HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 19 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் பற்றிய சிறப்பு கட்டுரை ..



தேசிய அறிவியல் தினம்:-

சிறப்பு கட்டுரை:-

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது அறிவியல் வளர்சி ஆகும். அத்தகைய அறிவியல் ஆர்வத்தை பொதுமக்கள்,
மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக  ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப்ரவரி-28 ஆம் நாளை இந்தியா முழுவதும் கொண்டாடி சிறப்பிக்கிறோம். 


அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையதும், தனது உயர்சிந்தனையால்
மேம்படுத்த உதவும் வலியாகு. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். 
எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். 

அறிவியல் வளர்ச்சியானது,
கற்களை உரசி நெருப்பு, கற்களை கூர்மையாக்கி ஆயுதங்கள்,
இருளை விரட்ட மின்விளக்கு, தொலைவில் உள்ளவரிடம் பேச தொலைபேசி, எல்லா வேலைகளையும் செய்ய கம்ப்யூட்டர்கள், மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்கள், உடனுக்குடன் பறக்க விமானம், வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள், மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, 
குழந்தையிண்மை போக்க
டெஸ்ட் டியூப் குழந்தை,
இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை, பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்து, வளர்ச்சி பாதையில் செல்கிறது.



இன்றைய 
வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, இந்திய கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

இந்தியாவில் அறிவியல் தினம்:

தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.  இவர் 1888 நவம்பர்-07ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்' நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்ரவரி-28 ஆம் நாள், "ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
 "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 

அந்நிகழ்வின் நினைவாகவும் 
அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


இன்று இந்தியா அறிவியல் அரங்கில் "டாப்-20' இடத்துக்குள் இருப்பதற்கு, பல அறிவியலாளர்கள் உழைத்துள்ளார்கள்,
ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்,
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்,
ராமானுஜம் கணிதம்,
எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை,
எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். 
சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு,
சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்,
அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

எனவே வருங்கால 
விஞ்ஞானிகளே,
அறிவியலில்
ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள். கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். 

மேலும் சிந்தியுங்கள்..மீண்டும் நோபல் பரிசு பட்டியலில் பல இந்திய விஞ்ஞானிகளின் பெயர்களை இடம் பெற செய்யுங்கள்...

அந்த விஞ்ஞானி நாமாக இருப்போம் என்று கனவு காணுங்கள்....

இவன்:-


க. ஜெயசீலன்,
அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி-பெத்லேகம், ஆம்பூர்,
வேலூர்-மாவட்டம்.
...............




..................................................................