>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 23 மார்ச், 2017


ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்; முகவரி மாற்றம்; பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள ஊழியர்கள், மக்களை, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. 
ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அதில், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள், இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஆதார்' கார்டில் உள்ள பெயர், முகவரி அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும். அதில், பிழைகள் இருப்பின், ரேஷன் கார்டுதாரர், தாங்களாகவே, 'டி.என்.பி.டி.எஸ்.டாட் காம்' என்ற இணையதளத்தில் சரி செய்து கொள்ள, மார்ச், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.தற்போது, கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. எனவே, பிழை இருப்பவர்கள், கவலை அடைய வேண்டாம். அவர்கள், ஸ்மார்ட் கார்டு பெற்ற பின், வீட்டில் இருந்தபடியே, பி.டி.எஸ்., இணையதளத்தில் தாங்களாகவோ அல்லது அரசு, இ - சேவை மையங்களிலோ, சரி செய்து கொள்ளலாம். பிழை திருத்திய கார்டை, தேவைக்கு ஏற்ப, இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். கூடுதல் கார்டுக்கு, அந்த மையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்., 1ல் துவக்கம் : சென்னையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துாரில், 'ஸ்மார்ட்' கார்டு வினியோகம் மற்றும் பொது வினியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், முதல்வர் பழனிசாமி, ஏப்., 1ல் துவக்கி வைக்கிறார்.

DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(மேனிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்: 19.01.2017


வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. அது மட்டுமில்லை... கலை அறிவியல் படிப்பு உள்பட பிற படிப்புகளுக்கும், தொழில்சார் வேலை வாய்ப்புக்கும் தேசிய அளவில் ஒரே தேர்வைக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்துவதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்க மத்திய அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது மனித வளத்துறை.
தற்போது இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஐ.ஐ.டியில் சேர்வதற்கான `ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்', மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, மத்திய அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் ஆசிரியர் தகுதித்தேர்வு போன்றவற்றை நடத்துகிறது.
இந்தத் தேர்வுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி வருகிறார்கள்.
இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வுக்கு பின்னர், தரப் பட்டியல் வெளியிடுவது, தேர்வில் மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
சி.பி.எஸ்.இ அமைப்பு பள்ளி பொதுத்தேர்வுகளைத் தவிர, இதர நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைக் கூடுதல் பாரமாகக் கருதுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய தேசிய தேர்வு வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிளார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
இந்தத் தேர்வு வாரியம் பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி சார்ந்த சேர்க்கைகள், தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளையும் நடத்தும். சி.பி.எஸ்.இ அமைப்பு, மத்திய அரசின் அனுமதியோடு நடத்தப்படும் பள்ளிகளின் கல்வித் தரம், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மட்டுமே கவனிக்கும்.
மனிதவளத்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அலுவலர் இதுகுறித்து பேசிய போது ''புதிதாக அமைய உள்ள மத்திய தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்ப முறையில் இணையத்தின் மூலம் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் எழுதுவதற்கான முறையை உருவாக்கும். இனிவரும் காலங்களில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தனியார் அமைப்புகளின் தேவை, இருக்காது. ஏற்கெனவே சி.பி.எஸ்.இ அமைப்புக்கு அனுபவம் இருப்பதால் இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே தேர்வு வாரியத்தைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு என்று தனியே சேர்க்கை விதிமுறைகளையும், தேர்வுகளையும் நடத்தி வரும் நிலையில், இந்த புதியத் தேர்வுவாரியத்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பைப் பெற முடியும் என்று தெரியவில்லை. தற்போது இழுத்து பணத்தை கறக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கும், இதர படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு என்று வரும்போது மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தாமல் நுழைவுத்தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார்கள். இனி வரும் காலங்களில் நுழைவுத் தேர்வு மையங்களே மாணவர்களைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக மாறி விடும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இல்லை என்பதால் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக அரசு இந்த விஷயத்தில் விழிப்போடு இருந்து மாணவர்களின் நலனை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு!

