>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 10 மே, 2017

CPS ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டித் தொகை கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

முதுநிலை மருத்துவ படிப்பு பொது பிரிவில் 374 பேர் தேர்வு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பொது பிரிவில், 374 பேர் இடங்கள் பெற்றனர். 
தமிழகத்தில், 13 அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,489 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 762 இடங்கள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, கலந்தாய்வு நடந்தது. நேற்று, பொதுப்
பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. அழைக்கப்பட்ட, 104 பேரில், 379 பேர் பங்கேற்றனர். இதில், 374 பேர் இடங்கள் பெற்றனர்; ஐந்து பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நேற்று முன்தினம் சிறப்பு பிரிவில், 10பேருக்கு இடங்கள் கிடைத்தன. வரும், 11ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது.
'ஏசி' பழுதால் தவிப்பு : கலந்தாய்வு நடந்த அரங்கில், மாணவர்கள், அலுவலர்கள் என, 
400க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். ஆனால், அரங்கில், 'ஏசி' பழுதானதால், அவர்கள், வெப்பத்தாக்கம், காற்றோட்டம் இன்றி தவித்தனர்.

B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

தொடக்கக் கல்வி - நலத்திட்டங்கள் - மாவட்ட அளவில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் 11.05.2017 அன்று நடைபெறுதல் சார்ந்து செயல்முறைகள்

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்

அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும்,தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. அவற்றை இணையதளத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ., நிறுவனங்கள், அங்குள்ள தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடுபோன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைஇணைப்பில், தேசிய, 'ஆர்க்கிடெக்' கவுன்சில் அங்கீகாரத்தில், 90 பி.ஆர்க்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 6,000 இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இந்தக் கல்லுாரிகள், 2015ல், அமலான விதிகளை பின்பற்றுகின்றன. இந்த ஆண்டு, 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில், கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்போது, ௮௦ மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளில், ௨௫ ஆசிரியர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, ஆசிரியர்களை, ௫௦ ஆக உயர்த்துவதோடு, கல்லுாரியின் பரப்பளவையும், 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, ஏப்ரல், 19ல் வெளியிட்ட, ஆர்க்கிடெக் கவுன்சில், 'புதிய விதிகளின்படி, இன்றைக்குள், கல்லுாரிகள் தயாராகவேண்டும்' என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, கல்லுாரி கள் தரப்பில் கூறியதாவது: பி.ஆர்க்., கல்லுாரிகளில், சமீபகாலமாக இடங்கள் நிரம்புவதே அரிதாக உள்ளது. 'நாட்டா' என்ற தேசிய நுழைவுத்தேர்வு, மே, ஜூனில், தினமும் ஆன்லைனில் நடத்தப்படும். ஒருமுறை தேர்ச்சி பெறாவிட்டால், ஐந்து வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த நடைமுறை, 1983ல் முடிவுக்கு வந்தது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒரே நாளில், ஏப்ரலில் தேர்வு நடத்தப்பட்டது. இது குறித்து,சரியான அறிவிப்புகளை வெளியிடாததால், மிக குறைந்த மாணவர்களே தேர்வு எழுதி உள்ளனர். பி.ஆர்க்., படிப்பில் சேர்வது எப்படி என, தவிப்பில் உள்ளனர். எனவே, கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய விதிகளை, 20 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, நெருக்கடி தரப்பட்டுள்ளது.குறைவான அவகாசத்தில், கல்லுாரிகளின் பரப்பளவை அதிகரிக்க, கூடுதல் நிலம் தேடுவதும், கூடுதல் ஆசிரியர்களை தேர்வு செய்வதும் முடியாத காரியம். எனவே, முந்தைய ஆண்டு பின்பற்றிய விதிகளையே, இந்த ஆண்டும் தொடர, அண்ணா பல்கலையும், ஆர்க்கிடெக் கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுன்சில் சொல்வது என்ன? :
இது குறித்து, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில் பதிவாளர், ஆர்.கே.ஓபராய் கூறுகையில், ''பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளோம்; அதிகாரப்பூர்வ கடிதங்களும் அனுப்பி உள்ளோம். கல்லுாரிகள் எங்களை முறைப்படி அணுகினால், அவர்களின் வேண்டுகோளை பரிசீலிக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைஇணைப்பில், தேசிய, 'ஆர்க்கிடெக்' கவுன்சில் அங்கீகாரத்தில், 90 பி.ஆர்க்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 6,000 இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இந்தக் கல்லுாரிகள், 2015ல், அமலான விதிகளை பின்பற்றுகின்றன. இந்த ஆண்டு, 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில், கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்போது, ௮௦ மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளில், ௨௫ ஆசிரியர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, ஆசிரியர்களை, ௫௦ ஆக உயர்த்துவதோடு, கல்லுாரியின் பரப்பளவையும், 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, ஏப்ரல், 19ல் வெளியிட்ட, ஆர்க்கிடெக் கவுன்சில், 'புதிய விதிகளின்படி, இன்றைக்குள், கல்லுாரிகள் தயாராகவேண்டும்' என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, கல்லுாரி கள் தரப்பில் கூறியதாவது: பி.ஆர்க்., கல்லுாரிகளில், சமீபகாலமாக இடங்கள் நிரம்புவதே அரிதாக உள்ளது. 'நாட்டா' என்ற தேசிய நுழைவுத்தேர்வு, மே, ஜூனில், தினமும் ஆன்லைனில் நடத்தப்படும். ஒருமுறை தேர்ச்சி பெறாவிட்டால், ஐந்து வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த நடைமுறை, 1983ல் முடிவுக்கு வந்தது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒரே நாளில், ஏப்ரலில் தேர்வு நடத்தப்பட்டது. இது குறித்து,சரியான அறிவிப்புகளை வெளியிடாததால், மிக குறைந்த மாணவர்களே தேர்வு எழுதி உள்ளனர். பி.ஆர்க்., படிப்பில் சேர்வது எப்படி என, தவிப்பில் உள்ளனர். எனவே, கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய விதிகளை, 20 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, நெருக்கடி தரப்பட்டுள்ளது.குறைவான அவகாசத்தில், கல்லுாரிகளின் பரப்பளவை அதிகரிக்க, கூடுதல் நிலம் தேடுவதும், கூடுதல் ஆசிரியர்களை தேர்வு செய்வதும் முடியாத காரியம். எனவே, முந்தைய ஆண்டு பின்பற்றிய விதிகளையே, இந்த ஆண்டும் தொடர, அண்ணா பல்கலையும், ஆர்க்கிடெக் கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுன்சில் சொல்வது என்ன? :
இது குறித்து, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில் பதிவாளர், ஆர்.கே.ஓபராய் கூறுகையில், ''பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளோம்; அதிகாரப்பூர்வ கடிதங்களும் அனுப்பி உள்ளோம். கல்லுாரிகள் எங்களை முறைப்படி அணுகினால், அவர்களின் வேண்டுகோளை பரிசீலிக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்


