HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 1 பிப்ரவரி, 2017

சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..!



     நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,  உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பலவகைகளில்  துணைபுரிவது சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்என்கிறது சுகாதாரதுறை அமைச்சகம்இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால்பலர் தங்களுக்குசிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்நோய்முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள்இதுவளரவிடக் கூடாத பிரச்னைவளர்ந்தால் டயாலிசிஸ்சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச்செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும்
சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும்அந்த அறிகுறிகளில் சில...
சிறுநீர் பிரச்னை 
 
நுரைபோன்ற சிறுநீர் வருவதுஇயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது,சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதுசிறுநீர் தொற்று ஏற்படுவதுஅடிக்கடி சிறுநீர் கழிப்பதுசிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும்சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.    
வீக்கம் / அதைப்பு 
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல்போகும்போது கணுக்கால்கால்பாதம்கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்புஏற்படும்.
சோர்வு / ரத்தசோகை
சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறதுஇதுஆக்சிஜன்ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறதுசிறுநீரகம்பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும்இதனால் ரத்தசிவப்பு அணுக்கள்ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும்இதனால்தான் சோர்வும்ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
தடிப்பு 
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும்இதனால்தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
மூளையின் குறைந்த செயல்பாடுகள்
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதிகவனமின்மைதலைசுற்றல் ஆகியவைஉண்டாகும்.
குளிர்
ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும்சிலருக்கு வெயில்சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.
மூச்சுத்திணறல் 
சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும்தேவையற்ற திரவம்குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
முதுகுவலி 
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும்இன்னும்சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும்இந்த அறிகுறி வெகு சிலருக்குமட்டுமே  தெரியும்.
குமட்டல் 
சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும்அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால்சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
சுவாசத்தில் வாடை
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும்இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும்இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாகமாற்றும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால்உடனே சிறுநீரகசிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்
நன்றி-ஆனந்த விகடன்