புதன், 12 ஏப்ரல், 2017
360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதம் இலவசம் ..
4G இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி இன்று சுமார் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இலவச அறிவிப்பே இந்த வரவேற்பிற்கு காரணம்
இலவசம் கொடுத்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஜியோ, டி. டி. ஹெச் சேவையிலும் முதல் மூன்று மாதங்கள் இலவசம் என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை மேலும் ஜியோ செட்-டாப் பாக்ஸ்ம் டிடிஎச் சேவையில் 360க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.அதில் 50 சேனல்கள் ஹெச். டி. சேனல்களாகும். ஜியோ சேவைகளைப் போலவே இவற்றையும் குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
"தன் தனா தன்' சலுகை: jio புதிய அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
"தன் தனா தன்' என்ற சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டாவை 84 நாள்களுக்கு பெறலாம். அதேபோன்று, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா 84 நாள்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதேசமயம், "சம்மர் சர்ப்ரைஸ்' திட்ட உறுப்பினர்களுக்கு இந்த புதிய சலுகை திட்டம் பொருந்தாது. பிரைம் திட்டத்தில் உறுப்பினராக சேராத வாடிக்கையாளர்கள் ரூ.408-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 1 ஜிபி டேட்டாவையும்; ரூ.608-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 2ஜிபி டேட்டாவையும் 84 நாள்களுக்கு பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 2006 முதல் அமலில் உள்ளது. இந்த பாடத்திட்டம், 2003ல் தயார் செய்யப்பட்டது. எனவே, 14 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை, தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டம், 2013ல் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு ஒப்புதல் வழங்காமல், கிடப்பில் போட்டது.
இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாகியுள்ளது. இந்த தேர்வில், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 54 வகை பாடத்திட்டங்களில் இருந்து, கேள்விகள் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டம், 'அப்டேட்' செய்யப்படவில்லை.
எனவே, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என, கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி, நமது நாளிதழில், பல முறை செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,க்கு ஈடாக, புதிய பாடத்திட்டம் தயார் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித்துறை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்களின் அம்சங்கள், தமிழக பாட புத்தகங்களில் உள்ளனவா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ள ஆசிரியர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பாட புத்தகங்களில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ள அம்சங்களை, தமிழில் மொழி பெயர்க்கும் பணி துவங்கியுள்ளது.
வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன. எனவே, பழைய புத்தகங்களை மாற்ற முடியாது. ஆனால், பிளஸ் 1 பாட புத்தகத்தில், சி.பி.எஸ்.இ.,யிலுள்ள சில பகுதிகளை கூடுதலாக சேர்க்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மே இறுதியில், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
CCE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)
மேப்'பில் 180 நாடுகளின் பெயர்; 7 நிமிடத்தில் பொருத்திய மாணவி
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி, 180 நாடுகளின் பெயர்களை, உலக வரைபடத்தில் சரியாக பொருத்தி, சாதனை படைத்தார்.
நேற்று முன்தினம், இச்சாதனையை பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் வகுப்பு மாணவி லாவண்யா, உலக வரைபடத்தில் உள்ள, 180 நாடுகளையும், 7 நிமிடங்களில், அதற்குரிய இடங்களில், சரியாக பொருத்தினார்.அதே வகுப்பில் படிக்கும் ராகவி, 5 நிமிடம், 56 வினாடிகளில், 180 நாடுகளின் பெயர்களை, முதலில் எழுத்துக்களையும், பின், நாட்டின் பெயர்களையும் வாசித்து முடித்தார்.
மேலும், ரியா என்ற மாணவி, உலக வரைபடத்தில், அந்தந்த நாட்டின் பெயர்களை, 15 நிமிடங்களில் ஆங்கிலத்தில் எழுதினார். இந்த மூன்று சாதனைகளையும், 'ரியல் வேல்ட் ரெக்கார்ட்' என்ற அமைப்பு பதிவு செய்து, அதற்கானசான்றிதழ், விருதுகளை வழங்கியது.
மாணவியருக்கு பயிற்சி அளித்த, ஆசிரியைஆனந்திக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.சாதனை மாணவியருக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ரங்கநாதன் பாராட்டு தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை...
