HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்



நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும்


அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.



SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை 


ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .

SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை


1. கவரிங் லெட்டர்
2. பேங்க் புக் ஜெராக்ஸ்
3. ஆதார் அட்டை நகல்
4. பான் கார்டு நகல்
5. ஆன்லைன் பே ஸ்லிப்

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் ...



.......................