புதன், 5 ஏப்ரல், 2017
TNTET 2017 STUDY MATERIALS PAPER I & II - PSYCHOLOGY
PSYCHOLOGY - MODEL QUES PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER(1) - PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER (2) - PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER(3) - PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER(4) - PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER(5) - PAPER I & II
- CLICK HERE - PSYCHOLOGY - MODEL QUES PAPER(6) - PAPER I & II
மலிவு விலை சேவைகள்! அடுத்த அதிரடியில் ஜியோ?
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச் 31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை அதிகரிக்க, மலிவு விலை சேவை 12 முதல் 18 மாதங்கள் தொடர்ந்து அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தான்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையை அறிமுக்கப்படுத்தியது. இந்திய தொழில் தொடர்புத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஜியோ சேவை ஏற்படுத்தியது. மார்ச் 31 வரை ஜியோவில் இலவச கால் மற்றும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜியோ சேவைகளை இனி பெற மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜியோ ப்ரைமில் இணைய ஏப்ரல் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ மலிவு விலை சேவைகள் அடுத்த ஒரு வருடத்துக்கு மேல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் 60 சதவீத வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ நிறுவனம், 12 முதல் 18 மாதம் வரை மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கலாம் என தொழிநுட்ப வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, முன்னணி தொழில் தொடர்பு சேவையாக வளர்ந்து வரும் ஜியோ, மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கி தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டின் முடிவில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த தள்ளுபடி ஆணையானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் அல்லாது ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பின் தலைவரான அய்யாக்கண்ணு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லியில் போராட்டத்த்தில் ஈடுபட்டிருக்கும் அய்யாக்கண்ணு இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பொழுது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதிய கல்விக்கொள்கை 2016
NEW EDUCATIONAL POLICY 2016
1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள் தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.
4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.
5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.
6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.
8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.
9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.
10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.
11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும்.
12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.
13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.
14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.
17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும்.
18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.
19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.
20. ஆசிரியர்களைக் கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.
22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.
23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும்என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவசமற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில்25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8–ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கல்வி கட்டணம்இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டுதமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015–16–ம்ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்விகட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில்சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி,பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம்வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல்தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியைவழங்கும்.
கனவு வகுப்பறையை நனவாக்கிய கடலூர் ராஜலெட்சுமி ஆசிரியை
எல்லோருக்கும் அரசுப்பளளிகளில் *smart class வகுப்பறை* என்பது கனவாகவே இருகிறது.
யாரிடம் நன்கொடை பெறுவது, யாரிடம் உதவி கேட்பது இப்படி பலருக்கும் பலவித தயக்கம் இருக்கும்...
யாரிடம் நன்கொடை பெறுவது, யாரிடம் உதவி கேட்பது இப்படி பலருக்கும் பலவித தயக்கம் இருக்கும்...
ஆனால் கடலூர் மாவட்டம் தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.ராஜலெட்சுமி அவர்கள் தனது பள்ளியில் தனது *smart class* கனவு வகுப்பறைக்கு தனது சொந்தப்பணத்தில் ரூ 115000 செலவில் ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட முறையில் தனது பள்ளியில் ஏற்படுத்தி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.
தனது தனிப்பட்ட செலவில் smart class வகுப்பறையை ஏற்படுத்தியதைக் கேள்விப்ப்ட்ட நேர்மையின் சிகரம் திரு.சகாயம் IAS அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வந்தபொழுது இந்தப்பள்ளிக்கும் வருகைபுரிந்து பார்வையிட்டு பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இது முடிவல்ல... எனது செயல்பாட்டின் தொடக்கம் என தன்னடக்கத்தோடு ஆசிரியை ராஜலெட்சுமி குறிப்பிட்டது சிறப்பிற்குரியது.
நீட் தேர்வு பற்றி மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை !
நீட் தேர்வு பற்றி தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, கால்நடை
பல்கலைக்கழக துணை வேந்தர் திலகர் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான பல்கலைக் கழகங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மாநில அளவில் 4வது இடத்தையும், தேசிய அளவில் 38வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் திலகர், இந்தியாவில் உள்ள கால்நடை பல்கலைக் கழங்களில் தமிழ்நாடு கால்நடை பல்கலை முதலிடத்தை பிடித்து இருப்பதாக தெரிவித்தார். மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்று விளக்கம் அளித்தார்.
