>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PAYBILL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAYBILL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2019

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் monthly salary ECS status பார்ப்பது எப்படி??

சனி, 30 மார்ச், 2019

7th Pay Matrix, HRA And CCA Slab in Single Page

ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

திங்கள், 4 மார்ச், 2019

Pay ment (February ) check ECS

 மாதம் MARCH  என போடவும்

CLIK HEAR http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx


.................................................................................................

சனி, 22 டிசம்பர், 2018

Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

 நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.


ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர்.

கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் Nodata available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.

இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை முன்கூட்டியே  அறிந்து பயன்பெறலாம்.

link கீழே...


..............................................................................................................................

சனி, 1 செப்டம்பர், 2018

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம்
பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.

இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

புதன், 27 ஜூன், 2018

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற்றுத் தர பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை  உரிய முறையில் பெற்றுத் தர வேண்டும் -பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாறுதல்க்ளை அடுத்து பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு - ஆணை

மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு விரைவாக ஜூன் மாத ஊதியம் வழங்கிட அரசு கருவூலத் துறைக்கு ஆணை



புதன், 13 ஜூன், 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹14 ஆயிரமாக உயர்வு!

"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


 மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் ₹650லிருந்து ₹900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க₹25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

சனி, 25 நவம்பர், 2017

வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம் வழங்க கோரிக்கை!!!

சனி, 11 நவம்பர், 2017

TN 7th PAY COMMISSION : திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.

1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும்*
*2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.*
*3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும்
அகவிலைப்படியை சேர்ந்து  கணக்கில் கொள்ள வேண்டும்.
*4.HRA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து  grade I(b) கலத்தில் உள்ளவாறு  கணக்கிடவும்.
*5.CCA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல்  உள்ளவாறு  கணக்கிடவும்.

DSE - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் 900 PG ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற முதன்மைச் செயலரின் விரைவு ஊதிய ஆணை!!

திங்கள், 6 நவம்பர், 2017

தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு...

தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என 900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.

புதன், 1 நவம்பர், 2017

அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்- உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.
இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

வியாழன், 19 அக்டோபர், 2017

சம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு.....

ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.இந்நிலையில் ஏழாவது சம்பளக்குழுவின் தலைவர் சண்முகம், அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல்செய்தார். இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து, சென்னையில் கூட்டமைப்பினர் கூடி விவாதித்தனர். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசுஊழியர்கள் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன், நமது நிருபரிடம் கூறியதாவது:2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் , நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசித்த போது, ''2016-17 முதல் ஏழாவது சம்பள குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். முந்தைய சம்பளக்குழுக்கள் போல அன்றி, இக்குழு பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவை தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏழாது,'' என்றார். 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை, கருத்தியலாக மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு, மிகப்பெரிய சம்பள இழப்பை முதல்வர் பழனிசாமி அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆறாவது சம்பள குழு முரண்பாடுகளை களைவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உட்பட சிறப்புகாலமுறை சம்பளம் பெறும் மூன்று லட்சம் பேருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்குவது குறித்தும், எந்தஅறிவிப்பும் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும்இல்லை. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பள உயர்வு 14 சதவீதமும், அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 20 சதவீதஉயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சுட்டிகாட்டி, சம்பள மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அக்., 23 ம் தேதி விளக்கி, உரிய உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அக்., 20ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விளக்க கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
தவறான புரிதல் ஏற்படுத்தும் அரசு
ஏழாவது சம்பளக் குழு பரிந்துரைகளை தாக்கல் செய்த அன்றே தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்களின் விலைகளையும் உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள உயர்வு சரிகட்ட மது விலையை உயர்த்தியிருப்பது போன்ற தவறான எண்ணத்தையும், புரிதலையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

PERSONAL PAY (PP) - தனி ஊதியம் பற்றி ஒரு பார்வை

*🔸 1971 இல் 2வது , 1988இல் 5வது,  1996இல்  6வது ஊதிய குழுக்களில் சில துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு  வழங்கப்பட்ட தன் ஊதியமானது,*
*🔸 முறையே 1978இல் 3வது, 1996இல் 6வது, 2006 இல் 7வது ஊதிய குழுவின் அடிப்படை ஊதியத்திலே சேர்க்கப்பட்டு, அதன் பின்னரே புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
*🔸 தனி ஊதியம் என்றாலே அகவிலைப் படி கணக்கிடுவதற்கு எடுத்து கொள்ள வேண்டும்.*
*🔸 இந்த ஊதிய குழுவில் PPயை அகவிலைப் படி கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளலாம் என்ற வரி இருப்பதாக   தெரியவில்லை.*
*🔸 ஆகையால் PPயை பற்றி பல சந்தேகம் எழுந்துள்ளது.அப்படி இருக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த சந்தேகம் தீராமல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது இதுவே உண்மை.*
*🔸 PP யை அகவிலைப்படி உயர்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது அடிப்படை விதிகளில் (FR) இருந்தாலும், இந்த ஊதிய குழுவை பொறுத்த வரை தன் ஊதியம் தனியாகவே வைக்கப்பட்டுள்ளது.*
*🔸 8வது ஊதிய குழுவில் தன் ஊதியத்தை தனியாக வைத்ததின் நோக்கம் 7வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு PP வழங்கப்பட்டுள்ளது.அதை BP சேர்த்தால் இ.நி.ஆசிரியர்கள் ஊதியம்  அதிகம் பெற்று விடுவார்கள் என்று எண்ணியே தனியாக வைத்துள்ளனர்.*
*🔸 ஏற்கனவே கிரேடு பேவை  குறைத்து, அதி பாதாளத்தில் தள்ளி விட்டனர்.இந்த ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்களைசவக் குழியில்  தள்ளி விட்டனர்.*
*🔸 ஆக மொத்தம் ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்கள் பயனடைந்து விட கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது போல.
*இவண்*
அ.சி.ஜெயப்பிரகாஷ்
 ஒன்றியப் பொருளாளர்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்
*அரூர் ஒன்றியம் தருமபுரி.*

TN 7th PAY - HRA SLABS - New House Rent Allowance Revised Rates for Tamilnadu Government Employees....