HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 5 செப்டம்பர், 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.09.18

திருக்குறள்


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

விளக்கம்:

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிர தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

பழமொழி

Failure is a stepping stone to success.

 தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

      -  ஐன்ஸ்டைன்

பொது அறிவு

1.மின்சாரத்தின் தந்தை  என அழைக்கப்படுபவர் யார்?

 மைக்கேல் பாரடே

2. ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜோசப் பிரீஸ்ட்லி

English words and Meanings

Yard. வாசல்
Yarn.  நூல்
Yawn. கொட்டாவி
Yell.   கூச்சலிடு
Yore.  பூர்வகாலம்

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

பொன்னாங்கன்னி கீரை

1.கண்பார்வை குறைபாடு சரியாகும்.

2.முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நீதிக்கதை

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கப்போகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும், அதனிடம் கேட்டுப்பார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்த எறும்பு, “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியது, இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

இன்றைய செய்திகள்

06.09.18

*   சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் நுண்ணிய மாதிரிகள்  கொண்ட பேருந்து  அருங்காட்சியகம் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் கோயமுத்தூரில் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

* ரஷ்யாவில் இருந்து 4 பில்லியன் மதிப்பிலான ஐந்து S-400 ட்ரையூம் விமானப் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா  திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு உறுப்பு தான அமைப்பில் பதிவு செய்ய  இந்திய நோயாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* மதுரை அஞ்சலகம் சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான ஆய்வு கண்காட்சி மதுரையில் நடந்தது.

* 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஓம் பிரகாஷ் மித்தாரால் ஆண்கள் 50 மீட்டர் ஃப்ரீஸ்ட்டில் தங்கம் வென்றார்.

Today's Headlines

🌸Coimbatore:A Museum Bus with miniatures of displays from the museum in Chennai is in Coimbatore for three days from Wednesday.🌹

🌸India is planning to buy five S-400 Triumf air defence systems from Russia for an estimated $4.5 billion.🌹

🌸Chennai:Aadhaar is now mandatory for Indian patients to register in the Tamil Nadu Network for Organ Sharing.

🌸Madurai:The two-day district-level philately exhibition, organised by the
 Department of Posts, Madurai Division, concluded on Tuesday.

🌸Korea:Om Prakash Mitharval won the men’s 50m free pistol gold in the 52nd World shooting championship here on Tuesday💐