HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 16 மார்ச், 2021

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?


கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது


மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.


ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை


ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்



 முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,


அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.


உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், 


அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.

.........................................