>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
DA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஏப்ரல், 2017


ORDER COPY - Grant of Dearness Allowance Hike from 2% to 4% to Central Government employees – Revised Rates effective from 1/1/2017

வெள்ளி, 31 மார்ச், 2017

வியாழன், 16 மார்ச், 2017


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறும் 55.51 லட்சம் பேரும் இதனால் பயனடைவார்கள்.
மேலும், ஐஐடி சட்டத்திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்தவும், நாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

புதன், 15 மார்ச், 2017


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு...

*முக்கியச் செய்தி.....*
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு...

ஞாயிறு, 5 மார்ச், 2017

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 15 டிசம்பர், 2016

FLASH NEWS-தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு-தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் நான், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய
அரசு உயர்த்தியுள்ளது.


அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் இந்த அகவிலைப்படி உயர்வு சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,833 கோடியே 33 லட்சமாக இருக்கும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

திங்கள், 14 நவம்பர், 2016

வெள்ளி, 11 நவம்பர், 2016

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.