விண்ணப்ப பதிவு பணிகளை, http://www.tnau.ac.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு ஒதுக்கீட்டுபிரிவில், விண்ணப்பிப்போர், தேவையான சான்றிதழ்களை, பல்கலைக்கு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனிலும், வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.கூடுதல் விபரங்களை, 0422 - 6611345 / 6611346 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டம்

சென்னை: தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்;
ஊதிய முரண்பாடுகளை களைந்த பின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டும். மேலும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் 17ம் தேதியும், சென்னையில், 24ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மே, 27ம் தேதி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும், 30ம் தேதி சென்னையிலும், கோரிக்கை விளக்க கூட்டங்கள் நடைபெறும். ஜூன், 12 முதல், சென்னையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

B.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தோர்,இரண்டாம் ஆண்டு, இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை, http://www.accet.co.in/,http://www.accet.edu.in/ ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது.
தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், ௨௦௦௪ல் தயாரிக்கப்பட்டு, 2006 முதல் அமலில் உள்ளது. 13 ஆண்டுகளை தாண்டிய இந்த பாடத்திட்டத்தால், தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசிய தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், அவரிடம் பாடத்திட்டத்தை மாற்றும்படி, ஆசிரியர் சங்கத்தினரும்,கல்வியாளர்களும் மனு அளித்தனர். எனவே, பாடத்திட்டத்தைமாற்ற, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் முன்னாள் இயக்குனர், ஜி.பாலசுப்ரமணியன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும்கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 பாடத்திட்டத்தை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள, இந்த குழுவின் முதல் கூட்டம், நாளை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. இதில்,அமைச்சர், செயலர் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பாடத்திட்டத்தை எப்படி மாற்றுவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது, புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க, ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சிகள் தேவை என்பதுகுறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.

+2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு

*+2 தேர்வு முடிவுகள்*

*மே12 தேதி காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது..
தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.
Link 1: http://tnresults.nic.in
Link 2: http://dge1.tn.nic.in
 Link 3: http://dge2.tn.nic.in
Cell Phone இல் பார்க்க - Link 4: http://dge3.tn.nic.in

Link 1: http://tnresults.nic.in
Link 2: http://dge1.tn.nic.in
 Link 3: http://dge2.tn.nic.in

Cell Phone இல் பார்க்க - Link 4: http://dge3.tn.nic.in

B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.


