HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 1 பிப்ரவரி, 2017

உங்கள் முடி வெள்ளையாக மாறுவதற்கு இதுதான் காரணம் !!


நீங்கள் இளம் வயதில் நரைமுடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனில் நீங்கள் ஒரு நல்லட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகி நரைமுடிக்கான காரணத்தைக் கண்டறியுங்கள்
 இள வயதில் நரைமுடி வருவது இன்று வளர்ந்து வரும் பிரச்சனையாகும்.10 வயது குழந்தைகள்முதல் இந்த நரைமுடி பிரச்சனை ஆரம்பமாகிறது.முன்பு இது அரிதாக அங்கொன்றும்இங்கொன்றும் ஆக நடந்தது.ஆனால் ஒவ்வொரு நாளாக இந்த பிரச்சனை வளர்ந்து வருகிறது.
குழந்தை பருவம் மகிழ்ச்சியான பருவம் என்று சொல்வார்கள் உண்மை தான் அது இந்தநரைமுடி வரும்வரை மட்டுமே.குழந்தை பருவத்திலேயே நரைமுடி வருவதால் குழந்தைகளுக்குமன அழுத்தம் ஏற்படுகிறது.நரைமுடி வராமல் தடுக்க முதலில் அதை பற்றி நன்கு தெரிந்துகொள்வோம்.
முடியின் நிறம்:
முடியின் இயற்கையான நிறம் மெலனின் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறதுதலையில்உள்ள தோலின் அடியில் நுண்ணறைகள் உள்ளன.இவற்றில் முடிக்கு நிறத்தை அளிக்கக்கூடியமெலனோசைட்ஸ் உள்ளதுநுண்ணறையிலிருந்து முடி வளரும் போது மெலனோசைட்ஸ்மெலனின்- உற்பத்தி செய்கிறது.இந்த மெலனின் முடிக்கு நிறத்தை கொடுக்கிறது.
  வெள்ளை நிறத்திற்கு காரணம் :
மெலனின் 2 வகையாக உள்ளன.அதில் ஒன்று யூமெலனின் ஆகும்.இதுவே கருப்பு மற்றும்பழுப்பு நிறத்திற்கு காரணம் ஆகும்.வயது அதிகமாக ஆக ஆக இந்த மெலனின் உற்பத்திகுறைகிறது.மெலனின் குறைவதால் முதலில் முடி சாம்பல் நிறமாகவும் பின்புவெள்ளையாகவும் மாறுகிறது.
இள நரை :
ஆனால் சில சமயங்களில் அதிகப்படியான உடல்நலக்குறைவு,அதிக அழுத்தம்,போதுமானஊட்டச்சத்து எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் சிறு வயதிலேயே இந்தமெலனின் உற்பத்தி குறைகிறது.இதுவே இளவயதில் நரை முடி வருவதற்கு காரணம்.சிலசமயங்களில் இது மரபணுவை பின்பற்றியும் வருகிறது.
மற்ற காரணங்கள் :
இது மட்டுமின்றி சிலர் நரைமுடியை மறைக்க கெமிக்கல் கலந்த சாயங்கள்உபயோகிக்கின்றனர்இது முடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.இந்த சாயங்கள் ஸ்கல்ப்பைசுத்தமாக வைக்காமல் அசுத்தப் படுத்துகின்றன மற்றும் இதில் கெமிக்கல் அதிக அளவுஇருப்பதால் முடி பொலிவின்றி மாறும்.
பரிசோதனை :
நீங்கள் இளம் வயதில் நரைமுடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனில் நீங்கள் ஒரு நல்லட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகி நரைமுடிக்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.