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: ஹைகோர்ட் நீதிபதி வேதனை

ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் காளான்கள் போல் முளைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். எந்த கொள்கையும் இன்றி பிஎட், எம்எட் கல்வி நிறுவனங்களுக்கு எந்திரங்கள் போல் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதகாவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் கல்வி குறைபாட்டுக்கு ஆசிரியர்கள் தரம்மில்லாததுதான் காரணம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

30 மாவட்டங்களில், 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி

தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. இதனால், 'முக்கோண சிக்கலில்' சிக்கி முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) தவிக்கின்றனர்.எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்காக கூடுதல் சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் மாறுதல், ஓய்வு போன்றவற்றால் காலியான பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் 2013 டிசம்பரில், இத்திட்டத்தின் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணித்த 375 மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.இதனால், கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, 'மாலுமி இல்லாத கப்பல்' போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கும் சி.இ.ஓ., க்களே எஸ்.எஸ்.ஏ., திட்டத்தையும் சேர்த்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், பணிச்சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். தமிழக பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக, 2,656 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு 1,476 கோடி ரூபாய், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு 1,264 கோடி ரூபாய் வரவேண்டும். ஆனாலும், மாநில அரசு போதிய நிதி ஒதுக்கிய நிலையில், கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.இவர்களிடம் ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். இதன்மூலம் கல்விப் பணிகளில் சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்; தகுதி அடிப்படையில் டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு கூறினர்

புதன், 22 மார்ச், 2017

         'மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.        கஷ்டம் தான் … ஆனா முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு
வேலையை ஆரம்பி.

25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி
இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே
போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

    * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
                       "தேசிய மின்னணு நூலகம்"

மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் "தேசிய மின்னணு நூலகம்" என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர்.

கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்கு கிட்டத்தட்ட 68 லட்சம் நூல்களை தொகுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு, அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம்.

National Digital Library. It is an initiative by HRD ministry. It is a huge collection of learning resources from primary to PG level. Students  can use it free of charge. To register, go to:
https://ndl.iitkgp.ac.in Share with your students also.

This 👆is an amazing resource . Make it a point to get yourself registered
40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

www.kalvicikaram.blogspot.in

தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31/3/17 -க்குள் முடிக்கப்பட வேண்டும்-சார்பு நாள்:20/3/17.


தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)


English BT Regularisation 2014 Order


திருவண்ணாமலை மாவட்டம் - மூன்றாம் பருவத் தேர்வு - ஏப்ரல்'2017 - கால அட்டவணை. (6, 7, 8 & 9 வகுப்புகள்)


கிருஷ்ணகிரி மாவட்டம் - மூன்றாம் பருவத் தேர்வு - ஏப்ரல்'2017 - கால அட்டவணை. (6, 7, 8 & 9 வகுப்புகள்)


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்


திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2017 காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளதாக, பதிவாளர் விஜயன் அறிவித்துள்ளார்.இதற்கு, பல்கலையின்,http:/www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மண்டலஅலுவலகங்களில், நேரிலும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஏப்., 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி

இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால் சென்டம் மதிப்பெண் எடுக்கலாம், என மாணவர்கள் கூறினர்.
ஜி.முகேஷ்கண்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தரகோசமங்கை: புளூ பிரின்ட் படியும், புத்தகம் படியும், வினாக்கள் இருந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பமாக இருந்தபோதிலும் விடையளிக்க முடிந்தது. 3 மதிப்பெண் வினாக்களுக்கு யோசித்து பதில் எழுதுவது போல் இருந்தது. 5 மதிப்பெண் வினா கடந்த காலங்களை விட எளிமையாக இருந்தன. 10 மதிப்பெண் வினா மிக எளிமையாக இருந்தது. விரைவாக பதில் எழுதும் மாணவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வை முடித்திருக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சென்டம் உறுதி.வி.அனுஜா, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: நான்கு பகுதிகளிலும் 3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் சராசரி மாணவர்கள் கூட 130 மதிப்பெண்எடுக்கலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்த முறை கேட்கப்பட்டிருந்தன.
மாதிரி வினாத்தாள் அடிப்படையில் படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடிந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் நிச்சயமாக சென்டம் எடுக்க முடியும். போதிய நேரம் இருந்ததால் எழுதிய பதிலை சரி பார்க்க முடிந்தது.
இ.செல்வேந்திரன், ஆசிரியர், எலைட் பள்ளி, ராமநாதபுரம்: கற்கும் திறன் குறைந்த மாணவர்களும் எளிதில் பதில் அளிக்கும் வகையில் வினாக்கள் எளிமை. ஆசிரியரின் வழிகாட்டுதல் படி, புத்தகம் முழுவதையும் படித்து தேர்வெழுதியமாணவர்களுக்கு சென்டம் உறுதி. மெல்ல கற்கும் மாணவர்கள் 120 மதிப்பெண் எடுக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு சென்டம் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும்.
மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது.எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.
இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்துமாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்

செவ்வாய், 21 மார்ச், 2017


10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்??