செவ்வாய், 9 மே, 2017

NEET-UG 2017: Download Answer Key, Question Paper & Solution

SCERT- தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுத ஊக்குவித்தல்- மாவட்டம்தோறும் 100 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பணிமனை பயிற்சி- 10/05/2017 முதல் 12/05/2017 வரை - இயக்குனர் செயல்முறைகள்!!





பள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கான திருத்திய (REVISED)தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

PGTRB - Direct Recruitment of Post Graduate Assistants for the year 2017

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17
          

Dated:09-05-2017

Chairman

14 இணை இயக்குநர்,25 முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அதே நிலையில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடைக்காலமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட இணை இயக்குநர்கள் விவரம் (ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. என்.லதா- இணை இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலைக் கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
2. சி.உஷாராணி- இணை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம்).
3. வை.பாலமுருகன்- இணை இயக்குநர் 1, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம், சென்னை).
4. எஸ்.சேதுவர்மா- இணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வு இயக்ககம், சென்னை (இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை)
5. எஸ்.உமா- இணை இயக்குநர், மேல்நிலைக்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை)
6. கே.சசிகலா- இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
7. சி.செல்வராஜ்- இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை. (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).
8. எஸ்.சுகன்யா- இணை இயக்குநர், தொழிற்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
9. எஸ்.நாகராஜமுருகன்- இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை).
10. கே.ஸ்ரீதேவி- இணை இயக்குநர்- 2, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை).
11. ஆர்.பாஸ்கர சேதுபதி- இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், தொழிற்கல்வி,பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
12. கே.செல்வகுமார்- இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை).
13. பி.பொன்னையா- இணை இயக்குநர்- 3, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
14. நா.ஆனந்தி- இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை. (இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம், சென்னை).
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது):
1. ஆர்.சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருவாரூர் (திருநெல்வேலி).
2. எம்.இராமகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி (தூத்துக்குடி).
3. ச.செந்தில்வேல்முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை (சிவகங்கை).
4. அ.புகழேந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி, (விருதுநகர்).
5. எம்.வாசு- துணை இயக்குநர் (மாற்றுத்திறனாளிகள்), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை (தேனி).
6. ஜே.ஆஞ்சலோ இருதயசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் (மதுரை).
7. எம்.கே.சி.சுபாஷினி- முதன்மைக் கல்வி அலுவலர், தஞ்சாவூர் (திண்டுக்கல்).
8. து.கணேஷ்மூர்த்தி- முதன்மைக் கல்விஅலுவலர், கோவை (நீலகிரி).
9. நா.அருள்முருகன்- துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை (கோவை).
10. ஆர்.முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், கடலூர் (திருப்பூர்).
11. பெ.அய்யண்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர் (ஈரோடு).
12. ச.கோபிதாஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல் (நாமக்கல்).
13. கே.பி.மகேஸ்வரி- முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை (தருமபுரி).
14. எஸ்.சாந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர் (புதுக்கோட்டை).
15. தி.அருள்மொழிதேவி- முதன்மைக் கல்வி அலுவலர், பெரம்பலூர் (கரூர்).
16. என்.மாரிமுத்து- முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை (அரியலூர்).
17. க.முனுசாமி- துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (பெரம்பலூர்).
18. மு.இராமசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், தருமபுரி (திருச்சி).
19. ஆர்.திருவளர்ச்செல்வி- முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம், (தஞ்சாவூர்).
20. ச. மார்ஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், சென்னை (விழுப்புரம்).
21. ர.பாலமுரளி- முதன்மைக் கல்வி அலுவலர், ஈரோடு (கடலூர்).
22. ப.உஷா-முதன்மைக் கல்வி அலுவலர், நாமக்கல் (காஞ்சிபுரம்).
23. ஆ.அனிதா- முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி (சென்னை).
24. ஏ.வசந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், தேனி (துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்).
25. கே.கணேசன்- துணை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம், சென்னை (பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர், சென்னை).
இடைக்காலமாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் (ஏற்கெனவே இருந்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. பா.பிரியதர்ஷினி- செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை (மாவட்ட கல்வி அலுவலர், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்).
2. கே.ஒளி- முதன்மைக் கல்வி அலுவலர், அரியலூர் (மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர், விழுப்புரம்).
3. கே.பிச்சையப்பன்- முதன்மைக் கல்வி அலுவலர், நீலகிரி (மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்).
4. டி.மனோகரன்- முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர் (மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்).

DEO TO CEO PROMOTION LISTDEO TO CEO PROMOTION LIST