HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 24 நவம்பர், 2019

எந்த ராசிக்காரர் எந்த கடவுளை வணங்க வேண்டும்?



ஞாயிறு, 24 நவம்பர், 2019




அக்னி புராணத்தில், இந்து மதம் மிகவும் புனிதமான வேத வசனங்களைக் கொண்டது எனவும், அதில் ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நன்கு வரையறுக்கப்பட்ட அறிவியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜோதிடத்தைக் கொண்டு தனிநபரின் பண்புகளை நன்கு முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.


ஒருவர் பிறக்கும் போது சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரின் ராசி என்னவென்று சொல்லப்படும். சூரியன் ஒருவரின் சக்தி மற்றும் தனித்தன்மையை ஆளும். எனவே ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.



இங்கு எந்த ராசிக்காரர் எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த கடவுள்களை வணங்கி பலன் பெறுங்கள்.

மேஷம்

மேஷ ராசியை ஆளும் கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

கடகம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

கன்னி

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.


துலாம்

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.

விருச்சிகம்

செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். எனவே பயனுள்ள விளைவுகளைப் பெற தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

மகரம்

மகர ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.


கும்பம்

கும்ப ராசியை ஆளும் கிரகமும் செவ்வாய் தான். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.

மீனம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.

..............