கிருஷ்ணகிரி: 'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறியவில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்வர்ணராணி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை, வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், வேலையில்லா கணினி பி.எட்., ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்தி, அதற்காக அச்சிடப்பட்ட பாட புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த, 2006ல் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை கொண்டு வந்து, அங்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்ளை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..
நன்றி:தினமலர்
வெ.குமரேசன்
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
© பதிவு எண் : 655/2014
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
© பதிவு எண் : 655/2014
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
ராமநாதபுரம், சேதுபதி நகரை சேர்ந்த டி.ராஜூ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட விபரப்படி, 2009 முதல் 2016 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35,357 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் 278 பேர் மட்டுமே. இது ஒரு சதவீதம் மட்டுமே. எனவே, நீதிமன்றம் தலையிட்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘மனுதாரர் குறிப்பிடும் பிரச்னை அரசின் கொள்கை முடிவு தொடர்பானது’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘ஏற்கனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ேவலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்னையில் அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்
2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
15.11.2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது நினைவு கூறத்தக்கது.
பள்ளிகுளம் பள்ளிக்கு விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளி விருதுடன்.. ரூ 50,000 பரிசு... அரசின் முதல் அங்கீகாரம் ...
எங்கள் பள்ளிகுளம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு இந்த கல்வியாண்டு ரொம்ப சிறப்பாவே முடிஞ்சிருக்கு. இப்பதா குஜராத் போய்ட்டு DFC விருது வாங்கிவந்தோம்.
இப்ப மாவட்ட கல்வித்துறை எங்கள் பள்ளிகுளம் நடுநிலைப்பள்ளியை விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளியாக தேர்ந்தெடுத்து 2016 ஆம் கல்வியாண்டிற்கான காமராசர் விருதுடன் ரூ 50,000 நிதியையும் (பள்ளி மேம்பாட்டிற்கு) வழங்கி எங்களின் இந்தனை வருட உழைப்பிற்கு,அரசு மூலம் முதல் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
எப்படி எங்க சந்தோஷத்த வெளிபடுத்துவதுனே தெரியல.பல்லாண்டு பயிர்செய்யும் விவசாயி, நல்ல மகசூல் எடுக்கும் போது கிடைக்கும் மனநிறைவுதா எங்களுக்கும் இருக்கு.
இந்த விருது நீண்டதூர ஓட்டத்தில், இடையிடையே கொடுக்கப்படும் ஊக்க பானம் போல எங்கள ரொம்ப ஊக்கப்படுத்தியிருக்கு.
இந்த விருதுக்கு காரணமான எங்கள் பள்ளிகுளம் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்குமே இந்த விருதை சமர்பிக்கிறோம்.
இது ஒரு தொடக்கந்தா... எங்கள் கனவெல்லாம் மாநில அளவில் ஒரு சிறந்த மாதிரி பள்ளிமட்டுமல்ல, மாதிரி கிராமமும் தான்...
*நன்றி...
மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்-விழுப்புரம்.
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் - வல்லம்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வல்லம். தோழர்.திரு.மோ.கணேசன்புதியதலைமுறை தோழி.திருமதி.ரமணிபிரபா தேவி - தி தமிழ் இந்துநாளிதழ்.
நிதி உதவி செய்துவரும் கொடைவுள்ளங்கள், எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் முகநூல் நட்புக்கள் அனைவருக்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக கோடானகோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

கி.தமிழரசன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.
வல்லம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.
9786899951
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.
வல்லம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.
9786899951
செவ்வாய், 11 ஏப்ரல், 2017
'கியூசெட்' தேர்வுக்கு 4 நாட்களே அவகாசம்
மத்திய பல்கலைகளில் படிப்பதற்கான, 'கியூசெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய பல்கலைகளில், பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புபடிக்க, 'கியூசெட் என்ற, பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு, மே 17, 18ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 20ல் துவங்கியது; வரும், 14ம் தேதி முடிகிறது. இதற்கு இன்னும், நான்கு நாட்களே உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதோர், இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
* ஆசிரியர் தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது
* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்
* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்
* நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்
* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்
மதிப்பெண் சான்றுகளைப் பெற தனித்தேர்வர்களுக்கு அழைப்பு.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.துணை இயக்குனர் ஆசீர்வாதம் கூறியுள்ளதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு எழுதும் மையங்களில் நேரடியாக வழங்கப்படுகிறது. மையங்களில் பெற்று கொள்ளாத சான்றிதழ்கள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மார்ச்/ஏப்ரல் 2009 முதல் செப்.,/அக்.,2013 வரையிலான காலத்திற்குரியவை ஆயிரக்கணக்கில் தனித்தேர்வர்களால் பெறாமல் அலுவலகத்தில் உள்ளன.

