HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 1 செப்டம்பர், 2018

TNPSC Exams - How to Upload Certificates via Eseva Centrefor Verification?

TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?


வணக்கம் நண்பர்களே.. TNPSC இதற்கு முன்பு சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்னையில 
அலுவலகத்திற்கு அழைப்பது வழக்கம்.. 
தற்போது அலைச்சலைக் குறைக்கும் பொருட்டு தேர்வர்களின்
வசதிக்காக அவரவர் மாவட்டத்திலேயே E-seva மையம் மூலமாக சான்றிதழ் 
சரிபார்ப்பைமேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது...
ஒரு சான்றிதழைபதிவேற்ற ரூ 5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்... (சான்றிதழ்எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்) ... 

சான்றிதழ் பதிவேற்ற முறை பற்றி பார்ப்போம்.
முதலில் கீழே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து 
அசல்சான்றிதழ்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்..
தற்போதுபடித்துக் கொண்டிருப்பவர் எனில் கல்லூரியில் 
உங்கள் Originals'ஐஇப்பொழுதே கேட்டு கையில் வாங்கி வைத்துக் 
கொள்ளுங்கள்..(TC ஐதவிர அனைத்தும் தருவார்கள்.

TC பற்றி கவலைப் பட வேண்டாம்)
கடைசியில் அலைய வேண்டாம்...

E- Seva மையத்திற்கு சென்று உங்கள் நிரந்தர பதிவின் ((One Time Registeration)) User ID மற்றும் Password'ஐ  அவரிடம் கூறினால் அவர் Login செய்வார்..(கட்டாயமாக USER ID AND PASSWORD ஐ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்)) .உங்களுடைய புகைப்படத்துடன் உங்கள் Dashboard open ஆகும்.. Dash Board நிரந்தர பதிவு உங்களுடையது தானா என அவர் உங்களிடம்
  Confirm செய்த பிறகே சான்றிதழ் பதிவேற்ற வேலையைமேற்கொள்வார்

எனவே ஐயம் வேண்டாம்..சான்றிதழ் பதிவேற்றதேர்வர் தான்  
நேரில் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.. 
அப்பா, அம்மா, அண்ணன் அல்லது யார் வேண்டுமானாலும் 
தேர்வரின் நிரந்தர பதிவு user ID ,password மற்றும் அசல் சான்றிதழ்கள்கொண்டு சென்று கொடுத்து
 சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்கலாம்.. கூடுமானவரை நீங்களே
 நேரில் சென்று முடிப்பது நலம்....

அனைத்து சான்றிதழ்களும் நீங்கள் நிரந்தர பதிவின் போது 
எந்தஎண்ணைக் கொண்ட சான்றிதழ்களை கொடுத்தீர்களோ 
அதேசான்றிதழைத் தான் பதிவேற்ற வேண்டும்.. வேறு ஒன்றை 
மாற்றிபதிவேற்றினால் சந்தேகத்திற்கிடம் என TNPSC யால் மீண்டும்
சென்னைக்கு அழைக்கப்படுவீர்கள்..
  
முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
(அனைத்தும் Originals)
1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)
2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .
3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate
5.Convocation Certificate
6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)
7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்ட
நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)
8.GROUP A அல்லது GROUP  B தரமுடைய அதிகாரியிடம்
 இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் 
((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.))

இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு

 பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...
9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று
10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்
11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்
13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் 
அதற்கானPROVISIONAL மற்றும்  CONVOCTION சான்றிதழ்..
15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர்
 எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற
 தடையின்மைச்சான்றிதழ் (No Objection  Certificate) NOC
கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் 
சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும்  ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..

இவைஅனைத்தையும் e-Seva மையத்தில் பதிவேற்றிய 
பின் சரியாகபதிவேற்றியுள்ளார்களா என உங்களிடம் காட்டி 
உறுதி செய்துகொண்ட பின்னரே அவர்கள் Upload செய்வார்கள்..
Upload செய்த பின் என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றினீர்கள் என ஒரு PRINTOUT ஐ அவர்கள் கையெழுத்திட்டு தருவார்கள்.. 

நீங்கள்சான்றிதழ் சரிபார்ப்பு CV முடித்ததற்கான சான்று அதுதான்.
எனவேஅதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்..
முடிந்த வரை 10 மணிக்கே சென்று விடுங்கள்..கூட்ட நெரிசல் 

இன்றிபொறுமையாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வாருங்கள்..
கட்டணம் 100 ரூபாய்க்குள் தான் வரும்.. எதற்கும் அதிகமாக

எடுத்துச்செல்லுங்கள்.. சான்றிதழ் பதிவேற்றம் மேற்கோள்ளும் 

அதிகாரிக்குநீங்கள் எவ்வித கட்டணமும் தனியாக தர தேவையில்லை..
e-seva மையம் திறந்திருக்கும் நேரம் 
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை.. 1-2 உணவு இடைவேளை..

நல்லபடியாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வர அனைத்து TNPSC நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்களுடன் - பாடசாலை