HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

இன்று



காந்தி ஜெயந்தி



⚑ காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007இல் அறிவித்தது.

⚑ இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

⚑ 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?" எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

⚑ 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி" என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.

⚑ காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது.

⚑ அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி புதுடில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லால்பகதூர் சாஸ்திரி



🏁 இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார்.

🏁 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. சிறு வயதாக இருந்தபோதிலும் காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார்.

🏁 அவருடைய திருமணத்தில் சுழல் சக்கரத்தையும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக பெற்றுக் கொண்டார்.

🏁 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பகதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மறைந்தார்.

🗿 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா இறந்த தினம்.

🎌 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் காலமானார்.