HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 11 நவம்பர், 2019

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:



ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
Thanks to-Teachers Friend Devarajan
* தகுதிகாண்பருவத்தில் உள்ளவர்கள் ELஎடுத்தால் probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒருவருடம் முடிந்ததும்ஈட்டிய விடுப்பினை
ஒப்படைத்துபணமாகப் பெறலாம். ஆண்,பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம்முடிக்கும் முன்பு (பணியில்சேர்ந்து 2
வருடங்களுக்குள்)மகப்பேறுவிடுப்பு எடுத்தால் அந்தவருடத்திற்கான 
EL - ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10நாட்கள் EL உள்ளது என்றால்மகப்பேறு விடுப்பில் அந்த 10நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள்மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்புஎடுக்கும் முன்பே கணக்கில்உள்ள EL- எடுத்துவிடுவதுபயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள்EL. அதில் 15 நாட்களைஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2நாட்கள் சேர்ந்துகொண்டேவரும் அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்துபணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒருநாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம்365 நாட்கள்.இதை 17ஆல்(EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள்ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்தவருடத்தில் ஈட்டிய விடுப்புஒப்படைக்கும் பொழுது ,மகப்பேறு விடுப்பு எடுத்த 6மாதங்கள் , மற்றும் ML எடுத்ததாட்கள் தவிர்த்து மீதம் வேலைசெய்த நாட்களை 21 ஆல் வகுத்துEL கணக்கிடப்படும். CL, RL, தவிரவேலை செய்த நாட்களுக்குமட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும்EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்குமட்டும் வருடத்திற்கு 30 நாட்கள்EL
(ஆசிரியர்களுக்கு 17நாட்கள் மட்டுமே). அதில்15 நாட்களைஒப்படைக்கலாம்மீதம் உள்ள 15நாட்கள் சேர்ந்துகொண்டேவரும்..அதிகபட்சமாக 240நாட்களைச் சேர்த்து வைத்துஒப்படைக்கலாம்.
அதற்கு மேல் சேருபவைஎந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வுபணியிறக்கம் / நிரவல்போன்ற நிகழ்வுகளின் போதுபழைய இடத்திற்கும்புதிய இடத்திற்குமிடையேகுறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்)இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில்சேர்த்துக் கொள்ளப்படும்.இதற்கு 30 நாட்களுக்குள்விண்ணப்பிக்க வேண்டும். 90நாட்களுக்குள் கணக்கில்சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்ததுநாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்
அட்டவணைப்படிநாட்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதேதேதியில் தான் ஆண்டுதோறும்செய்ய
வேண்டும் என்றகட்டாயம் இல்லைகணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல்விவரம் குறிக்கஎளிமையாக அமையவும் ஒரேதேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்குஒருமுறை சரண் செய்வதுசிறந்ததுஎவ்வாறாயினும் ஒருஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த ஒப்படைப்புநாளுக்குமிடையே 15 நாட்கள்ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளிஇருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள்தான் முக்கியமேதவிர விண்ணப்பிக்கும்தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன்செய்யும் தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறைஒப்படைப்பு செய்யும்போதுகுறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போதுகுறைந்த அளவுஅகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டுDA உயர்த்தப்படும் போதுஒப்படைப்பு நாளில்
அதிகஅகவிலைப்படியும் இருந்தால் DAநிலுவையுடன்
சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்துசுதந்தரித்துக் கொள்ளலாம்.ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப்பெற்றாலும் நிலுவைக்கணக்கீட்டுக்
காலத்தில் ஒப்படைப்பு தேதிவந்தால் சரண்டர் நிலுவையும்பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போதுஇருப்பிலுள்ளEL நாட்களுக்குரிய(அதிகபட்சம்240) அப்போதையசம்பளம் மற்றும் அகவிலைப்படிவீதத்தில்
கணக்கிடப்பட்டுதிரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180நாட்கள் ஈட்டிய விடுப்புஎடுக்கலாம். அதனைத்தொடர்ந்து மருத்துவ விடுப்புஎடுக்கலாம்.

180 நாட்களுக்குமேற்பட்டவிடுப்புக்கு வீட்டுவாடகைப்படிகிடைக்காது