HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

*இரவு பகலாக உழைத்த 16,500 விஞ்ஞானிகள்*


சந்திரயான் - 2 விண்கல திட்டத்திற்காக ஆண்கள், பெண்கள் என 16,500 விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இரவு பகலாக தங்களின் கடும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்துள்ளனர்.நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூதரத்தில் சந்திரயான் - 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், தொடர்பை இழந்தது. முதல் முயற்சியிலேயே, இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்று சாதனையின் பின்னணியில் 16,500 விஞ்ஞானிகளின் புத்திகூர்மையும், அர்ப்பணிப்பும் உள்ளது.1982 ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து, தற்போது அதன் தலைவர் பதவி வரை உயர்ந்துள்ள சிவன், தமிழகத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், மிக ஏழ்மையான விவசாய குடும்பம் என்பதால் எனது படிப்பிற்கான பணத்தை சேமிக்க என் தந்தையுடன் நானும் வயலில் வேலை செய்து, தமிழ் வழிப்பள்ளியில் படித்தேன்.

அப்போது வரும் வருமானம் கைக்கும் வாய்குமே சரியாக இருக்கும். 3 வேளை முழு வயிறு உணவு கிடைக்க என் தந்தை கடுமையாக உழைப்பார் என்றார்.

முதல் முறையாக பெண் விஞ்ஞானிகள் :

இஸ்ரோ வரலாற்றிலேயே கிரகங்களுக்கு இடையேயான ஆய்வு திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது சந்திரயான் -2 திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. திட்ட இயக்குனர் முத்தையா வனிதா, இஸ்ரோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தலைமையிலான அணியில் இடம்பெற்ற மற்றொரு விஞ்ஞானியான ரித்து கர்தால் சந்திரயான்- 2 திட்டத்தில் மட்டுமின்றி செவ்வாயை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தவர்.

முக்கிய விஞ்ஞானிகள் :

சோம்நாத், நாராயணன், ஜெயபிரகாஷ்,ரகுநாத பிள்ளை போன்ற நிபுணத்துவர் வாய்ந்த பொறியாளர்கள், ராக்கெட் வடிவமைப்பில் துவங்கி, செயற்கைகோள் செயல்பாடு வரை, திட்டத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் முக்கிய பங்காற்றி உள்ளனர். விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஆர்பிட்டார் தொடர்ந்து இயங்கி வருவதற்கு இவர்களின் கடும் உழைப்பே காரணம். இவர்களை போன்று எண்ணில் அடங்காத விஞ்ஞானிகள் நேரம் காலம் பார்க்காமல் சந்திரயான் சாதனைக்காக பணியாற்றி உள்ளனர்.

Really heartbreaking situation.....
3 லட்சத்து 84ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணத்தை வெற்றிகரமாக முடித்த லேன்டர் கடைசி நேரத்தில் காணாமல் போனது வருத்தமான செய்தி

சந்திராயன் 2 ஸாப்ட் லேண்டிங். நடந்ததா?

15 Minutes of Terror"

ஏன் தரையிறங்கும் அந்த கடைசி 15 நிமிடங்களை "15 Minutes of Terror" என்று அழைக்கிறார்கள்?

விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 35 கிமீ தொலைவிலும் அதிகபட்சம் 101 கிமீ தொலைவிலும் நிலவை நீள்வட்ட வடிவில் சுற்றிவருவதை பார்த்தோம்.

 இப்போது அது செப் 7 காலை மீண்டும் குறைந்தபட்ச 35 கிமீ தொலைவிற்கு வரும் போது தரையிறங்க இஸ்ரோ திட்டமிட்டது.

செப் 7 காலை 1:40 மணியளவில் ஏறக்குறைய மணிக்கு 6000 கிமீ என்ற வெறித்தனமான வேகத்தில் நிலவிற்குள் விக்ரம் நுழையும், #நுழைந்தது

நுழைந்த அடுத்த 10  நிமிடத்தில் நிலவின் தரைக்கும் அதற்குமான இடைவெளி சுமார் 7.4 கிமீ தூரம் இருக்கும், அப்போது மணிக்கு 526 கிமீ என்ற வேகத்தில் அதை குறைக்க வேண்டும். #நடந்தது.

