HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 7 ஜூன், 2020

🌍#இன்றையபஞ்சாங்கம் 07..06..2020. 🌍



07-06-2020, #வைகாசி 25, #ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 08.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் பகல் 02.10 வரை பின்பு பூராடம்.
#அமிர்த_யோகம் பகல் 02.10 வரை பின்பு #சித்த_யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

#சுப_ஹோரைகள்
காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,



#இன்றைய_ராசிப்பலன்

#aries_மேஷம்

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

#taurus_ரிஷபம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

#gemini_மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

#cancer_கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் தம் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

#leo_சிம்மம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிக்க முடியும்.

#virgo_கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

#libra_துலாம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

#scorpio_விருச்சிகம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

#sagittarius_தனுசு

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கப் பெறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

#capricorn_மகரம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்ததில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

#aquarius_கும்பம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் நபர்களால் அனுகூலம் கிடைக்கும்.

#pisces_மீனம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

 💐Astro'V,Palaniyappan 💐

🌿#Gobichettipalayam 🌿

..............................................................