42 சதவீதமும், பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 58 சதவீதமும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
 பிளஸ் 1 தாவரவியல் பாடத்தில் 47 சதவீதமும், பிளஸ் 2 தாவரவியல் பாடத்தில் 53 சதவீதமும், பிளஸ் 1 விலங்கியல் பாடத்தில்67 சதவீதமும், பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் 33 சதவீதமும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீதகேள்விகளும், பிளஸ் 2 பாடங்களில் இருந்து 48.75 சதவீத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு......


பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை 
http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்!

அரசுப் பள்ளி என்பது ஏற்றத் தாழ்வற்று, அனைத்து மாணவர்களும் ஒன்றாக கல்வி பெறுவதற்கான அற்புதமான இடம். இன்று, மிகப் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம், தங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி கேட்டால் மணிகணக்கில் சிலாகிப்பார்கள். அந்தப் பருவத்தில் உருவான நட்பு என்பது நெடுங்காலத்துக்கு தொடந்துவரும். அதெல்லாம் சரி. அதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா?
முடிவுக்கு வந்த பள்ளி மாணவிகளின் எட்டு நாள் உண்ணாவிரதம்... இறங்கிவந்த அரசாங்கம்!
இப்போதும் அரசுப் பள்ளியில் நெகிழ்வான தருணங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த அழகான தருணங்களையும், கூடுதலாக அருமையான செய்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது. கூர்ப்பி - ஷார்ப்பனர் என்பதன் தமிழ்ப் பெயர்.
இந்தக் குறும்படம், நம்மை புதுக்கோட்டை மாவட்டம், ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகிலா எனும் மாணவிக்கு மந்திரக் கூர்ப்பி ஒன்று கிடைக்கிறது. அந்தக் கூர்ப்பியில் பென்சிலைத் துருவும்போது நாம் என்ன கேட்கிறோமோ அந்த உருவத்தைத் தரும். உதாரணமாக, குடை எனக் கேட்டு பென்சிலைத் துருவினால், பென்சிலின் துருவல் குடை வடிவத்தில் கிடைக்கும். ஆனால், 24 மணிநேரத்தில் ஒரு முறையாவது இந்தக் கூர்ப்பியைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கூர்ப்பியின் மந்திரத் தன்மை அதை விட்டு விலகிவிடும். இந்தக் கூர்ப்பியால் முகிலாவை மாணவர்கள் எப்போதும் சூழ்ந்துகொள்கிறார்கள்.
முகிலாவும் மாணவர்கள் கேட்கும் வடிவங்களை உருவாக்கித் தருகிறாள். ஒரு நாள் இரவு, வீட்டில் முகிலா படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டு, ட்யூப் லைட் அணைந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விளக்கு எடுத்து வைக்கிறார் முகிலாவின் அம்மா. அப்போது இருட்டில் கூர்ப்பியை அம்மா உதைத்துவிடுவதால், பாத்திரத்தின் இடுக்கில் அது மாட்டுக்கொள்கிறது. எவ்வளவு தேடியும் முகிலாவால் கூர்ப்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் பள்ளிக்குச் செல்லும் முகிலாவிடம் நண்பர்கள் வழக்கம்போல உருவங்களை வரவழைக்க கேட்கிறார்கள். தான் கூர்ப்பியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாக கூறுகிறாள். அடுத்த நாளும் கூர்ப்பி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல, முகிலாவிடம் முன்பு போல ஒட்டாமல் பழகுகிறார்கள் நண்பர்கள். அன்று மாலை வீட்டுச் செல்லும்போது, கூர்ப்பியைக் கண்டுபிடித்து அவளின் அம்மா தருகிறார். ஆனால், அது மந்திரத் தன்மையை இழந்துவிடுகிறது. ஆனால், கூர்ப்பி முகிலாவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைக் கொடுக்கிறது. அது என்னவென்று நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கூர்ப்பி குறும்படம் அதில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கச் சொல்கிறது. மந்திரங்கள் நிரந்தமல்ல... அல்லது மந்திரத்தால் ஏதும் சாத்தியமில்லை, விருப்பமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் படைப்பாற்றலை உருவாக்கி, வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறது கூர்ப்பி குறும்படம். முகிலாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்யா எனும் மாணவி காட்சியை உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்.
கதை ஒரு புறம் சென்றாலும் ஓர் அரசுப் பள்ளியின் அழகான தருணங்கள் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் பார்வையாளர்களை பழைய பருவத்துக்கே அழைத்துச் செல்கிறது. ஹோம் வொர்க் ஏன் செய்யவில்லை என மாணவியிடம் கேட்கும் ஆசிரியர், பிரேக் டைமில் டயர் வைத்து விளையாடுவது என பள்ளியின் நடுவே நாம் பயணிக்க வைக்கிறது. இன்னுமொரு காட்சியில், முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது. அதை ஒரு மாணவன் எடுத்து வரும்போது தட்டிலிருந்து முட்டை மண்ணில் விழுந்துவிடுகிறது. இதைக் கவனித்த ஒரு மாணவி தன் தட்டிலிருக்கும் முட்டையின் பாதியை அந்த மாணவனின் தட்டில் வைக்கிறாள். இதுபோல படம் முழுக்க நெகிழ்வான காட்சிகள் இருக்கின்றன.
ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சாமியப்பன் எழுதிய கதையை எம். வெங்கடேசன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ச.ஹரிஹர சுதன் இயல்பான காட்சிகளாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களின் சத்தம் படம் முழுக்க வருகிறது. அது நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. படத்தின் 18 நிமிடங்கள். இவ்வளவு நீளம் தேவையில்லை என்றே தோன்கிறது. ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் இந்தக் கதையை இன்னும் அழுத்தமாக பதிய வைத்துவிட முடியும்.
கதையாசிரியர் சாமியப்பனிடம் பேசியபோது, "இந்தப் படம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. லக்‌ஷ்யாவின் இவ்வளவு அழகாக நடிப்பாள் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தான் நடித்ததை காட்டச் சொல்லிப் பார்ப்பாள். சரியில்லை என்றால் அவளே இன்னொரு முறை நடித்த காட்சிகள் இருக்கின்றன." என்கிறார்.
நல்ல கதையைக் கொண்டு நல்ல முயற்சியை மேற்கொண்ட இந்தப் படக் குழுவின் பயணம் வெல்லட்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.
-நன்றி விகடன்

தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

தொடக்கக் கல்வி துறையின் சார்பில்நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.
அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினைதொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டுதடையை விலக்கியது.
1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்றஇடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.
2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்குதனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்ககல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினைசெய்யஅரசுக்கு உத்தரவு.