பத்தாம்
வகுப்பு முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி
வாய்ப்புகள்.
பத்தாம் வகுப்பு
முடித்தவர்களுக்குக் காத்திருக்கும் உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி
வாய்ப்புகள்.
நாளுக்கு நாள் பல
உயர் படிப்புகள் அறிமுகமாகிக்
கொண்டே இருக்கின்றன.
வேலைவாய்ப்புக்காகவும், பிடித்த துறையில் அறிவு விருத்திக்காகவும் அந்தப்
படிப்புகளில் தனக்கானதைத் தேர்வு செய்துகொள்வது மாணவர்களின் கடமை. பிளஸ் 1 பள்ளிப்படிப்பா, தொழிற்கல்வியா, வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சிகளா, போட்டித் தேர்வுகளுக்கான முயற்சியா என்பதை தேடிக்
கண்டுபிடித்துத் தீர்மானிக்கலாம் வாங்க!
இதற்கு உதவும்
வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், பத்தாம்
வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டிக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்
அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய
மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அவசியமானவற்றை இங்கே பார்ப்போம்.
மேல்நிலைப் பள்ளிக்
கல்வி
பத்தாம் வகுப்பு
முடித்தவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது, மேல்நிலைப் பள்ளிக் கல்வியான பிளஸ் 1. அதிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய முதல் 2 பாடப் பிரிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்.
காரணம், பெரும்பாலான பெற்றோரின் கனவு, மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பாகவே
இருந்துவருகிறது.
வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், கணக்கியல், வரலாறு, புவியியல், வணிகக்
கணிதவியல், அறவியல் மற்றும் இந்தியப் பண்பாடு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய
அடுத்த கட்ட பாடப் பிரிவுகள் போதிய கவனம் பெறுவதில்லை. ஆனால் கல்லூரி அளவில்
இந்தப் பாடப் பிரிவுகள் மட்டுமில்லாமல் அக்கவுண்டன்ஸி, கம்பெனி செகரட்டரிஷிப், காஸ்ட் (Cost) அண்டு
மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் ஆகியவற்றில் சேர இதுபோன்ற பிளஸ் 1 பாடப் பிரிவுகள் அடிப்படையாகும்.
நிகரான படிப்பு
இவை அல்லாமல் பிளஸ் 1 தொழிற்கல்விப் பாடப் பிரிவுகளும் உள்ளன. வொகேஷனல்
பாடப் பிரிவுகள் எனப்படும் இவற்றில் ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், சிவில், ஆட்டோ
மெகானிக், நர்சிங், டெக்ஸ்டைல்ஸ், ஃபுட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரி, அக்கவுண்டிங்
அண்ட் ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவிலான படிப்புகள் உள்ளன. பிளஸ் 1 முதன்மை பாடப் பிரிவுகளில் சேரத் தகுதியான
பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பெறத் தவறியவர்களும், இந்த வொகேஷனல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து
அவர்களுக்கு நிகராக பொறியியல், அக்ரி, இளங்கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் படிப்புகளில்
அசத்தலாம்.
டிப்ளமோ மற்றும்
ஐ.டி.ஐ. படிப்புகள்
பிளஸ் 1 சேர்க்கைக்கு நிகராகப் பத்தாம் வகுப்பு முடித்த
மாணவர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது, பாலிடெக்னிக்
டிப்ளமோ படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், 3 ஆண்டு தொழிற் படிப்பாக இந்த டிப்ளமோ கல்வியைத்
தேர்ந்தெடுக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வின்
மூலமாக இதில் சேரலாம்.
பொறியியல் கல்லூரிப்
படிப்பு போன்றே கலந்தாய்வின் மூலம் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால், பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்
பெற்றவர்கள் அரசு பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து அதிகச் செலவின்றி டிப்ளமோ படிப்பை
முடிக்கலாம். பின்னர் பணிக்குச் செல்லவோ உயர் படிப்புகளை மேற்கொள்ளவோ செய்யலாம்.
பணித்திறனை அதிகரித்துக்கொள்ள விரும்புவோர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ‘அப்ரண்டிஸ்’ எனப்படும்
தொழில் பழகுநர் பயிற்சிகளைப் பெறலாம்.
