HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வெந்தயம் பயன்கள்

உடல் வனப்பைக் கூட்டும் வெந்தயம்

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

வெந்தயத்தின் இலைகளும், விதைகளும் மருத்துவப்பயன் உடையவை

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும்.

இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.
நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.

மருத்துவப் பயன்

விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. நோயை தீர்க்கும். சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும். அஜீரணத்தைப் போக்கும். மாதவிடாய் போக்கை அதிகரிக்கும். துவர்ப்புள்ளது. தோலை மிருதுவாக்கும்.

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

உடல் மினுமினுக்கும்

உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்துடன் கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில் துளி கல் உப்பு கலந்து ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

மூட்டுவலியை குணமாக்கும்

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

நீரிழிவை தடுக்கும் வெந்தயம்

வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. ரிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.

தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.

பிரசவித்த பெண்களுக்கு அருமருந்து

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம். மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

இயற்கை கருத்தடை

கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும். இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.

முடி கொட்டுவதை தடுக்கிறது

அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.

வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.