விதிகளின்படி தேர்வுமுடிவுகள் வெளியான இரண்டாண்டுகள் கழித்து தேர்வர்களால் கேட்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஒரு மாதத்திற்குள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியதற்குரிய நுழைவுச்சீட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்துடன் 40 ரூபாய் மதிப்பிலுள்ள அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட உறையை இணைத்து பெறலாம், என கூறியுள்ளார்.
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்., 14க்குள்முடிக்க கெடு.
தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, ஏப்., 2 முதல் திருத்தம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' ரத்து செய்யப்பட்டுள்ளது.பல கட்ட ஆய்வுக்கு பின், மொழி பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கும் நிலை ஏற்பட்டால், தேர்வுத்துறை அனுமதிக்கு பின் வழங்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்., 14க்குள் விடைகளை திருத்தி முடிக்க வேண்டும்; பின், மதிப்பெண்ணை சரி செய்யும் பணிகளை துவங்க வேண்டும் என,ஆசிரியர்களை, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 விடை திருத்தம் தீவிரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தமும், தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்., 5ல் துவங்கிய விடை திருத்தம், மொழி பாடத்திற்கும், மற்ற முக்கிய பாடங்களுக்கும் தனித்தனியே நடந்து வருகிறது. ஏப்., 21க்குள், விடை திருத்தத்தை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங் ஏப்., 18ல் பதிவு துவக்கம்.
அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை, ஏப்., 18ல் துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், தமிழக அரசின் இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, ஏப்., 18ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, மருத்துவ பல்கலை, வேளாண் பல்கலை, கால்நடை மருத்துவ பல்கலை, ஐ.ஐ.டி., ஆகியவற்றின் கவுன்சிலிங் தேதிகளுடன் ஒப்பிட்டு, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதற்காக, தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகளிடம், பல்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மே 12ல், தேர்வு முடிவு வெளியானால், எத்தனை நாட்களில்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத் துறையினரின் தகவல்களின் படி, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதன்படி, ஜூன்23ல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கும்; ஜூன் 26ல், பொது பிரிவுக்கும் கவுன்சிலிங்கை துவங்க, ஆலோசனை நடந்து வருவதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில்நுட்ப தேர்வு எப்போது? : சிறப்பு பாட ஆசிரியர்கள் தவிப்பு.
அரசு பள்ளி சிறப்பு பாட ஆசிரியர்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, ஒன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கைவினை, சிற்பக் கலை உள்ளிட்டவற்றுக்கு, தனியாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
2012ல், 1,200 பேர் நியமிக்கப்பட்ட பின், ஐந்து ஆண்டுகளாக, சிறப்பு ஆசிரியர் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொழில்நுட்ப தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால், சிறப்பு பாடப் பிரிவுகளில்,பயிற்சி பெற்றவர்கள், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்தப்படவில்லை.அதேபோல், 2015 நவம்பருக்கு பின், தொழில்நுட்ப தேர்வுகளையும் நடத்தவில்லை. சிறப்பாசிரியர்கள் பணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

அவற்றில் ஆசிரியர்களை நியமிக்க, சிறப்பு தேர்வு நடத்தப்படும் என, 2014ல், பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது; 2015ல், பாடத்திட்டமும் வெளியானது. ஆனால், அந்த தேர்வையும் நடத்தவில்லை. இதனால், தனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர முடியாமல், பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, முடங்கிய பணிகளை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
TNPSC : சுருக்கெழுத்தர் பதவி 17ல் சான்றிதழ் சரிபார்ப்பு.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு துறைகளில் காலியாக உள்ள, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, 2016 நவம்பரில், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், தகுதி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கி உள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் உள்ளோருக்கு, ஏப்., 17 முதல், 24 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)