இவை அல்லாமல்
டிப்ளமோ தகுதியுடன், நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரிச்
சேர்க்கை மூலம் தங்களது பொறியியல் மேற்கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்வி நிலையங்கள் அமைவிடங்கள், அவற்றில் வழங்கப்படும் பாடப்பிரிவு விவரங்களை http://www.tndte.gov.in/ என்ற தமிழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின்
இணையதளத்தில் அறியலாம்.
ஏகப்பட்ட ஐ.டி.ஐ.
பயிற்சிகள்
பத்தாம் வகுப்பு
தேர்ச்சி நிலை எப்படியாயினும் பரவாயில்லை, வலுவான
எதிர்காலத்துக்கு அடித்தளமிட ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி வாய்ப்பளிக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த தொழிற் பயிற்சி
நிலையங்களின் சேர்க்கை, மாவட்ட அளவிலான கலந்தாய்வாக நடைபெறுகிறது. 2 ஆண்டு ஐ.டி.ஐ. முடித்தவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம்.
ஐ.டி.ஐ. பயிற்சியின் நிறைவாக உள்நாடு வெளிநாடு எனப் பரவலான தொழில்துறை பணி
வாய்ப்புகளைப் பெறலாம். சம்பாதித்தவாறே பகுதி நேர உயர்கல்விகளைப் பெற்று
தகுதியையும், ஊதிய வரம்பை உயர்த்திக்கொள்ளவும் முடியும்.
மேலதிக விபரங்களை http://skilltraining.tn.gov.in/DET/
என்ற தளத்தில்
அறிந்து கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகள்
பத்தாம் வகுப்பு
தேர்ச்சியை மட்டுமே கல்வித் தகுதியாகக் கொண்டவர்கள் உரிய வயதுத் தகுதியுடன், மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில்
பங்கேற்று அரசுப் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இளநிலை, முதுநிலைப் படிப்புகளை முடித்தவர்களும் இந்த
போட்டித் தேர்வுகளில் பங்கேற்பார்கள். என்றபோதும், உரிய
பயிற்சி இருந்தால் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.
# கிராம நிர்வாக அலுவலர் முதற்கொண்டு பல்வேறு
பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (http://www.tnpsc.gov.in/) போட்டித் தேர்வுகள் வாயிலாகப் பெறலாம்.
# மாநில, மத்திய
காவலர் பணிகளுக்கு - http://www.tnusrb.tn.gov.in/about_us.htm, http://www.crpf.nic.in/
பள்ளிப் பாட நூல்கள், நூலகங்கள், இணைய
தள வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தன்னார்வ
பயிலும் வட்டம் சார்பிலான இலவசப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக
கிராமப்புறத்தினரும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம்.
தட்டச்சர், சுருக்கெழுத்தர் பயிற்சிகள்
தமிழிலும்
ஆங்கிலத்திலும் கீழ் நிலை மற்றும் மேல் நிலைத் தட்டச்சுப் பயிற்சிகளைப் பல தனியார்
நிலையங்கள் அளிப்பது அனைவரும் அறிந்ததே. பயிற்சிக்குப் பிறகு தொழில்நுட்பக் கல்வி
இயக்கம் நடத்தும் தேர்வின் மூலமாகத் தங்கள் தகுதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தட்டச்சுப்
பயிற்சியுடன் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சிறப்புக் கணினிப் பயிற்சிகளும்
சான்றிதழும் பெற்றிருந்தால் அரசுத் துறையின் பல்வேறு தட்டச்சர் பணி வாய்ப்புகளை
பெறலாம். இதேபோன்று ஸ்டெனோகிராஃபி எனப்படும் சுருக்கெழுத்து தட்டச்சுப் பயிற்சி
மற்றும் பணிவாய்ப்புகளுக்கும் தகுதி பெறலாம். இவை குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.tndte.gov.in/ தளத்தினை நாடலாம்.
பத்தாம் வகுப்பு
முடித்தவர்களும் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவும் வகையில், எளிய படிப்புகளும் தொழிற் பயிற்சிகளுக்கான
வாய்ப்புகளும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தையும் அறிய, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் தளத்தில் (http://www.tnscert.org/Cgmathsc.html) முழுமையான கையேட்டினை தரவிறக்கம் செய்து
பயன்பெறலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)