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது. பொதுவாக கணித தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என, மாணவர்கள் விரும்புவர். ஆனால், நேற்றைய வினாத்தாள் கடினமாக
இருந்ததால், மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.● இரு மதிப்பெண்ணுக்கான, 36வது கட்டாய வினாவில், இடம்பெற்ற கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது. இந்த வினாவை, புத்தகத்தில் பார்த்ததே இல்லை என, மாணவர்கள் கூறினர்● ஐந்து மதிப்பெண்ணுக்கான, 45வது வினாவில், ‘பி’ பிரிவு வினா கடினமாக இருந்தது. ஆனாலும், சாய்ஸ் என்ற விருப்ப வினாவில், கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டனர்.
இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

New Income Tax Rates And Deductions Applicable From April 1, 2017

Image result for income tax logo hindi


Here are the new income tax slabs for taxpayers:General 
        category
Senior citizens
Super senior citizens(Up to 60 years of age)
(60-80 years)
(Above 80 years)IncomeTax
IncomeTax
IncomeTaxUp to Rs. 2.5 lakhNil
Up to Rs. 3 lakhNil
Up to Rs. 5 lakhNilRs. 2,50,001-Rs. 5 lakh5%
Rs. 3,00,001-Rs. 5 lakh5%
Rs. 5,00,001-Rs. 10 lakh20%Rs. 500,001-Rs. 10 lakh20%
Rs. 5,00,001-Rs. 10 lakh20%
Above Rs. 10 lakh30%Above Rs. 10 lakh30%
Above Rs. 10 lakh30%

# Surcharge of 10% for income between Rs. 50 lakh and 
Rs. 1 crore# Surcharge of 15% for income above
 Rs. 1 crore# Rebate of up to Rs. 2,500 for taxable salary 
up to Rs. 3.5 lakh# Education and higher education cess 
of 3%Here are the some of the deductions available for
 FY2017-18: 

House Rent Allowance under Section 10 (13A) of the 
Income Tax Act

House Rent Allowance, commonly known as HRA, 
 HRA is partly exempted from tax. If you are staying in your own house or not paying any rent, your HRA will be
 completely taxable. However, those who stay with their
 parents can also claim HRA benefits by paying rent to their parents..makes up a major chunk of a salaried individual’s total pay.
The amount which is allowed for exemption under 

HRA is calculated as minimum of:
1) Rent paid annually minus 10 per cent of basic 
salary plus dearness allowance
2) Actual HRA received
3) 40 per cent of basic and dearness allowance (50 per cent in case of metro cities)

Deductions under Section 80C

Section 80C of the Income Tax Act provides various provisions under which an individual can get deduction benefits up to Rs. 1.5 lakh. Employees’ Provident Fund (EPF), Public Provident Fund (PPF), Sukanya Samriddhi Account, National Savings Certificate and tax-saving fixed deposits are some of the investment options that offer benefits under Section 80C. The premium paid for life insurance plans, National Pension Scheme (NPS) and tax-saving mutual funds (ELSS) also qualify for deduction under Section 80C. 
Further, one can claim tuition fees paid for up to two children, principal repayment on home loan, stamp duty and registration cost on the house bought as deduction under Section 80C. 

Deductions under Section 80CCD(1B)

Introduced in Budget 2015-16, Section 80CCD (1B) provides deduction up to Rs. 50,000 for investment in NPS Tier 1 account. This deduction is over and above the deduction available in Section 80C. An individual in 30 per cent tax bracket can save up to Rs. 15,450 of tax by investing Rs. 50,000 in NPS.

