HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆய்வு! பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆசிரியர் குழு..விழுப்புரம்.மாவட்டத்தில் 20,798 மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு*


 விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆசிரியர் பயிற்றுநர்கள் குழு மூலம் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்காக, நேற்று முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 314 பள்ளிகளில் இத்தேர்வு நடக்கிறது.


கொரோனா பாதுகாப்பிற்காக அந்தந்த பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரத்து 472 ஆண்கள், 10 ஆயிரத்து 326 பெண்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதுகின்றனர்.விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் தேர்விற்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு அறைக்கு 20 பேர் தேர்வு எழுதிய நிலையில், தற்போது கொரோனா சமூக இடைவெளியாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.தேர்வு பணியில் 314 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 314 துறை அலுவலர்கள், 2,079 அறை கண்காணிப்பாளர்கள், 200 பறக்கும்படை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 648 முகக்கவசம் வழங்க தயார் நிலையில் உள்ளது. இத்தேர்வு மையங்களில் வட்டார அளவில் பணிபுரியும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கொண்ட குழுவினர் மூலம் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. 4 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தேர்விற்காக பள்ளி வளாகம் துாய்மையாக உள்ளதா, இருக்கைகள் மற்றும் கழிவறைகளின் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும், இருக்கை வசதி, சானிடைசர் வசதி, கை கழுவ சோப்பு ஆகியவை வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதேபோன்று, மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பஸ் வசதி தேவைப்படுகிறதா எனவும் விசாரித்தனர். இந்த குழுவினர் ஆய்வு தொடர்பான அறிக்கையை சி.இ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திற்கு சென்றுள்ள மாணவர்கள் வந்துவிட்டார்களா மற்றும் ஆசிரியர்களுக்கு பஸ் வசதி தேவைப்படுகிறதா என்ற விவரம், தேர்வு தொடர்பான கால அட்டவணை குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா எனவும் கேட்டறிந்தனர்.

மேலும், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் தேர்வு தொடர்பான தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.மேலும், ஆன் லைனில் ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்கு அடுத்த வாரத்தில் பள்ளிகளில் வழங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

.....................................