HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

04-09-2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 157*

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
 அறனல்ல செய்யாமை நன்று.

மு.வ உரை:

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

கருணாநிதி  உரை:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

பிறருக்கு உதவும் வாழ்க்கை மேலான வாழ்க்கை ஆகும்,
வாயில்லாத ஜீவன்களுக்கு உதவும் வாழ்க்கை உறைவனின் அருளைப் பெற்ற வாழ்க்கை ஆகும்.

    - அப்துல் கலாம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பழமொழி மற்றும் விளக்கம்*

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

நாம் அறிந்த விளக்கம் :

இமையின் குறைபாடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும் அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோல தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✡✡✡✡✡✡✡✡

*Important  Words*

 Jenny Ass பெண் கழுதை

 Jellyfish சொறி மீன்

 Kangaroo கங்காரு

 King Cobra நாகப் பாம்பு

 Kitten பூனைக் குட்டி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்?

*கிரேக்கர்கள்*

2) உலகின் மிகப்பெரிய பாலைவனம்?

*சஹாரா*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு கூட ரத்தம் வராது. அது என்ன?

*ஈசல்*

2. செய்தி வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே? அது என்ன?

*தொலை பேசி*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*நண்பகல் தூக்கம்*

ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார்.

நீதி :

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
💐💐💐💐💐💐💐💐

*செய்திச் சுருக்கம்*

🔮இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டம்: ஜப்பானில் பயணம் செய்து ராஜ்நாத் சிங் ஆய்வு.

🔮பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.

🔮சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு.

🔮தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல்; விரைவில் தமிழில் வெளியாகும் -சி.வி.சண்முகம்.

🔮வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி.

🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்.

🔮Marine police seize sea cucumber after intercepting fishing boat.

🔮PhD-holders demand exemption from teacher eligibility tests.

🔮 Kanpur teacher has 700 kinds of Ganesh idols  ranging 2 cm to 50 cm in height.

🔮ICC Test Rankings: Steve Smith overtakes Virat Kohli to become the No. 1 batsman.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
...................................