HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 19 செப்டம்பர், 2016

செய்தி துளிகள்

🌍📡காலை  செய்திகள் 📡🌍

            🌍📡19\09\2016.


🌍கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி பலி

கரூர்: கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி உயிரிழந்துள்ளார். தான்தோன்றிமலையில் நடந்த விபத்தில் தந்தையுடன் சென்ற மாணவி லத்திகா உயிரிழந்துள்ளார்.




🌍மழைநீர் கால்வாய் பணியால் மக்கள் தவிப்பு

சென்னை: வியாசர்பாடி சாலமா நகர் இ.எச். நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி குடியிருப்புவாசிகள் மரக்கம்புகளால் பாதை அமைத்து செல்கின்றன




🌍பயங்கர
வாதத்துக்கு ஒரு நாடே காரணம்: ஹமீத் அன்சாரி

போர்லாமர் : இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாடுதான் காரணம் என துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாகிஸ்தானை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.




🌍உரி ராணுவ முகாம் தாக்குதல்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தது.ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் உள்ள, ராணுவப் படைப்பிரிவு முகாமிலுள்ள கூடாரத்தில், டோக்ரா ரெஜிமென்டை சேர்ந்த வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதலில், அந்த கூடாரம் தீப்பற்றி எரிந்தது; அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும், மளமளவென தீ பரவியது. இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதி யில், தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. தாக்குதலில் காயமடைந்த 30 வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் 3 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் உரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரீக்கர், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து விளக்கமளிக்க உள்ளார்.




🌍காஷ்மீருக்குள் ஊடுருவ 200 தீவிரவாதிகள் திட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருளவதற்கு 200 தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி விகாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகளம் அவர் கூறினார்.




🌍துப்பாக்கியை காட்டி எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். இவர் இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.




🌍ராம்குமார் மரணம் தொடர்பாக நீதி விசாரணை தொடங்கியது

சென்னை: ராம்குமார் மரணம் தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீதி விசாரணை தொடங்கியது. திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணையை தொடங்கினார்.




🌍டெங்கு காய்ச்சலால் 7 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசம் மாநிலம், ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.




🌍அரியலூர் அருகே வி.கைகாட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்து: 30 பேர் காயம்

அரியலூர் : அரியலூர் அருகே வி.கைகாட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த மாணவர்கள் 30 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




🌍சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்க மறுப்பு: ராம்குமார் தந்தை

சென்னை: ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது தந்தை பரமசிவம் தெரிவித்துள்ளார்.



🌍ஜம்மு-காஷ்மீரில் 73 நாளாக ஊரடங்கு உத்தரவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை 73 நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.




🌍சென்னையில் சொகுசுக்கார் மோதி காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவர் பலி

சென்னை: சென்னையில் சொகுசுக்கார் மோதி காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவர் உயிரிழந்தார். அரசு மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் உயிரிழந்துவிட்டார்.





🌍ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் முறையீடு

ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையிடுகிறார். உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் இன்று காலை 10.30 மணிக்கு முறையீடு செய்கிறார். ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.





🌍சென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்

சென்னை பேசின்பாலம் - சென்ட்ரல் இடையே புதிதாக 5, 6வது ரயில்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, ெசன்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நேற்று முன்தினமும், நேற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. புறநகர் ரயில்நிலையம் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று முதல்  அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.




🌍மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் அதிரடி மாற்றம். செய்தியாளர் நீதிராஜனை தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல ஆனையாளர் சைலேந்திரபாபு அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு மாற்றம் செய்த அவர்களுக்கு மதுரை மாவட்டம் மற்றும் தாலுகா செய்தியாளர்கள் சார்பாக நன்றி.




🌍சென்னை வேளச்சேரியில் கடைக்கு சென்று வீடு திரும்பிய ஜெயா(வயது 38)  கழுத்தில் அனிந்திருந்த 5 சவரன் தங்க சங்கலியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றனர்.




🌍ஈரோடு
போக்குவரத்து நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றுள்ளனர்




🌍ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேதபரிசோதனை நடைபெறுகிறது .
இதையொட்டி மருத்துவமனை வளாகத்தை சுற்றி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



🌍காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று மீண்டும் கூடுகிறது.



🌍என் மகன் சாவுக்கு காவல் துறையே பொறுப்பு என்றார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.




🌍சென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்



🌍பெங்களூருவில் காவிரி போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 270 பேர் கைது




🌍ஜம்மு காஷ்மீரில் புதிதாக கலவரத்தை உருவாக்குவதற்காகவும், பிராந்தியத்தில் போர் போன்ற சூழலை ஏற்படுத்தவும் திட்டமிட்டே உரி தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது --காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி




🌍ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.




🌍தீவிரவாதி சக்திகளுக்கு உதவுவது மற்றும் உடந்தையாக இருப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்-சீதாராம் யெச்சூரி



🌍வீரர்களை பலி கொண்ட உரி தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.




🌍இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாடுதான் காரணம் என துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாகிஸ்தானை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.




🌍தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர் தான் வேண்டுமா? இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கடல் தண்ணீரில் உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடகத்துடன் தகராறு செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக தமிழ்நாடு கடல் நீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி




🌍காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் நடத்தி வருகிறது-- மத்திய அமைச்சர் அனந்த்குமார்



🌍காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடுமாறு கோருவது சரியல்ல என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.




🌍காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசின் நிலை வருத்தத்துக்குரியது-- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி




🌍ராம்குமார் தற்கொலையில் சந்தேகம்-சிபிஐ விசாரணை வேண்டும்- திருமாவளவன்




🌍தமிழகத்தில் உள்ள 350 பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகளில் ரூ.1.54 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப தொட்டுணர் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்




🌍அருணாச்சலில் 26 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலர்களாக முதல்வர் பீமா கண்டு நியமித்துள்ளார்.




🌍உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து, நிர்வாணமாக அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் அந்த பெண்ணின் கால் துண்டானது.



🌍பாதுகாப்புக் குறைபாடே தாக்குதலுக்கு காரணம்-- ஏ.கே.அந்தோணி



🌍விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



🌍அருணாச்சலில் 26 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலர்களாக முதல்வர் பீமா கண்டு நியமித்துள்ளார்.




🌍உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



🌍உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் சந்திரோதயா மந்திர் (கோயில்) கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற சாதனை படைத்த துபையில் உள்ள புர்ஜ் கலிஃபாவைக் காட்டிலும் உயரமாகக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது




🌍இந்திய விமானப்படைக்கு, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், வரும், 23ம் தேதி கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



🌍தலாக் விவாகரத்து முறை: உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க மத்திய அரசு முடி வு




🌍கட்டுமான திட்டங்களை கள ஆய்வு செய்வதை நேரடியாக கண்காணிக்க, புதிய, 'ஆப்' எனப்படும் செயலியை உருவாக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.




🌍சேலம் சூரமங்கலம் பகுதியில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பெண்கள் ேபாலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



🌍உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து இன்று முதல் 22-ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படுகிறது




🌍சர்வதேச செலாவணி நிதியம் - உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.




🌍ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மாநில எல்லைகளில் உள்ள 80 சோதனைச் சாவடிகளை ரூ.4,000 கோடி செலவில் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



🌍தாய்லாந்தில் ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்



🌍டி.என்.பி.எல்., கிரிக்கெட்: தூத்துக்குடி அபார வெற்றி; முதல் கோப்பையை கைப்பற்றி சாதனை.