லேண்டருக்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும் ராக்கெட்டுகள் வேகம் குறைக்கும் இந்த பணியை செய்யும். அடுத்த 38 நொடிகளில்
அதன் வேகம் இன்னும் குறைக்கப்பட்டு மணிக்கு 331.2 கிமீ என்ற வேகத்தில் நிலவின் தரைக்கும் அதற்குமான இடைவெளி இப்போது சுமார் 5 கிமீ தூரம் கொண்டுவர வேண்டும். #கொண்டுவரப்பட்டது

இதன் பின்னர் தான் இடைவெளி 2.1கி.மீ. உள்ள நிலையில் லேன்டர் தனது #தொடர்பைஇழந்தது.

(இனி சொல்லப்படுபவை திட்டமிட்டபடி நடந்ததா எனத் தெரியாது. லேன்டர் தனது பணியை சிறப்புற செய்திருக்கலாம்.     ஆனால்  திட்டம் இதுதான். ஏனெனில் தொடர்பு இல்லை)

அடுத்த 1.30 நிமிடத்தில் தரைக்கும் அதற்குமான தூரம் வெறும் 400 மீட்டர்களுக்கு கொண்டு வந்து  அதன் வேகத்தை மணிக்கு 100 கிமீ என்று குறைத்திருக்க வேண்டும்.

 400 மீட்டர் உயரத்தில் 12 நொடிகள் அந்தரத்தில் தொங்கியவாறு நிலவின் தரையை விக்ரம் ஆராயும். அடுத்த 66 நொடிகளில் தரைக்கும் அதற்குமான தூரத்தை வெறும் 100 மீட்டருக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த 100 மீட்டர் உயரத்தில் மீண்டும் 25 நொடிகள் அந்தரத்தில் தொங்கியவாறு ஏற்கனவே தேர்ந்தெடுத்த இரண்டு இறங்கும் இடங்களில் எது சிறந்தது என்று அதுவே தீர்மானிக்கும்.

 ஒருவேளை முதல் இடமே போதும் என அது தீர்மானித்தால் மீண்டும் அதன் வேகம் குறைக்கப்பட்டு அடுத்த 65 நொடிகளில் தரைக்கும் அதற்கும்  10 மீட்டர் இடைவெளிக்கு கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை இரண்டாம் இடத்தை தேர்ந்தெடுத்தால் அடுத்த 40 நொடிகளில் 60 மீட்டர் உயரத்திற்கு கொண்டு வந்து மீண்டும் அடுத்த 25 நொடிகளில் 10 மீட்டர் இடைவெளிக்கு கொண்டு வர வேண்டும்.

முதல் இடமோ இரண்டாம் இடமோ இப்போது 10 மீட்டர் என்ற உயரத்தில் அது இருக்கும் போது அடுத்த 13 நொடிகளில் அதை தரையை தொடும் போது ௦ என்ற நிலையை கொண்டு வந்து பூப்போல் அதை இறக்க வேண்டும்.

ஆனால் இந்த அனைத்து படிப்படியான நிலையும் ஆட்டோமெடிக் மோடில் இயக்கபடும்.

படிக்கும் போதே நமக்கு தலை சுற்றுகிறதே, இவையனைத்தும் அந்த 15 நிமிடத்தில் எந்த ஒரு சிறிய தவறும் நிகழாமல் நடந்திருக்க  வேண்டும்.

அப்படி நடந்திருந்தால் மட்டுமே அது "Soft Landing"!

மீண்டும் லேன்டருடன் தொடர்பு கிடைத்தால் இதற்கு விடை கிடைக்கும். அதற்கு வாய்ப்பில்லை என்பது தான் வருத்தம்.

வாழ்த்துக்கள்  ISRO. 3,84,400 கி.மீ.க்கு அப்பாலும் தனது விண்கலத்தை பயணிக்கச் செய்ததற்காக வாழ்த்துக்கள்.

இன்னும் ஆர்ப்பிட்டர் தொடர்பில்  இருக்கிறது .
தொடரட்டும் ஆராய்ச்சி.
#வாழ்த்துக்கள்
👏👏👏