Deduction of interest on housing loan (Section 24B)

Buying a house is among several other things an individual wants to do during his or her lifetime. The income tax rules also incentivise the same. Under Section 24B of the Income Tax Act, interest paid up to Rs. 2 lakh on housing loan and up to Rs. 30,000 on home improvement loan is allowable as deduction from your taxable income. 
The government has however cut down tax benefits borrowers enjoyed on properties let out on rent. As per current tax laws, for properties rented out, a borrower could deduct the entire interest paid on home loan after adjusting for the rental income. On the other hand, borrowers of self-occupied properties get Rs. 2 lakh deduction on interest repayment on home loan.
However, according to the proposed change in Budget 2017, on rented properties, the borrower can only claim deduction of up to Rs. 2 lakh per year after adjusting for the rental income. And the amount above Rs. 2 lakh can be carried forward for eight assessment years.
Since the interest component of home loan repaid in initial years is higher, experts say that the borrower may not be able to fully adjust the interest paid as deduction even in subsequent years.

Deduction under Section 80EE

Under Section 80EE, an additional deduction of Rs. 50,000 is available over and above the limit of Section 24B on interest paid on home loans if the person is buying a house for the first time (the person must not own any other residential property on the date of sanction of loan). However, to avail the benefit of this section the value of the property must be below Rs. 50 lakh and the loan amount should not exceed Rs. 35 lakh. Further, the property must be bought after April 1, 2016.

Deduction under Section 80D 

Premium paid for medical/health insurance for self, spouse, children and parents qualify for deduction under this Section. On can claim deduction of Rs. 25,000, if he is below 60 years of age, and Rs.30,000 if he is above 60 years of age, towards medical insurance premium paid for self, spouse and children. Further, additional deduction of Rs. 25,000 is available if one has bought medical insurance for his parents. This deduction can go up to Rs. 30,000 if parents are above the age of 60 years.

Deduction under Section 80DD

If a tax payer has dependent parents, spouse, children or siblings who are differently-abled, then he can claim deductions up to Rs. 75,000 for expenses on their maintenance and medical treatment under this section. This deduction can increase to Rs. 1.25 lakh in case of severe disability.

Deduction under Section 80DDB

Under this section, one can claim deduction of Rs. 40,000 for treatment of certain diseases for self and dependents. The deduction can go up to Rs. 60,000 if the tax payer is above 60 years of age and if he is above 80 years of age, then the deduction amount is up to Rs. 80,000.

Deduction under Section 80E

According to the provisions of Section 80E, a taxpayer can claim deduction for interest paid on education loan for him, spouse or children. There is no upper limit on the amount of deduction. However, the loan must have been taken from a financial institutional or approved charitable institution and for full-time higher education.
பார்க்க ரசிக்க சிந்திக்க







தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு





வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும்
 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட
 உள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க
 பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில்
 ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு
 வருகிறது. இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் 75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட்
 ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில்
 நடைபெற்றது. இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விரைவில்
 தமிழகம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில்
 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பின்னர், இந்த கார்டுகளை தாலுகா
 வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
 ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன்
 அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் 
கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி,
 இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது விற்பனையாளர்கள் விடுப்பு
 எடுக்கக்கூடாது. அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது பழைய
 ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும்.
 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் அதை பாயின்ட் ஆப்
 சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு
 பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
 அனுப்பப்பட்டுள்ளது. 

சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்து விலக்கு?

சென்னை: 'டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது. இது குறித்து, மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 2011 டிசம்பரில், 3,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், 300 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், கலப்பு திருமணம் செய்தோர் என்ற, சிறப்பு பிரிவுகளில் தேர்வாகினர். இந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்?

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது. பொதுவாக கணித தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என, மாணவர்கள் விரும்புவர்.
ஆனால், நேற்றைய வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.● இரு மதிப்பெண்ணுக்கான, 36வது கட்டாய வினாவில், இடம்பெற்ற கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது. இந்த வினாவை, புத்தகத்தில் பார்த்ததே இல்லை என, மாணவர்கள் கூறினர்● ஐந்து மதிப்பெண்ணுக்கான, 45வது வினாவில், 'பி' பிரிவு வினா கடினமாக இருந்தது. ஆனாலும், சாய்ஸ் என்ற விருப்ப வினாவில், கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டனர்.
இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.